இந்திய நாடாளுமன்றத்தையும் தேசியச் சின்னத்தையும் அவமதித்து கார்ட்டூன் வரைந்ததாக அசீம் திரிவேதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வரைந்த கார்ட்டூன்களை நான் இதுவரையில் பார்த்திருக்கவில்லை. கைது செய்தி கேட்டு இணையத்தில் தேடியதில், விக்கிபீடியாவில் இந்த இரண்டு கார்ட்டூன்களும் இருந்தன.
[விக்கிபீடியா படங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதால் வரவில்லை. வேறு இடத்திலிருந்து லிங்க் கொடுத்துள்ளேன்.]
இப்படி கார்ட்டூன் போட்டதற்காகவெல்லாம் கைது செய்வார்களா என்று
ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் ஒருவகையில் சட்டத்தை ‘டெஸ்ட்’ செய்யவேண்டியது
அவசியமாகிறது. இந்த வழக்கை வலுவான வக்கீல்கள் நடத்தி, வழக்கு தொடுக்கக்
காரணமாக இருந்த மாநில அரசை சந்தி சிரிக்கவைத்து, கடுமையான அபராதம்
விதிக்குமாறு செய்தால் நன்றாக இருக்கும்.
நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அனைவர்மீதும் நாட்டில் உள்ள யாருக்குமே நம்பிக்கை இல்லை என்பது தெளிவு. அவர்களைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்படும் கார்ட்டூன், ‘தேசம்’, ‘தேசியச் சின்னம்’, ‘தேசியக் கொடி’ ஆகிய அருவங்களைக் கேலி செய்வதாக ஆக்கி, ஏதோ அரதப் பழசான சட்டங்களைக் கையில் எடுத்து தண்டனை தரும் அளவுக்கு ஓர் அரசு செல்லுமானால் அந்த அரசு தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று.
முதலில் இந்த அபத்தங்களை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவேண்டும். அதற்காக அசீம் திரிவேதி போன்றோர் சில காலம் சிறையில் இருக்கவேண்டியுள்ளது. அவருக்கு என் வந்தனங்கள்.
நியூஜெர்ஸி சந்திப்பு
2 hours ago
http://cartoonsagainstcorruption.blogspot.in/
ReplyDeleteநீதிபதிகள் contempt of கோர்ட் என்று இன்னும் பழைய அடக்குமுறை சட்டத்தை பிடித்து தொங்கி கொண்டிருக்கும் போது அவர்கள் இந்த வழக்கில் பொங்கி எழுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது
ReplyDeleteதேசிய கோடி அவமதிப்பு வழக்கு பலர் மீது பாய்ந்துள்ளது.அது சரி என்றால் இதில் தவறு எங்கே வருகிறது
ஜன கன மன பசி பஞ்சம் பட்டினி என்று பாடினால் அவமதிப்பு வழக்கு பாயும் ஆனால் கார்டூன் வரைந்தால் பாய கூடாது என்று எப்படி இருக்க முடியும்
பாப்ரி மசூதி,ராம் ஜனம்பூமி இடத்தை toilet ஆகுவோம் என்று கார்டூன் வருவதை பொறுத்து கொள்ளும் நிலை வரும் போது பாராளுமன்றத்தையும் toilet ஆக்கினால் தவறில்லை.ஆனால் இல்லாத கடவுளை இழிவுபடுத்த கூடாது.இருப்பவர்களை எப்படி வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம் என்பதில் ஞாயம் இல்லை
இலங்கை பத்திர்க்கையில் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றிய கார்டூனை பார்த்தீர்களா
அதை பற்றிய கருத்து என்ன.அப்படி வரைவதற்கு உரிமை உண்டா ,உரிமை வேண்டுமா
தேசிய கீதத்தை அவமானம் செய்வதை, தேசியக் கொடியை எரிப்பதை அல்லது கேவலப்படுத்துவதை எல்லாம் முழுமையாக அனுமதிக்கவேண்டும் என்பது என் கருத்து. அல்ட்ரா-தேசியவாதிகள் இதனை ஏற்கமாட்டார்கள். அது என் பிரச்னை அல்ல. அதேபோல நீதிமன்ற அவமதிப்பும் அபத்தமான நிலைக்குப் போய்விடக்கூடாது.
Deleteஇலங்கைப் பத்திரிகை கார்ட்டூனைப் பார்த்தேன். அப்படி வரைவது தரக்குறைவானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தரக்குறைவான காரியத்தைச் செய்யக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. காரியம் செய்யப்பட்டபிறகு, சம்பந்தப்பட்டவர்கள் சட்டபூர்வமாகத் தங்களால் என்ன செய்யமுடியும் என்று பார்த்துக்கொள்ளலாம். உதாரணமாக அவதூறு வழக்குகளை அள்ளித் தெளிக்கும் ஜெயலலிதா, கொழும்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு (சொந்தக் காசில்) தொடுக்கலாம். அல்லது தம் கட்சியினரை விட்டு, மகிந்த ராஜபட்ச இந்தியாவுக்கு வரும்போது சட்டத்துக்கு உட்பட்டு எதிர்க்கலாம். (மணி சங்கர் ஐயர் ட்ரீட்மெண்டும் தரலாம்.)
இட்டிலி தோசை வடை போண்டா.. தேசியவியாதிகளே
Deleteமுதலில் தேசத்தில் இருப்பவனக்கு தேசிய படைகளிடம் இருந்து பாதுக்காப்பு கொடுக்க சொல்லுங்கள் பிறகு சின்னங்களுக்கு கொடுக்கலாம்.
Kandaswamy
பீட்சா, பர்கர், மெக்டோனால்ட்ஸ் அறிவுஜீவிகளே...
Deleteமுதலில் நீங்கள் நம்பாத தீசியத்தைப் பற்றி வாய் வழியாக டயேரியா போவதை நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு கருத்து என்று எதையாவது உளருங்கள்.
Madasamy
>> பாப்ரி மசூதி,ராம் ஜனம்பூமி இடத்தை toilet ஆகுவோம் என்று கார்டூன் வருவதை பொறுத்து கொள்ளும் நிலை வரும் போது....
Deleteஅதுதான் ஏற்கனவே வந்தாகி விட்டதே. ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டார்களே. எத்தனை திரைப்படங்களில் இந்துக் கடவுள்களை கிண்டல் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வதில் பாதி சரி. ராம் ஜனம்பூமியை toilet ஆக கார்டூன் வரைந்தால் ஒன்றும் நடக்காது. அது கருத்துரிமை. ஆனால் பாபர் மசூதியை toilet ஆக கார்டூன் வரைந்தால் அப்போது முற்போக்கு, இடது சாரி, தமிழ் தேசியம் என அனைத்துக் குழுவினரும் குரல் கொடுப்பார்கள். ஏன் என்றால் இது 'secular ' நாடு.
சார் இப்படியே இன்னும் எவ்வளோ வருஷம் பேசுவீர்கள்
Delete15 சதவீதம் இருக்குறவன் சிறையில 30 சதவீதத்திற்கு கிட்ட இருக்கிறான்.இஸ்லாமிய பெயரா இருக்கிறதால பெயில் கூட கிடைக்கமா பல வருஷமா இருக்கிறான்
அரசு வேலையில 5 சதவீதம் கூட கிடையாது.அரசியல்ல கூட குறைந்த இடம் தான்
ஆனா எல்லாம் அவங்களுக்கு சாதகமா இருக்கிற மாதிரி பேசும் போது கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி வரல
மசூதியை இடிச்சிட்டு அங்க சேலையையும் வெச்சு உச்ச நீதிமன்றம் அனுமதியோடு பூஜையும் நடக்குது.இப்பவும் எல்லாம் இஸ்லாமியர்களுக்கு சாதாகம நடக்கிற மாதிரி எழுதறதுக்கு
என்னா சொல்றது
பூ, பாபரி மசூதி என்றழைக்கப்படும் கும்மட்டத்தை கக்கூஸாக வரைந்துவிட்டு நீர் உயிருடன் இருந்தால் பேசுவோம்...இல்லாட்டி கம்மூனிச சொர்கத்தில் சந்திப்போம்...ஒரு 100 ஆண்டுகள் கழித்து!
Deleteஹி ஹி நான் என்ன அவ்வளோ பெரிய முட்டாளா
Deleteஉலகத்துல இருக்குற எல்லா தீவிரவாதிகளில் சோப்லாங்கிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள் தான்
சீக்கிய தீவிரவாதிகள் பிரதமர்,முதல்வர்,ராணுவ தளபதி,பல மந்திரிகள்,காவல் துறை அதிகாரிகள் என்று அவர்களுக்கு எதிராக இருந்த பலரை கொன்றார்கள்
தமிழ் தீவிரவாதிகள் இலங்கை பிரதமர்,இந்திய பிரதமர் ,தலைவர்கள்,மந்திரிகள்,ராணுவ அதிகாரிகள் என்று அவர்கள் எதிராக நினைத்தே பலரை கொன்றார்கள்
ஹிந்து தீவிரவாதிகள் காந்தியையே தூக்கினார்கள்,வெள்ளைய அதிகாரிகளையும் கொன்றார்கள்
இஸ்லாமிய சொப்லாங்கிகள் பாதுகாப்பின் கீழ் உள்ள ஒருவரையும் தொட மாட்டார்கள்.
புஷ் முதல் ருஷ்டி வரை கோல்ப் ஆடி கொண்டும் பல கல்யாணம் செய்து கொண்டும் இருப்பார்கள்
அவர்களால் முடிந்தது அப்பாவி மக்கள் மற்றும் கார்டூன் வரைந்தவன்,பள்ளி கூட ஆசிரியன் ,பத்திரிக்கையாளன்,கார்டூனை பார்த்தவன் என்று எப்பை சாப்பைகளின் மீது வீரம் காட்டுவார்கள்
In the 80s, the then TN CM MGR arrested Ananda Vikatan editor Balasubramanian and put him in jail for publishing a cartoon of one Mr.Paduthalam Sukumaran. Our politicians are weak, corrupt, back-boneless & thin skinned fellows.
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteநியாயமாக இதற்கு இவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்;ஆனால் வாய் பொத்தி ராஜபட்சயவை வரவேற்பார்கள்..
இன்னும் கிழக்கிந்தியக் கம்பெனி மனோபாவத்தில்தான் ஆளும் வர்க்கத்தில் இருக்கிறார்கள் போலிருக்கிறது !
இப்படி கேவலமாக தேச விரோதப் போக்கை ஆதரித்து எழுதித்தான் தங்களுடைய பிரபலத்தை தக்க வைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்கு உரியது. தங்களுக்கு தேசப் பற்று இல்லாமலிருக்கலாம். அதற்காக பொது இணையத்தில் தங்களது பதிவுகளை படிப்பவர்களின் மேல் நச்சுக் கருத்துக்களைத் திணிப்பது தேச விரோதச் செயல். தாய்நாட்டை பழிப்பது உங்கள் தாயைப் பழிப்பது போல என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? என்ன!
ReplyDeleteஇட்லிவடை பதிவில் கண்டனப் பதிவெல்லாம் போட்டிருக்கிறார்கள். நல்ல தமாஷாக உள்ளது. எதிரி நாட்டுக்காரன், இந்திய இறையாண்மையைத் தாக்கும் வகையில் இந்தியக் கொடியை அவமதிப்பதற்கும், நம் நாட்டு மக்கள் தங்கள் இயலாமையைக் காண்பிக்கக் கொடியை எரிப்பதற்குமான வித்தியாசம் என்று ஒன்று உண்டு.
ReplyDeleteஅரசின் செயல்களால் வெறுத்துப்போன மக்கள், அரசின் சின்னங்களை பகிஷ்கரிப்பதன்மூலம் தங்கள் நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். முரட்டு அரசாங்கம்தான் அப்படிப்பட்டவர்கள்மீது வழக்கு போடும்.
இன்று அரசில் அமர்ந்திருக்கும் சில கட்சிகள் (திமுக, அகாலி தளம், அஹோம் கண பரிஷத்) இந்திய இறையாண்மையை எதிர்த்துப் பல போராட்டங்களை நிகழ்த்தியுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தை எரித்தல், கொடியை எரித்தல் போன்றவையுடன் அகாலி தளத்தினர் துப்பாக்கிகள் கொண்டு போராடியுள்ளனர். பின்னர் அரசுடன் சமரசம் ஏற்பட்டதும் மீண்டும் இணைந்து முன்னேறியுள்ளனர்.
கொடியை எரிப்பதாலோ தேசிய கீதத்தை அவமதிப்பதாலோ தேசியம் பாதிக்கப்படப் போகிறது என்றால் அது பலவீனமானதொரு தேசியம்.
//அரசின் செயல்களால் வெறுத்துப் போன மக்கள் அரசின் சின்னங்களை பகிஷ்கரிப்பதன் மூலம் தங்கள் நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்//
Deleteஆனால் அரசுக்கும் தேசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசின் மீது கோபம் வந்தால் அரசின் சின்னத்தை மட்டும் எரிக்கட்டும். காங்கிரஸ் கொடியை எரித்தால் பரவாயில்லை. காங்கிரஸ் அலுவலகத்தை டாய்லட்டாக வர்ணிக்கட்டும். பிரதமரையும் சோனியாவையும் எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கட்டும்.
அரசு இன்று இருக்கும், நாளை போய் விடும். தேசம் என்ற தத்துவம் நிலையானது. அதன் சின்னங்களை அவமதிப்பது மன்னிக்க முடியாத குற்றம் தான். அதில் என்ன இருக்கிறது, இதில் என்ன இருக்கிறது என்று கேட்டுக் கொண்டே போனால் எதிலுமே எதுவுமே இல்லை என்று தான் தோன்றும். ஏற்கெனவே தவறுகள், குற்றங்கள் குறித்து நாளுக்கு நாள் நமது சூடு சுரணை குறைந்து கொண்டே வருகிறது. அதை சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, பரந்த மனப்பான்மை என்று எண்ணி மனப்பால் குடித்துக் கொண்டிருந்தால் சமூகம் முற்றிலும் சீர்கெட்டே போய்விடும்.
மேலும் (அகாலிதளம், அஹோம் கண பரிஷத் போன்ற- திமுக இதில் சேர்க்கப்படவும் அருகதையற்ற அருவெருப்புக்குரிய அமைப்பு) அமைப்புகள் போராடும் போது சின்னங்களை எரிப்பது MOB VIOLENCE என்கிற முறையில்- கோபங்கொண்ட ஜனத்திரளின் உணர்ச்சிக் கொந்தளிப்பு என்று கருதப்பட்டு மன்னிக்கப்படலாம். ஆனால் பத்திரிகையாளர்கள் கார்ட்டூன் வரைவது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அல்லவே? ஏஸி அறைக்குள் ஆற அமர சிந்திக்க அவர்களுக்கு எல்லா வாய்ப்பு வசதிகளும் இருக்கின்றன. விளைவுகளைக் குறித்து சிந்தித்து செயல் பட வேண்டிய பொறுப்புணர்ச்சி அவர்களுக்கு இருந்தே தீர வேண்டும்.
கொடியை எரிப்பதை/தேசிய கீதத்தை அவமதிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம்தான் தேசியம் பலமானது என்று நிரூபிக்க வேண்டி இருந்தால் அது தான் உண்மையில் நமது பலவீனங்களுக்குள் மிகவும் வெட்கக்கேடானதாக இருக்கும்
Deleteஇசுலாமியர்கள் சுகமாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. இந்து மதத்தை ஏளனம் செய்வதை முற்போக்குவாதிகள் ஆதரிப்பார்கள். அது கருத்து உரிமை. ஆனால் இசுலாத்தை எதிர்த்து கார்டூன் போட்டால், ஏளனம் செய்தால் கொதிப்பார்கள். அவ்வளவே.
ReplyDeleteராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்பும் இடத்தில் இருந்த கோவிலை இடித்து (அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பில் கூறியபடி) மசூதி கட்டியதை ஆதரிக்கிறீர்கள். ஆனால் அந்த மசூதியை இடித்து கோவில் கட்டினால் பெரும் குற்றம். காபாவை இடித்து பிள்ளையார் கோவில் கட்டினால் இசுலாமியர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?
சில பிரச்சினைகளை அணுகும் போது பத்ரி லிபரலாக இருக்கிறார், லிபரல் கருத்துக்களை முன் வைக்கிறார் என்பதை நான் நேர்மறையாகவே கருதுகிறேன்.அதைப் புரிந்து கொள்ளாமல் இதில் இந்து-முஸ்லீம் பிரச்சினைகளை எதற்கு கொண்டு வருகிறார்கள். கருத்துரிமையை பயன்படுத்தி தேசிய சின்னங்களை கிண்டல் செய்வது குற்றம் என்றால் அத்தகைய சட்டங்களை நீக்க வேண்டும்.ஒரு கார்டூனால் தேசிய சின்னத்தின் மதிப்பு போய்விடும் என்பது அபத்தம். நான் அத்தகைய கார்ட்டூன் வரையமாட்டேன் அதற்காக் அப்படி வரைபவர் உரிமையை நான் ஏற்க மாட்டேன் என்று வாதிட முடியாது.
ReplyDeleteஅரசியல்சட்ட எரிப்பு போராட்டத்தை பெரியார் நடத்தினர், அவரும் அதில் பங்கேற்றார்.தண்டனை வழங்கப்பட்டது, அதை ஏற்று சிறை சென்றார்.அப்போராட்டம் அமைதியாக நடந்தது.அரசியல் சட்ட பிரிவு எழுதப்பட்டிருந்த காகிதத்தை எரித்ததற்காக நீதிமன்றம் கருணாநிதி,அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கமுடியாது என்று தீர்ப்பளித்தது.இருவரும் சட்டமனற் உறுப்பினர் பதவியை அதனால் இழந்தனர்.தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிந்தேதான் அவர்கள் அப்படி செய்தார்கள்.
ராஜத்துரோகம் போன்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு கருத்துரிமையை கட்டுப்படுத்த முயல்வதை ஆதரிக்க முடியாது.
அமெரிக்க தேசியக் கொடியை எரித்ததையும் கருத்துரிமையின் வெளிப்பாடு என்று கருதி தீர்ப்பளிக்கப்பட்டது,அவ்வாறு செய்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தேசிய கீதம் பாடப்படுவதை கட்டாயமாக்க முடியாது என்றது, ஒருவரின் மத நம்பிக்கை அதைப் பாட இடம் தரவில்லை என்றால் அவர் அதை பாடினால்தான் பள்ளியில் படிக்க முடியும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு தரவில்லை.மாறாக பலர்/பிறர் தேசிய கீதத்தை பாடும் போது மத நம்பிக்கை (செவன் த் டே அட்வெண்டிஸ்ட் என்ற கிறித்துவ பிரிவினர்) காரணமாக பாட மறுக்கலாம்,அமைதி காக்கலாம், அது அடிப்படை உரிமை என்றுதான் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தது.இட்லிவடைகளுக்கு இது தெரியுமா.
தேசப்பற்று என்பதை உணர்ச்சிகரமாகவே அணுக நினைப்பவருக்களுக்கும், அதை கருத்துரீதியாக அணுகுவோருக்கும் முரண்கள் எழலாம்,எழும்.அதைப் புரிந்து கொள்வதால் இட்லிவடையின் பதிவை விமர்சிக்கலாம்,அவ்வாறு எழுத அவருக்கு உரிமை உள்ளது என்பதையும் சேர்த்தே சொல்லலாம்.
ReplyDeleteஇந்த கார்ட்டூன்களை பப்ளிதம் செய்ததற்கு உங்களை உள்ளே போடுவார்களா? நம் நாட்டில் எது சரி எது தவறு என்பதற்கு ஒரு வரையறை இல்லை. இவர்களின் பொறுமையின்மை சீக்கிரம் இந்த அரசு போகப்போகிறது என்பதைத்தான் காட்டுகிறது. படுதோல்வி நிச்சயம். அதற்கும் மேல், இந்த நடவடிக்கையால் இன்னும் அதிகம் பேர் இந்த சித்திரங்களை பார்ப்பார்கள் என்பதுதான் நிதர்சனம். ஒருவேளை கரிக்கதவை மறைக்க ஆடும் கபட ஆட்டமாகவும் இருக்கலாம்.
ReplyDeleteநாட்டில் நடக்கும் உண்மையை தான் அவர் படமாக வரைந்து இருக்கிறார். ஆதலால் இதை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. இதற்கு கைது என்பது எல்லாம் ரொம்ப ஓவர்.
ReplyDeleteஅருந்ததி என்ற கை கூலி இந்தியாவை உடைக்கும் விதத்தில் பேசினார். அதுவும் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே.... அதை எல்லாம் விட்டு விட்டார்கள். ஆனால் இதற்கு கைது... கொடுமை...
@ பூவண்ணன், நீங்கள் சொன்னது போல் 30% முஸ்லீம்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து சொல்கிறீர்கள். எதோ போகிற போக்கில் எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டு போவீர்களா என்ன? உங்கள் தலையில் இருக்கும் குல்லாவை எடுத்து எங்கள் தலைக்கு போட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். உண்மையில் அவ்வாறு இருந்து இருந்தால் நாட்டில் நடக்கும் பிரச்சனையில் ஒரு 20% குறைந்து இருக்கும்.
http://articles.timesofindia.indiatimes.com/2012-06-03/india/32005470_1_muslim-inmates-muslim-youth-tiss
DeleteCommissioned by the State Minorities Commission as a follow-up to the Sachar Committee report which lamented that "in Maharashtra Muslims account for 10.6% (2001 survey) of the general population, yet they comprise 32.4 % of the prison population" (the current prison population is 36%)
அப்படி என்றால் மஹாராஷ்டிரா என்று தெளிவாக எழுத வேண்டியது தானே? ஏன் ஒட்டு மொத்த நாட்டிலும் என்று சொல்கிறீர்கள். இத்தனைக்கும் அங்கு ஆட்சியில் இருப்பது முஸ்லீம்களின் அடியாள் கட்சியான காங்கிரஸ் அல்லவா?
Deleteசரி உங்கள் கணக்கீட்டில் பார்த்தாலும் மீதம் உள்ள வகையில் முஸ்லீம்களை விட ஹிந்துகளே அதிகம் சிறையில் உள்ளனர்.
சரி சிறையில் இருப்பவர்கள் எல்லாம் இந்தியர்களா என்று சர்சார் கமிட்டி பார்த்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஏன் எனில் கசாப் போன்றவர்கள் எல்லாம் கூட அங்கு தானே சிறையில் இருக்கிறார்கள்.
என்ன பூ, ஜெயிலிலும் இட ஒதுக்கீடு வேண்டுமாக்கும் ?
Deleteஅப்ப, தப்பு செய்யும் பார்ப்பானர்கள் 1-2% தான் இடம் இருக்கும். நிறைய பேர் மாட்டிக்கொண்டால் ஜெயிலில் அடைக்க முடியாது. ஓகேயா ?
ஆளுங்க கம்மியா இருக்கிறாங்க என்று தான் இட ஒதுக்கீடு கேட்பார்கள்.சதவீததிற்கு அதிகமாக இருக்கும் போது இட ஒதுக்கீடு எதற்கு
Deleteஇந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அவர்கள் சதவீதத்திற்கு அதிகமாக,இரண்டு மடங்குக்கு கூட குறைய தான் சிறையில் உள்ளார்கள்
இந்தியா முழுவதும் சிறையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 22 சதவீதம் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன
அவர்களை தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்குகிறார்கள் என்று சிலர் குறைபட்டு கொள்ளும் போது அவர்களின் சிறை சதவீதத்தை பற்றி எழுத வேண்டி வந்தது
http://www.thehindu.com/news/national/article3563333.ece
The percentage of Muslims in jails is also a high 36 per cent, says Dr. Raghavan, quoting recent official figures. Along with Gujarat and Kerala, Maharashtra is one of the States with the most disproportionate number of Muslims in prisons
http://themmindset.wordpress.com/2011/01/24/why-so-many-muslims-in-prisons/
There is no breakdown of the nature of the crimes for which Muslims are incarcerated. 102,652 Muslims are in jail, and the majority are NOT imprisoned for terrorism. 12 states with sizeable Muslim populations were asked to submit figures, but four states – West Bengal, Uttar Pradesh, Bihar and Andhra Pradesh – have not responded. West Bengal, Uttar Pradesh and Bihar have the fewest Muslims in government employment. (Its clear that these states have even higher percentage of Muslim prisoners, a fact which they want to hide)
The states with the most disproportionate amount of Muslims in jail are Maharashtra, Gujarat and Kerala.
In Maharashtra, Muslims account for 10.6% of the general population, yet they comprise 32.4% of the prison population. For those incarcerated on terms of less than a year, the figure rises – 42% of prisoners on short-term sentences in the state are Muslim.
In Gujarat, where Muslims account for 9.06% of the populace, they account for 25% of all prison inmates.
Assam has the second-highest number of Muslims in its population (Jammu & Kashmir state has the highest), at 30.9% of the general populace. Yet in this state, there are fewer Muslims in jail – 28.1%.
பத்ரியின் கருத்தை நான் வரவேற்கிறேன்... இவர்கள் இறையாண்மை என்று சொல்லி கொண்டு எல்லா அநியாயத்தையும் செய்து கொண்டு இருப்பார்கள். மக்கள் வாயை மூடி கொண்டு இருக்க வேண்டுமா என்ன?
ReplyDeleteவிக்கிபீடியாவிலிருந்து நான் நேரடித் தொடுப்பாகக் கொடுத்துள்ள இரண்டு படங்களையும் இந்திய அரசின் இணையத் தணிக்கைத் துறை தடுத்துள்ளது! அதனால் அந்தப் படங்களை உங்களால் இப்போதைக்குக் காணமுடியாது.
ReplyDeleteவிநாச காலே விபரீத புத்தி.
http://www.cartoonsagainstcorruption.blogspot.in/ has the cartoons which I have directly linked. It is quite possible that this may also be soon knocked off. Let us see.
ReplyDeleteplease see this pic
ReplyDeletehttp://m.ak.fbcdn.net/photos-g.ak/hphotos-ak-ash3/527200_358898080855713_1179327482_a.jpg
I have posted a comment in Idlyvadai supporting your article, which it seems you have removed.
ReplyDelete//What Badri wrote is correct.
People who do not have prior experience with or knowledge about freedom of expression cannot understand what Badri wrote.
People who know even a little bit about freedom of speech would condemn the Abrahamic approach to cartoons and symbols of nation, religion, or organization.
Badri has NOT said that such cartoon as the typical Buddhist racist cartoons should be encouraged.
He has said that proper legal actions can be taken against such cartoons. He did.
Freedom to cartoon and freedom to criticize/sue cartoonists should co-exist. That is what happened in the case of M.F. Hussein. The approach taken in the M.F. Hussein ensures that both freedom of cartooning and freedom to protect honour co-exist. That is typical Hindutva approach, which everyone must emulate.
This approach is not protecting hate speech, it is protecting freedom of speech.
Again, to reiterate: Badri is correct.//
on the basis of the pic above can we take action against congress ?
ReplyDeleteஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், தோரியம் ஊழல் என ஊழல்கள் எல்லாம் முழுமையாக அனுமதிக்கப்பட வேண்டும். ஊழலே செய்யக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. ஊழல்கள் செய்யப்பட்டபிறகு, சம்பந்தப்பட்டவர்கள் சட்டபூர்வமாகத் தங்களால் என்ன செய்யமுடியும் என்று பார்த்துக்கொள்ளலாம். உதாரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அல்லது தம் கட்சியினரை விட்டு, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு உட்பட்டு எதிர்க்கலாம். ( சுப்ரமண்ய சாமி ட்ரீட்மெண்டும் தரலாம்)" _ இப்படிக் கூட நாளைக்கு (யாராவது) சொல்லலாம் தானே சார் :-)))
ReplyDeleteArivan avargal koduthulla padam migavum kevalamaaga ulladhu. Indha nilaiyil namadhu arasiyal ulladhe enru ninaikkum podhu migavum varuthamaaga irukkiradhu. Aaanal adhai patri avargalukku kavalai illai enbadhu kovathai erpaduthugiadhu.
ReplyDeleteaatchiyil iruppavargaladhu kurikkol irandudhaan. 1) eppadi sambaadhippathu 2) eppadi meendum elect aavadhu. power-il irundhu vittaal adhai viduvadharkku yaarukkume manam varaadhu.