Saturday, May 13, 2006

முதல் கையெழுத்து[கள்]

எந்த உத்தரவில் முதல் கையெழுத்து என்று சிலர் கேலி செய்தனர். மூன்று உத்தரவுகளில். இன்று பதவியேற்றதும் நேரு அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் கீழ்க்கண்ட உத்தரவுகளில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார்.

1. அடுத்த மாதம் முதல் கிலோ அரிசி 2 ரூபாய், ரேஷன் கடைகளில். இதற்காக அதிகம் ஆகும் செலவு ஆண்டொன்றுக்கு ரூ. 500 கோடி என்று மீண்டும் சொல்கிறார் கலைஞர். இந்த வருடம் முடிந்து அடுத்த வருட வரவு செலவுக் கணக்கைக் காட்டும்போது மொத்த மான்யச் செலவு என்ன என்று பார்ப்போம்.

2. விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட கடன் ரத்து. திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி சிறிய, நடுத்தர விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்ட கூட்டுறவுக் கடன்களை - கிட்டத்தட்ட ரூ. 6,400 கோடி - முழுவதுமாக ரத்து செய்துள்ளார் கருணாநிதி.

3. காமராஜர் பிறந்த ஜூலை மாதம் முதல் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் இரண்டுமுறை முட்டை வழங்க உத்தரவு. இதனால் எவ்வளவு ஆண்டுக்கு அதிக செலவாகும் என்று தெரியவில்லை.
என்னுடைய கணிப்பு: சத்துணவுத் திட்டத்தில் வாங்கப்படும் முட்டைகள் வாரம் ஒன்றுக்கு: 75 லட்சம். இப்பொழுது இன்னமும் 75 லட்சம் அதிகமாக வாங்கப்படும். முட்டை விலை மேலும் கீழுமாகப் போனாலும் அரசு ஈடுபட்டால் ஒரு குறிப்பிட்ட விலை கொடுத்துத்தான் வாங்குவார்கள். நான்கு வருடங்களுக்கு முன் கொள்முதல் விலை ரூ. 1.15 முட்டைக்கு என்று இருந்தது. இப்பொழுது சரியாக என்ன விலை என்று தெரியவில்லை. ரூ. 1.30 என்று வைத்துக்கொள்வோம். 75 லட்சம் * 52 வாரங்கள் * ரூ. 1.30 = ரூ. 50.7 கோடி. எனவே அதிகம் இல்லை.

தேர்தல் அறிக்கையில் மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.

தொடர்ந்து கண்காணிப்போம்.

10 comments:

 1. கருணாநிதி அரசு கஜானாவை காலிபண்ணத் தொடங்கிவிட்டார்! இளிச்சவாயர்கள் இருக்கிறோமே, வரி விதிப்பை உயர்த்தி பிடுங்கிக்கொ ள்ளவேண்டியதுதான்!

  ReplyDelete
 2. இப்போது கையெழுத்திட்டவை மூன்றும் சரியாகத்தான் இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கையெழுத்திடாமல் இருக்கும்வரை சரி.
  ஆனால் அரிசிமானியக் கணக்கு இடிக்கிறதுதான். பார்ப்போம் ஒருவருடம் கழித்து என்ன சொல்கிறாரென்று.

  ReplyDelete
 3. திருக்குறள் மாதிரி சுருக்கமா சொல்லவந்ததை அழகா சொல்லிட்டீங்க பத்ரி. கலைஞர் சொன்னதை செய்வோம்; செய்றதை சொல்வோம்னு சொல்றது போல செய்றாரு. ஆனா அதனால பின்னாடி நாம தான் கஷ்டப்படணும்ன்னு தோணுது. ஆனா இந்த 2 ரூபா அரிசியினாலும் மத்த இலவசங்களாலும் தமிழக மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்தா (??) சரி.

  ReplyDelete
 4. நாகு அண்ணா,

  கொடுத்தாலும் ஏசுறேள். கொடுக்காட்டியும் ஏசுறேள்.
  சித்த நாழி அடங்குங்கோண்ணா.

  கஜானா காலியாச்சுன்னா ஜெ'கிட்ட கடன் வாங்கி சமாளிச்சிட்டா போச்சி! என்ன நாஞ் சொல்றது? ;-)

  ReplyDelete
 5. "Bird Flu" காலத்தில முட்டை கொடுத்து கோழிபண்ணையாளர்களின் நட்டத்தில் கொஞ்சம் சரிசெய்துள்ளார். பாராட்டுக்கள்.
  கொசுறு:- முட்டையை ( கோழியையும்) நன்றாக வேகவைத்தால் ஒரு Flu ம் வராது.

  ReplyDelete
 6. கலைஞர் சொன்னதை செய்வோம்; செய்றதை சொல்வோம்னு சொல்றது போல செய்றாரு.இன்று தானே தொடக்கம்.இன்னும் நிறைய செய்வார்.எதிர்பார்ப்போம்.
  அன்புடன்
  துபாய் ராஜா.

  ReplyDelete
 7. Hi Badri
  I think this free bird and concessions are ROAD MAP to DISASTOR OF THE STATE.
  "
  கொடுத்தாலும் ஏசுறேள். கொடுக்காட்டியும் ஏசுறேள்.
  சித்த நாழி அடங்குங்கோண்ணா. "

  As Honorable citizens we should be ashamed of ourselves to encourage this kind of politics.Please do encourage people to earn their own bread.

  I think Now karunanidhi should come to public and address the people of the state about the state of TAMIL NADU.
  Coming to point of 6400 crores + 500 on the expense Account, state will now tax the people , not directly but indirectly.Though people claim that it is their TAX money(Happy to know that people have realised that it is their money), it is not one 100% true.Most of the TAX MONEY comes from the business,Manufacturing Industries( 100 % EOU),Software industries(100 % EOU) etc; In the form of sales tax, excise duty, single point tax, multi point tax, Export tariff , import tariff and so many halla gullas..so now this big chunk of money is not going to come from karunanidhi's S/B account or from SUN TV's current A/C.It is going to come from the Manufacturing Industries and From growing IT industry , scaring these people to death.
  People like kusumban should keep in mind that we are in global economy ,so we should be price competitive. We should attract more business , by that way we should erase the word poverty from the Tamil nadu map.
  I think both politicians and people should think in a constructive and productive manner.
  CUT TO THE CHASE
  This is not good for INDUSTRIAL ECONOMY of the state. After a very long break, Industries in the coimbatore area has reached an export of 1600 crore rupees(Anchor :kerala state budget is 1850 crores).

  With best
  CT

  ReplyDelete
 8. Cooperative loan waiver is Rs. 6,866 crore and not Rs. 6,400 crore as I mentioned.

  இந்தச் செய்தியில் மேலும் பல புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன. இதுதான் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநில அரசு விவசாயக் கூட்டுறவுக் கடன்களை மொத்தமாகத் தள்ளுபடி செய்திருப்பது. இதற்குமுன் அசலில் ஒரு குறிப்பிட்ட அளவோ, அல்லது வட்டி மட்டுமோதாம் தள்ளுபடி செய்யப்பட்டன.

  ஒரு விதத்தில் விவசாயிகளுக்கு இதனால் ஆதாயம் என்றாலும் கூட்டுறவு வங்கிகளின் பாடு திண்டாட்டம். அவர்களுக்கு அரசு உடனடியாக இழந்த பணத்தைத் தரவேண்டும் என்கிறார் அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலர் P.பாலகிருஷ்ணன்.

  அத்துடன், ஏற்கெனவே ஒழுங்காகப் பணம் கட்டியவர்களுக்கும் பணத்தைத் திருப்பித் தரலாமே என்றும் சொல்கிறார் அவர். இப்படியே போனால் என்ன ஆவது?

  ReplyDelete
 9. // அத்துடன், ஏற்கெனவே ஒழுங்காகப் பணம் கட்டியவர்களுக்கும் பணத்தைத் திருப்பித் தரலாமே என்றும் சொல்கிறார் அவர். இப்படியே போனால் என்ன ஆவது? //


  இது தான் நிஜம், ஒழுங்காக தவணைத்தொகையினை வங்கிக்கு செலுத்தியவர்கள், இனிமேல் கட்டுவதற்கு யோசிப்பார்கள் தானே?

  ReplyDelete
 10. மூன்று கோடி முட்டை கொள்முதல் ஆறு கோடியாக உய்ருகிறது என்று முட்டை உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆனந்தப்படுகிறார்...வரி விகிதம் 40%லிருந்து 30%குறைத்தால் அது இலவசமில்லையா?

  ReplyDelete