Saturday, January 01, 2005

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் சுனாமி தினத்தன்று நடந்த கிரிக்கெட் ஆட்டங்கள், நியூசிலாந்துக்கு விளையாடச் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மனநிலை, சுனாமி பற்றி இதுவரை இரங்கல் மட்டும் தெரிவித்து விட்டு பர்ஸை பத்திரமாக இழுத்து மூடிவைத்திருக்கும் ஐசிசி ஆகியவை பற்றி.

இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 10 கோடி கொடுக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடுத்து விளையாட இருக்கும் ஒருநாள் போட்டிக்கான சம்பளத்தைக் கொடுக்கிறார்கள் (இது கிட்டத்தட்ட ரூ. 1 கோடிக்கு மேல் வரும்). இவையிரண்டும் இந்தியப் பிரதமரின் நிவாரண நிதிக்குப் போய்ச்சேரும்.

பங்களாதேஷ் அடுத்து ஜிம்பாப்வேயுடன் விளையாட இருக்கும் ஆட்டங்களில் மைதானத்தில் சேரும் பணத்தை அப்படியே இலங்கை நிவாரணத்துக்குக் கொடுக்க உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் தாம் விளையாடிய கடைசி ஆட்டத்தில் கிடைத்த பணத்தை கொடுக்கின்றனர்.

ஆஸ்திரேலியா, சுனாமி நிவாரணத்துக்கென ஓர் ஆட்டத்தை நடத்தி அதில் கிடைக்கும் பணத்தைக் கொடுக்கலாம் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது.

1 comment:

  1. அமெரிக்கக் காற்பந்து, பேஸ்பால், டென்னிஸ் அணிகளும், வீரர்களும், போட்டி நடத்துனர்களும் வாரிக் கொடுக்கும்போது, பண வேட்டையில் அவர்களுக்குச் சளைக்காத இந்தியக் குடிகளின் ரத்த உறிஞ்சிகளான இந்தியக் கிரிக்கெட் வாரியமும், வீரர்களும் காட்டும் அலட்சியமும், கஞ்சத் தனமும் அருவருக்கத் தக்கவை.

    ReplyDelete