Wednesday, September 12, 2012

சுனாமி + கதிர்வீச்சு + சோமாலியா மரணம்?

முத்துக்கிருஷ்ணன் எழுதியுள்ள நூலில், அணுக்கழிவுகள் பற்றி இப்படி ஓரிடத்தில் வருகிறது:
மேற்கத்திய நாடுகள் தங்களின் அணுக்கழிவுகளைச் சட்டவிரோதமாக சோமாலியா கடல் பகுதிகளில் கொட்டியதும், அது 2004 சுனாமியின்போது அவர்களின் கடற்கரைகளில் வந்து பெரு அலைகளால் வீசப்பட்டது. அதனால் லட்சக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து அதை உலக ஊடகங்கள் காணாமல் கண்களை முடியதும் நம் காலத்தின் வரலாறு. (பக்கம் 36, 37)
லட்சக்கணக்கான (கவனியுங்கள், நூறோ, ஆயிரமோ இல்லை, லட்சம்) உயிர்கள் போயும் அதை யாருமே கவனிக்கவில்லையாம். இந்த ஹைப்பர்போலி தேவையா?

சோமாலியா நீண்ட கடற்கரையைக் கொண்டது. ஆப்பிரிக்காவின் கிழக்கு, வடக்கு முனையில் உள்ளது. சோமாலியாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 1 கோடி. என்னதான் இருந்தாலும் கடற்கரைப் பகுதிகளின் வசிப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கமுடியும்? கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் என்று வைத்துக்கொண்டால் அதிகபட்சம் 20% மக்கள்? 20 லட்சம் பேர்? அதில் ஒரு லட்சம் இறந்தார்கள் என்றாலுமே அது பெரும் அதிர்ச்சியான விஷயம் இல்லையா? அதாவது 20 பேருக்கு ஒருவர் மரணம்.

கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தொழிற்சாலைக் கழிவுகள் என்கின்றன செய்திகள். அணுக்கழிவு என்பதற்கு என்ன ஆதாரம் என்பது அடுத்த கேள்வி. விக்கிபீடியா இவ்வாறு சொல்கிறது:
An upsurge in piracy in the Gulf of Aden and the Indian Ocean has also been attributed to the effects of the 26 December 2004 tsunami that devastated local fishing fleets and washed ashore containers filled with toxic waste that had been dumped by European fishing vessels.
அதில் கொடுக்கப்பட்டுள்ள முதல் மேற்கோளைத் தேடிச் சென்றால், சிகாகோ டிரிப்யூன், இத்தாலியிலிருந்து படகுகள் வந்து ஐரோப்பிய ஆலைக் கழிவுகளைக் கொட்டிவிட்டு மீன் பிடித்துக்கொண்டு சென்றன என்கிறது. கழிவுகளைக் கொட்டிவிட்டு மீன் பிடித்துச் சென்றுள்ளனர் என்றாலே, அது அணுக் கழிவுகளாக இருக்கச் சாத்தியம் இல்லை என்று யூகிக்கலாம் அல்லவா?

எப்படியிருந்தாலும் எந்த அடிப்படையில் “லட்சம்” அல்லது அதற்கொப்ப உயிர்கள் போயுள்ளன என்ற முடிவுக்கு ஆசிரியர் வந்துள்ளார்? சுனாமியால் சுமார் 300 பேர் இறந்துள்ளனர் என்று மட்டும்தான் தகவலே.

விஷக் கழிவுகளின் கதிர்வீச்சினால் சுமார் 300 பேர் இறந்துள்ளனர் என்கிறது ஒரு செய்தி. கதிர்வீச்சு இருந்துள்ளது என்றால் அதில் அணுக்கழிவுகளும் இருக்கலாம் என்றுதான் முடிவு செய்ய முடியும். அனைத்துமே அணுக்கழிவுகள் என்றால் அத்தனை லட்சம் டன் அணுக்கழிவுகள் எங்கிருந்து வந்திருக்க முடியும்? உலகின் அனைத்து அணு உலைகளும் சேர்ந்தாலும் அத்தனை அணுக்கழிவுகள் வந்திருக்க முடியாது. டைம்ஸ் பத்திரிகையில் ஐ.நா சூழலியல் அமைப்பின் பிரதிநிதி, கழிவுகளில் மருத்துவக் கழிவுகள் முதல் ரசாயனக் கழிவுகள் வரை இருந்தன என்கிறார்.

ஆக, விஷக் கழிவுகள் அணுக் கழிவுகள் ஆகிறது. 300 இறப்புகள், லட்சக்கணக்கான இறப்புகளாக மாறுகிறது. புத்தகத்தின் நம்பகத்தன்மை கடுமையாகக் குறைகிறது.

24 comments:

  1. உங்களுடைய இந்தப் பதிவுத் தொடர் மிகவும் முக்கியமானது. அரசின் அலட்சிய, எதேச்சாதிகாரப் போக்கு கண்டிக்கப்பட வேண்டிய அதே நேரத்தில், எதிர்ப்பாளர்களின் அதீத பயமுறுத்தலையும், மூட நம்பிக்கைகளையும் அடையாளம் காட்ட வேண்டிய அவசியமும் இருக்கிறது.

    இந்தக் கட்டுரைத் தொடரை தொகுத்து படிக்கும் வகையில் tag ஏதாவது அளிக்கலாமே. நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. Sridhar

      Have collected the links on Koodankulam in my bit.ly account. It contains all political & scientific posts on Koodankulam. Hope it will be the 'tag' you are looking for.

      Regards
      Venkatramanan

      Delete
  2. இதையும் நண்பேண்டா போன்ற புத்திஜீவிகளின் மீடியா துணுக்குத் தாலாட்டு என்று நினைத்துவிட்டீரா பத்ரி... புத்தகம் கிடக்கட்டும்... உங்களின் மனப்போக்கில் 300 இறப்புகள் என்பது சுவாரசியம் இல்லாத போதும் வெளிநாட்டு கம்பனிகள் நம் நாட்டை குப்பைத்தொட்டியாய் நினைப்பதை கை கட்டி வேடிக்கைபார்க்கும் புத்திஜீவி கூட்டத்தில் ஒருவராக இருப்பதாலும் சோமாலியாவில் கொட்டப்படும் தொழிற்சாலைக் கழிவுகளை வார்த்தைகளின் ஜாலங்களோடு வசதியாக ஓரம் கட்ட உங்களால் தான் முடியும்... புத்தகத்தை "பண்டம்" என்பவரால் இதை தாண்டி யோசிக்க முடியாது என்பது நிதர்சனம் ...

    ReplyDelete
  3. பத்ரி சார், நீங்க முத்துக்கிருஷ்ணன்/ஞானி அவர்களின் நூலுக்கு மறுப்பு தெரிவிப்பது சரியே. அறிவியல் பூர்வமாக் எது சரி எது தவறென்று ஆராய்ந்து தெரிந்துக் கொள்ளலாம்.

    ஆனால் எனக்கு இப்ப இருக்கும் சந்தேகம் என்னனா, இந்த நூல் வெளியாகி 8 மாதங்கள் மேலாகிவிட்டது. ஏன் இதற்கு (மிகவும் காட்டமாக) போராட்டம் நடக்கும் இந்த தருணத்தில் மறுப்பு தெரிவிக்கிறீர்.

    இந்த கேள்வி என்னை போல் பலருக்கும் எழுந்திருக்கும் சார்.?

    ReplyDelete
    Replies
    1. I got hold of the book only today, in the form of the digital file. Started reading it and found the facts mentioned disturbing, and hence started a bit of digging.

      Delete
    2. நல்லது பத்ரி சார்.
      ஏனோ இந்த தருணத்தில் தொடர்ந்து கட்டுரையாக நீங்கள் வெளியிடுவது சந்தேகத்தை தான் ஏற்படுத்துகிறது.

      ஞாநி அவர்களின் நூலையும் இன்றுதான் பார்த்தீருப்பீர் என்றே நம்புகிறேன்.

      தகவலுக்காக, முத்துகிருஷ்ணன் அவர்களின் நூல் உயிர்மை இதழிலும் வெளிவந்தது.

      நன்றி
      குமார்

      Delete
    3. பத்ரி சாருக்கு இப்ப தான் இத பத்தி எழுத ப்ராஜெக்ட் வந்திருக்கு, அப்புறம் எப்படி முன்னாலயே எழுதுவாறு, மொத்த தமிழகமே உயிர்மையின் 100வது இதழில் வாசித்த ஒன்றை, இவர் இப்ப தான் பார்த்தேன் என்று சொல்வதில் எந்த சந்தைகமும் இல்லை.

      Delete
  4. புத்தகம் டிசம்பர் 2011 ல் வெளிவந்தது.எனக்கும் இன்றுதான் இணையத்தில் தரவிறக்க கிடைத்தது.எழுதப்பட்டிருப்பது உண்மையா பொய்யா என்றுதான் பார்க்க வேண்டும்.இப்போது ஏன் அதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஏன் கேட்க வேண்டும்.ஒரு தகவலுக்காக, முத்துகிருஷ்ணனின் கட்டுரைகளிலும் இதே போல் பொய்கள்,மிகைப்படுத்தல்கள், ஆதாரமற்ற தகவல்கள் ஏராளமாக உண்டு.

    ReplyDelete
  5. ஞாநி/முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரையும் பத்ரீ நன்கு அறிவார், இருவரிடம் அவர் நேரிலோ மின்னஞல் மூலம் விளக்கம் கேட்டிருக்கலாம், இங்கே இந்த தொடர் பதிவும் அதை இப்ப தான் பார்த்தேன் என்பதும் ஏதோ Assasination போல் காட்சியளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Gnani and Muthukrishnan have not written to me personally for me to write back to them personally to ask clarifications. They have openly written and published their books. I am only questioning some of the facts.

      I am not doing this to defend nuclear power. I have several other arguments to defend that. I have made them consistently in my blogs. I wrote in support of 123 agreement with US (all in my blogs) when Gnani was oposing it. Later on, I brought that out as a small booklet.

      I consider these activities as intellectual activities devoid of any personal prejudices. I hold both the persons in high esteem for what they believe in. I will continue to do so.

      Thanks.

      Delete
  6. பத்ரீ சார் சோமாலியாவில் இருப்பவர்கள் எல்லாம் மிகவும் பணக்காரர்கள், அவர்கள் பொழுது போக்கிற்கு தான் கப்பல்களை கடத்துகிறார்கள், அவர்கள் தங்க தட்டில் சோறு சாப்பிட்டுக் கொண்டு சும்மா முத்துக்கிருஷ்ணன் கட்டுரைக்கு மட்டும் எலும்பு தோலுமா போஸ் குடுக்குறாங்க சார், இதயும் சேர்த்து எழுதுங்க......

    ReplyDelete
  7. அரசை எதிர்க்கிறார்கள் என்றே ஒரே காரணத்திற்காக அவர்கள் எழுதுவதை கேள்விக்குட்படுத்தக் கூடாது என்று எப்படி சொல்ல முடியும்.அப்படியானால் நேர்மையே தேவையில்லை என்றுதான் பொருள்.நியாயமான, உண்மைகளின் அடிப்படையில் செய்யப்படும் விமர்சனத்திற்கும் பொய்களை அடிப்படையாக கொண்ட விமர்சனத்தையும் ஒன்றாக கருத முடியாது.முத்துகிருஷ்ணன் உயிர்மையில் தொடர்ந்து எழுதுகிறார். உயிர்மையில் அவர் என்ன எழுதினாலும் வெளியிடுவார்கள் என்று தோன்றுகிறது. இந்தப் புத்தகம் வெளியாகும் முன் விபரமறிந்த எத்தனை பேர்களிடம் கொடுத்து பிரதியை மதிப்பிடச் சொல்லி திருத்தங்கள் செய்து வெளியிட்டார்கள். அப்படி எதாவது நடந்ததா.அணுமின் நிலையம் தேவையில்லை, அணுமின் உற்பத்தி தீர்வல்ல என்று ஆணித்தரமான சான்றுகளுடன் எழுதப்பட்ட புத்தகம் அல்ல இது.

    ReplyDelete
  8. ஒரு சின்ன விஷயம். /// இந்த ஹைப்பர்போல் தேவையா? ///

    அதாவது... hyperbole - என்கிற ஆங்கில வார்த்தையை ஹைப்பர்போலி என்றே உச்சரிப்பார்கள். இறுதி E- ஒலிக்கும் வேறு வார்த்தைகளான recipe, epitome, sesame, (sea) anemone போன்றவற்றின் வரிசையில் வருவதே ஹைப்பர்போலி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மாற்றிவிட்டேன்.

      Delete
  9. ஆக, விஷக் கழிவுகள் அணுக் கழிவுகள் ஆகிறது. 300 இறப்புகள், லட்சக்கணக்கான இறப்புகளாக மாறுகிறது. புத்தகத்தின் நம்பகத்தன்மை கடுமையாகக் குறைகிறது.
    "facts mentioned disturbing in that book". i really appreciate to you. i think there is some people to blame you for what ever you do.

    ReplyDelete
  10. Mr Nuttall said that a UN assessment mission that recently returned from the lawless African country, which has had no government since 1991, reported that several Somalis in the northern areas were ill with diseases consistent with radiation sickness. "We need more information. We need to find out what has been going on there, but there is real cause for concern," he added. "We now need to urgently send in a multi-agency expert mission, led by unep, for a full investigation."
    .
    .
    .

    Somali sources close to the trade say that the dumped materials included radioactive uranium, lead, cadmium, mercury and industrial, hospital, chemical and various other toxic wastes. In 1992, Unep said that European firms were involved in the trade, but because of the high level of insecurity in the country there were never any accurate assessments of the extent of the problem.


    Above are the lines from your reference ஐ.நா சூழலியல் அமைப்பின் பிரதிநித - http://www.muhammadfarms.com/News_May5_21_05.htm
    அணுக் கழிவுகள் were part of dump

    ReplyDelete
  11. “The tragic news uncovered by the comprehensive new research that almost one million people died in the toxic aftermath of Chernobyl should be a wake-up call to people all over the world to petition their governments to put a halt to the current industry-driven “nuclear renaissance.’


    ppl are referring "toxic aftermath of Chernobyl" அணுக் கழிவுகள் are referred as விஷக் கழிவுகள்

    ReplyDelete
  12. 'Love Kills' is this affirmed in the official publications of UNEP/UNEP website. Even the website you cite does not say that lakhs of persons were killed. So who is bluffing. Moreover it is a case of toxic wastes being dumped with connivance of some persons in Somalia. Muthukrishnan says nothing about them or their role in this dumping. Why he refuses to mention them. Muthukrishnan is a liar and he cares little for facts or truth. With such 'friends' groups like Poovulagin Nanbargal need no enemies.

    ReplyDelete
  13. ’I hold both the persons in high esteem for what they believe in’
    one can hold a person in high esteem for (s)he is and his/her contributions and not for what they believe or not.Muthukrishnan and Gnani wont accept the existence of jihadi terrorism or islamic terrorism.

    ReplyDelete
  14. இந்த புத்தகம் முழுதுமே பல அபத்தக்களஞ்சியமான கட்டுக்கதைகளால் புனையப்பட்டுள்ளது. இதைப் பற்றி பல விவாதங்களும் நடந்துள்ளன. பொய்யை திரும்பதிரும்பச் சொல்லி மெய்யாக்குவதற்கான முயற்சியேயன்றி வேறில்லை.

    ReplyDelete
  15. //26 ஏப்ரல் 1986 அன்று செர்நோபிலில்வெடித்த அதே வகை அணு உலைகளைப் பெயர் மட்டும் மாற்றி ரஷ்யா விற்றபோதும் எந்தத் தயக்கமும் காட்டாமல் இந்தியா இந்த ஒப்பந்தத்தை முன் நகர்த்தியது. (பக்கம்-4)

    செர்ணோபிலில் வெடித்தது கிராஃபைட் மாடரேட்டரை பயன்படுத்தும் (RBMK) என்ற வகை அணு உலை. இதில் டபிள் கண்டெய்ன்மென்ட் (double containment) கிடையாது. கூடங்குளம் (VVER) என்ற வகை Pressurized Water Reator அணு உலை. இரண்டுக்கும் ஸ்னாப்பிராப்தி எதுவும் கிடையாது. பெயரை மாற்றி தலையில் கட்டுவதைக் கூட கண்டுபிடிக்க முடியாத முட்டாள்கள் இந்திய அணு விஞ்ஞானிகள் என்று முத்துகிருஷ்ணன் என்ற அறிஞர் எழுதுவதை நம்பும் தமிழகத்தை அந்த ஆண்டவன் காப்பாற்றட்டும்

    ReplyDelete
    Replies
    1. Excellent, K.Ramnath,
      If time permits, please write more to educate the general public as their comprehensive power has long been kept absymally low by many half-cooked activists, kavignars, journos, politicians, and film characters.

      Delete
  16. //இந்த நிறுவனங்களின் அதிகாரிகள், ஆய்வாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் நம்முடன் வெளிப்படையாகப் பேச மறுப்பார்கள். சதா தேள் கொட்டிய திருடர்களைப் போலவே காட்சியளிப்பார்கள். அடுத்து இன்னும் கொஞ்சம் நெருங்கினால், "இல்லங்க, நாங்க எதையும் பொதுவில் கூற இயலாது" என்பார்கள். அவர்களால் தங்களின் உடல்களில் உள்ள கதிரியக்கத்தின் தகவல்கள் அடங்கிய கோப்புகளைக் கூட கேட்கவோ அணுகவோ இயலாது. இவர்கள்தான் இன்று இந்தத் தேசத்தில் பகிரங்கமாக வந்து இவை எல்லாம் பாதுகாப்பானவை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

    இந்த அணு ஆய்வு நிறுவனங்களைச் சுதந்திரம் பெற்றது முதல் புனிதப் பசுக்களாக லட்சம், கோடிகள் என்று மக்கள் வரிப்பணாத்தைத் தின்று கொழத்துத் திகழ அடிப்படைக் காரணம் எது?

    இந்த ஆய்வு நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் 95% பார்ப்பனர்களே. ஆனால் இந்த சதவீகிதத்தில் அவர்கள் அணு உலையின் பொறுப்புகளில் இல்லை. இதில் இருந்து நமக்கு என்ன புரிகிறது........................(கோடிட்ட இடத்தை நிரப்புக)// அணு சக்தி கழகம் - நவீன புனிதப் பசுக்கள் - பக்கம் 15

    அணு சக்தி துறை ஊழியர்கள் தங்கள் DOSE HISTORY ஐக் கூட தெரிந்து கொள்ள முடியாது, அணு சக்தி துறையில் வேலை செய்வோரில் 95% பார்ப்பனர், என்று கூசாமல் புளுகும் ஒரு புத்தகத்திற்கு வரிந்து கட்டிக் கொண்டு இங்கே பின்னூட்டமிடும் "படித்தவர்களின்" நிலையே இப்படியென்றால் கூடங்குள மக்களை மூளைச் சலவை செய்வதா பிரமாதம்?

    ReplyDelete