கருணாநிதி தமிழகத்தின் சமூக நீதிக் காவலர்தான். ஆனால் எப்பொழுது தனது அலம்பல்களை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் உணரவேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை கருணாநிதி அரசு ஆணையாகக் கொண்டுவந்தபோது மிகச்சிலரே அதனை எதிர்த்திருப்பார்கள். உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் - அல்லது அந்தச் சாதியின் உட்பிரிவுகள் சில - மட்டுமே அர்ச்சகர்களாக இருக்கும் பெரும்பான்மைக் கோயில்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான ஒரு நிகழ்வு.
அதற்கடுத்து பழனிவேல்ராஜன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்த கருணாநிதி "இனி வி.ஐ.பி.க்களுக்கு ஆலயங்களில் இந்தப் பட்டு, பரிவட்டங்கள் கட்டுகின்ற மரியாதை கூடாது என்பதை - பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்கள் நினைவாக நாம் தடுத்து நிறுத்துவோம். அவைகளை இனி அனுமதிக்கமாட்டோம் என்பதை ஒரு உறுதியாக, பழனிவேல்ராஜன் அவர்கள் பெயரால் எடுத்துக்கொள்வோம்" என்றார்.
பழனிவேல்ராஜன் நினைவாக எவ்வளவோ செய்யலாம். ஒரு பள்ளிக்கூடம் கட்டலாம். கொஞ்சம் சாலைகள் அமைக்கலாம். தண்ணீர் வசதிகள் செய்து தரலாம். இல்லை, சமூக நீதியைத்தான் நிலைநாட்ட வேண்டுமென்றால் பழனிவேல்ராஜன் நினைவாக பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு உள்ளாட்சித் தேர்தல்களை சுமுகமாக நடத்தலாம்.
பரிவட்டம்?
தான் சொன்னதை ஓர் அரசாணையாகச் சொன்னாரா அல்லது சும்மா, ஏதாவது ஒன்றைச் சொல்லித்தான் வைப்போமே என்று மேடைப்பேச்சு வாக்குறுதியாகச் சொன்னாரா தெரியவில்லை.
வி.ஐ.பி என்று இவர் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.
பொதுவாக உபயகாரர்களுக்கு எதிர்மரியாதையாகப் பரிவட்டம் கட்டித்தான் நான் பார்த்திருக்கிறேன். வைணவக் கோயில்களில், மண்டகப்படிக்காரருக்கு மாலை அணிவித்து, உற்சவரின் பட்டுத்துணியை தலையில் கட்டி, மேள நாகசுரம் முழங்க, சடாரியைத் தலையிலும் தோள்களிலும் சார்த்தி, பழம், பூ பிரசாதங்கள் தருவது வழக்கம். இந்த உபயதாரர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். கடவுளுக்குத் தான் செய்யும் (ஒருசில) மரியாதைகளுக்குப் பிரதியாக உபயதாரர் பெறுவதுதான் பரிவட்டம். இதில் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது.
இதில் என்ன பிரச்னையைக் கண்டார் சுயமரியாதைக்காரர் கருணாநிதி?
கருணாநிதி தன் பெயரில் அர்ச்சனை செய்து ஒரு நாள் பிரசாதம் தருவதாகக் கட்டளை எழுதிவைத்தால் அவருக்கும் உண்டு பரிவட்ட மரியாதை.
எதில் கைவைக்க வேண்டும், எதில் தள்ளியிருக்க வேண்டும் என்று 83 வயதாகும் முதியவருக்கு இன்னமும் தெரியவில்லை.
இப்படி அபத்தமானவற்றை அவர் சொல்லும்போது வாய்பொத்தி நிற்கும் காங்கிரஸ்காரர்கள் நிலைதான் அய்யோ பாவம். எத்தனை முறை பரிவட்ட மரியாதையைப் பெற்றிருப்பர் மூப்பனாரும் அவரது மகன் வாசனும் மற்ற பிற காங்கிரஸ்காரர்களும்?
அடுத்து என்ன? இனி கோயில்களில் இடமிருந்து வலமாகத்தான் பிரதட்சிணம் செய்யவேண்டும் என்று அரசாணையா?
Honourable Chief Minister! Quit while you are ahead!
பொறுப்பாக்குதல்
1 hour ago
இதுதான் கருணாநிதி அவர்களிடம் உள்ள ஒரு பிரச்சினை. எப்போது எதை பேசுவது என்று புரியாமல் தன் குரலில் தானே மயக்கம் கொண்டு எதையாவது சொல்ல வேண்டுமே என்று கூறிவிடுவார்.
ReplyDeleteபரிவட்டம் கட்டுவதை காலஞ்சென்ற பழனிவேல்ராஜன் அவர்கள் எதிர்த்தாரா? அவரே பரிவட்டம் வாங்குவதற்குத்தானே மதுரை நோக்கிப் புறப்பட்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பரிவட்டம் கட்டுவதை காலஞ்சென்ற பழனிவேல்ராஜன் அவர்கள் எதிர்த்தாரா? //
ReplyDeleteஅண்ணாதுரை என்னை தான் தன்னோட வாரிசுன்னு சொன்னாருன்னு கதை விட்ட மாதிரி தான்.
அடுத்து என்ன? இனி கோயில்களில் இடமிருந்து வலமாகத்தான் பிரதட்சிணம் செய்யவேண்டும் என்று அரசாணையா?
ReplyDeleteNo 50% of the space in temples
will be reserved for OBCs.:-)
இது குறித்து ஒரு பதிவு
ReplyDeleteடோண்டு சார், அப்படியே அய்யாவை அடிக்கப் போன அம்மா ஆட்களையும் கண்டிச்சிடுங்க. அப்பத்தானே உங்களின் நடுநிலைமையைக் காண்பிக்க முடியும்.
ReplyDeleteபல ஊர்களில் கோயில் திருவிழாக்களில் பரிவட்டம் தொடர்பான பிரச்சினைகளே வெட்டு-குத்து வன்முறையாக மாறுகிறது.... எனவே பரிவட்டம் தொடர்பான அரசின் முடிவு சரி தான்....
ReplyDelete////அவரே பரிவட்டம் வாங்குவதற்குத்தானே மதுரை நோக்கிப் புறப்பட்டார்////
டோண்டு சார்....
காலஞ்சென்றவர்களை விமர்சிப்பது நாகரிகமல்ல.... அதுவும் சமீபத்தில் எதிர்பாரா மரணம் அடைந்த பி.டி.ஆர் அவர்களை உங்கள் வார்த்தைகளில் நைசாக நக்கலடிக்கிறீர்கள்... உங்கள் வயதுக்கும், அனுபவத்துக்கும் இது அழகா?
Another பகுத்தறிவு mumbo jumbo!
ReplyDeleteவஜ்ரா ஷங்கர்.
I am not familiar with the practice and therefore cannot say if this Govt. order interferes with a traditional and fairly innocuous religious practice. If it does, I think it deserves to be opposed strongly (just as I thought that the previous Govt.’s order to ban animal sacrifice at temples was totally ill advised and deserved to be condemned).
ReplyDeleteAt the same time, I am afraid you may be over reacting to what was said at the assembly. Vikatan reports MK’s speech verbatim, and I quote the relevant passage below:
//இங்கு ம.தி.மு.க.சார்பில் உரையாற்றிய கண்ணப்பன் குறிப்பிட்டதைப்போல பக்தர்களிடத்திலே பாசம் உடையவராக இருந்தாலும், ஆலயங்களிடத்திலே அதிக நம்பிக்கை உடையவராக இருந்தாலும் மதுரை மீனாட்சி அம்மனை ஒரு நாளைக்கு நூறு தடவை பெயர் சொல்லி அழைத்துக்கொண்டிருந்தவர். கோவில்களில் சமத்துவம்-பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு இருக்கக் கூடாது அந்தஸ்து உடையவர், அந்தஸ்து குறைந்தவர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்பதிலே அக்கறை கொண்ட காரணத்தால் தான் கோவில்களுக்கு வருகிறவர்களில் வி.ஐ.பி.க்கள் என்ற முறையில் பட்டு பரிவட்டங்கள் கட்டக் கூடாது என்ற அந்தக் கருத்தை ஆய்ந்து, இந்த அரசுக்கு அப்போது வழங்கினார்.//
I don’t see any reference to caste here. I think he is merely trying to do away with special privileges accorded to any one because of special status. Even if that status happens to come as the result being the ubayathaarar. However, notice he says nothing about ubayathaarars even. He seems to be talking about VIP visitors only and we know who they are – politicians, top-level bureaucrats, actors and the likes.
//எதில் கைவைக்க வேண்டும், எதில் தள்ளியிருக்க வேண்டும் என்று 83 வயதாகும் முதியவருக்கு இன்னமும் தெரியவில்லை.//
ReplyDeleteஉண்மை. வாக்களித்த மக்கள், வருத்தபடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. சென்ற ஆட்சியின் தான் தோன்றி செயல்களுக்கும் இதுக்கும் பெரிய வித்யாசம் இருப்பதாக தெரியவில்லை.
அவருக்கு வயசாகி வருகிறது..
ReplyDeleteஎங்கே பெரியாரை மதிக்கும் கூட்டம் நாளை மதிக்காமல் போய் விடுமோ என்று அஞ்சித்தான்.. இப்படி எல்லாம் அனாவசிய.. நாத்திகத்தனத்தை வெளிப்படுத்துவதாக நினைக்கிறேன்.
மஞ்சள் துண்டு வீசிவிட்டு சீக்கரம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்வார் பாருங்கள்.
//வி.ஐ.பி என்று இவர் யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.//
ReplyDeleteமாயவரத்தான் பதிவில் இட்ட பின்னூட்டத்தையே இங்கும் இடுகின்றேன்....
எனுங்க, பரிவட்டம் மகாராணியாருக்கு கிடைக்க கூடாது என்பதற்காக இந்த சட்டமா.
மதத்திம் மேல் நம்பிக்கை இல்லனு சொல்லிட்டு அதையே நொண்டிகிட்டு இருக்காங்களே அது ஏனுங்க!
பரிவட்டம் கட்டுவதால் எவ்வள்வு சாதி கலவரம் உருவாகின்றது என்பது மாயவரத்தானுக்கு தெரியாதா? என யாரும் இதுவரை பின்னூட்டம் இடவில்லையே. என்னாங்க ஆச்சு, நம்ம மக்களுக்கு????????????
These ppl will never never change.
இது என்னைப் பொறுத்தவரை பெரிய விதயமில்லை. பட்டு பரிவட்டம் என்பது feudal hangover. இதனால் ஆண்டவனுக்கோ சமயத்திற்கோ எந்த குறையுமில்லை.சொல்வதுபோல் யார் பெரியவன் என்று சாதி சண்டை களுக்குத் தான் வித்திடுகிறது.
ReplyDeleteதவிர இன்னொரு வெங்கட் சொல்லியிருப்பது போல உபயதாரர்கள் விலக்கப் படுவார்களா எனவும் தெரியாமல் குறை காண முடியாது.
பரிவட்டத்தைத் தவிர முக்கியமானவர்களுக்கு சாமிசிலையிலிருந்து எடுத்துப் போடப்படும் மாலைகள் கூட தடை செய்யப் படவேண்டும். நாம் ஆசையாக வாங்கி போட்ட மாலையை நமக்கு எதிரிலேயே எடுத்து, கோவில் பணியாளருடன் வந்த மனிதருக்கு போடும்போது மனது வலிக்கிறது. அது மேலும் அவர் அம்மாலையை அலட்சியமாக காரின் முன்னால் போடும்போது இன்னும் அதிகரிக்கிறது.
1) >> பல ஊர்களில் கோயில் திருவிழாக்களில் பரிவட்டம் தொடர்பான பிரச்சினைகளே வெட்டு-குத்து வன்முறையாக மாறுகிறது.... எனவே பரிவட்டம் தொடர்பான அரசின் முடிவு சரி தான்.... >>
ReplyDelete2) >> கோவில்களில் சமத்துவம்-பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு இருக்கக் கூடாது அந்தஸ்து உடையவர், அந்தஸ்து குறைந்தவர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்பதிலே அக்கறை கொண்ட காரணத்தால் தான் கோவில்களுக்கு வருகிறவர்களில் வி.ஐ.பி.க்கள் என்ற முறையில் பட்டு பரிவட்டங்கள் கட்டக் கூடாது என்ற அந்தக் கருத்தை ஆய்ந்து, இந்த அரசுக்கு அப்போது வழங்கினார்.>>
இந்த இரண்டோடும் நான் உடன்படுகிறேன்.
'பரிவட்டம்' என்பது உபயதாரர்களுக்கு செய்யும்போது கோவில்களின் சாதாரண நடைமுறையாக இருக்கும்வரையில் சரி. ஆனால், முக்கிய விழாக்களில் ஊர்ப் பணக்காரர்களில் ஒருவருக்கு மட்டும் பரிவட்டம் கட்டுவது, வர்ணாஸ்ரம மேட்டுக்குடித்தனத்தைத்தான் வளர்க்கும்.
இது பற்றி ஒரு ஜமீன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்த பழனிவேல்ராஜனே கண்டித்திருக்கிறார்.
எனவே இது சரியான முடிவே.
இந்துத்துவவாதிகள் இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் காட்டமுடியாத ஆத்திரத்தை - இதிலே சேர்த்துக் காட்டி தங்கள் கோபத்தைத் தணித்துக் கொள்கிறார்கள் போலும்! :)
'ஆண்டவன் முன் அனைவரும் சமம்'...இதில் தனிப்பட்ட மனிதனுக்கு மட்டும் மரியாதை என்பது தேவை இல்லை...
ReplyDeleteஎன்னை பொருத்த வரை கோவில்களில் சிறப்பு தரிசனம் Vs இலவச தரிசனம் என்ற முறையை கூட ஒழிக்க சட்டம் கொண்டு வரலாம்.
தேவையில்லாத வேலை என்று தான் நானும் நினைக்கிறேன்.ஆடு கோழி பலி எப்படி அவர்-அவர் விருப்பமோ அதே போல தானே இதுவும் ?
ReplyDeleteஏன் தேவையில்லாமல் ஒரு மத விவகாரத்தில் தலையிட வேண்டும்?
//வி.ஐ.பி.க்கள் என்ற முறையில் பட்டு பரிவட்டங்கள் கட்டக் கூடாது என்ற அந்தக் கருத்தை ஆய்ந்து,//
ReplyDeleteஇதுதான் முதல்வர் சொல்லியிருக்கிறார் என்றால்..
(எதிர்ப்பவர்களுக்காக) 'வழக்கப்படி' நடக்கும் பரிவட்ட முறைக்கு எந்த மாற்றமும் இல்லை
(ஏற்பவர்களுக்காக) 'வழக்கப்படி' நடக்கும் பரிவட்ட முறைக்கு எந்த மாற்றமும் இல்லை
>>>
ReplyDeleteஅடுத்து என்ன? இனி கோயில்களில் இடமிருந்து வலமாகத்தான் பிரதட்சிணம் செய்யவேண்டும் என்று அரசாணையா?
=================
இப்பவே இப்படித்தானே
செய்கிறோம். :-).
அருள்
83 வயது கிழவரை தாக்க பலர் முற்பட்டதை எதிர்த்தும் பத்ரி உணர்ச்சிவசப்படுவாரா? ;-)
ReplyDelete>> அடுத்து என்ன? இனி கோயில்களில் இடமிருந்து வலமாகத்தான் பிரதட்சிணம் செய்யவேண்டும் என்று அரசாணையா? >>
ReplyDeleteBadri! Arul is probably right! no?
Was that a 'faux pas' or a 'freudian slip'! ;)
:)
Slips aside, my point was that the Chief Minister should not be announcing needless changes when it does not affect people at large, just to please some departing soul.
ReplyDeleteIf he strongly feels that a system must be changed, he must provide the circumstances under which an existing system causes problems, why one cannot control the trouble while the system continues and why dismantling of it is necessary.
Further, the announcement should be complete and should not provide scope for misinterpretation.
As of now, the information I have may be partial. I will wait for clarification on whether 'parivattam' is to be completely abolished, or abolished only for "VIPs", before commenting further.
// my point was that the Chief Minister should not be announcing needless changes when it does not affect people at large, just to please some departing soul.//
ReplyDeletePlease help me to see the logic of your point here. How do you reckon it is a needless change and why should it affect “people at large” before it merits change? The sentiment that, somehow the Govt., should be concerned with more pressing issues that concerns people at large rather than trivial ones that does not affect the same people at large, is perhaps one of the worst, and unfortunately persistent arguments that one has the misfortune of hearing in political discourses.
I don’t know if it was announced to please a departing soul, and I couldn’t care less. I see it just as an occasion to bring about a small change. And if that small change results in abolishing a silly practice (parivattam to VIPs only) that neither offends religious practices nor has any deep traditional/cultural roots to begin with, I say I welcome it.
Yetanothervenkat: It is my view that the Government should concern itself only with important things. Not needless or meaningless, small little changes. If that is at variance with your views, I cannot convince you. You are free to hold your views. I as CEO of my company concern myself only with the most important things that affects my company, not every silly little thing. I expect the CEO of my state to do the same. What you may consider as "silly practice" may not be considered as the same by others. If it pleases a living soul (namely you) in addition to a departing soul, so be it. It does not please me.
ReplyDeleteஇங்கு ம.தி.மு.க.சார்பில் உரையாற்றிய கண்ணப்பன் குறிப்பிட்டதிற்கு தான் கருணாநிதி பதில் அளித்தரே தவிர உங்கள் கருத்தை போல 83 வயதில் அவருக்கு தெரியாமல் இருக்குமா, பரிவட்டம் கட்டுவதில் உள்ள பிரச்சனைகள் இன்னும் கிராமத்தில் உள்ளது. இதை உங்கள் Blogger Termக்கு தெரியுமா.
ReplyDelete"எதில் கைவைக்க வேண்டும், எதில் தள்ளியிருக்க வேண்டும் என்று 83 வயதாகும் முதியவருக்கு இன்னமும் தெரியவில்லை."
ReplyDeleteWe should give him some PROZAC ;
"இதுதான் கருணாநிதி அவர்களிடம் உள்ள ஒரு பிரச்சினை"
Is that all , No, wait and see ...There is a SOAP OPERA yet to come
" I as CEO of my company concern myself only with the most important things that affects my company, not every silly little thing"
Well said PAL.This guy doesn't know what is his JOB PROFILE , In 1970's his main agenda was developing TAMIL , as if TAMIL was admitted in ICU ward. Now it is one of the important agenda to hurt people who believe in hinduism,I won't be surprised if he wins next election by telling this as a milestone in the road map of state development.
I guess Nagai Siva is rising a valid point here in this blog and also I have read his view few days before in some other blog.
with best
CT
@@@உங்கள் வயதுக்கும், அனுபவத்துக்கும் இது அழகா? @@@
ReplyDeleteபழனிவேல்ராஜன் தேர்தல் நேரத்தில், அவரைப் பற்றிய ஒரு உண்மைச்சம்பத்தை எழுதிய ஒரு வாரப்பத்திரிகை நி ருபரை, அவருடைய சகாக்களை வைத்து அடித்து துவம்சம் செய்தது மட்டும் அவரது வயதிற்கான ந ன்னடத்தையா??
இந்த சட்டத்துல என்ன தப்பு கண்டீங்க? பரம்பரை விரோதம்(எல்லாம் ஜெயா சொன்னதுதான்) மனசுல இரு ந்தா, கருணா நிதி பண்றதெல்லாம் தப்பா தான் தெரியும்! இ ந்த நொள்ள குத்துக்கு ஆயிரத்தெட்டு ஆமாஞ்சாமி பின்னூட்டம் வெற. தூங்கறவன எழுப்பலாம். தூங்கற மாதிரி நடிக்கறவன எழுப்ப முடியுமா? இல்ல, உங்களத்தான் திருத்த முடியுமா?
ReplyDelete"காலஞ்சென்றவர்களை விமர்சிப்பது நாகரிகமல்ல.... அதுவும் சமீபத்தில் எதிர்பாரா மரணம் அடைந்த பி.டி.ஆர் அவர்களை உங்கள் வார்த்தைகளில் நைசாக நக்கலடிக்கிறீர்கள்... உங்கள் வயதுக்கும், அனுபவத்துக்கும் இது அழகா?"
ReplyDeleteகண்டிப்பாக நக்கல் எல்லாம் இல்லை. காலம் சென்றவரின் பெயரை இழுத்தது கருணாநிதி அவர்களே. அந்த சூழ்நிலையில் நான் கூறியது ஏற்புடையதே. அவர் கோவிலுக்கு செல்லாமல் இருந்திருப்பாரா, பரிவட்டம் வாங்காமல் இருந்திருப்பாரா? என்ன பேச்சு ஐயா பேசுகிறீர்கள்? இதில் நக்கல் எங்கே வந்தது?
பகுத்தறிவுவாதிகள் என்றுதானே அவர்கள் கூறிக் கொள்கிறார்கள்? அவர்களிடம் பகுத்தறிவாகத்தான் கேள்விகள் வைக்க முடியும்.
சொல்லட்டுமே பதில், அவர்களோ, அவர்களது கொ.ப.செ.க்களோ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கோவில்களில் பரிவட்டமே கட்டக்கூடாது என்று முதலமைச்ச6ர் சொன்னதாகத் தெரியவில்லை.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே பரிவட்டம் கட்டக்கூடாது என்று ஆணையிட்டதாகத்தெரிகிறது.விஐபி என்று யாரைக்குறிப்பிடுகிறார் என்ற விளக்கம் இல்லை.அது யார் வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.
ReplyDeleteவிஐபி அல்லாதவர்கள் இப்பொழுதும் அவர் கூற்றுப்படி பரிவட்டம் கட்டிக் கொள்ளலாம்.அமைச்சர் சொன்ன விஐபிக்கள் கூட தாம் விஐபி இல்லை என்று அர்ச்சகரிடம் சொல்லி பரிவட்டம் கட்டிக் கொள்ளலாமா6
என்று தெரியவில்லை.
ஒரு அர்ச்சகர் தெரியாத்தனமாக அமைச்சர் சொல்லும் விஐபிக்கு அடையாளம் தெரியாமல் சாதாரண ஆள் என்று நினைத்து பரிவட்டம் கட்டிவிட்டால் அவருக்கு தண்டனை என்ன என்று ஆணையில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இந்த ஆணை சட்ட சபையில் சட்டமாக நிறைவேற்றப்படுமா அல்லது அமைச்சரின் அடாவடி ஆணையாகவே இருந்துவிடுமா என்றும் தெரியவில்லை.
வி இ பி ட்ரெஅட்மென்ட் என்பது பரிவட்டம் கட்டுவது மட்டும் அல்ல சார்.
ReplyDeleteபூரன கும்பம் கூடதன்....சமிய தனக்கக தெருவுக்கு கொன்டுவந்தவங யாரூ..
கலைக்னரா...அவாதனெய்....அதுனலத இவரு இப்படி...இடெல்லம் அரசியல சகஜம் சார்
There is some new information in today's edition of Dinamalar on the issue.
ReplyDeletehttp://www.dinamalar.com/2006may29/general_tn12.asp
The article claims that this new ruling is likely to save several crores of rupees. Most importantly it will put an end to illegitimate claims in the name of parivattams.
//The article claims that this new ruling is likely to save several crores of rupees. Most importantly it will put an end to illegitimate claims in the name of parivattams//
ReplyDeleteThis pat on shoulder, coming from Dinamalar, certainly indicates that it is not a silly matter.
CT....யாருங்க நீங்க, நம்ம பதிவு வரவே இல்லை. கொஞ்சம் வந்து எட்டி பாத்துடு போங்க.
ReplyDeleteAnyway thanx for the comments