Thursday, February 02, 2012

இது சுப்ரமணியன் சுவாமியின் வாரம்...

நான் ஒரே ஒரு முறைதான் சுப்ரமணியன் சுவாமியை நேரில் பார்த்துப் பேசியிருக்கிறேன். ஹரன்பிரசன்னாவும் பத்திரிகையாளர் ஹரனும் கூட இருந்தனர். அன்று, ஏகப்பட்ட விஷயங்களைச் சொன்னார் சுவாமி. அவற்றை வெளிப்படையாக எழுதமுடியாது. எது தகவல், எது அவதூறு, எது வெறும் வதந்தி என்றெல்லாம் பிரித்துச் சொல்வது கடினம்.

அதன்பிறகு அவரிடம் நேரில் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் 2ஜி பற்றிப் பேசிய ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். அவ்வளவுதான்.

சுப்ரமணியன் சுவாமி தொடுத்த சில வழக்குகளில் இந்த வாரம் உச்ச நீதிமன்றம் வரிசையாகக் கொடுத்த தீர்ப்புகள், சுவாமியைப் புகழின் உச்சத்துக்கே கொண்டுசென்றுள்ளன என்று சொல்லலாம். அண்ணா ஹசாரே அல்ல, சுவாமிதான் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் அச்சு என்றுகூடச் சிலர் ட்விட்டரில் பேச ஆரம்பித்துவிட்டனர்.

2ஜி-யில் அரசுத் தரப்பில் ஏகப்பட்ட நடைமுறைக் குளறுபடிகள் இருந்தாலும் அதில் அரசுக்கு எந்தப் பண இழப்பும் இல்லை; ஊழல்/லஞ்சம் இருந்திருந்தால் அதுவும் சில ஆயிரம் கோடிகள் மட்டும்தான் என்பது என் கருத்து. அந்தக் கருத்துதான் இப்போதும்.

இராசா என்னதான் செய்தார் என்ற கேள்விக்கு இப்போதுவரை பதில் ஏதும் இல்லை. நமக்குத் தெரிந்தது எல்லாம் கலைஞர் தொலைக்காட்சி விவகாரம்தான். அதிலும் நீதி என்ன சொல்லப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆனால், சுப்ரமணியன் சுவாமி ஒன்றைச் செய்து காட்டியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்களால் அரசின் குளறுபடிகளைச் சரியாக வெளிக்காட்ட முடியாதபோது ஒரு நீதிமன்றத்தில் அதனைக் காட்டமுடியும்; அதற்கான விடாமுயற்சியும் மதிநுட்பமும் இருந்தால் போதும் என்பதுதான் அது. நாடாளுமன்றத்தில் வெற்று அரசியல், கோஷம், வேலை செய்ய விடாமல் தடுப்பது ஆகியவை மட்டும்தான் நடக்கின்றன. வெகு குறைவாகத்தான் நேர்மையான, ஆழமான விவாதங்கள் நடைபெறுகின்றன.

நீதிமன்றத்தில் அரசின் தரப்பிலிருந்து எத்தனையோ முட்டுக்கட்டைகள் போடப்பட்டபோதும், நீதித்துறை வலுவாக நின்றதாலும், சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து அடுக்கடுக்கான சாட்சியங்களை முன்வைத்து மிகச் சிறப்பாக விவாதம் செய்ததாலும்தான் இந்தத் தீர்ப்பு சாத்தியமாகியிருக்கிறது.

***

இந்தத் தீர்ப்பினால் பெரும் குழப்பங்கள் நடைபெறும். யூனிநார் முதற்கொண்டு நிறையப் பணத்தை முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் (அவற்றின் வெளிநாட்டுப் பங்குதாரர்கள்) மிகவும் தொல்லையில் இருப்பார்கள். ஏற்கெனவே கொடுக்கப்பட்ட உரிமத்தால் சேவை கிடைக்கப்பெற்ற மக்கள் என்ன ஆவார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். ஆனால் அதற்காக நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லமுடியாது. மறு பரிசீலனை செய்யச் சொல்லி நீதிமன்றம் சென்றால் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைக்காது. ஏனெனில் அவர்கள் அனைவருமே அல்லது பெரும்பாலானவர்கள் நிறையத் தவறுகளைச் செய்துள்ளனர். அதெல்லாம் வெளியே வரும்.

ஆனால் என் வருத்தமெல்லாம் இனி ஸ்பெக்ட்ரத்துக்கு என்று ஏலம், அதிகக் கட்டணம் என்று ஆகப்போகிறதே என்பதுதான். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பிறகு எந்த மத்திய அரசும் ஸ்பெக்ட்ரத்தை இலவசமாகத் தராது. அதனால் கட்டணம் கடுமையாக உயரும். வேறு வழியே இல்லை. இதன் பின்விளைவுகளை கம்யூனிஸ்ட் தோழர்கள்தான் முதலில் கண்டறிவார்கள். தெருவில் காய்கறி விற்கும் பெண்ணும் மீன்பிடிப்போரும் கட்டடத் தொழிலாளரும் கட்சியின் அடிமட்டத் தொண்டரும், அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் தீர்ப்பைப் பற்றி அலசத்தான் போகிறார்கள்.

***

என் பரிந்துரை: (ஆனால் யாரும் கேட்கப்போவதில்லை!)

உரிமத்தை ரத்து செய்தது எல்லாம் சரி. மிகச் சில நிறுவனங்களை மட்டும் கடுமையான சட்டதிட்டங்கள் வாயிலாகத் தேர்ந்தெடுங்கள். ஆனால் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடாதீர்கள்; மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலியுங்கள்.

25 comments:

  1. லைசென்ஸ்களை ரத்து செய்யும் வழக்கு பிரசாந்த் பூஷன் போட்ட வழக்கு.வாதாடியதும் அவரே
    சாமியின் வழக்கு சிதமபரத்தை குற்றவாளியாக சேர்க்க கோரும் வழக்கு.அதில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு ஏதும் சொல்லாமல் ,முடிவை வழக்கை விசாரிக்கும் கீழ் கோர்ட் நீதிபதி முடிவு செய்வார் என்று கூறி விட்டது.
    வந்திருப்பது சோனியா அல்ல அவர் தங்கை என்று கண்டுபிடிப்புகளை அள்ளி விடும் மனிதரை உள்நோக்கம் உடையவர்கள் தான் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.எல்லா புகழும் சாமிக்கே எனபது மோசடி வேலை.

    ReplyDelete
    Replies
    1. பூவண்ணன்: உங்களுக்கு சு. சுவாமியை எத்தனையோ காரணங்களுக்காகப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இது தொடர்பான செய்திகளை நீங்கள் படிக்கவில்லை. கீழ்க்கண்ட பத்தியைப் படியுங்கள்:

      The three crucial verdicts came on a petition by Janata Party president Subramanian Swamy seeking a probe by the CBI into the alleged role of Chidambaram in the allocation of 2G spectrum, a plea by the Centre for Public Interest Litigation, represented by senior advocate Prashant Bhushan for an SIT to monitor the CBI probe in the matter and a joint plea by the two of them seeking cancellation of the 2G licences.

      2ஜி உரிமங்களை ரத்து செய்யவேண்டும் என்று இருவருமே தனித்தனியாக வழக்கு தொடுத்திருந்தனர். அவை ஒன்றாகச் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டன. அது தவிர இருவரும் ஆளுக்கு ஒரு தனி வழக்கைத் தொடுத்திருந்தனர். அதில் பிரஷாந்த் பூஷண் கொண்டுவந்தது தள்ளுபடி செய்யப்பட்டது (எஸ்.ஐ.டி தேவையில்லை என்று). சுவாமி கொண்டுவந்த ‘சிதம்பரத்தைச் சேர்க்கும் வழக்கு’ மீது கீழ் கோர்ட்டே முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.

      முடிவு உங்கள் கையில்.

      Delete
    2. http://articles.economictimes.indiatimes.com/2010-12-15/news/27578477_1_2g-rollout-obligation-licences
      முதலில் பிரஷாந்த் புஷன் தான் அனைத்து உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடுத்தார்.அவருக்கு ஆதரவாக முன்னாள் தேர்தல் தலைமை ஆணையாளர்கள்,லோக் சட்டா கட்சி தலைவர் உட்பட பலரும் அதில் கோ PETITIONER
      அதற்க்கு பிறகு சாமி அதையே கோரி தனி வழக்கு தொடுத்தார்.
      வழக்கிற்காக முழுதாக வாதாடியது புஷன்.சென்ற மார்ச் 17 தீர்ப்பு ரிசேர்வ் செய்யப்பட்டது.அதில் சாமியின் பங்கு முன்னாள் தேர்தல் தலைமை அதிகாரிகளின் பங்கு போல தான்.அவர்களாவது முதல் வழக்குதாரர்கள்
      சாமியின் வழக்கு சிதம்பரத்தை சேர்ப்பது.அதை கீழ் கோர்டிற்கு உச்ச நீதிமன்றம் விட்டு விட்டது.இதே போல் மோடியின் வழக்கில் நடந்த போது அவர் வானத்துக்கும் பூமிக்கும் ஆனந்த தாண்டவாமாடி சத்பாவன உண்ணாவிரதம் இருந்தார்.வழக்கில் சம்பந்தப்பட்ட சீடல்வாத் போன்றோருக்கு முகத்தில் கரி என்று அவர் ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள்.அதே போல் தீர்ப்பு சிதம்பரத்திற்கு கிடைக்கும் போது சாமி வெற்றி வெற்றி என்று கூச்சல்.

      Delete
    3. ஏலம் விடுவது தப்பு, ஏலம் விடாதது தப்பு என்பதெல்லாம் இருக்கட்டும். என்னுடைய கருத்து என்னவென்றால் - இந்த டாட்டா -வும் , யுநிடக்கும் (unitech ) செய்த வேலையை அரசே செய்து இருக்கலாம். அதாவது அரசே ஒரு லெட்டர் பாட் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து (நம்ம ப்ச்ன்ல் pola ) , இந்த லைசென்சென்களை டோகோமோ (Docomo ), டெலேனோர் (Telenor ) போன்ற வெளிநாட்டு நிருவனங்கல்லுக்கு விற்று லாபம் ஈட்டி இருக்கலாம். அரசுக்கு சுமார் 30000 கோடி வருமானம் கிடைத்து இருக்கலாம். இந்த கருத்து தவறா ? - வெங்கட்

      Delete
    4. வெங்கட்: உங்கள் கருத்து தவறு. இதை நான் பலமுறை விளக்கிச் சொல்லிவிட்டேன்.

      யூனிநார் வெளியிட்ட பங்குகளை வாங்கிக்கொள்ளத்தான் டெலினார் பணம் கொடுத்துள்ளது. அந்தப் பணம் யூனிடெக் கம்பெனிக்குப் போகவில்லை. அந்தப் பணம் யூனிநாரில் முடங்கிக் கிடக்கிறது. யூனிநார் இப்போது சிக்கலில் மாட்டியுள்ளது. யூனிநார் இழுத்து மூடப்படும் என்று வைத்துக்கொண்டால், முதலீட்டாளர்களான யூனிடெக்கும் டெலிநாரும் போட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர்களுக்கு 50 பைசாகூடக் கிடைக்காது. 25 பைசா கிடைத்தாலே பெரிய விஷயம். ஆக, பெரும் நஷ்டம்தான்!

      Delete
    5. பத்ரி, நீங்க சொல்வது சரி. இது தெரியாம சுப்பு சாமி அவா இத்தனை ஆயிரம் கோடி கொள்ளை அடிச்சிட்டா, அவளோட தங்கை இத்தனை ஆயிரம் கோடி வெளி நாட்டுல வச்சு இருக்கா என்று பல மடங்கு கதை உடுகிறாரா ? - வெங்கட்

      Delete
  2. இப்ப ஒரு லட்சத்து எழுவத்தி ஆறாயிரம் கோடி கிடைக்குதான்னு பார்க்கலாம்.போன் விலை ஏறுவதால் பெரிய பாதிப்பில்லை.பால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாது,பேருந்து கட்டணம்,ரயில் கட்டணம்,டீஸல் கட்டணம் ஏற்றபடனும் ஆனா போன் விலை ஏறாம இருக்கனும்றது சரியா.அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து இதை குறைக்கலாம் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. ஏலம் விடுவது தப்பு, ஏலம் விடாதது தப்பு என்பதெல்லாம் இருக்கட்டும். என்னுடைய கருத்து என்னவென்றால் - இந்த டாட்டா -வும் , யுநிடக்கும் (unitech ) செய்த வேலையை அரசே செய்து இருக்கலாம். அதாவது அரசே ஒரு லெட்டர் பாட் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து (நம்ம BSNL pola ) , இந்த லைசென்சென்களை டோகோமோ (Docomo ), டெலேனோர் (Telenor ) போன்ற வெளிநாட்டு நிருவனங்கல்லுக்கு விற்று லாபம் ஈட்டி இருக்கலாம். அரசுக்கு சுமார் 30000 கோடி வருமானம் கிடைத்து இருக்கலாம். இந்த கருத்து தவறா ? - வெங்கட்

      Delete
  3. I cannot fully agree with your opinion that there was no financial loss to the exchequer due to the method of allotment of 2G spectrum. The fact remains that 2 companies have sold stock at huge premiums to other parties (Uninor and Etisalat were the purchasers, if I am not mistaken). Since these companies had not major assets, other than allotted spectrum, it argues for the fact that the Spectrum could well have been sold at much higher prices without compromising the delivery rates of talk-time. Else we are arguing that Uninor and Etisalat were foolish to pay the prices that they did pay.

    The computation of total loss could well be moot and the proportion of the loss that was actually paid out as bribes may be debatable but that there was sizable loss and substantial bribes is, in my opinion, true.

    ReplyDelete
  4. Regarding your recommendation for not auctioning,

    Here is two points from the operative part of judgement.

    1.Within two months, TRAI shall make fresh recommendations for grant of licence and allocation of spectrum in 2G band in 22 Service Areas by auction, as was done for allocation of spectrum in 3G band.

    2.The Central Government shall consider the recommendations of TRAI and take appropriate decision within next one month and fresh licences be granted by auction.

    SC orders the govt and TRAI to go for auction.It is dirction,they have to comply.

    ReplyDelete
  5. While analysing the points, SC judgement notes,

    71. The argument of Shri Harish Salve, learned senior counsel that if the Court finds that the exercise undertaken for grant of UAS Licences has resulted in violation of the institutional integrity, then all the licences granted 2001 onwards should be cancelled does not deserve acceptance because those who have got licence between 2001 and 24.9.2007 are not parties to these petitions and legality of the licences granted to them has not been questioned before this Court.


    What will happen if someone challenges all the 'allocations without auction' from 2001 based on this decision?

    ReplyDelete
  6. poovannanFeb 2, 2012 01:24 AM

    இப்ப ஒரு லட்சத்து எழுவத்தி ஆறாயிரம் கோடி கிடைக்குதான்னு பார்க்கலாம்.போன் விலை ஏறுவதால் பெரிய பாதிப்பில்லை.பால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாது,பேருந்து கட்டணம்,ரயில் கட்டணம்,டீஸல் கட்டணம் ஏற்றபடனும் ஆனா போன் விலை ஏறாம இருக்கனும்றது சரியா.அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து இதை குறைக்கலாம் இல்லையா

    Reply to Poovannan:

    You had alleged some nonsense earlier about Swami. Once Mr. Badri countered it appropriately, you are diverting the discussion. You must be a typical DMK follower! Never answering any question but only raising counter question irrelevantly.

    ReplyDelete
    Replies
    1. அய்யா சாமி இப்ப தான் பார்த்துட்டு நானும் பதில் கொடுத்திருக்கேன்.அதையும் படிங்க..வடிவேலு மாதிரி கடைசியா ஏறிட்டு நான் தான் நான் தான் செயிச்சேன்ன்னு கூவறது அதற்க்கு இன்னும் கொஞ்சம் பேரு கை தட்டறது எந்த கட்சி மாதிரி
      கீழ் கோர்ட்டை முடிவு எடுக்க சொல்லி உச்ச நீதி மன்றம் சொல்லி விட்டதால் மோடிக்கு வெற்றி,வழக்கு போட்டவர்கள் முகத்தில் கரி ஆனால் அதே தீர்ப்பு சாமி போட்ட வழக்கில் வந்தால் சாமிக்கு மகத்தான வெற்றி.முடியல சாமி
      அடுத்ததா உச்ச நீதி மன்ற நீதிபதியை சோனியா க்ளோனிங் செஞ்சு வேற ஒருவரை வெச்சு தீர்ப்பு எழுத பார்க்கிறார்னு சொல்வார்.ஆஹான்னு கன்னத்தில போட்டுக்குங்க

      Delete
  7. //ஆனால் என் வருத்தமெல்லாம் இனி ஸ்பெக்ட்ரத்துக்கு என்று ஏலம், அதிகக் கட்டணம் என்று ஆகப்போகிறதே என்பதுதான். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்குப் பிறகு எந்த மத்திய அரசும் ஸ்பெக்ட்ரத்தை இலவசமாகத் தராது. அதனால் கட்டணம் கடுமையாக உயரும்.//
    அதாவது, அரசு இலவசமாக கொடுத்ததால் இதுவரை குறைந்த விலையில் எல்லா நிறுவனங்களும் செல் போன் சேவையை அளித்தது என்கிறீர்கள்..
    பிரச்சினையே அரசுக்கு வரவேண்டிய காசு பெரும் முதலாளிகளுக்கு லாபமாகவும், யூகமாக அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாகவும், போய் சேர்ந்தது என்பது தான். இதில் மக்களுக்கு குறைந்த செலவில் சேவை என்பது எங்கிருந்து வந்தது?

    ReplyDelete
  8. swamy was relentless in his pursuit in this case.He is vocal and Bhushan is not so vocal.But there are other parties in this case who went against the government's decision as they realized that govt. was covering up a scam.

    ReplyDelete
  9. spectrum ஏலம் விடப்பட்டாலும் mobile கட்டணம் ஏறாது என்றே நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. @poovannan:

    மோடி விஷத்துக்கும் சிதம்பரம் விஷயத்துக்கும் வித்தியாம் உள்ளது. சிதம்பரத்துக்கு ஊழலில் பங்கு உண்டு என சுவாமி சொல்கிறார். மற்றும் சிலரும் சொல்கிறார்கள், அவ்வளவே. ஆனால், மோடி விஷயத்தில், பத்திரிகைகள், இடது சாரிகள், அறிவுஜீவிகள், நீங்கள் என அனைவரும் மோடி குற்றவாளி என முடிவே கட்டி விட்டீர்கள். ஏதோ அவரே நேரடியாக ரெண்டாயிரம் முஸ்லிம்களை குத்திக் கொன்றதைப் போல ஒரு தோற்றத்தை உண்டாக்கி விட்டீர்கள். இந்த நிலையில், SIT அமைத்த பின்பும் உச்சநீதிமன்றம் மோடியை வழக்கில் சேர்க்க வேண்டுமா என்பதை கீழ் நீதிமன்றமே முடிவு செய்யலாம் என கூறிவிட்டது. இது மோடியின் வெற்றி. மேற்குறிப்பிட்ட அத்தனை பேர் முகத்திலும் கரி.

    ReplyDelete
  11. காலரா வந்தவன் எந்தக் கக்கூசில் பேண்டாலும் களனித் தண்ணியாத்தான் வரும். அது போல் பூவண்ணன் எங்கு வந்து எழுதினாலும் அதில் மோடி முஸ்லீம்களைக் கொன்றான் என்பார். பூவண்ணனுக்கு வாயில் வகுத்தால போகும் வியாதி. பூவண்ணனுக்கு மட்டுமா இந்த வியாதி ?

    ReplyDelete
    Replies
    1. ஐயா
      நான் என்ன மோடி நாம் ஐந்து நமக்கு இருவத்திஐந்து என்று இஸ்லாமியரக்ளை உயர்த்தி உருவாக்கிய பஞ்ச டயலாக்களையோ இல்லை மத கலவரத்தில் அவர் வீரத்தோடு அதை நிறுத்த ஆற்றிய பங்கை பற்றி பேசினேனா,.இவர் மேல் சம்பந்தப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கீழ் கோர்ட் முடிவு செய்யும் என்று சொன்னதை அவருக்கு வெற்றி என்று கூத்தாடி விட்டு இப்போது ப சி வழக்கில் அதே போல் தீர்ப்பு வந்தால் வேறு மாதிரி கூத்தாடுவது புரியவில்லையே என்று தானே எழுதினேன்.

      Delete
    2. Vajra gets keyboard cholera whenever conversation is about Modi :)

      Delete
  12. @Venakatesan:::///spectrum ஏலம் விடப்பட்டாலும் mobile கட்டணம் ஏறாது என்றே நான் நினைக்கிறேன்.///aniyaayaththirku appaavi inthiyana irukkeengale!

    ReplyDelete
  13. சுப்ரமணிய சாமியின் முத்துக்கள்
    சோனியா விற்கு இருக்கும் வியாதி என்ன,எவ்வளவு நாள் உயிரோடு இருப்பார் என்று தினமும் எடுத்து விட்டு கொண்டிருப்பார்.
    இப்ப வந்திருப்பது சோனியா அல்ல அவர் தங்கை.
    இப்போது அவர் தான் அரசை ஆட்டு விக்கிறார்
    ராகுல் காந்திக்கு மூளை வளர்ச்சி இல்லை.வைத்தியம் செய்து கொண்டார்,கொள்கிறார்
    இப்படி நம் வீட்டில்,பக்கத்தில் யாரவது பேசி கொண்டிருந்தாள் உடனடியாக வைத்தியரிடம் கூட்டி செல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கிறோம் என்று நினைத்து கொண்டிருந்தேன்.ஆனால் இவரையும் அவரை தெய்வமே நீங்க எங்கேயோ போய்டீங்க என்பவர்களையும் பார்த்தால்

    மற்றும் சில முத்துக்கள்
    அவர் மகள் ஒரு இஸ்லாமியரை காதல் திருமணம் செய்து கொண்டவர்.சில மாதங்கள் முன்பு இஸ்லாமிய சட்டத்தின்படி இஸ்லாமியருக்கும் ஹிந்துவிற்கும் நடந்த திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வந்தது.உடனே ட்விட்டர் வாயிலாக மகளுக்கு மறுபடியும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்,குழந்தைகளை இந்துவாக வளர் என்று அறிவுரை.சில மாதங்களுக்குள் இந்து திருமண சட்டத்தின் கீழும் இரு வேறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு இடையே (மத மாற்றம் செய்யாமல்)நடைபெற்ற திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வந்தது.இரு வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஸ்பெஷல் marriage act கீழ் தான் திருமணம் செய்தாக வேண்டும் என்ற விஷயம் தெரியாத சட்ட மேதை அவர்.அவர் ஏதோ ஜெதமளாணி,சொராப்ஜி,நரிமன் மாதிரி வழக்காடும் திறமையால் பல வெற்றிகளை பெற்ற மாதிரி அவரை பற்றிய பேச்சுக்கள் நல்ல நகைச்சுவை

    ReplyDelete
  14. ithenna, kinaru vetta bootham kilambiya kathaiyaa illa irukku!

    ReplyDelete
  15. For those who still think that 1.76 la cr loss in spectrum is inflated, this data is for such folks who still may have doubt in the number.

    In 1995 US allocated spectrum to 99 companies for $7.7 billion (about 3.5 la crores) and it is not even 3G. Considering the technological advancement (tech goes cheap as it matures) 1.76 sounds like a reasonable amount.

    http://wireless.per.nl/reference/chaptr02/specfee.htm

    ReplyDelete
    Replies
    1. You cannot make such direct comparison. You should consider the exchange rate (1 US Dollar is around 50 Rs). A US customer would pay 70 dollar (around Rs 3500) per month and average mobile users in India pay much less than that. Hence the spectrum will also be valued proportionally lesser in India. (So the value of same commodity is not the same in different places. )

      Delete