Wednesday, November 03, 2004

இலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயணம்

கிரிக்கின்ஃபோ செய்தி

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா பகுதிகளைச் சுற்றிப் பார்த்து, விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அனைவரும் அமைதியாக இருக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் விடுதலைப் புலிகள் தலைவர் ஒருவருடன் அவர் பேசியதாகச் செய்தி வந்துள்ளது.

[எந்த மொழியில் இருவரும் பேசியிருப்பார்கள்? இரமணி முன்னர் ஒருமுறை முரளிதரனுக்கு தமிழ் பேசுவதே மறந்து போய்விட்டதாக யாரோ சொன்னதாக எங்கோ எழுதியிருந்தார்.]

3 comments:

  1. யாரோ சொன்னதாக எங்கோ எழுதியிருந்தார்

    ---ஒரு பொறுப்புள்ள ப்ரொபசர் எழுதுகின்ற எழுத்தா இது?

    By: உங்க ஃப்ரெண்டு

    ReplyDelete
  2. "யாரோ சொன்னதாக எங்கோ எழுதியிருந்தார்" - சும்மா புரளி பேசவில்லை. நிசமாகவே ஞாபகம் இல்லை, ஆனால் என் தமிழோவியம் கட்டுரை ஒன்றின் பின்னூட்டமாக இரமணி எழுதியிருந்ததாக ஞாபகம். அங்கு, தன் நண்பர் (அல்லது தெரிந்தவர்) அவ்வாறு சொன்னதாக இரமணி எழுதியிருந்தான் என்று நினைக்கிறேன்.

    இப்பொழுது அந்தச் சுட்டியைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாததால் இப்படி எழுதினேன். நாளை தேடிக் கண்டுபிடித்ததும், மாற்றி எழுதினால் போச்சு! :)

    ReplyDelete
  3. உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான விசேட தூதுவராக யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் போயிருக்கிறார் முரளீதரன்.அங்கு புலிகளைச் சந்தித்து அவர்களின் உணவுற்பத்திச் செயற்பாடுகள் பற்றிக் கேட்டறிந்ததோடு கிளிநொச்சியில் விளையாட்டரங்கம் ஒன்று அமைக்கப்படுவது பற்றியும் கலந்துரையாடினார்.
    முரளிக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.பரவாயில்லை புலிகளில் பலருக்கு சிங்களம் தெரியும்.அதனால் உரையாடுவதற்கு மொழி ஒரு தடையாக இருந்திருக்காது

    ReplyDelete