ரஜினி ராம்கி பூம்புகார் பகுதிக்குச் சென்றுள்ளார். தேவையான பொருட்கள் அங்கு வந்து சேர்ந்து விட்டதாகவும், இப்பொழுதைக்கு பற்றாக்குறை disposable syringes தான் என்றும் சொல்கிறார். மேற்கொண்டு என்ன தேவை என்பதை அங்கிருந்து சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.
நேற்று நாகைக்கு நாங்கள் அனுப்பிய மருந்துப் பொருட்கள் அரசின் முட்டாள்தனத்தால் போய்ச்சேர தாமதாமாகியுள்ளது. எந்த வண்டியையும் திருவாரூர் தாண்டி அனுப்பவில்லை. எனவே இன்று காலைதான் மருந்துப் பொருட்கள் நாகை போய்ச்சேர்ந்துள்ளன.
நேற்று ஜெயலலிதா நாகையில் இருக்கும்போதுதான் இந்த அரசின் 'எச்சரிக்கைச் செய்தி' கூத்து நடந்தேறியுள்ளது. உடனே ஜெயலலிதாவும், பிற அமைச்சர்களும் அலறியடித்துக்கொண்டு தாங்கள் வழங்கிக்கொண்டிருந்த உதவிப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு வண்டிகளில் ஏறி ஓட, மற்ற ஜனங்களும் ஓட, போக்குவரத்து நெரிசலாக, அதனை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் எல்லாவற்றையும் சரிசெய்து விட்டு திரும்பிப் பார்த்தால் அவரது காரின் ஓட்டுனரும், ஆட்சியரின் உதவியாளரும் ஓட்டமெடுத்திருந்தனர். ஆட்சியரை அம்போவென விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். உடனே கிடைத்த காரில் ராதாகிருஷ்ணனும் சென்றுவிட்டார்.
கோமாளிக்கூட்டம்!
நாவல்வாசிகள் 4
1 hour ago
அரசே இந்த அழகில் வேலைபார்த்தால் சாதாரண மக்களை என்னவென்று சொல்வது!!!
ReplyDeleteஇதை தவிர NDTVயில் கபில் சிபலின் பேட்டி பார்த்தேன். என்ன சொல்வது என்று புரியவில்லை. அரசின் "Blame Game" ஆரம்பமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்
ReplyDeleteBy: narain
Badri,
ReplyDeleteThis is very unfortunate.