Tuesday, May 23, 2006

'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு

இட ஒதுக்கீடு தொடர்பாக ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கின்றன. அவற்றை முறையாகத் தொகுத்து வழங்குவது அவசியமாகிறது.

தி எகனாமிக் டைம்ஸ் செய்தியிலிருந்து ஒரு சிறு துண்டை எனது முந்தைய பதிவில் எடுத்து எழுதியிருந்தேன். செய்தி எப்படி வழங்கப்படுகிறது என்பதைத்தான் அதில் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது செய்தியையும் அது எவ்வளவு மோசமானது என்பதையும் பார்ப்போம்.

நேற்றைய தி ஹிந்துவில் விரிவான செய்தி வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பலரும் சொல்வது - பிற்படுத்தப்பட்டோரின் நலன் நிஜமாகவே பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல தொடக்கக் கல்வி தாருங்கள், உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதுதான். உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா என்னும் விவாதத்தை சற்றே பின்னுக்குத் தள்ளுவோம். முதலில் நல்ல தொடக்கக் கல்வியை எல்லோருக்கும் வழங்கவேண்டும் என்பதிலாவது அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோமே என்று ஒரு சந்தோஷம்.

ஆனால் நிலைமை என்ன?

அர்ஜுன் சிங் தலைமையிலான மனிதவளத்துறை அமைச்சகம் "கல்வி ஓர் அடிப்படை உரிமை" என்ற பெயரில் ஒரு மசோதாவை உருவாக்கி வருகிறது. தி ஹிந்துவிலிருந்து:
The Union Human Resource Development Ministry has dropped its move to impose 25 per cent reservation for children from the weaker sections in unaided schools at the elementary level.

Though such reservation had been included in all the draft legislation drawn up by the Ministry to operationalise the Fundamental Right to Education, it finds no mention in the current draft under consideration.
தொடக்கக்கல்வி எனும்போது மெரிட் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொடக்கக்கல்வி அளவில் நுழைவுத்தேர்வு, நேர்முகம் என்று எதுவும் கூடாது என்று உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது. அப்படியும் பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்கள் பொதுவாக ஆங்கில மீடியம் தனியார் பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே இந்த "சிறப்புப் பள்ளிகள்" கேட்கும் கட்டணத்தைக் கட்டத் தயாராகத்தான் உள்ளார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவழியாக ஒதுக்கப்படுகிறார்கள்.

அப்படி இருக்கையில், அர்ஜுன் சிங் அமைச்சகம் ஏன் தனியார் தொடக்கப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை சத்தமின்றி நீக்கியுள்ளனர்? தொடக்கப் பள்ளிகளில் சாதிக்க முடியாததை உயர் கல்வி நிலையங்களில் எப்படி சாதிக்கப்போகிறார்கள்?

சில மாதங்களுக்கு முன்னர் மனிதவள அமைச்சகத்தின் கீழுள்ள CBSE முட்டாள்தனமான முடிவு ஒன்றை எடுத்தது. (அதைப்பற்றி என் ஆங்கில வலைப்பதிவில் முழுவதுமாக எழுதியுள்ளேன்.) CBSE பள்ளிகளில் ஒற்றைப் பெண்குழந்தைகள் இனி கல்விக்கட்டணத்தைச் செலுத்தவேண்டாம் என்பதுதான் அந்த முடிவு. இந்தப் பெண்குழந்தைகள் எப்படிப்பட்ட பொருளாதாரப் பின்னணியிலிருந்து வந்தாலும் அது கணக்கில்லை. இதனால் ஏற்படும் பண இழப்பை அந்தந்தத் தனியார் பள்ளிகளே ஈடுசெய்யவேண்டும். இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டு முடிவில் CBSE அவசர அவசரமாக தனது முடிவைப் பின்வாங்கியது.

ஆனால் அந்தப் பின்வாங்குதலுக்கும் இப்பொழுது 25% இட ஒதுக்கீட்டை தனியார் தொடக்கப் பள்ளிகள்மீது விதிக்காததற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? உள்ளது.

கல்வி உரிமை மசோதாவின் முதல் வடிவத்தை உருவாக்கிய பாஜக அரசு 6 வயது முதல் 14 வரையுள்ள குழந்தைகளின் படிப்பை அனைத்துப் பள்ளிகளும் முற்றிலும் இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்றனர். ஆனால் இது ஏழைக் குழந்தைகளுக்கு மட்டும் என்றும் அதிகபட்சம் 20% குழந்தைகளுக்கு மட்டும்தான் என்றும் சொல்லியிருந்தனர். இதனை காங்கிரஸ் அரசு 25% என்று மாற்றி, ஏழைக் குழந்தைகள் என்பதை முதலில் "disadvantaged groups" என்றும் பின்னர் "weaker sections" என்றும் மாற்றியுள்ளனர். பின் CBSE வழக்கில் எடுத்த நிலையின்படி மேற்படி இலவசக் கல்வி தனியார் பள்ளிகளுக்குக் கிடையாது என்றும் அரசு மான்யம் பெறும் பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும்தான் என்றும் இப்பொழுது முடிவு செய்துள்ளனர்.

இந்தக் குழப்பத்துக்குக் காரணம் இரண்டு விஷயங்களை ஒன்றாகச் சேர்ப்பது. இலவசக் கல்வி என்பது ஒரு விஷயம். தனியார் பள்ளிகளில் பிற்படுத்தப்பட்ட - disadvantaged, weaker section - மாணவர்களுக்கு இடங்கள் ஏற்படுத்தித் தருவது வேறு விஷயம். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்த மனிதவள அமைச்சகம், பின் ஏதோ ஒரு வழக்கின் முடிவின் அடிப்படையில் இரண்டையும் கைவிட்டுவிட்டது. வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை.

இலவசக் கல்வி என்பதைத் தனியார் பள்ளிகள் மீது திணிப்பது என்பது அந்தப் பள்ளிகளின் செயல்பாட்டை பாதிக்கும் விதமான ஆணை. அதற்கு நியாயமான எதிர்ப்பு வந்தது. அந்த எதிர்ப்பையும் ஒரு சிறுபான்மைக் கல்வி நிலையம்தான் முன்னெடுத்துச் சென்றது. ஆனால் தொடக்கப் பள்ளிகளில் 25% பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எந்தத் தனியார் பள்ளியின் நிதிநிலையையும் பாதிக்காது. சொல்லப்போனால் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பே இருக்காது - apartheid மனத்தை உடைய உயர் சாதியினரைத் தவிர! அவர்கள் மட்டும்தான் தம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் "கீழ் சாதியினர்" குழந்தைகளும் படிக்கிறார்களே என்று வெறியாட்டம் ஆடலாம். தமது பிள்ளைகள் "கெட்ட பழக்கங்களைக்" கற்றுக்கொள்வார்களோ என்று பயப்படலாம்! "அதுதான் அவர்களுக்கென்று கார்பொரேஷன்/பஞ்சாயத்து பள்ளிகள் உள்ளனவே? ஏன் கான்வெண்ட் படிப்பு அவர்களுக்குத் தேவை" என்று எண்ணலாம்.

இந்த எண்ணங்களைத்தான் மனிதவள அமைச்சகம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

அடுத்து இலவசக் கல்வி. இலவசக் கல்வி என்று வரும்போது அதை கல்வி வவுச்சர் மூலம் கொடுக்கலாம். யாருக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்குவது என்பதை பொருளாதார நிலைப்படி தேர்ந்தெடுத்து - இங்கு ஜாதி அவ்வளவு முக்கியமில்லை - அவர்கள் எந்தக் கல்வி நிலையத்தில் படித்தாலும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி மான்யம் வழங்கலாம்.

இப்பொழுது மனித வள அமைச்சகம் எடுத்திருக்கும் முடிவால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வெகுவாக பாதிக்கப்படுவர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் அவசரமாகப் போராடவேண்டிய மசோதா இதுதான். உயர்கல்வி நிலையங்கள் மீதான மசோதா மீது ஒரு கண்ணை வைத்திருக்கும் அதே நேரத்தில் தொடக்கக் கல்வியினை விட்டுவிடக்கூடாது.

14 comments:

  1. //நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் அவசரமாகப் போராடவேண்டிய மசோதா இதுதான். உயர்கல்வி நிலையங்கள் மீதான மசோதா மீது ஒரு கண்ணை வைத்திருக்கும் அதே நேரத்தில் தொடக்கக் கல்வியினை விட்டுவிடக்கூடாது.//

    உண்மை!
    என்ன நடக்குதுன்னு தெரியல. ஒரு வேளை அர்ஜூன் சின்னத மறைக்க அதைவிடபெரிய பிரச்சனைய கையில் எடுக்கிறாரோ?

    ReplyDelete
  2. //"'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு" //

    உண்மை தான் பத்ரி,
    இந்த அரசு ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாமல் அல்லது எடுக்காமல் பிரச்சனையை மேலும் மேலும் வளர்த்து கொண்டு இருக்கின்றார்கள். இது யாருக்குமே நல்லது இல்லை. அனைவரும் இதில் ஒத்துழைத்து வருங்கால சங்கதியற்கு ஒரு சிறந்த எதிர்க்காலத்தை உருவாக்க வேண்டும்.(முக்கியமாக பத்திரிக்கைகள்)

    ReplyDelete
  3. இது முக்கியமான பதிவு. உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அவசியம். ஆனால் அந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழிவகைகள் செய்ய வேண்டும். அதற்குத் தொடக்கப் பள்ளிகளிலும் இந்த ஒதுக்கீடு மிகவும் அவசியமான இன்றியமையாத ஒன்று. இலவசக் கல்வி என்பது இரண்டாவதாக ஆனால் தனியாக யோசிக்கப் படவேண்டிய விதயம்.

    ReplyDelete
  4. Excellent one! But I oppose OOmai யில் பேச ஒரு தலைப்பு ரெடி! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. அனைவருமே உண்மையான பிரச்சினைகளை நிதானமாக சமூக பிரஞ்னையுடன் அணுகாமல், தங்கள் அரசியல் ஆதாயம், one upman ship, மீடியா கவரேஜ் என்று தனி ஆவர்த்தனம் போட்டு கச்சேரியைக் கெடுக்கிறார்கள்.
    Everybody should be selfish for an efficient economy, but not in social challenges.

    ReplyDelete
  6. 1. Every Indian citizen should have access to study upto higher secondary education (+12). None interested should be denied in government institutions. Private insititutions should have a fair admission policy and should not deny anyone based on class differences.

    2. If a student has at least one living parent who is a graduate, then he/she should not be considered backward. It is even better if we can even make it specific and require that mother should be a graduate. There is no scientific evidence to prove that backwardness is genetic. If it were so, then it could not corrected in few generations.

    3. There should be no reservations at post-graduate or doctoral level. If a graduate thinks he is still backward, then there is something wrong with our under-graduate curriculum.

    Ultimately, the goal of our country to should give access to higher education all qualified students, who meet the minimum desired qualifications.

    IMO, the fundamental problem with reservations in TN, is not identifying the creamy layer. If we identify them and deny them this undeserved privilege, many really backward students will be benefited.

    Another greater problem in our society is marriages arranged by parents. Men and women in India should learn to find their spouses by themselves. This will end the perpetuation of caste system.

    My 2c.

    peyarili

    ReplyDelete
  7. Mr.Peyarili
    Please tell your views to your friends who think that the present reservation system is the best.You may be branded as a supporter of brahminism or upper caste domination.They want reservation at all levels at all times in all
    circumstances.

    "There should be no reservations at post-graduate or doctoral level. If a graduate thinks he is still backward, then there is something wrong with our under-graduate curriculum."
    Tell this to all those who think
    that higher education has been
    monopolised by upper castes.

    ReplyDelete
  8. Hi Badri

    I agree with many observation that you made in your insightful post

    It’s great to see an IITians like you write with such degree of social consciousness

    However you have made several sweeping generalizations .I am absolutely flabbergasted how you could make such dangerous generalizations

    Can you give me a specific instance where an affluent student belonging to so-called OBC community has been denied admission in any private schools?

    You are saying that refusal of affluent parents to let their students study with Students belonging to deprived sections smacks of “Upper Caste “mentality

    Badri I totally disagree.This is not an upper caste syndrome but a product of sick syndrome in India Society called “Class conscious Snobbery”.And it’s my experience
    is that though in a way connected to caste to dismiss it as “Upper Caste” phenomenon is gross injustice and overlooking the rampant caste supremacy that is overwhelmingly present in the intermediate or “OBC” caste

    Do you think Dayanidhi Maran/Priya Maran or Anbumani /Sowmya Ramdoss will send their wards to Nungambakkam Corporation School OR TO Don Bosco school if Don Bosco gives 30 % seats to deprived section of the society (say from Egmore Slums) they will the first to pack off their wards to boarding schools in USA

    I come from an economically very modest but so-called upper caste family.My father send me to a fairly okay private school
    I have faced the brunt of this “class consciousness” from not only rich upper caste students but also from rich backward students too (what an oxymoron-rich backward)

    In my post graduation class,I was ashamed to see the caste vindictiveness of many of my OBC friends towards Dalit students .That was the time caste clashes were daily occurrence in Southern Tamil Nadu

    While fully appreciating and endorsing some of your views on reservation, the point is that caste system will not cease to exist unless some fundamental mindsets are changed

    ReplyDelete
  9. Read the text of 93rd Amendment.It says "their admission to educational institutions including private educational institutions, whether aided or unaided by the State, other than the minority educational institutions referred to in clause (1) of article 30."

    So the govt. can very well issue an
    order using this provision for providing reservations to dalits
    and OBCs in private schools, aided
    or unaided.Why it did not do so.
    And where are the votaries of reservation.How come they have not
    raised this issue at all.This itself is a proof for the govts
    'committment' to providing education to all.No party including
    left will object to this but will
    clamour for reservations in IITs.
    This is hypocrisy at its worst.

    ReplyDelete
  10. Prasanna: I have made generalisations in my post. I do not have statistics. In fact in these arguments related to reservation, lack of dependable data makes our arguments weak in most places.

    However, when it comes to admission to schools, particularly the CBSE schools in Chennai, I have reasonable experience to claim that depressed classes - both socially and economically - have difficulties getting into the top schools.

    The application forms that I have seen ask for the following:

    - Caste
    - Monthly income of parents
    - Parents' educational qualification

    I have approximate knowledge of the composition of my daughter's class, by observing the parents when I go to collect my daughter.

    Unfortunately these experiences make me come up with the generalisations I have made in my post. I wish things were far better.

    ReplyDelete
  11. //
    அப்படி இருக்கையில், அர்ஜுன் சிங் அமைச்சகம் ஏன் தனியார் தொடக்கப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை சத்தமின்றி நீக்கியுள்ளனர்? தொடக்கப் பள்ளிகளில் சாதிக்க முடியாததை உயர் கல்வி நிலையங்களில் எப்படி சாதிக்கப்போகிறார்கள்?
    //

    ஞாயமான கேள்வி...

    //
    இந்த எண்ணங்களைத்தான் மனிதவள அமைச்சகம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
    //

    அதை எல்லாம் நமது மனித வழ மைனாரிடி " மேசியா" அர்ஜுன் சிங் சேய்ய மாட்டார், அவர் பேரனுக்கு நேபாள ராஜ குடும்பப் பெண் எடுக்கிறார் என்று செய்தி...!!

    உங்கள் பதிவிற்கு,
    "ஒய்யாரக் கொண்டையாம் உள்ளே பார்தால் ஈறும் பேனும்" - மத்திய அரசு என்ற தலைப்பு ஏற்றதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

    ஒரு suggestion தான்..

    வஜ்ரா ஷங்கர்.

    ReplyDelete
  12. >> சொல்லப்போனால் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பே இருக்காது - apartheid மனத்தை உடைய உயர் சாதியினரைத் தவிர! அவர்கள் மட்டும்தான் தம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் "கீழ் சாதியினர்" குழந்தைகளும் படிக்கிறார்களே என்று வெறியாட்டம் ஆடலாம். தமது பிள்ளைகள் "கெட்ட பழக்கங்களைக்" கற்றுக்கொள்வார்களோ என்று பயப்படலாம்! "அதுதான் அவர்களுக்கென்று கார்பொரேஷன்/பஞ்சாயத்து பள்ளிகள் உள்ளனவே? ஏன் கான்வெண்ட் படிப்பு அவர்களுக்குத் தேவை" என்று எண்ணலாம். >>

    நமது சாதீய அடுக்குமுறையில் ஒவ்வொரு அடுக்கும் மற்ற அடுக்குகளை அமுக்கப் பார்க்கும் கேவலச் சூழலில் இவையெல்லாம் நிகழ்கின்றன. நீங்கள் சொல்வது போல அடிப்படைக் கல்வியை"யும்" கவனிக்க வேண்டும்.

    ஆனால், இதை கவனிக்காமல் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்பது ஜல்லியே. (பத்ரி இப்படிச் சொல்வதாக நான் சொல்லவில்லை - மற்றவர்கள் அப்படிச் சொல்லலாம்).

    இரண்டும் தேவை இப்போதைய சூழலில்.


    >> இந்த எண்ணங்களைத்தான் மனிதவள அமைச்சகம் கடுமையாக எதிர்க்க வேண்டும். >>

    மிக முக்கியமான பதிவு. நன்றி பத்ரி!

    இதுகுறித்து வேறு விவரங்கள் கிடைக்கிறதா எனப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  13. சொல்லப்போனால் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பே இருக்காது - apartheid மனத்தை உடைய உயர் சாதியினரைத் தவிர!

    How about panchayats in tamil nadu where elections could not be held
    for opposition from OBCs.Why is that DMK and DK are not willing to
    take an aggressive stand on that.
    almost all caste clashes in TN and elsewhere are between OBCs and dalits.So blaming upper caste alone is another trick
    by the pro OBC group.But not all dalits are willing to beleive their
    cock and bull stories on upper castes.That is why Ravikumars and
    Chandrabahn Prasads are questioning
    the claims of dravidian movement.
    You cant fool all people at all times.

    ReplyDelete
  14. Badri,

    I have studied in two CBSE schools in madras. I don't think they really care about your caste. I know one specific school in mylapore/royapettah area where my nephew studies all you ahve to do wa pay 10000Rs donation. This was 6-7 years ago.

    These educational institutionsdon't really care as long as the money comes. They are after all commercial institutions... that is the advantage.... they look at making money... whoever has the money gets the product....

    The reaoson why you could have probably seen a higher concentration of one group of caste could have been mainly they are ready to do anything for education.... As a middle-class, they just give higher priority to education than gold/ house.... I have personally seen this where girls in an upper-caste get educated without much of bias between a son & daughter rarely does this happen in other caste...

    Why should government interfere in private education??????

    Having lived in madras all these years, one thing I can say where caste plays pre-dominant is only the temples...

    But I am fundamentally opposed to government introducing any law in private schools, even a slight government interference as we have seen can only lead to destruction & total chaos.

    Infact, Software industry in india booms only coz there is no government interference, if they start that industry will die to like the rest of the industry. Precisely the reaosn why U.S is as successful as it while russia is in its current state.

    Government should establish more kendraya vidyalaya's.....

    Sachita

    ReplyDelete