Thursday, August 19, 2010

மெட்ராஸ் தினம்: மெட்ராஸில் சினிமா தியேட்டர்கள் - தியோடர் பாஸ்கரன்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மெட்ராஸ் வாரத்துக்குகாக நான்கு பேச்சுகளை ஏற்பாடு செய்திருந்தது. நான்கும் தமிழில். எனவே இந்த நான்குக்கும் போகவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். முதலாவது, பேரா. சுவாமிநாதன், மாமல்லபுரம் பற்றியது. அடுத்தது, பிரதீப் சக்ரவர்த்தி, சென்னையில் கிடைக்கும் சோழர் காலக் கல்வெட்டுகளும் அவை சொல்லும் கதைகளும். மூன்றாவது, நரசய்யா, இடக்கை, வலக்கை சாதிகளுக்கு இடையேயான பூசல் பற்றி. இறுதியாக, இன்று தியோடர் பாஸ்கரன், மெட்ராஸின் சினிமா பற்றிப் பேசினார். அதன் ஒளிப்பதிவு இங்கே:



ஒளிப்பதிவைத் தரவிறக்கிக்கொள்ள

ஒலிப்பதிவைக் கேட்க



ஒலிப்பதிவைத் தரவிறக்கிக்கொள்ள

மெட்ராஸ் வாரத்தின் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் நான் செல்வேனா என்று தெரியாது. இந்த வாரம் முழுவதுமே வேலை பெருமளவு பாதிக்கப்பட்டது. அடுத்த நிகழ்ச்சி கேபிள் சங்கரின் சினிமா வியாபாரம் புத்தக அறிமுகம். வரும் சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010, தக்கர் பாபா வித்யாலயாவில்.

2 comments:

  1. அன்பு நண்பர் பத்ரி சேஷாத்ரிக்கு
    வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் !
    சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தகம் வாங்கி வாசித்தேன் ,
    தமிழாக்கம் நன்றாக வந்துள்ளது.
    நேற்று தங்களுடன் உரையாடியதன் தொடர்பாக
    பின் வரும் ஒரு புத்தகத்தினை தங்களின் பார்வைக்கு அறிமுகம்
    தர விரும்புகிறேன் .

    "madras hand book -1922 " எனும் புத்தகம்

    asian educational services பதிபகத்தினரால்

    1922 ஆம் ஆண்டு மெட்ராஸில் நடை பெற்ற
    Indian Science Congress
    வருடாந்திர மாநாட்டின் போது ஆங்கிலத்தில் வெளியிடபட்ட
    அன்றைய மெட்ராஸ் பற்றிய கையேடு.
    வரும் 2011 ஆம் ஆண்டு,
    88 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னையில் வருடாந்திர மாநாட்டினை
    Indian Science Congress அமைப்பினர்
    நடத்த உள்ளனர்.
    இந்த புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு
    வரும் 2011 வருடாந்திர மாநாட்டில் கொண்டு வந்தால்
    சிறப்பாகவும் மற்றும் மெட்ராஸ் பற்றிய ஒரு வரலாற்று பதிப்பினை
    தமிழில் சிறப்பிதாத்கவும் இருக்கும் .
    தொடர்புக்கு :
    www .google .com /book search / "madras hand book -1922 "
    www.sciencecongress.nic.in

    நன்றி , வாழ்த்துக்கள் !
    மீனாட்சிசுந்தரம் நடராஜன்,
    புதிய எண்.19 /பழைய எண்.17 .நடராஜன் தெரு ,சேகர் நகர்
    ஜாபர் கான் பேட்டை , சென்னை 600083 ./ 7845061426
    meena2neer @yahoo.co.in
    selva4meena @ gmail .com


    98th Indian Science Congress, SRM University, Chennai
    Focal theme - Quality Education and Excellence in Science Research in Indian Universities

    For Details Contact:
    Prof. K.C. Pandey
    General President of ISCA 2010-11
    Department of Zoology Lucknow University,
    Lucknow – 226007
    Phone : 0522-4017845 (R)
    Email: pandey_kc43@rediffmail.com

    Prof. P. Satyanarayanan
    Vice Chancellor, SRM University
    Kattankulathur – 603 203
    Phone: +91-44-27454255
    Fax: ++91-44-27453622
    Email: vc@srmuniv.ac.in
    Web: srmuniv.ac.in/isc2011

    ReplyDelete
  2. அப்பு நண்பர் பத்ரி,


    கொல்லி மலை என்பது ஒரு மறைக்கப்பட்ட ஒரு மலை. இங்கு ஒரு முறை வரவும்.

    இப்படிக்கு,

    மணிமாறன்

    ReplyDelete