Friday, September 21, 2012

முஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை

Innocence of Muslims என்ற தலைப்பில் ஒரு படத்தின் டிரெய்லர் காட்சி யூட்யூபில் வந்தது. அதனால் உலகத்தில் எங்கும் முஸ்லிம்கள் கொந்தளித்துள்ளனர். லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின்மீது மக்கள் தாக்குதல் தொடுத்து அமெரிக்கத் தூதரைக் கொன்றுவிட்டனர். நேற்று இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. நிலைமைக் கட்டுக்குள் வைக்க, ராணுவம் அழைக்கப்படவேண்டியிருந்தது. சென்னை அண்ணா சாலையில் அமெரிக்கத் தூதரகம் உள்ள பகுதியில் தினமும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையின் காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். தென் மாவட்டங்களில் அடக்குமுறையை வெற்றிகரமாகச் செய்து காண்பித்துள்ள ஒருவர் புதிய ஆணையராக ஆகியுள்ளார்.

மேற்கண்ட படம் யூட்யூபில் இப்போதும் காணக்கிடைக்கிறது. இன்று காலையில்தான் நான் பார்த்தேன். மிக மோசமான லோ பட்ஜெட் படம். பழங்காலத் தமிழ்ப் படங்களில் பின்னால் திரைச்சீலை கட்டி வைத்திருப்பதுபோல் பாலைவனம் என்பது நிலையான ஓர் ஓவியம்.

எகிப்தில் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களைக் கொலை செய்வதிலிருந்து தொடங்குகிறது. மனித குலத்தில் "X"-ஐச் சேர்த்தால் அது விஷக் கிருமியாகிறது; அந்த விஷக் கிருமியை நீக்கினால் அது மீண்டும் மனிதன் ஆகிவிடும் என்று பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மருத்துவர் தன் மகளுக்குச் சொல்கிறார். அந்த X எது? அதுதான் இஸ்லாம், அதுதான் முகமது என்பதாகக் கதை விரிகிறது.

கதீஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு கிழவர், டோராவையும் புதிய ஏற்பாட்டையும் கொஞ்சம் திரித்து, கலந்து முகமதுவிடம் கொடுக்க அது குரான் ஆகிறதாம். முகமது வெட்டு, குத்து, கொல்லு என்கிறார். சிறுவர்களையும்கூட.

முகமதுவைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் முஸ்லிம்களை நிஜமாகவே கோபம் கொள்ளவைக்கும். முகமது அறிமுகப்படுத்தப்படும் காட்சியில், தந்தை யார் என்று தெரியாதவர் என்பதற்கான ஆங்கில வசைச் சொல் கொண்டே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் அவரை அழைக்கின்றனர். கதீஜா - முகமது ஈடுபடும் ஒரு காட்சி, முகமது வேறொரு பெண்ணுடன் உறவுகொள்ளும்போது அவருடைய இரண்டு மனைவிகள் செருப்பை எடுத்துக்கொண்டு வந்து அவரை ஓடவிட்டு அடிப்பது, 120 வயதான ஒரு கிழவி முகமதுவுக்கு எதிராகப் பேசுகிறார் என்பதற்காக அவருடைய இரண்டு கால்களையும் இரு வேறு ஒட்டகங்களில் கட்டி அவற்றை எதிரெதிர் திசையில் நடக்கச் செய்து அவரைக் கிழித்துக் கொல்வது, முகமதுவையும் அவருடைய தோழர் உமரையும் ஒரு பாலினச் சேர்க்கையாளர்கள் என்று சொல்வது, இப்படி அவதூறுகள், வேண்டுமென்றே புண்படுத்தவேண்டும் என்று உருவாக்கப்பட்ட மலினமான காட்சிகள்.

மேலை நாடுகளின் கருத்துரிமை, பேச்சுரிமைப் பாரம்பரியப்படி, இதுபோன்ற படங்கள், புத்தகங்கள், கார்ட்டூன்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்டவை. இயேசு திருமணமானவரா, இல்லையா என்பதை மிக நாசூக்காகப் பத்திரிகைகளில் அலசுகிறார்கள். நிறுவன கிறிஸ்தவத்துக்குக் கடுமையான கோபத்தைத் தரக்கூடிய விஷயம் இது. ‘பிஸ் கிறைஸ்ட்’ என்ற புகைப்படம் (சிறுநீரில் முங்கிவைக்கப்பட்ட சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து) அமெரிக்காவின் பல இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நான் படித்த கார்னல் பல்கலைக்கழகத்திலும் (1990-களின் ஆரம்பத்தில்) காட்சிக்கு வந்தது. நான் சென்று பார்த்தேன். வாசலில் சில மாணவர்கள் ஓவியத்துக்கு எதிராகத் தட்டிகளை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தனர். அவ்வளவுதான்.

‘இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ படத்தை எடுத்தது யார், இதற்கு நிதியுதவி செய்தது யார் என்பதில் பல புரளிகள் உடனடியாகக் கிளம்பி, யூதர்கள் மேல் கை காட்டப்பட்டுள்ளது. அனைத்துக்கும் அமெரிக்கா காரணம் என்று அந்த அரசின்மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தலையிட்டு சம்பந்தப்பட்ட படத்தை யூட்யூபிலிருந்து நீக்கவேண்டும், படம் எடுத்தவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்படுகிறது.

அமெரிக்காவின் சட்டதிட்டங்கள், நடைமுறைகள் ஆகியவற்றின்படி இதையெல்லாம் செய்ய முடியாது. அப்படியானால் நான்கைந்து அமெரிக்கத் தூதரகங்களை எரித்து, தூதர்களைக் கொன்று, கலவரம் செய்தாவது இவற்றைச் சாதிப்போம் என்றால் இந்தப் படம் கட்டமைக்கும் வகைமாதிரி பிம்பங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாகிவிடும்.

Ignore and proceed.

[இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் வெகுவாக சென்சார் செய்யப்படலாம்.]

49 comments:

  1. The best line of the article is "Ignore and Proceed". Some idiot in some part of the world decides to denigrate Islam and these guys immediately overreact. What's the point in holding mount road to ransom???Only god knows. I sincerely wish the muslim leaders appeal to their community to not overreact for these, because the more you react, more you will be teased.

    ReplyDelete
  2. நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன். நீங்கள் எழுதியதுபோல எழுதினால் யார் எழுதியது என்றுதான் பார்ப்பார்கள் என்பதால் எழுதவில்லை. அத்துடன், இதை விளக்கி எழுதினால் இன்னும் அறியாதவர்களும் அறியவும் அதனால் பிரச்சினை பெரிதாகவும் ஆபத்து இருக்கிறது என்பதால்தான் எழுதவில்லை. இப்போது நீங்கள் எழுதி விட்டீர்கள். இன்னும் விஷயம் பரவலாகும். அதுதான் கவலையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கலைஞர் தொலைக்காட்சியில் முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் படத்தைப் பார்த்ததையும் அதில் வரும் சில காட்சிகளையும் சொன்னார். நானும்கூட பார்த்ததில் சிலவற்றை மட்டும்தான் எழுதியுள்ளேன்.

      Delete

  3. Nobody so far has pointed out the actual culprit causing insults against Muhammad and Islam. It is the Christian Churches.

    Whatever is being said about Muhammad from the church pulpits are taken as this movie.

    You can verify with any Church going christians about such impressions on Muhammad.

    ReplyDelete
    Replies
    1. the film must be banned, but wht they said in the film is becoming true

      Delete
    2. what the heck you people supported m.f.hussain in his porno paintings now raising hue and cry what about your cultural freedom.more films like this should be made.

      Delete
  4. என்னடா வினவு, மதிமாறன்னு யாருமே இது பத்தி பேசலியேன்னு பாத்தேன். நீங்க பேசிட்டீங்க. நன்றி. எவ்வளவு தமிழ் சினிமால இந்துக்கடவுள்களை கேலி செயஞ்சிருப்பாங்க. அதெல்லாம் பேச்சுரிமை. இப்ப எங்க எங்க போனாங்க பேச்சுரிமை சிங்கங்கள்?

    ReplyDelete
  5. பத்ரி, உங்கள் வலைப்பூவில் பதிவிட முயன்றேன். எதோ தொழில்நுட்ப சிக்கல். நீங்கள் அந்த படத்தை வர்ணிக்கும் விதமே நீங்கள் மனம் புண்படுவதற்கு அப்பாற்பட்ட சுதந்திரவாத சிந்தனையாளர் என்பதை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் அத்தகு சுதந்திரவாதிகளாக இல்லாததால் அவர்கள் மனம் புண்படும் என்பதையும் கூறுகிறீர்கள். ஆனால் சுதந்திரவாதத்திற்கு இருவிதமான எல்லைகள் இருக்கின்றன. அது மறைமுகமாகவும், நேரடியாகவும் தடைசெய்யத் தயங்கியதில்லை. அதன் மறைமுக சென்சாரை செயல்படுத்த அது பாசிச மனோபாவத்தை ஒரு ரகசிய ஆயுதமாக, அணிகலனாக வைத்திருக்கும் (பெர்டிரண்டு ரஸ்ஸலை அமெரிக்க பல்கலைக்கழங்கள் அழைத்ததில்லை). இரண்டாவது எல்லை அது விமர்சன ஆற்றலை கருத்துரிமை என்ற பெயரில் மழுங்கடிக்கச் செய்யும். இப்படிப்பட்ட மதவெறியும், முட்டாள்தனமும் கலந்த படத்தை கடுமையாக கண்டனம் செய்யக் கூட முடியாத மனநிலையை உருவாக்கிவிடும். அதற்கு உங்கள் பதிவே உதாரணம். உங்களைப் போன்ற தீவிர சுதந்திரவாதிகளுக்கும், ஞாநி போன்ற விமர்சன பூர்வமான சுதந்திரவாதிகளுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். முட்டாளாயிருப்பதற்கும், மதவெறியராக இருப்பதற்கும், எகிப்தில் குழப்பத்தை ஏற்படுத்த சதி செய்வதற்கும் இந்த படம் எடுத்தவருக்கு உரிமை இருக்கலாம். அதை வன்மையாக கண்டிப்பதற்கு கூடவா உங்களைப் போன்றவர்கள் தயங்கவெண்டும்? சுதந்திரம் பெரும்பான்மைவாதத்தின் நிழலில் தங்குவதை தயவுசெய்து கவனியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சில விஷயங்கள் தவறாக இருந்தாலும் வரலாற்றில் பல நல்ல மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன
      அந்த விதத்தில் இது போன்ற திரைப்படங்கள்,இல்லாத கடவுள் மற்றும் அதை வைத்து மக்களை முட்டாளாக்கிய தூதர்களை பற்றிய அதிகபட்ச தாக்குதல்கள் வரவேற்க பட வேண்டியவையே

      Delete
    2. Ukkanthu yoseeppingalo, velai vetti illamal?

      Delete
    3. ராஜன் குறை கிருஷ்ணன் சொல்கிறார்:

      >> (பெர்டிரண்டு ரஸ்ஸலை அமெரிக்க பல்கலைக்கழங்கள் அழைத்ததில்லை)

      அடடா, அப்படியா என்ன?

      உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் அமெரிக்க பல்கலைக்கழங்கள் அவரை அழைத்தமையையும், இந்த பெர்ட்ராண்ட் ரஸ்ஸலும் உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் அங்கு போனதையும் நினைத்தால், எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் அவர்கள் சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

      நிற்க, ரஸ்ஸல் பல வருடங்கள் அமெரிக்காவில் இருந்தார்; அமெரிக்கப் பல்கலைக் கழகங்களிலும் பணி புரிந்தார். அவருக்கு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பலர் உதவி செய்தனர், துணையாக இருந்தனர், மதித்தனர்.

      From: http://plato.stanford.edu/entries/russell/

      (1939) Appointed professor of philosophy at the University of California at Los Angeles.

      (1940) Appointment at City College New York revoked prior to Russell's arrival as a result of public protests and a legal judgment in which Russell was found morally unfit to teach at the college.

      (1943) Dismissed from Barnes Foundation in Pennsylvania, but wins a suit against the Foundation for wrongful dismissal.

      UCLAவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது தான் ந்யூயார்க் சிடிகாலேஜ் அவருக்கு வேலை கொடுத்து பின் அது விவகாரமாயிற்று. UCLAவுக்கு முன்னமே கூட அவர் சிகாகோ பல்கலைக்கழகத்திலும் கூட சிலகாலம் வேலை செய்ததாக மங்கலாக நினைவு...

      ராஜன் அய்யா, பத்ரி எழுதியது பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் - ஆனால் சம்பந்தமில்லாமல் அநியாயமாக ஸ்ரீமான் ரஸ்ஸல் அவர்களை ஏன் இழுக்கிறீர்கள்?

      வன்மையாகக் கண்டிப்பு, கண்டனம், கல்லெறிதல், நுரைதள்ளல், தமாஷ் (எல்லாம் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே) இன்னபிற -- இது பற்றி இன்னொரு சமயம்... இணையம் பரவலானதில் இது ஒரு வசதி. பின்புலங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், சகட்டுமேனிக்கு கருத்துகளை உதிர்த்தல் எவ்வளவு சுலபம்... சாட்சிக்கு யாரை வேண்டுமானாலும் இழுக்கலாம், அல்லவா?

      Everybody perhaps has a right to be heard, but nobody has the right to be taken seriously.

      ஆக, பத்ரியின் ‘ignore and proceed' அல்லது 'adapt and go' போன்றவைகளே நீண்டகால அர்த்தம் கொண்டவைகளான எதிர்வினைகளாக இருக்கும் என நினைக்கிறேன்.
      8-)

      ராமசாமி

      Delete
    4. ஒருத்தர் எதிர்த்தா எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் ,இல்ல மூடிக்கிட்டு இருக்கனும்னுறது சரியான வாதமா
      பல ஏழை குழந்தைகளை படிக்க வைக்கும் ஒருவர் ,அப்படி அவரால் படித்த ஒரு பெண்ணை ,மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக அவர் செய்த நற்காரியங்களை புகழ கூடாதா
      அதே போல இந்த ஒரு காரியத்திற்காக அவரை மட்டமாக இகழ்வதற்கும் உரிமை இன்னொருவருக்கு உண்டு என்பதில் தவறு உண்டா

      தோல் மருத்துவர் ,கண் மருத்துவர் எனபது போல வெறும் ஹிந்து மத எதிர்ப்பாளர்,இஸ்லாமிய எதிர்ப்பாளர்.கிருத்துவ எதிர்ப்பாளர் என்று இருக்க கூடாதா

      ஒருத்தர் எதிர்த்தா எல்லாவற்றையும் சமமாக எதிர்க்க வேண்டும் என்ற எதிர்ப்பார்பே முட்டாள்தனம் தான்

      Delete
  6. அமெரிக்க அரசியலுக்கும் இந்த பிரச்சினை சூடு பிடித்ததற்கும் ஏதாவது தொடர்பு உண்டா
    பாரக் ஹுசைன் ஒபமா என்று பிரச்சாரம் செய்து இஸ்லாமியர் மேல் ஏற்படும் வெறுப்பை வரும் தேர்தலில் ரோம்னி அறுவடை செய்ய வாய்ப்பு உண்டா
    அமைதிக்கு நோபெல் பரிசு கிடைத்தவர் அமைதியாக தூதரகங்கள் எரிக்கபடுவதை பார்த்து கொண்டிருந்தால் மக்கள் வெறுப்படைய மாட்டார்களா
    பில் கிளிண்டன் அரசு திடீரென்று புஷ்ஷை கொலை செய்ய சதி நடத்தியது என்று குண்டு மழை பொழிந்ததை போல் இப்போது நடக்க வாய்ப்புள்ளதா

    ReplyDelete
  7. have you heard of cartoons of mohamed in a french "satirical weekly" ? French embassy and consulates closed for 3 days almost every world in the world.
    http://news.yahoo.com/french-weekly-publishes-mohammad-cartoons-075449808.html

    ReplyDelete

  8. Freedom of speech is available only to those who have power.

    Obama has openly apologized for the movie:

    http://israelmatzav.blogspot.co.il/2012/09/surreal-obama-and-clinton-apologize-to.html?utm_source=twitterfeed&utm_medium=twitter

    ReplyDelete
    Replies
    1. He has apologised and Hillary Clinton has apologised. But that is all. They have not acted to remove it (yet) or to prosecute the producer for hate speech. That is the point here. What the Muslim organizations want is the latter. I don;t think that is going to happen.

      Delete
    2. Obama and Clineton have not apologized, they have only condemned the film.

      vcv

      Delete
    3. Hilary Clinton just called the film "reprehensible" . She neither apologized for it not even condemn it

      http://www.bbc.co.uk/news/world-us-canada-19592279


      All the US govt is telling the Muslim world is that the US govt has nothing to do with the film. This obvious point needs reiteration becuase this gets lost among Muslim mobs.

      The French ministers have been even more explicit in saying the Hebdo cartoons are a matter of freedom of speech .

      Delete
    4. I don't think Obama or Clinton would ever apologize for these movies. Unfortunately politicans like them are highly educated, and sensible. Also many critics, newspapers, & TV channels over there are very well informed, and also capable of sound analysis based on facts, reasons, and the context.

      This is not the first time the muslim world has shown it's intolerance, and stone-age, barbaric approach to any issue.

      If we want to live in peaceful, prosperous, just society we should not encourage such silly muslim protests which have very bad consequences in the future.

      Delete
  9. அருமையான பதிவு... விரிவாக இல்லையென்றாலும் தெலிவாகவே எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  10. Badri,

    A well balanced article. However, I agree with Mr.Rajan Kurai when he says that you should have unequivocally condemned those who have taken such a low quality movie.

    Rightly or wrongly muslims revere a person. There are lot of controversies about him; some say he was a messenger of god. Some say that he was a bigot who fooled those around him and exploited their religious fervour and caused havoc among the communities that were till then living peacefully - Arabs, Jews and Christians.

    As a coptic christian or jew, I understand the anger in the minds of the Director and those who produced that movie. But, venting out the anger at a figure revered by muslims, even if that is absurd in our view is wrong.

    We get hurt if someone points out the wrong doings of our parents, though we might at the bottom of our hearts know those allegations to be right. Will we allow someone to abuse our parents? We should understand the feelings of hurt in the hearts of muslims on the same lines.

    Apart from this aspect, I agree with the views expressed in your article.

    ReplyDelete
    Replies
    1. 'venting out the anger at a figure revered by muslims, even if that is absurd' is not at all wrong.

      You cannot compare someone abusing your parents & making a movie which is very harshly critical of your
      religion.

      Many europeans born to christian parents have ridiculed bible, and the practices of church. Similarly folks born to hindu parents have done things to their scriptures, temples, and mutts. But in most of the times, it's the muslim society indulges in violence and calls for jihad. Something must be inherently wrong with the religion and if those followers want to coexist with the rest, they should learn to apply their minds and evolve.

      Violence, dharna, and bandh are easier things to do. Mullahs prefer the easier path, with no brain to realize the destructive effects.

      Delete
  11. ஸ்கூலில் ரவுடிப்பயலுகள் எப்பவுமே மற்றவர்களை கேலி செய்வார்கள். அந்தக் கேலிக்குக் காரணம் கேலி செய்யப்படுபவரே என்றும் சாதிப்பார்கள். என்றைக்காவது ஒரு நாள் அந்த ரவுடிப்பயலுவளே கேலிக்குரியவர்கள் ஆவார்கள். அப்போது எல்லாவற்றையும் போட்டு உடைத்து துவம்சம் செய்வார்கள், அவர்களை கேலி செய்பவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் அப்படி செய்வார்கள். அது போலவே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடந்துகொள்கிறார்கள். ஓபாமா முதல் ஹில்லாரி வரை மன்னிப்பு எல்லாம் கேட்க்கவைக்கிறார்கள்.

    ஒவ்வொறு முறையும் இப்படியே நடந்துகொண்டிருக்கிறது. சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸுரீன், முகம்மதுவின் கார்டூன் விவகாரம் இப்பொழுது இது!

    islam is not a religion of peace, its a religion of rowdyism.

    ReplyDelete
  12. முகப்புத்தக சுட்டியில் கூறியபடி கொஞ்சம் விரிவாக இந்தப்பதிவின் மூலம் நான் விளக்க விரும்பும் சுதந்திரவாதத்தின் எல்லைகள் பிரச்சினைகள் பற்றி எழுத முயற்சிக்கிறேன். அப்ப்டி எழுதினால் அந்த குறிப்பின் சுட்டியையும் நீங்கள் விரும்பினால் இங்கே தரலாம்.

    ReplyDelete
  13. First this movie is not made by Jews but by a Egyptian christian living in US. He made the entire movie in a paltry budget of around $100k.

    ReplyDelete
  14. http://www.nytimes.com/2012/09/19/opinion/friedman-look-in-your-mirror.html?hp

    ReplyDelete
  15. http://www.nytimes.com/2012/09/19/opinion/friedman-look-in-your-mirror.html?hp

    ReplyDelete
  16. பத்ரி எடுத்திருப்பது ஒரு லிபரல் நிலைப்பாடு.இது ஒரு மட்டமான படம், இதை புறக்கணிக்கவேண்டும் என்கிறார்.அமெரிக்க அரசால் இதில் என்ன செய்ய முடியும்,முடியாது என்பதையும் கூறுகிறார்.
    அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க வேண்டும்.அவை முஸ்லீம்களுக்கு எதிரான எதிர்மறை கருத்துக்களையே வலுப்படுத்தும் என்கிறார்.இது காரியவாத கண்ணோட்டம் pragmatic position. படத்தை அவர் ஆதரிக்கவேயில்லை.
    ராஜன்குறை எழுதியிருப்பது போல் பத்ரி
    வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றால் யாரையெல்லாம் கண்டிக்க வேண்டும்-வன்முறையில் ஈடுபட்டவர்களையும் சேர்த்தா,இல்லை படம் எடுத்தவரை மட்டுமா.ராஜன்குறை கிருஷ்ணனுக்கு முஸ்லீம்கள் செய்த வன்முறைகள்,கொலைகள் பிரச்சினை இல்லை.சுதந்திரவாதத்தின் எல்லைகள் பற்றி எழுதுபவர் மத தீவிரவாதத்தின் எல்லைகள் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏன் வன்முறை ஆர்ப்பாட்டங்களாக மாறின.இதில் அமெரிக்க கொடியை,ஒபாமா,புஷ் படத்தை எரிக்க என்ன தேவை என்ற கேள்வியை கேட்பதில்லை.அமெரிக்க எதிர்ப்பு,யூத எதிர்ப்பு,இஸ்ரேல் எதிர்ப்பாக இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏன் மாற்றப்பட்டன என்பதையும் கேட்பதில்லை.
    அவரை பொறுத்தவரை முஸ்லீம்கள்/ஆர்ப்பாட்டங்கள் செய்தவர்கள்,வன்முறையில் ஈடுபட்டவர்களை பற்றி விமர்சிக்க எதுவுமில்லை.விமர்சனமெல்லாம் லிபரல்களைப் பற்றித்தான்.
    சுருக்கமாக சொன்னால் ராஜன்குறை தமுமுக ஆதரவாளராக எழுதுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. You are Absolutely right about Rajan Kurai. He gives a link in his facebook page which was written in praising about a terrorist named abdul nasar madani by Marx, another extreme left wing activist. I simply don't understand why this left wing's always support the Muslim Fundamentalist but I come to an know that there are lot of similarities between left wing and Islam.

      leftist + God = Islam
      Islam - God = leftist.

      Both Islam and left wing philosophy following similar pattern, Create an common enemies [Like zionist, imperialist & Hindutva RSS] and make them responsible for every misfortunes that they are facing.

      For example, this film was produced and directed by an coptic christian from Egypt. But lot of articles wrote by Muslims are directly linking Israel and Jews for this film.

      you can't argue with these people, because they are against logic & reason.

      Delete
  17. //ஞாநி போன்ற விமர்சன பூர்வமான சுதந்திரவாதிகளுக்கும்//

    ஞானி போன்றவர்கள் என்றைக்காவது ஹிந்து மதத்தை எதிர்த்து கட்டவிழ்த்து விடப்படும் வெறுப்பு மற்றும் குழப்பதை ஏற்படுத்தும் வகையில் வரும் விமரிசனங்களை கண்டிதிருகிறார்களா? Hate கிரிமினல் ஈ வே ராவை தூக்கி வைத்து கொண்டாடுபவர் தானே அவர்? (இப்போதும் சொல்கிறேன் ஈவேரா வேறு அம்பேத்கர் வேறு, அம்பேத்கருக்கு கொடுக்கப்படும் மரியாதை எந்நாளும் ஈவேராவுக்கு கொடுக்கல் ஆகாது. Anyways அது வேறு சர்ச்சை)

    அத்வானிக்கு கடிதம் எழுத தெரிந்த அவருக்கு குரானை கையில் வைத்து மனிதர்களை கொல்லும் வன்முறைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க திராணி இருகிறதா? அது முடியாது ஏன் என்றால் அத்வானியை திட்டினாலும் அவர் உயிருக்கு இருக்கும் உத்திரவாதம் மற்ற்றொரு விஷயத்தில் இருக்காது என்பதை அவரும் நன்கு அறிவார். ஹிந்து மதத்தை திட்ட, வெறுப்பை உமிழ அவர் போன்றோருக்கு freedom of expression தேவை படுகிறது. கருத்து சுதந்திரம் என்பது இரு புறமும் கூர் வார்க்க பட்ட கத்தி போல. நான் மட்டும் தான் அதை வைத்து குத்துவேன் என்று அடம் பிடிபவர்கள் தான் அவர் போன்ற பகுத்தறிவு வியாதிகள்

    ReplyDelete
  18. Appending to my earlier anony comment in reply to a comment on people like Gnani

    அணைத்து மதத்தினையும் ஒரே தராசில் வைத்து விமர்சிக்கும் பகுத்தறிவு வியாதிகள் இன்னும் இந்தியாவில் தோன்றவில்லை
    (பத்ரி உள்பட). இதுவே ஏன் தாழ்மையான கருத்து. அவ்வாறு ஒருவர் தோன்றுவதற்கான களமும் இந்தியாவில் இல்லை என்பதே வேதனையான உண்மை


    ReplyDelete
  19. ஒருவர் தமது மதத்தைப் பற்றிக் கேவலமாக எழுதுவது அல்லது கார்ட்டூன் போடுவது சினிமாப் படம் எடுப்பது தவறு.அப்படியிருக்கும் போது பிற மத்த்தைப் பற்றி பிற மதத் தலைவர்களைப் பற்றிக் கேவலமாகப் படம் எடுப்பது அல்லது கார்ட்டூன் போடுவது மிக மிகத் தப்பு. இந்த விஷயங்களில் கருத்துச் சுதந்திரம் உள்ளது என்று வாதாடுவது கண்டிக்கத் தக்கது.
    அமெரிக்காவில் சென்சார் போர்டு இல்லை என்ற வாதம் எடுபடாத ஒன்று. அமெரிக்காவில் படத் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது. சுய தணிக்கை முறை உள்ளது.இவ்வித சுய தணிக்கை முறைக்கு உட்படாமல் வெளியிடப்படுகிற படங்க்ளை பொது நன்மை கருதி அரசு த்டை செய்ய வேண்டும் என்று படத்தயாரிப்பாளர்கள் சங்கம் அரசுக்கு சிபாரிசு செய்யலாம்.
    உலகில் யாரோ ஒரு பைத்தியக்காரன் ஒரு மதத்தை கேவலப்படுத்தி படம் எடுக்க, அதனால் உலகின் பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்களும் வன்முறையும், கொலையும் நடக்கும் அதனால் பொது மக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்படும் அதை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிக்கலாம் என்றால் அது படு முட்டாள்தனம். நாளைக்கு எவனோ ஒருவன் உலகின் பல நாடுகளில் சட்ட ஒழுங்குப் பிரச்சினைய உண்டாக்க வேண்டுமென்றே இப்படியான படத்தை எடுக்க முற்படுவான். இதைத் தடுக்க கட்டாயம் ஒரு வழி செய்யப்பட வேண்டும்.அந்த அளவில் யூடியூப் போன்றவற்றிலும் இப்படியான விஷமங்கள் நடைபெறாமல் தடுக்கவும் தக்க ஏற்பாடு இருக்க வேண்டும்.
    கருத்து சுதர்ந்திரம் என்பது ஆக்கபூர்வமான பணிகளுக்கே.அவதூறு செய்வதற்கு அல்ல.

    ReplyDelete
    Replies
    1. //நாளைக்கு எவனோ ஒருவன் உலகின் பல நாடுகளில் சட்ட ஒழுங்குப் பிரச்சினைய உண்டாக்க வேண்டுமென்றே இப்படியான படத்தை எடுக்க முற்படுவான்.// ஒரு சின்னத் திருத்தம். இன்றைக்கு இந்த வீடியோவே முஸ்லிம்களை சீண்டி விட்டுக் கலவரத்தைத் தூண்டுவதற்காகத் தான் எடுக்கப் பட்டது. அந்த எவனோ ஒருவன் யாருமல்ல, அமெரிக்காவே தான். அமெரிக்க தூதர்கள் கொல்லப் பட்டது உட்பட எல்லாமே அமெரிக்க சதியாக இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் போது அவர்களது சொந்த லாபத்துக்காக இம்மாதிரி சதி வேலைகளில் ஈடுபட்டு இல்லாத எதிரிகளை சிருஷ்டித்துத் தங்களை உலக ரட்சகர்களாகவும் உத்தமர்களாகவும் காட்டிக் கொள்வது அமெரிக்காவுக்கு வழக்கம் தான். அது புரியாமல் நாம் தான் வேலை, வெட்டிகளை விட்டு விட்டு வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொண்டிருக்கிறோம். IGNORE AND PROCEED மந்திரத்தை எல்லாரும் கற்றுக் கொண்டால் அன்றைக்கு அமெரிக்காவின் கதை கந்தலாகி சிரிப்பாகச் சிரிக்கும் காலம் வந்து விட்டதென்று பொருள். பெப்ஸியில் புழு, பூச்சி இருக்கிறதென்று பிரசாரம் செய்து அதையும் விளம்பரப் படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு எதுவுமே பொருட்டல்ல.
      தவிர அவர்களுக்கு சூடு சுரணை அற்றுப் போனால் உலகம் முழுதும் எல்லாரும் மானங்கெட்டவர்களாக வேண்டுமென்பதும் இல்லை. புனிதமான எந்த விஷயங்களும் கிடையாதென்று ஒரு பைத்தியக் காரக் கூட்டம் நினைத்துத் தங்கள் கடவுள்களை சிறுநீற்றில் நனைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தால் ஆஹா, இதுவல்லவோ கருத்து சுதந்திரம் என்று அதற்காக உலகம் மொத்தமும் பைத்தியம் பிடித்து அலைய வேண்டியதில்லை. பணக்காரன் என்ன செஞ்சாலும் சரி என்று நாமும் ஜால்ரா தட்ட வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் மேல் இந்தியர்களாகிய நாம் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பது ஒரு அடிப்படை உண்மை. அது நமது இன இயல்பு. அதை ஒப்புக் கொண்டு அதில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர அதை ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்? நமது மத, கலாசார அடையாளங்கள் இழிவுபடுத்தப்படும் போது கோபம் வராமல் எனக்கு வலிக்கலியே என்று ஏன் நடிக்க வேண்டும்? நாம் ஏன் நாமாக இருக்கக் கூடாது? அவர்களைப் போல் நாமும் சுரணை அற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதே ஒரு விதத்தில் சுதந்திரவாதத்துக்கு முரணான வாதம் அல்லவா?

      Delete
  20. சார் அப்புறம் மாட்டு கறி,பன்றி கறி உணவு வகைகளை காட்டும் சமையல் நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்றும் வரும்
    மொத்தமாக அசைவ உணவையே காட்ட கூடாது என்று கூட சைவர்கள் போராடலாம்
    இப்ப நம்ம உயர்நீதிமனறம் கூட குறிப்பிட்ட உணவுகளை மத நம்பிக்கையை புண்படுத்துகிறது என்று தடை செய்துள்ளதே

    ReplyDelete
  21. //Hate கிரிமினல் ஈ வே ராவை தூக்கி வைத்து கொண்டாடுபவர் தானே அவர்?//


    வெகுவான சென்ஸார் இதுதானா சார்? :-(

    அந்தப் படம் எடுத்தவரின் மனநிலைக்கும், இந்த பின்னூட்டம் போட்டவர், இந்த பின்னூட்டத்தை அனுமதித்தவரின் மனநிலைக்கும் பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. ஈவேரா மாதிரு ஆட்களால்தானே இன்னிக்கு சொரணை என்றால் என்னனு கேட்கிற இந்துக்கள் அதிகமாகிவிட்டார்கள்! நிச்சயம் அவர் ஒரு Hate criminal தான்!யுவகிருஷ்ணா என்ற வீரர் கடந்த ஆட்சியில் தங்கதாரகை என்று எப்படி கிண்டல் செய்தார்! இன்னிக்கு எல்லாத்தையும் மறந்துவிட்டாரே
      அவரா இதை சொல்கிறார்! Bullshit

      Delete
    2. Ignore and proceed

      Delete
    3. ஆக்ச்சுவலி, அந்தப் படத்துக்காக கலவரத்தில் ஈடுபடும் அமைதி மார்க்க சகோதரர்களுக்கும் உங்கள் நயினா ஈ.வே.ரா வின் சிஷ்யகேடிகளின் மனநிலைக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்பதே உண்மை. ஏன் என்றால், பெத்த நயினாவை இப்படி விமர்சித்தாலும் தமிழகத்தில் இதுபோன்ற கலவரம் தான் வெடிக்கும் என்பதே காரணம். அதன் ஆரம்பப் புள்ளியே மேலே இடப்பட்டுள்ள பின்னூட்டம். சென்சாரை ஆதரிக்கும் "பகுத்தறிவு" எத்தகயது என்பது இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே!

      Delete
    4. யுவகிருஷ்ணா அவர்களே உங்க பெரியார் எல்லாரையும் கேலி பண்ணுவாரு நாங்க பொறுத்துகிட்டு இருக்கணும். இதுவே அவரை பத்தி யாரவது எதாவது சொன்னா உங்களுக்கு பொத்துகிட்டு வந்துரும். நீங்களும் வெட்டியாக அலப்பறை பண்ணும் இஸ்லாம் அன்பர்களும் ஒண்ணு தான். துளி கூட சகிப்பு தன்மை என்பது கிடையாது.

      Delete
  22. மத நம்பிக்கைய புண் படுத்தி நவீன சாதனங்கள் வழியா படம் எடுக்கறதும் அதை பகிர்ந்துக்கறதும் சாதாரணம் ஆயிடும். அதை தடுக்கனும்னா மொத்தமா இன்டர்நெட் தடை செஞ்சா ஒழிய வேற வழியே இல்ல. முதல்ல இந்த "இறை தூதர்" பேரை தப்பா பயன் படுத்தி இருந்தா கலவரம் வந்தது. அப்புறம கார்டூன போட்டா கலவரம். இப்ப அதை விட மேல முழு திரைப்படமே ரிலீஸ் ஆயிடுச்சு. ஒவ்வொரு படத்துக்கும் போராட்டம் பண்ணா விடிஞ்சுரும். எல்லாரும் இந்த விஷயத்த பாத்தும் பாக்காத மாதிரி போறது தான் நல்லது.

    இதுல கண்டனம் தெரிவிக்கணும்-நு கருத்து சொல்லற தமிழக "அறிவு ஜீவிகள்" மேல பரிதாபம் கலந்த இளக்காரம் தான் வருது. ஏங்க நாளைக்கு ராம கோபாலன் சார் பிள்ளையார கிண்டல் பண்ணும் கருணாநிதி , வீரமணி எல்லாருக்கும் கண்டனம் தெரிவிங்க-நு கேட்டா என்ன பண்றது?

    ReplyDelete
  23. There are any number of crazy characters and persons who get perverse pleasure in hurting others sentiments and provoking them.Today it is this guy, tomorrow it may be some other guy.
    Are violent protests and killings are the means to challenge them.If so it will be a vicious cycle.

    ReplyDelete
  24. //அந்தப் படம் எடுத்தவரின் மனநிலைக்கும், இந்த பின்னூட்டம் போட்டவர், இந்த பின்னூட்டத்தை அனுமதித்தவரின் மனநிலைக்கும் பெரிய வேறுபாடு எதுவும் தெரியவில்லை//

    தவறு அந்த படத்தினை எடுத்தவரின் மனநிலமையும் , ஈ.வே.ரா மற்றும் அவரது சிஷ்ய கோடிகளின் மனநிலையும் ஒன்றே என்று இருக்க வேண்டும். இருவரின் நோக்கமும் வசை பாடுவதும் கேவலபடுதுவதும் தான்.

    மேலும் வஜ்ரா சொன்னது போல் ஈ.வே.ரா கோஷ்டியினருக்கு தற்பொழுது வன்முறையில் ஈடுபடுபவர்கள் traitsம் உண்டு. எல்லாம் ஒரே குட்டையில் ஊரும் மட்டைகள் தான். பகுத்தறிவு வாதியாக ஆசை பட்டு ஒரு வியாதியாக மட்டுமே சமூகத்தில் இருப்பவர்கள் தான் அவர்கள்.

    ReplyDelete
  25. எம்.எப். ஹீசைன் என்ற முஸ்லிம் ஓவியர் இந்து கடவுள்களான ராமர், சீதை, அனுமனை நிர்வாணமாக வரைந்தபோது இடதுசாரிகள், திராவிடர் கழக அறிவுஜீவிகள் கலை சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று பேசினார்கள். அப்போது ஹிந்து மத உணர்வு புண்படுவது குறித்து கவலைப்படாமல் கலை சுதந்திரம் பற்றி பேசியவர்கள் இப்போது கலைஞர்களின் பக்கம் நிற்காமல் மதத்தின் பக்கம் நின்று பேசுகிறார்கள்.காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்து மதத்தைப் பற்றி என்ன பேசினாலும் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால், இஸ்லாம் குறித்து பேசினால் உயிருக்கே ஆபத்து. எதற்கெடுத்தாலும் தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி படைப்பு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கலை சுதந்திரம், கலைஞர்களின் சுதந்திரம் என்றெல்லாம் வாய்கிழிய பேசும் மனுஷ்யபுத்திரம், ஞாநி போன்றவர்கள் இப்போது எங்கே போனார்கள்? இதுபோன்ற விஷயங்களில் முஸ்லிம்களை ஹிந்துக்கள் பின்பற்ற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பொன்.முத்துக்குமார்Tue Sep 25, 12:48:00 AM GMT+5:30

      மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள்.

      Delete
  26. எனக்கு வந்த ஒரு மடலில் கொடுக்கப்பட்டிருந்த சுட்டி. விருப்பமுள்ளவர்கள் வாசிக்கலாம், விவாதிக்கலாம்

    http://veppurthirudan.wordpress.com/2012/09/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/


    --

    ReplyDelete
  27. ஒரு மனிதனின் விமர்சினத்தை தாங்கி கொள்ளமுடியாத மதம் என்ன மதம்.சுகந்திரத்தை பறித்து கொண்டு அதற்கு ஈடாக வேறு எதையும் இந்த மதங்களால் கொடுத்து விட முடியாது.என் சிந்தனைக்கு அப்பாற்பட்டு ஏதோ இருக்கலாம்,அதன் பெயர் கடவுள் என்றால் அதனை வேண்டி கொள்ளாம் அவ்வளவே கடவுள்.அதற்கு பெயர் கொடுப்பதோ,கொள்கைகளை வகுப்பதோ,உருவத்தை உருவாக்குவதோ,முதலையும்,முடிவையும் சிந்திக்காத அரை,குறை மனிதனின்ஆணவ,அகம்பாவத்தின் வெளிபாடு.மதத்தை,கடவுளை உண்மை என்று எவன் ஒருவன் விளக்குகிறானோ,அவனுக்கு தான் சொல்லும் கடவுள் உறிதியானது இல்லை என்பது தெரியும்.மதவாதிகள் அணைவரும் போருக்கு ஆள் சேர்ப்பவர்கள்.சிந்திக்க தெரியாதவர்கள் ,கடவுளை நம்புகிறார்கள்,சற்று புத்தி உள்ள சுயநலவாதிகள் அதை வளர்கிறார்கள்.அவனவன் உள்ளத்தளவில் உணர்வதே,அவனவன் கடவுள்.மனிதனின் சுகந்திரத்தை மதிக்காத மதம் அழியும்.

    ReplyDelete