Thursday, September 13, 2012

தகவலுக்காக

Saurav Jha: The Upside Down Book Of Nuclear Power என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தைப் பதிப்பிக்கும் வேலையில் இறங்கியுள்ளேன். கிழக்கு பதிப்பகம் வெளியீடாக இந்தப் புத்தகம் விரைவில் வரும். இது அணு உலைகளுக்கு ஆதரவான புத்தகம். இன்னும் எடிட்டிங் வேலைகள் பாக்கியுள்ளன. பாதிவரைதான் வந்திருக்கிறேன். இம்மாத இறுதிக்குள்ளாகவாவது என் வேலையை முடித்து அச்சுக்கு அனுப்ப அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்வேன்.
 
இதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.

அணு மின் உலைகள் கூடாது என்று நன்றாக, தெளிவாக, சரியாக, தகவல் பிழைகள் ஏதுமின்றிக் கருத்துகளை முன்வைக்கும் புத்தகம் ஏதேனும் இருந்தால் அதனையும் தமிழாக்கம் செய்து பதிப்பிக்கத் தயாராக உள்ளேன்.

7 comments:

  1. How about this deal -buy pro nuclear book get anti-nuclear free or buy anti-nuclear get pro-nuclear book free or buy both and get Badri's writings on nuclear energy absolutely free :)

    ReplyDelete
  2. அந்தமானில் பல தீவுகளில் சில நூறு மக்களே வசிக்கின்றனர்.
    அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அங்கு அணு உலையோ.சுரங்கமோ தோண்டுவது சரியா
    அப்படி செய்தால் குடியரசுக்கும் கொடுங்கோல் மன்னர் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்
    அதே தானே எந்த பகுதிக்கும்
    இரு குழுக்களாக இருந்து ஒன்று வேண்டும்,மற்றொன்று வேண்டாம் என்று வரும் போது தான் குரங்காக அரசோ ,கிழக்கிந்திய ,வடக்கிந்திய கம்பெனியோ நுழைய முடியும்
    மொத்தமாக மக்கள் எங்களுக்கு வேண்டாம் என்றால் அங்கு சென்று அணு உலை வைப்பதோ,குப்பை கொட்டுவதோ சரியா

    ReplyDelete
  3. Can you plesae mass publish Thiru.Gnani's book ?

    ReplyDelete
  4. ’அணு மின் உலைகள் கூடாது என்று நன்றாக, தெளிவாக, சரியாக, தகவல் பிழைகள் ஏதுமின்றிக் கருத்துகளை முன்வைக்கும் புத்தகம் ஏதேனும் இருந்தால் அதனையும் தமிழாக்கம் செய்து பதிப்பிக்கத் தயாராக உள்ளேன்.’

    நீங்கள் வெளியிடயுள்ள அணு உலைகளுக்கு ஆதரவான நூலில் தகவல் பிழைகள்,தர்க்க ரீதியான சறுக்கல்கள் இல்லை, உண்மையான,முற்றிலும் நம்பகமான தகவல்கள்தான் உள்ளன என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே வெளியிடுகிறீர்கள் என்று உறுதி கூற முடியுமா.

    ReplyDelete
    Replies
    1. அனு மின்சாரத்தைப் பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் தான் அதனை எதிர்க்கிறார்கள் என்ற கட்டுமானத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமான பதில் இது அனானி.

      இது போன்ற மொக்கையையும் தாண்டி, அறிவார்ந்த விவாதங்கள் நடத்திய பின்னரே அந்தப் புத்தகம் வெளிவந்திருக்கும் என்று நம்புகிறேன்.

      anti-nuclear தரப்பில் எப்பேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன என்று தேடிப் பார்த்தால் வெறும் வெற்று கோசம் போடும் புத்தகங்களே அதிகம் காணக்கிடைக்கின்றன. அறிவார்ந்த மறுப்பு மிக மிக சொர்ப்பம்.

      அதைக் கூட தேடி எடுக்கத் தெரியாமல் இப்படி அனானியாக வந்து குதர்க்கக் கேள்வி ஏன் வைக்கவேண்டும் ?

      Delete