Thursday, November 11, 2004

கோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு

நேற்று மாலை ஜெயா டிவியில் திரையுலகப் பிரமுகர்கள் முதல் கொசுறுகள் வரை ஒன்றுசேர்ந்து முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி எடுத்த கலைவிழாவின் துகள்கள் ஒளிபரப்பாகின.

'அம்மா' என்று அழைக்கப்படும் ஜெயலலிதா ஒரே கையெழுத்தால் திரையுலகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிட்டதாகப் புகழ்ந்தனர் பலர். பாட்டெழுதும் பாவலர்கள் 'வீரப்பனைக் கொன்றவள் நீயே', 'தங்கத் தாரகையே' என்றெல்லாம் எழுத, இதுபோன்ற பாடல்களுக்கு இசையமைத்து நாலைந்து பேர் மேடையில் வந்து இடுப்பைக் குலுக்கினர். முதல் வரிசையில் தனி நாற்காலி போடப்பட்டு அதில் 'அம்மா' மட்டும் அமர்ந்து தன்னைப் பற்றிப் புகழ் வரும்போதெல்லாம் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். (இப்பல்லாம் திரையரங்குகள்ள 'ஜே ஜே'ன்னு கூட்டம் வருது)

பார்வையாளர்கள் வரிசையில் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மூவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். மேடையில் இயக்குனர்கள் வசந்த், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் மாறி மாறிப் புகழ் பாடினர். விவேக் தன் வழிசலைத் தொடர்ந்தார். ஓரளவுக்கு மேல் பார்க்க முடியாமல் உடனடியாக பிபிசி, அனிமல் பிளானெட் என்று சானலை மாற்றவேண்டியதாயிற்று.

பழங்காலத்தில் அரசர்கள் ஆட்சி நடக்கும்போது பக்கத்தில் உள்ள சின்னக் குன்றை அரசன் வென்று வந்தபின், பிச்சைக்காரப் புலவர்கள் நமக்கும் நாலு கிலோ அரிசி கிடைக்கும் என்பதால் 'இமயத்தை வென்றவன் நீயே', 'இரும்பைத் தங்கமாக்கியவன் நீயே' என்றெல்லாம் பாடி புறநானூறு படைத்தது ஞாபகத்தில் வருகிறது.

18 comments:

 1. பிச்சைக்கார புலவர்கள்? கொஞ்சம் கடினமாக இல்லை?. மற்றபடி உதவாக்கரை திரைப்பட வல்லுனர்கள் உளறியதை நானும் செய்திகளில் படித்தேன். தன்னைப் புலி என நினைத்துக்கொள்ளும் ரஜினி என்பவர், 'அம்மா'வைப் புகழ்ந்த சொற்கள் இன்னும் சிரிப்பை வரவழைத்துக் கொண்டிருக்கின்றன.

  By: Raj Chandra

  ReplyDelete
 2. சற்றே காட்டமான வார்த்தைகள்தான்... கோபம். அதனால்தான் அப்படி எழுதினேன். தமிழ்க் கலாச்சாரத்திலே மிகவும் கொதிப்படைய வைப்பது இதுதான். இரந்து வாழ்வது பற்றி நான் அதிகமாக சொல்லப்போவதில்லை. ஆனால், அதற்கென, அரசனைப் புகழ்ந்து 'நீயே தேவன், நீயே கடவுள்' என்று சொன்னால்தான் அடுத்த வேளை சோறு என்பது எத்தகைய கேவலமான நிலை? அதுதான் இன்றும் தொடர்கிறது.

  திருட்டு விசிடியை ஒழிப்பது அரசின் கடமை. தன் கடமையைச் செய்த ஒருவரை - அதுவும் வெறும் சட்டம் மட்டும்தான் போட்டுள்ளார், எந்த அளவிற்கு செயல்பாடுகள் இருக்கும் என்பதை நாம் இனிதான் பார்க்க வேண்டும் - 'ஆ, நீ கடவுள், உன் காலில் நாங்கள் விழுகிறோம்' என்றெல்லாம் கூத்தடிப்பது பார்க்க சகிக்கவில்லை. மக்களாட்சி மாதிரியே தெரியவில்லை.

  எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?

  புறநானூற்றில் 'என் மனைவி மக்கள் உணவில்லாமல் வாடுகிறார்கள், வள்ளலே, சோற்றை அள்ளி எனக்குத் தா' போன்ற பாடல்கள் எனக்கு மிகவும் எரிச்சலை தரக்் கூடியவை. அதைத் தவிர அரசனை வானளாவப் புகழும் பாடல்களும் அப்படியே. ஆனால் அது தாண்டியும் பல அருமையான பாடல்கள் புறநானூற்றில் உள்ளது என்பதை இங்கு உடனடியாகச் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். (அப்பாடி! தமிழ் விரும்பிகளிடமிருந்து ஓரளவுக்கு என்னைக் காப்பாற்றிக் கொண்டுள்ளேன் என நினைக்கிறேன்!)

  ReplyDelete
 3. ÒÈ¿¡ëÚ ÀüÈ¢ ¦¾Ã¢Â¡Ð. ¬É¡ø ¾¢¨ÃÔĸõ þôÀÊ ƒ¢í-º¡ì §À¡ÎŨ¾ ÒâóÐ ¦¸¡ûÇ Óʸ¢ýÈÐ. «Ð ºÃ¢Â¡ ¾ÅÈ¡ ±ýÀÐ «Îò¾ À¢ÃÉ. «Å÷¸û ²ý þôÀÊî ¦ºö¸¢È¡÷¸û ±ýÀ¨¾ ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñÎõ.

  ¸¼ó¾ ÀÄ Á¡¾í¸Ç¡¸, ¾¢¨ÃÔĸòÐìÌõ Ó¾øÅÕìÌõ ÍÓ¸Á¡¸ ¯È× þø¨Ä. ¾¢¨ÃÔĸò¾¢ý À¢ÃɸǡÉ, ¾¢ÕðΠŢº¢Ê, ¸¡õÀ×ñÊí Åâ, ¦À¡Ð þ¼í¸Ç¢ø À¼À¢ÊôÒ ¿¼ò¾ ÅÝÄ¢ìÌõ Å¡¼¨¸ô À½ò¨¾ ¾¢Ë¦ÃýÚ ÀòÐ Á¼í¸¡¸ ¯Â÷ò¾¢ÂÐ §À¡ýÈÅü¨È , Ó¾øÅâ¼õ ¦¸¡ñÎ §À¡¸ ÓÊ¡Áø þÕó¾Ð. ¾ýÛ¨¼Â ¾É¢ôÀð¼ Å¢ÕôÒ ¦ÅÚôÒ¸û ¸¡Ã½Á¡¸×õ, ¸¡úôÒ½÷ ¸¡Ã½Á¡¸×õ ( ¿Ê¸÷¸û ±øÄ¡õ ÅÕí¸¡Ä Ó¾øŦÃýÚ §À¡Š¼÷ «ÊòÐì ¦¸¡ûÙÅÐ ) ¾¢¨ÃÔĸò¨¾, Ó¾øÅ÷ ´Ð츢§Â Åó¾¡÷. ¬É¡ø, ±ýɧÁ¡ ¦ºöÐ , ¿¢¨Ä¨Á ÍÓ¸Á¡ÉÐõ, «¨¾ ¾ì¸ ¨ÅòÐì ¦¸¡ûÇ, ¾¢¨ÃÔĸò¾¢É÷, ±ò¾¨É àÃòÐìÌô §À¡¸ ÓÊÔ§Á¡ «ò¾¨É àÃòÐìÌô §À¡Â¢Õ츢ȡ÷¸û. Ó¾øŨÃô ¦À¡Úò¾ ŨÃ, ¾ýÉ¢î¨ºÂ¡É ÓÊ׸û ±ÎôÀ¡÷. Å£õÒ측¸ ´ý¨È ¦ºöРŢðÎ, ¾ÅÚ ±ýÚ ¦¾Ã¢ó¾¡ø ܼ «¾¢§Ä§Â À¢ÊÅ¡¾Á¡¸ ¿¢ýÚ, 'ÁÉ ¯Ú¾¢ À¨¼ò¾Å÷', '¨¾Ã¢Â ÄðÍÁ¢' ±ýÚ Àð¼õ ÝðÊì ¦¸¡ûÙž¢ø §¾÷ó¾Å÷. §¿ü¨ÈìÌ ¿¼ó¾ ŢơŢø, «ÅÕìÌ §¾¨Åô ÀÎõ ҸơÃí¸û ¸¢¨¼ì¸¡Áø §À¡ö, ÌÎò¾ ºÖ¨¸¦ÂøÄ¡õ ¸¡ýºø ±ýÚ ´Õ ¬÷¼÷ §À¡ðÎÅ¢ð¼¡ø ( «¦¾ôÀÊ §À¡ÎÅ¡÷Û §¸ì¸¡¾£í¸, «Å÷ ¦ºöÅ¡÷) , ±ýÉ ¬Ì§Á¡ ±ýÈ ¸Å¨Ä¢ɡø ¾¡ý, «õÁ¡¨Å, ÓÊó¾ «Ç× '±ý¦¼÷¦¼Â¢ý' ¦ºö §ÅñÎõ ±ýÚ §º÷óÐ Üò¾Êò¾¢Õ¸¢È¡÷¸û.

  «õÁ¡ ¸¡ðÊ ºÖ¨¸¸Ç¢ø ¦ÀÕõÀ¡Ä¡É¨Å ÀüÈ¢ ±ÉìÌò ¦¾Ã¢Â¡Ð, ¬É¡ø ¾¢ÕðΠŢº¢Ê Å¢„Âò¾¢ø, ºð¼õ ¿ýÈ¡¸§Å §Å¨Ä ¦ºö¸¢ÈÐ. ¦Ã¡õÀ ¿¡Ç¡¸§Å ¿¡ý ¨À§Ãð¼ð Å¢º¢Ê¢ø ¾¡ý À¼õ À¡÷òÐì ¦¸¡ñÊÕó§¾ý. Á¢¸ ÁĢš¸, À¡÷ì¸¢È þ¼í¸Ç¢ø ±øÄ¡õ ¸¢¨¼ò¾¾¡ø, «¨¾ô ÀüȢ ÌüÈ ¯½÷ ¦ÂøÄ¡õ ±ÉìÌ þÕó¾¾¢ø¨Ä. ±í¸û ²Ã¢Â¡Å¢ý ¸¡ÅÄ÷ ´Õò¾÷ ܼ «í§¸ º¢Ê Å¡í¸¢ì ¦¸¡ñÎ §À¡Å¡÷. ¬É¡ø þô§À¡Ð ¿¢¨Ä¨Á ¾¨Ä ¸£ú. §¸¡¼õÀ¡ì¸õ, żÀÆÉ¢, Å¢Õ¸õÀ¡ì¸õ ²Ã¢Â¡ì¸Ç¢ø ±í̧Á ¸¢¨¼ôÀ¾¢ø¨Ä. ´Ã¢ÕÅ÷ Å¢üÚì ¦¸¡ñÊÕó¾¡Öõ, ¸ïº¡ «À¢ý ¸¼ò¾ø ¸½ì¸¡¸ Á¢¸ øº¢ÂÁ¡¸î ¦ºöÐ ¦¸¡ñÊÕì¸ §ÅñÎõ. ´Õ ²Ã¢Â¡Å¢ø þôÀÊ ±ýÈ¡ø, ¦ºý¨É ÓØì¸ þôÀÊ ¦¸ÎÀ¢Ê¡¸ò¾¡ý þÕìÌõ. ¾¢¨Ã «Ãí̸Ǣý ÅÝø, 10 þø þÕóÐ 15 º¾Å£¾õ Ũà ¯Â÷ó¾¢ÕôÀ¾üÌõ þо¡ý ¸¡Ã½õ.

  ±ó¾ò ¦¾¡Æ¢Ä¢Öõ, «Å÷¸ÙìÌ ºÖ¨¸ ¸¢¨¼ôÀ¾ü¸¡¸, «Å÷¸Ù¨¼Â «§º¡º¢§Â„ý¸û, §ºõÀ÷ ¬·ô ¸¡Á÷Š §À¡ýȨŠ«ó¾ «ó¾ «¨Áò¾¢¼õ Ä¡À¢ ¦ºöÅÐõ, ºÖ¨¸ ¸¢¨¼òÐÅ¢ð¼¡ø, ¬†¡ µ§†¡ ±ýÚ Ò¸úóÐ Äðºì¸½ì¸¢ø ¦ºÄ× ¦ºöÐ §ÀôÀâø Å¢ÇõÀÃõ ¦ºöÅÐõ ¿£í¸û «È¢Â¡¾Ð «øÄ. ¾¢¨ÃÔĸò¾¢É÷, «Å÷¸ÙìÌ ¦¾Ã¢ó¾ Ũ¸Â¢ø, ±ô§À¡Ðõ §À¡Ä Á¢¨¸Â¡¸î ¦ºöÐ Ó¾øÅâý ¯ûÇò¨¾ ÌÇ¢÷Å¢ò¾¢Õ츢ȡ÷¸û.

  ÝôÀÃ¡É àñÊø §À¡ðÎ, ±ø§Ä¡¨ÃÔõ ¾ý Àì¸õ þØò¾ ¦ƒÂÄÄ¢¾¡×ìÌò ¾¡ý þ¾¢§Ä ÓئÅüÈ¢. þÕó¾¡Öõ âɢ¸¡óò ' ¦Å ÌÎÁ¢, ¦º¨Ã ¦Á¡ð¨¼ ' ¸½ì¸¡¸, ´§ÃÂÊ¡ö Ò¸úóÐ §Àº¡Áø, ¿õÁ ݧ¼¡ þý¼ÄìÍÅø ÝôÀ÷ ¬ì¼÷ ¸½ì¸¡, ÊôǧÁðÊ측, «Ó츢 Å¡º¢îº¢Õì¸Ä¡õ ±ýÀÐ ±ý ¾É¢ôÀð¼ «À¢ôáÂõ

  ReplyDelete
 4. ஒண்ணுமே இன்னும் நடக்காத சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஆப்போஸிட் சைடில அமளி-துமளிப்படும்போது இது ஒண்ணும் பெரிய விஷயமாத் தெரியலை.

  By: Mugamoodi

  ReplyDelete
 5. சேது சமுத்திரத் திட்டத்தில், இப்படி செய்வதெல்லாம் கட்சிக்காரர்கள் என்ற வாதம் எனக்குத் தெரியும். இருந்தாலும், மேல இருப்பது தான் என் கருத்து.

  By: Mugamoodi

  ReplyDelete
 6. ரஜினி தானும் தன் கூட்டமும் ஜெ.ஜெ.யை சைட் அடித்ததை (இந்தக்கலர் புடவை, ஜாக்கெட், பார்டர்..) இவ்வளவு பொதுவில் பேசி, கடைசியில் முடிக்கும் போது ஒருமைக்குத் தாவியது ஆச்சரியமாக இருந்தது. (உனக்கு தைர்யலக்ஷ்மி பக்கத்தில் இருப்பாள்... என்கிற மாதிரி முடித்தார்).. ஆனால் ரஜினி பெயரை ஜெ.ஜெ உச்சரித்தமாதிரி தெரியவில்லை. எல்லோரும் அம்மா அம்மா என ஜால்ரா போட்டது கொஞ்சம் ஓவர்.

  குமார்.வி

  By: Kumar V

  ReplyDelete
 7. பத்ரி,
  நானும் அந்தக் கூத்தை டிவியில் நேற்று பார்த்தேன். சகிக்கவில்லை! அதைப்பற்றி நான் எழுதலாம் என்றிருந்தேன். நீங்கள் முந்தி கொண்டு விட்டீர்கள்! முகஸ்துதிக்கு ஒரு வரையறை வேண்டாமா? பேசியதில் கமல் ஒருவர் தான் பரவாயில்லை எனத் தோன்றியது. என் வலைப்பதிவுக்கு அவ்வப்போது வருகை தந்து தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். தமிழ்வலைப்பதிவுகளின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
  என்றென்றும் அன்புடன்
  பாலா

  ReplyDelete
 8. இதில் தப்பு ஏதும் இல்லை. எதாவது நல்லது செய்தால் பாராட்ட வேண்டும். ( கொஞ்சம் ஓவராக புகழ்ந்தார்கள் அவ்வளவுதான்).
  (நீங்கள் கூட கொஞ்சம் ஓவராக திட்டியதை போல்)
  எனக்கு தெரிந்த பல திரை உலக நண்பர்கள் தற்போது நிம்மதியாக இருப்பதை பார்க்க முடிகிறது. நீங்களே ஒரு படம் எடுத்திருந்தாள் "அம்மா" என்று அழைத்திருப்பீர்கள்.
  அன்புடன்
  இட்லி

  By: idly

  ReplyDelete
 9. முகமூடி...நிகழ்ச்சியை ஒழுங்கா பார்க்காமா கமெண்ட் அடிக்காதீங்க சார்....முதல்வர் முதலிலேயே அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டார். இன்னொருத்தர் புலி ரஜினி என்று சொன்னார். 'தாத்தா' அடிக்கடி கூட்டணி கட்சிகளை மாற்றுவார். அதைப் பற்றி பேச வக்கில்லை. நல்லது செய்வதை பாராட்டுவர்களை குற்றம் சொல்ல துள்ளி குதித்துக் கொண்டு வந்து விடூவீர்கள். இதுவே பெரிசை 'தமிழே நீ தான்' என்று பாராட்டினால் அதை வாய் பிளந்து பார்ப்பீர்கள். போங்கய்யா நீங்களும் உங்க கருத்தும்!

  ReplyDelete
 10. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! ஆனா பிச்சைக்கார புலவனுக்கு பாட்டு எழுதுவது ஒன்றுதான் தொழில் அதை தவிர வேற ஒன்னும் தெரியாது (அமெரிக்கால வேலை காலின்னா இந்தியாவுக்கு ஒடலாம்! புலவன் எங்க போவான் அவன் ஒன்னும் IITல படிக்கலியே). அதே மாதிரிதான் சினிமாகாரனும் அவனுக்கு தொழில் இல்லன்னா என்ன செய்வான். அதனாலதான் அவங்களை கூத்தாடிகள் என தமிழில் விளம்புகிறோம். இதில பைத்தியகாரன் யாருன்னா? நம்ம திருவாளர்.பொதுசனம் தான்.

  By: pothusanam

  ReplyDelete
 11. பிரமாதமான நடிக நடிகையெல்லாம் கூடி ஒரு (முன்னாள்) நடிகைக்கு (அவருடைய வாழ்நாள் சாதனைக்கு!) எடுத்த விழா. அதில் நீங்கள் வேறென்ன எதிர்பார்க்கின்றீர்கள்? அவர்கள் அம்மாவுக்கு கொடுத்த கால்ஷீட்டுக்கு அவர்களுடைய வேலையை சிறப்பாக செய்வது வரவேற்கப்பபடவேண்டிய ஒன்றுதானே!?:)

  ReplyDelete
 12. ஜெயலலிதா, இந்திய அரசியலின் most pathological prototype. கருணாநிதி முதலமைச்சராக இருந்திருந்தாலும் இதேபோன்ற துதிபாடல்கள் இருந்திருக்கும். தங்கப் பேனா கொடுப்பார்கள்; அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணிசொல்வது போலத்தான்.

  இரந்து வாழ்பவர்களெல்லாம் பிச்சைக்காரப் புலவர்கள் என்பது சற்றுக் காட்டமான கருத்துத்தான். சடையப்பரும் கம்பரை அப்படிப் பார்த்தாரா என்பது நமக்குத் தெரியாது. அப்படிப் பார்த்தால், பிரமோஷனுக்காக உயரதிகாரிக்குக் குல்லா போடும் பணியாளரும், மார்க்குக்காக வாத்தியாருக்குக் குழையடிக்கும் மாணவனும் இதே வகையில்தான் சேருவார்கள்.

  புறநானூற்றுப் பாடல்களின் விஸ்தீரணத்தை நாம் சந்தேகித்தால், அதே விசாரணைக்குப் பிற நாடுகளின் போர்க்காப்பியங்களையும் உட்படுத்தவேண்டும். ட்ராய் யுத்தத்திற்குச் சென்ற அக்கில்லியப் போர்ப்படை 5000 பேரைக் கொண்டிருந்ததாக ஒரு கணக்கு. இப்போது தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமொன்றின் போலீஸ் படை எண்ணிக்கையே அவ்வளவு இருக்கும்! மேலும், patrons என்பவர்கள் அனைவரும் தாங்கள் போஷித்த கலைஞர்களை அவமானப்படுத்தியவர்கள் அல்ல என்பது என் அபிப்ராயம்.

  By: Montresor

  ReplyDelete
 13. புறநானூற்றுப் பாடல்களின் விஸ்தீரணத்தை முழுமையாக நான் சந்தேகிக்கவில்லை. சில அருமையான கருத்துக்கள் உள்ளன. ஆனால் இன்றைய விழுமியங்கள் படி, படுகேவலமான பாடல்களும் உள்ளன. இதற்காக பிற நாடுகள், அவர்களது புராணங்கள் ஆகியவற்றை நாம் எடுத்து, நம்முடையதுடன் ஒத்துப் பார்க்க வேண்டும் என்பதில்லை. இந்தியப் புராணங்கள், ஹிந்து மத நூல்கள் பலவற்றையும் அவ்வப்போது, வேண்டியபோதெல்லாம் மீள்பார்வை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

  "பகைவர் ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக் கொள்ளை மேவலை" [புறநானூறு - 7], கிட்டத்தட்ட ஜார்ஜ் புஷ் குரலை எதிரொலிக்கிறது. [பகைவர்கள் ஊரை நீ கொளுத்தும்போது அந்தத் தீயில் மாட்டிக்கொண்ட மக்கள் கதறிக் கதறித் தன் உறவினர்களை அழைக்கும் சத்தம் கேட்டும், அதைப்பற்றிக் கவலை கொள்ளாது பகைவரது ஊரைக் கொள்ளையடிப்பாய்!] இதுபோல பகைவனைக் கொள்ளையிடுவது, அவன் நிலங்களை அழிப்பது போன்ற கலாசாரக் கூறுகள் பற்றி பக்கம் பக்கமாகப் புகழ் பாடப்படுகிறது.

  இரந்து வாழ்தலை ஒரு கூட்டம் தொழிலாகவே அப்பொழுது செய்து வந்தது என்பதுதான் கோபத்தை வரவழைக்கிறது. ஏழைமை என்பதில் எந்தத் தவறும் இல்லை. எல்லாருக்கும் அவ்வப்போது வருவதுதான். ஆனால் தொழில் ஏதும் செய்து ஏழைமையிலிருந்து தப்பிக்காமல், கையில் யாழை எடுத்துக்கொண்டு "என் குடும்பத்தார் தலையில் ஈரும் பேனும் பிடுங்கிப் பிடுங்கித் தின்கின்றன; உடலைப் பிணியும் புண்ணும் வாட்டுகிறது" [புறநானூறு 136] என்று, இந்த வேகாத வெய்யிலில் உன்னைப் பாட வந்துள்ளோம், ஏதோ பாத்துப்போட்டுக்கொடு எனக் கெஞ்சுவது கொடுமையாக இருக்கிறது. இதற்கு பதில் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டு செத்துவிடலாம்.

  இதில் போதாக்குறைக்கு திருவள்ளுவரும்
  "இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
  மரப்பாவை சென்றுவந் தற்று" [1058]
  என்று உலகில் பிச்சையெடுக்க ஆட்கள் எப்பொழுதும் இருந்தே தீரவேண்டும் என்று ஆசீர்வாதம் செய்கிறார்.

  சரி, அதானே? இனி ஏழைகளே இல்லையென்று விட்டால் வள்ளுவம் பொய்த்துவிடுமே என்று ஆட்சியாளர்களும் அப்படியே விட்டுவிடுகிறார்கள்.

  ReplyDelete
 14. //ஆனால் தொழில் ஏதும் செய்து ஏழைமையிலிருந்து தப்பிக்காமல், கையில் யாழை எடுத்துக்கொண்டு//
  இதைப் பின்வருமாறு பார்க்கலாம்.

  'ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப் படும்' (எப்போதோ படித்ததால், ஏதாவது தவறிருந்தால் மன்னிக்க) என்ற ரீதியில் புலவர்கள் தங்களது survival instinctsஐ வளர்த்துக்கொண்டுவிட்டதாகவும் கொள்ளலாம்; அல்லது

  இம்மாதிரியான உரையாடல்களை நாம் இப்போதும் கேட்கமுடியும், பழங்காலத்திலும் அப்படியே இருந்திருக்கும்:
  'சார் என்ன வேலை செய்றீங்க?'
  'எழுத்தாளர்'
  'அது சரி, என்ன வேலை செய்றீங்க?'

  தொழில் என்பதும் கலை என்பதும் இணையக்கூடாதென்னும் puritans ஒருபுறம், கலை ஒரு வாழ்க்கைமுறை என்று ஒப்புக்கொள்ளமறுக்கும் materialistகள் ஒருபுறம், தொழில் என்பதையே இழிசொல்லாகப் பாவிக்கும் கலைவெறியர்கள் ஒருபுறம் - அந்தக்காலப் புலவன் பாவம் எங்கே போவான்? அவன் நிலைமை கஷ்டம்தான்.

  //இதற்காக பிற நாடுகள், அவர்களது புராணங்கள் ஆகியவற்றை நாம் எடுத்து, நம்முடையதுடன் ஒத்துப் பார்க்க வேண்டும் என்பதில்லை. இந்தியப் புராணங்கள், ஹிந்து மத நூல்கள் பலவற்றையும் அவ்வப்போது, வேண்டியபோதெல்லாம் மீள்பார்வை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?//

  நீங்கள் குறிப்பிட்டதுபோலான அதீதங்கள், hyperboles அனைத்துக் கலாச்சாரங்கள் உள்ளன என்பதைக் குறிப்பிடவே ட்ராய் யுத்தத்தைப்பற்றிக் குறிப்பிட்டேன். மற்றபடி, பத்து வருடங்கள் நடந்த ட்ராய் யுத்தத்தைக்காட்டிலும் பதினெட்டு நாட்கள் நடந்த குருக்ஷேத்திர யுத்தம்தான் என்னை அதிகமாக வசீகரித்தது என்பதே உண்மை. கிரேக்கப் புராணங்களிற்கும் தமிழ்ப் புராணங்களிற்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்பதை மறுக்கமுடியாது. கிருஷ்ணர் என்ற கடவுள் அவதாரம் பாண்டவர்கள் பக்கம் போரிட்டதுபோல் பல்லாஸ் அதீனி போன்ற கடவுள்களும் அந்த யுத்தத்தில் பங்கேற்கவே செய்தன. வன்முறைக்கு எதிரான குரல் இலியடிலும் உண்டு. அக்கில்லியஸ், ஸ்கமாண்ட்ரோஸ் நதிக்கரையில் வைத்து ட்ரோஜன்களை வெறிபிடித்தவன் போலக் கொன்று சாய்க்கும்போது, 'என் கரையில் என் தண்ணீரில் ரத்தம் ஓடுவதை அனுமதிக்கமாட்டே'னென்று எச்சரிக்கை விடுக்கும் அந்த நதி, தன் பிரதாபங்களில் அமிழ்ந்து ஊறிக்கிடந்த அக்கில்லியஸ் அதை அலட்சியம் செய்கையில் அவன்முன் விஸ்வரூபமெடுத்து நடுக்கமடையச்செய்து ஆயுதங்களைத் தவறவைத்து கொலைகளை நிறுத்தி ஓட்டமடையச்செய்வது போன்ற பகுதிகளும் உள்ளன. ஆனால் அது ஏதோ ஒரு revelationary incident என்ற ரீதியில் இல்லாமல், ஒரு cosmic order ன் தவிர்க்கமுடியாத ஒரு கண்ணியாகவே காட்டப்படுகிறது. அந்த யுத்தத்தில் அது ஒரு சின்ன residue. அவ்வளவே. Scottus Eriugenaவின் simultaneous existence கருத்தை, நாரதர் சென்ற இடமெல்லாம் விஷ்ணுவைக் கண்டதுடனும் நாம் ஒப்பிடலாம். ஜீயஸ் ஒலிம்பஸ் மலையிலிருந்தார், சிவன் கைலாயத்திலிருந்தார். வாயுதேவன் பிள்ளை அனுமன் சூரியனைப் பழமென்று பறிக்கப்போனபோது எரிக்கப்பட்டதால் வாயுதேவன் உலகை நடுக்கினார். ட்ராய் யுத்தத்துக்குப்பின் ஒடிஸியஸ் திரும்ப வந்துகொண்டிடுக்கும்போது கடலின் கடவுளான போஸிதனின் பிள்ளை சைக்ளாப்ஸின் கண்ணை ஒடிஸியஸ் குருடாக்கியதால் போஸிதன் தன் சூலாயுதத்தால் (trident - கவனிக்க!) கடலைப் பிளந்தான், ஒடிஸியஸ் பின்பு பலகாலம் கடலில் சுற்றியலையவேண்டியதாகிப்போயிற்று...சொல்லவேண்டுமானால் சொல்லிக்கொண்டேயிருக்கலாம். Cultures are separated in time and space, they are never mutually exclusive என்பது என் கருத்து. அதைச் சொல்லவே அப்படி எழுதினேன். மற்றப்படி ஒப்புமை செய்ய நமது கலாச்சாரத்தில் இருக்கும் சுரங்கமே முடிவற்ற ஒன்று என்பதில் எனக்கு வேறு அபிப்ராயமே கிடையாது.

  ஜெயலலிதாவைப்பற்றி எழுத ஆரம்பித்து வேறெங்கோ போய்விட்டது...

  உங்கள் கருத்துக்கள் தவறல்ல. ஈகை பற்றியும், இரப்பது பற்றியும் நமது கலாச்சாரத்தில் வேறு கருத்துக்களும் உள்ளன. ஈகையில் பரிமாற்றம் செய்துகொள்ளப்படுவது பொருட்கள் மட்டுமே அல்ல, பாவங்களும் புண்ணியங்களும் கூடத்தான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

  பெரிது பெரிதாகக் கமெண்ட் எழுதி இம்சிப்பதற்கு மன்னிக்க!!! உங்கள் பதிலுக்கும் நன்றி.

  By: Montresor

  ReplyDelete
 15. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்துவிட்டோம். இப்பொழுதுதான் நான் இலியாட் முடித்து ஒடிஸ்ஸி படித்துக்கொண்டிருக்கிறேன். இந்திய, கிரேக்கப் புராணங்கள், அத்துடன் எகிப்தியக் கதைகள், நார்டிக் கதைகள் போன்ற பண்டையப் புராணக் கதைகள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் பிரமிக்க வைக்கின்றன. "Cultures are separated in time and space, they are never mutually exclusive என்பது என் கருத்து." என்னும் உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்கிறேன்.

  இந்தியப் புராணங்களிலேயே மகாபாரதம் ராமாயணத்தைவிட களத்தில் பெரியது, மிகவும் பிரம்்மாண்டமானது.

  ஈகை, இரத்தல் பற்றி என் கருத்து தெளிவானது - இரத்தல் இருக்கவே கூடாது. அதனால் ஈகை இருக்கவே கூடாது. Social Security என்ற கண்ணியமான சமூகக் காப்புத் திட்டம்தான் நமக்குத் தேவை. இரத்தலின் கழிவிரக்கமும், கேவலமும் கூடவே கூடாது. ஈகையின் பெருமை அதனினும் கூடாது.

  ReplyDelete
 16. // ( «¦¾ôÀÊ §À¡ÎÅ¡÷Û §¸ì¸¡¾£í¸, «Å÷ ¦ºöÅ¡÷) // சர்வ நிச்சயமாக செய்வார். தமிழ் நாட்டு சனங்கள் பூனையிடம் மாட்டிய எலிகள். எந்த ஈவு இரக்கமும் இன்றி அதிகாரம் இருக்கும் ஒரே காரணத்தினால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.

  By: madayan

  ReplyDelete