Friday, May 05, 2006

அரிசி அரசியலும் கோதுமை அரசியலும்

கிலோ அரிசி ரூ. 2.

தமிழக அரசு நேரடியாக தமிழக விவசாயிகளிடமிருந்து அரிசி/நெல் கொள்முதல் செய்தால் மான்யம் குறையுமே என்று neo கேட்டிருந்தார். நெல் பயிரிட்டு தமிழக அரசுக்கு விற்பவர்களிடம் சில விஷயங்களைக் கேட்டறிந்தேன். இப்பொழுது தமிழக அரசு கொள்முதல் செய்யும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ. 400 முதல் ரூ. 650 கொடுக்கிறது. பொதுவாக ரூ. 450 என்ற விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். தரம் குறைந்த நெல்லாக இருந்தால்தான் ரூ. 400 குவிண்டாலுக்கு.

ஒரு கிலோ நெல்லிலிருந்து சுமார் அரை கிலோ அரிசி கிடைக்கும். நெல்லை அரிசியாகக் ஆகும் செலவைக் கணக்கிடாமலேயே பார்த்தால் கிலோ அரிசி ரூ. 9 என்ற கணக்கில்தான் பொதுவாக தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து வாங்குகிறது என்று வைத்துக்கொள்ளலாம். மிகக்குறைந்த விலையாக ரூ. 8 ஆகிறது. இத்துடன் பிற செலவுகளைச் சேருங்கள் - நெல்லை அரைக்கும் செலவு; அரிசியை ஓரளவுக்காவது சுத்தம் செய்ய ஆகும் செலவு; சேர்த்து வைக்கும் இடத்துக்கு ஆகும் செலவு; அரசின் overheads - இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் மத்திய அரசு வழங்கும் ரூ. 9.15ஐ விட அதிகமாகத்தான் ஆகிறது - இப்பொழுதைய கணக்குப்படி.

இது ஒரு பக்கம்.

மற்றொரு பக்கம், மத்திய அரசே கோதுமை கொள்முதலில் பிரச்னையைச் சந்தித்து வருகிறது. மத்திய அரசு ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. 650 என்று கணக்கு வைத்து, பின்னர் அதை ரூ. 700 ஆக்கியுள்ளனர். ஆனால் அரசுக்கு கோதுமை விற்க ஆளில்லை. ஏனெனில் தனியார் நிறுவனங்கள் - கார்கில், ரிலையன்ஸ், ஐடிசி ஆகியவை குவிண்டாலுக்கு ரூ. 870 வரை வைத்து வாங்கியுள்ளனர். அந்த நேரத்தில் சந்தை விலை கிட்டத்தட்ட ரூ. 1,000 வரை போயுள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு என மத்திய அரசு வைத்திருக்கும் இலக்கில் மே மாதம் கடைசி வரையில் 90.1 லட்சம் டன்கள் கோதுமைதான் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டில் மாநிலங்களுக்குக் கொடுக்கவிருக்கும் மான்ய கோதுமையின் அளவு குறைக்கப்படும் என்று தெரியவருகிறது.

இதே நிலைமை வெகு சீக்கிரம் அரிசிக்கும் ஆகும். இன்று நல்ல சாப்பாட்டு அரிசி - பொன்னி - கிலோ ரூ. 20-22 என்று விற்கிறது. இது பெரும்பாலும் ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் விளையும் அரிசி ஆகும். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை காரணமாக குறுகிய கால குண்டு அரிசி - இட்லி அரிசி - நெல்தான் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சாப்பாட்டு அரிசி ரூ. 12-லிருந்து 22 வரை விற்கிறது.

நல்ல நெல் உற்பத்தியாளர்கள் நிச்சயமாக மத்திய/மாநில அரசுகளுக்கு நிச்சயமாக விற்கமாட்டார்கள்.

நாளை மத்திய அரசும் APL ரேஷன் கார்டுகளுக்கு மான்யத்தில் அரிசியே கொடுக்கப்போவதில்லை என்று சொல்லக்கூடிய நிலைமை வரப்போகிறது. மாநில அரசுகளும் இதை கவனத்தில் கொண்டு வருட வருமானம் ரூ. 60,000-க்கு மேல் இருக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கடையில் அரிசி கொடுக்கப்போவதில்லை என்று சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டும்.

ஒரு குடும்பம் மாதத்துக்கு 20 கிலோ அரிசி வாங்குகிறது என்றால் கிலோ ரூ.15 என்ற கணக்கில் ஆகும் செலவு ரூ. 300தான்! ஆனால் அந்தக் குடும்பம் செலவு செய்யும் பிற விஷயங்கள் - முக்கியமாகக் கல்வி, பிரயாணம் ஆகியவை இதற்கும் மேலே. இன்று தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தம் பிள்ளைகளைச் சேர்க்க ஆசைப்படும் கீழ் மத்தியதரக் குடும்பத்தினர் ஒவ்வொரு பிள்ளைக்கும் மாதம் ரூ. 700-800 வரை செலவு செய்கிறார்கள். இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் இதற்கு மட்டுமே மாதம் ஆகும் செலவு ரூ. 1,500க்கும் மேல். அதை மனத்தில் கொண்டு நல்ல உயர்தரமான கல்வியை இலவசமாகக் கொடுக்க அரசியல் கட்சிகள் முனையவேண்டும்.

அதேபோல சாலைகளை நன்றாக அமைப்பது, நகரப் போக்குவரத்தை மேம்படுத்த மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் ஆகியவற்றின்மூலம் போக்குவரத்துச் செலவுகளை வெகுவாகக் குறைக்கலாம். பெட்ரோல் விலை கடுமையாக ஏறிக்கொண்டிருக்கும் இந்த நாள்களில் இதைப்பற்றி எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையும் பேசவே இல்லை.

6 comments:

  1. மிக நல்ல ஆழமான பதிவு. நன்றி பத்ரி.

    ReplyDelete
  2. தொழிற்சாலை ஆரம்பிக்கும்போது அரசாங்கம் ஏன் சலுகைகளைக் கொடுக்கிறது என்பது புரிந்தால் நீங்கள் இதைச் சொல்லமாட்டீர்கள். பணக்காரர்களுக்கான ஸ்பெஷல் சலுகை அல்ல இந்த வரிச்சலுகைகள். இப்பொழுது உத்தராஞ்சல் மாநிலம் மார்ச் 2007க்கு முன் புதிதாக தொழிற்சாலைகளை நிறுவுபவர்களுக்கு 10 வருடம் ஆயத்தீர்வை விலக்கும் 5 வருடம் வருமான வரி விலக்கும் கொடுக்க இருக்கிறார்கள். ஏன்? இதனால் இந்த மாநிலத்துக்குக் கிடைக்கும் புதிய வேலைவாய்ப்புகளுக்காகத்தான். இதைக் கேள்விப்பட்டதும் பல நிறுவனங்களும் உத்தராஞ்சல் செல்கின்றனர்.

    வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக உணவுப்பொருள்கள் அளிப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் வரைமுறையின்றி எல்லோருக்கும் மான்யம், இலவசம் என்பதை நான் எதிர்க்கிறேன்.

    ReplyDelete
  3. உண்மை தான் பத்ரி, அரிசி வியாபாரத்தில் உள்ளதால் சொல்கிறேன், 10 ரூபாய்க்கு குறைந்து தரமான அரிசி கொடுப்பதற்க்கு வாய்ப்பே இல்லை. பொதுவாக தரமற்ற அரிசியை(நெல்) தான் அரசுக்கு தருவார்க்கள். நல்ல அரிசியை(நெல்) அவர்களே நேரடியாக மார்க்கெட்டிலோ, அரிசி வியாபாரயிடோமா விற்று விடுவார்க்கள்
    அன்புடன்
    நாகை சிவா

    ReplyDelete
  4. Very Good Analysis. Keep it up Pal !!

    ReplyDelete
  5. I have few doubts.

    1. During Chennai floods, JJ gave Rs 2000 to EVERY ONE, irrespective of whether they were affected or not, "irrespective of the Poverty line" where Director Kasturi Raja and Writer Jeyakanthan too got those 2000 rupees. The same with Tsunami. My uncle whose house is 5 kilometres from beach got the Rs 2000 inspite of him telling that he was not affected. JJ move was not criticised. In fact it is termed as "effective management of crisis". Why is every one concerned about DMKs offer of subsidy for Rice.

    2. In what way can you say that the 1996-2001 rule was inferior to the 2001 to 2006 (or 1991 to 1996) rule. DMK focussed entirely on development from 1996 to 2001. The result... Amma offered free electricity etc in the 2001 election and won. DMK is doing the same thing

    I am no great supporter of any party, but I feel that the media (and blogworld) has been very unfair about the criticism on the DMK. Most of the bridges (not the chennai over bridges, but the bridges across rivers and streams in rural areas) were built or (those built in british and congress rules) repaired during 1996 to 2001 after 30 to 50 years

    Another fact is that no one is praising JJ for her positive actions. (1.video conferencing of Jails and Courts 2.improving the infrastructure in hospitals and police dept etc)

    ReplyDelete
  6. Can you provide an rss feed for your 'kizhakku pathippagam ' new releases. ?

    This might be useful for ppl who regularly checkout for your new books.

    thx,
    Oneguy

    ReplyDelete