Monday, May 01, 2006

தயாநிதி மாறன் & conflict of interest

தயாநிதி மாறன் தகவல் தொடர்பு அமைச்சராக அறிவிக்கப்பட்ட சமயத்தில் - 24 மே 2004 அன்று நான் என் பதிவில் இப்படி எழுதியிருந்தேன்.
மிக முக்கியமான துறையான தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொடர்பு அமைச்சரவை கத்துக்குட்டி தயாநிதி மாறனிடம் கொடுக்கப்பட்டுள்ளது - அதுவும் கேபினெட் அந்தஸ்தில். இதுவும் மிக முக்கியமான துறை. அதிலும் convergence போன்ற விஷயங்கள் இந்த ஐந்தாண்டுகளில்தான் நிகழப்போகிறது. வீட்டிற்கான நேரடி செயற்கைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH), அதன்மூலமே இணையத் தொடர்பு ஆகியவையெல்லாம் ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன (எ.கா: DirecTV, Echostar's DishTV). அதைப்போலவே கேபிள் இணைப்பு வழியாக இணையம், தொலைபேசி இணைப்பு ஆகியவை பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ளது (எ.கா: NTL). மொத்தத்தில் ஒரு குழாய் அல்லது செயற்கைக்கோள் டிஷ் மூலம் ஒரு வீட்டிற்கு தொலைபேசி வசதி, இணைய வசதி, தொலைக்காட்சி சானெல்கள் என் எல்லாமும் குவிந்து வருவதே convergence ஆகும். இந்நிலையில் சன் டிவி மற்றும் சுமங்கலி கேபிள் விஷனின் முதலாளி கேபினெட் அமைச்சராக இருப்பது - conflict of interest ஆகுமல்லவா? அதுவும் முன்பின் அனுபவமில்லாத ஒருவர்?

இதுபோன்ற உயர்தர விழுமியங்கள் எதுவும் நம் நாட்டின் அரசியலில் கிடையாதுதான். ஆனாலும் எவ்வளவு காலத்திற்கு நாம் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவது?

18 comments:

  1. தயாநிதி மாறன் வீட்டுக்கு வீடு ஒத்த ரூபா டெலிபோன் கொடுத்தார் (?!) என்றொரு பதிவு போடுங்கள். உடனடியாக ஓடி வந்து பின்னூட்டமிடுவார்கள் ஆஹா ஓஹோவென. இப்போது இதற்கெல்லாம் வாயே திறக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  2. நீங்கள் கணித்தது நடந்தே வருகிறது பத்ரி. திமுகவுக்கும், அதன் தலைமையிலான கூட்டணிக்கும் சன் டிவியும் மாறன் சகோதரர்களும் ஒரு பலவீனமாக மாறி விட்டது இந்தத் தேர்தலின் ஒரு ஆச்சரியமான திருப்பம். எத்தனையோ களங்களைக் கண்ட கலைஞர் இதை சரிவரக் கையாண்டால் தன் அரசியல் வரலாற்றில் இன்னுமொரு மெடலைச் சூடிக் கொள்ளலாம். தயாநிதி மாறன் தன் மீது வாரி இறைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபித்துக் காட்டும் வரை தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியை தூக்கி எறிகிறேன் என்று முன் வந்தாலோ, அவரது கட்சித் தலைமை அப்படி ஒரு முடிவை அறிவித்தாலோ, பெரும்பாலான சேதங்கள் சரி செய்யப்பட்டு விடும்.

    ReplyDelete
  3. அரசியல் சாணக்கியர் என்று அழைத்துக் கொள்ளும் கருணாநிதிக்கு இந்த மாதிரி எண்ணமெல்லாம் வராமலா இருந்திருக்கும்? ஒருவேளை தயாநிதி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து இருந்தால், தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், மத்தியிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டு விடும். அதன்பிறகு டிமாண்ட் செய்து மீண்டும் தயாநிதிக்கு அதே மந்திரி பதவியை தலைகீழாக நின்றாலும் வாங்கித் தரமுடியாது. எனவே தான் அப்படியெல்லாம் அரசியல் தற்கொலை செய்ய அவர்கள் தயாராக இல்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  4. சிவகுமார அண்ணா, ரொம்பத்தான் எதிர்பார்க்கறீங்கண்ணா. ஆதாரமே இல்லாத, தேர்தல் நேரத்து குற்றச்சாட்டுக்கெல்லாம், பதவிய ராஜினாமா பண்றத்துக்கு அவரு ஒண்ணும் முட்டாளில்லை. அப்படியே அவரு ராஜினாமா செய்தாலும், அவரு தப்பு பண்ணியிருக்காரு அதனாலத்தான், பிரதமர் வற்புறுத்தி ராஜினாமா செய்ய வச்சிருக்கார்னு அம்மா, வைகோ, சு.சாமி, தினமலர் சொல்லும். நம்ம மக்களும் அதை நம்பும். ஓட்ட மாத்தி போடும். தானே இரண்டுக்கும் மேல தொகுதியில மனு தாக்கல் செஞ்சி, அதனால மனு நிராகரிக்கப்பட வெச்சிட்டு, என்ன வஞ்சிச்சிட்டாங்க, நீதி தாருங்கள்னு புலம்பிய அம்மாவ ஜெயிக்க வைத்த மக்கள் என்பது அவருக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும்.

    குற்றச்சாட்டுகெல்லாம் ராஜினாமா பண்ண ஆரம்பிச்சா, ஒருத்தர விட மாட்டோமில்ல...

    ReplyDelete
  5. என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க?

    பதவி என்ன லேசுப்பட்டதா? போனா வருமா?

    பத்ரியோட கணிப்புச் சரியாத்தான் இருக்கு.


    ஆமாம், அதென்ன ஒத்தை ரூபா ஃபோன்?
    செல் டு செல்தான் ஒரு ரூபா. செல் டு லேண்ட் லைன் 2 ரூபா.
    அப்புறம் சென்னையிலே வாங்குன சிம் கார்டுக்கு நீங்க வேற மாநிலத்துலே இருந்து
    இன்கமிங் கால் பேசுனாலும் காசு பரபரன்னு கணக்குலே இருந்து போயிருது.

    ReplyDelete
  6. `இதைத்தான் நான் அப்பவே எழுதியிருந்தேனே' என துக்ளக் சோ மாதிரி நீங்கள் சொன்னாலும், தேர்தல் நேரத்தில் பரபரப்பாக்கப்பட்ட செய்தியாகத் தான் பெரும்பான்மை மக்கள் கருதுவார்கள் என்பது என் கணிப்பு.

    அண்ணா திமுகவிற்கு வேண்டுமானால், இது ஒரு ஆயுதமாக (ப்ரம்மாஸ்திரம்?!) இருக்கலாம். மற்றபடி, தேர்தல் முடிவுகளை எந்த விதத்திலும் இது பாதிக்கப் போவதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  7. துளசி மேடம், இவரு வர்றத்துக்கு முன்னாடி, இந்த டெலிபோன் துறையும், VSNLம்,(TATA தொடர்பும் உண்டு) ஆடிய ஆட்டம் உங்களுக்கு தெரியாது மேடம். இவருடைய தடாலடி செயல்பாட்டுல, போட்டியாளர்கள உள்ள விட்டதுல, இப்போ தொலைபேசி பழுதுன்னு காலையில சொன்னா மதியத்திலேயே சரி பண்றதென்ன, பில்லில பிரச்சினைன்னா, உடனே சரி பண்றதென்னன்னு நிறையவே முன்னேற்றம்தான் - என் தம்பி இதைச் சார்ந்தத் துறையில் இருப்பதால் நான் அறிந்தது இது.

    ReplyDelete
  8. இது ஒரு லட்டு மாதிரி வாய்ப்புதானே வைகோவிற்கு - ஆதாரமிருந்தால். அந்த ஆதாரத்தை வெளியே விடட்டும், நிச்சயம் அது பிரம்மாஸ்திரமாய்த்தான் இருக்கும். அதைச் செய்யாமல், இது அது என்றால் அது வெற்றுக் கூச்சலாய்த்தான் இருக்கும்.

    கத்துக்குட்டி என்ற வாதம், மிகச் சிறப்பாக, விரைந்து செயல்படும் முதல் 5 மந்திரிகளில் ஒருவர் என்ற பரவலான பத்திரிக்கைகளின் ( கொஞ்சம் நடுநிலையான ஆங்கிலப் பத்திரிக்கைகளைச் சொல்கிறேன், தினகரன், தினமலர், சன், ஜெயா டிவிக்களை வைத்தல்ல) கணிப்பிற்கப்புறமும், அவரது முயற்சியால் கிடைத்த பலன்களாலும், இப்பொழுது எவராலுமே சொல்லப்படுவதில்லையே...

    ஆயுதமின்றி இருப்பவர், தவறு, தம்மைத் தாமே ஆயுதமின்றி ஆக்கிக்கொண்டவர்கள், இந்த பேப்பர் கத்தியை எடுத்திருக்கிறார்கள். ஒன்றுமில்லாததற்கு, எம்மிடமும் கத்தியிருக்கிறது என சுய தேற்றலுக்கு வேண்டுமானால் உபயோகப்படலாம்.

    ReplyDelete
  9. அப்படீங்களா கிருஷ்ணா. இங்கேயும் டெலிகாம் நாங்க வந்த புதுசுலே இப்படித்தான் ஒரே ஆட்டம்.
    போட்டியே இல்லை பாருங்க. இந்தியாவுக்குப் பேச நிமிஷத்துக்கு $2.25. கிச்சன் டைமர் எடுத்து
    முன்னாலே வச்சுக்கிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்.

    அப்புறம் 12 வருசம் கழிச்சு இன்னொரு ஃபோன் கம்பெனி வந்து, அதை $1.30 ஆக்குச்சு. இப்ப நாலுவருசமா
    ஃபோன்கார்டுங்க வந்து, நிமிசத்துக்கு 24 செண்ட்க்கு கிடைக்குது.

    கிச்சன் டைமரை எடுத்துக் கடாசிட்டேன்:-)))

    ReplyDelete
  10. துளசி மேடம்,

    இன்னிக்கே சரி செய்யறீங்களா, டாடாவுக்கு மாறட்டும்மான்றது நிறைய பேர் பயன்படுத்துன வசனம் மேடம். அந்த டாடா போன்ஸ்னுடைய போட்டிய சமாளிக்கத்தான் இவரு ஒரு ரூபா, ஒரு இந்தியா (VSNL போன் வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்) திட்டத்தைக் கொண்டு வந்தார். இதுல டாடா போன்ஸ் வளர்ச்சி மட்டுப்பட்டது என்பது உண்மை. என் தம்பி வியாபாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது என்பது மிகவும் உண்மை....

    உங்கள மாதிரிதான் மேடம் இந்தியால நிறைய பேரு STD பண்ணும் போது ஆத்திர அவசரமாய் பண்ணிக்கிட்டுந்தாங்க. இப்ப, சமையல் குறிப்புகளைக் கூட STD/ISD ல, பரிமாறிக்கிறாங்க... எம் இணைவி இதைப் படிக்கமாட்டாங்களே...

    ReplyDelete
  11. சத்தியமான உண்மை! தீர்க்கதரிசினம் என்பது இது தானோ? தயாநிதி மாறனின் தற்போதைய பேச்சுக்கள், நடவடிக்கைகள் எல்லாவற்றிளும் ஒரு பதட்டம் தெரிவதை பார்த்தால் அனைத்தும் உண்மை என்று நம்ப வேண்டியுள்ளது. எ.டு. பொறாமை திருப்பி போட்டு படிக்க சொன்னது. மத்திய அமைச்சராக இருப்பதற்கு ஒரு தராதரம் வேண்டாமா?
    அன்புடன்
    நாகை சிவா

    ReplyDelete
  12. அடா அடா, கிருஷ்ணா என்னமா தயாநிதி மாறனுக்கு வக்காலத்து வாங்குறிங்க. உண்மைக்கு புறமான தகவல்களை தயவு செய்து கூறாதீர்க்கள். எப்படி எப்படி, VSNL வைத்திருந்தால் ஒத்த ரூபால பேசலாமா. அண்ணன், VSNL is part of TATA அத தெரியாதா உங்களுக்கு? இந்த ஒத்த ரூபா பத்தி ஏற்கனவே அலசி ஆராய்ந்து இது பல மாநிலங்களில் தொழில் நடத்துபவர்க்களுக்கு தான் வரமாக இருக்கின்றது. நமக்கு அல்வா தான் என்பது உறுதி ஆகிவிட்டது. உண்மையில் மக்கள் பயன் அடைய வேண்டும் என நினைத்தால் அந்த அந்த மாநிலத்துக்குள் பேசினால் ஐம்பது பைசா(1 நிமிடம்) எனத் திட்டம் கொண்டு வாருங்கள்.

    //இன்னிக்கே சரி செய்யறீங்களா, டாடாவுக்கு மாறட்டும்மான்றது நிறைய பேர் பயன்படுத்துன வசனம் மேடம்
    இதுல டாடா போன்ஸ் வளர்ச்சி மட்டுப்பட்டது என்பது உண்மை. என் தம்பி வியாபாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது என்பது மிகவும் உண்மை....
    //

    நான் தொலை தொடர்ப்பு துறையில் இருப்பதால் எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில் டாடா இன்னும் கத்துக்குட்டி தான். ஆந்திராவில் தான் அவர்கள் பவிசு. இங்கு பாரதி, ரிலையன்ஸ் பிறகு தான் டாடா.

    //இப்போ தொலைபேசி பழுதுன்னு காலையில சொன்னா மதியத்திலேயே சரி பண்றதென்ன//

    எந்த ஊருங்கனா நீங்க? நல்ல காமெடி. எனக்கு இவர்க்களை பற்றி நல்லாவே தெரியும். இந்தியாவில் நான்கு வருடம் இவர்க்களுடன் நெருங்கி பழகிய அனுபவம் எனக்கு உண்டு. தயாநிதி அமைச்சர் ஆன பிறகும் தான்.

    இதை பற்றி, ஆதார பூர்வமாக விவாதிக்க நான் ரெடி. நீங்க ரெடியா?
    அன்புடன்,
    நாகை சிவா

    ReplyDelete
  13. well said krishna.....

    சில பேர் கோர்ட் தண்டனை கொடுத்த பிறகும் அப்பீல் பண்ணிட்டு 'நாற்காலி' புடிச்சிருந்ததெல்லாம் தெரியாது!!!!!

    பொடா BJP கொண்டுவந்ததாம்,அதுனால அம்மா மேல தப்பில்லையாம். இவரு ஆட்ச்சிக்கு வந்தா யாரும் யாரை வேணா சுடலாம். சுட்டவருக்கு தண்டனை இல்லை. துப்பாக்கி தயாரித்த நிறுவன சொந்தகாரருக்கு தான் தண்டனை.

    ஜெயிலில் அதிகநாள் இருந்தால் பேர் கிடைச்சுடும்னுதான் வெளிய வர சொன்னாராம். ஏன் மாட்டேன்னு உள்ளே இருந்திருக்க வேண்டியது தானே. பேர் கெடைச்சிருக்கும்ல...

    ReplyDelete
  14. நாகை சிவா,

    முன்னாடி, பூ மூட்டைய பஸ்ஸில ஏத்தி அனுப்பிச்சுட்டு, STD ல, எஸ்4, M3, இப்படி 1 நிமிஷத்துக்குள்ள பேசி முடிச்சிக்கிட்டுருந்த தொழிலதிபர்களெல்லாம் (!!), இப்ப நிம்மதியா இருக்காங்கன்னு தெரியுமா... இது ஒரு சின்ன உதாரணம்தான். STD என்றாலே, பதறிப் போய் அவசரம் அவசரமாய் பேசும் சாமான்யர்கள் இப்பொழுது அந்த தொலைதொடர்பு சாதனத்தை, நல்ல முறையில் உபயோகப்படுத்துவற்கு,
    தொலைதொடர்பில், போட்டியை உருவாக்கி கட்டணத்தை குறைத்தது மிகப் பெரிய காரணம்.

    மாறனுக்கு வக்காலத்து வாங்குவது என் நோக்கமல்ல, அவரின் செயல்பாட்டால் விளைந்த நன்மையை அனுபவிக்கும் சாதாரணன் என்ற முறையில், என் அனுபவத்தை, என்னைச் சுற்றியுள்ளோர் அனுபவத்தை சொல்லியுள்ளேன்.

    தொலைபேசித் துறை இப்பொழுது எவ்வளவோ மேல் என்பது நிறைய பேர் உணர்ந்துள்ள உண்மை.

    //இன்னிக்கே சரி செய்யறீங்களா, டாடாவுக்கு மாறட்டும்மான்றது நிறைய பேர் பயன்படுத்துன வசனம் மேடம்//

    இதில், டாடா என்றிருக்கும் இடத்தில் மற்ற தனியார் தொலைபேசிகளையும் போட்டுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட போட்டியால் காரியம் நடக்கிறது என்பதுதான் நான் சோல்ல வந்தது. நிறைய பேர் லேண்ட் லைனை திருப்பித் தருவது, வேறு தனியாருக்கு மாற்றிக் கொள்வது என்ற முடிவுக்கு வந்தபோது, தன்னிருப்பை காப்பற்றிக் கொள்வதற்காக BSNL முயன்று/மாறிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இன்னும் நிறைய மாற வேண்டும் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன்.

    BSNL என்பதை தவறுதலாய் VSNL என்றெழுதிவிட்டேன், மன்னிக்கவும். (VSNL - TATA ஆடிய ஆட்டம் உங்களுக்கு தெரியாது மேடம் - இந்த வரியை நீங்கள் படிக்கவில்லையோ?)

    ஒரு ரூபாய் போனினால், tataவின் வளர்ச்சி மட்டுப்பட்டதுன்னுதான் சொல்லியுள்ளேன், தமிழகத்தை வைத்து மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் சேர்த்துதான்.

    அது சரி, எட்டா உயரத்துல், 10 ரூபாய்க்கு இருந்ததை 2 ரூபாய்க்கு குறைத்தால், ஏன் எட்டணாவுக்கு கொடுக்கக் கூடாதுன்னு நாம கேட்கிறதாலதான், இவங்க, இலவசமா, கலர் டி.வி. தர்றன், அரிசி தர்றன், சீமைப் பசு தர்றன்னு சொல்றாங்க...

    ReplyDelete
  15. Maran didnot invent the one-india. This is enhancement in this elctronic world. If someone brings new issue into realtime he should consider all the possible Pro's and Con's. Ratan Tata mentioned these on his letter to PM. So Telecom didnot respond for longtime. Tata may come with what happend but in meantime Mr.Maran Instead of facing the truth he accused Vaiko Saying Vaiko needs to get Franchise of Tata so he raised this problem. So it means If vaiko is wrong and Mr.Maran also wrong person in the Politics. I am small businessman in India doing business with 5 cities of India. If anyone feels this is huge revelution, Then Mr.Kamaraj did to this country is nothing.

    ReplyDelete
  16. கிருஷ்ணா!
    நான் கூறியதை நீங்கள் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. உதாரணமாக நாகையில் பூ முட்டையை பஸில் ஏற்றி டில்லிக்கு யாரும் போன் செய்ய போவதில்லை. விலை குறைத்தது போட்டியாளர்க்களால் என்பது உண்மை தான்.அதற்கு மாறன் எனக் கூறியது தான் தவறு. விலை குறைப்பு போன ஆட்சியில் செய்யபட்டது. இவர்க்கள் செய்த்த ஒரே விசயம் 0 வை நீக்கியது தான். இந்த ஒரு ரூபாய் திட்டத்தால் BSNL/MTNL இழக்கு போகும் வருவாய் ரொம்ப அதிகம். மறுபடியும் கூறுகிறேன்
    "இது பல மாநிலங்களில் தொழில் நடத்துபவர்க்களுக்கு தான் வரமாக இருக்கின்றது."
    இன்று பல தொழிலபதிர்க்கள் லட்சத்தில் கட்டிய போன் பில்லை ஆயிரத்தில் கட்டி கொண்டு இருக்கிறார்க்கள்.

    //அது சரி, எட்டா உயரத்துல், 10 ரூபாய்க்கு இருந்ததை 2 ரூபாய்க்கு குறைத்தால், ஏன் எட்டணாவுக்கு கொடுக்கக் கூடாதுன்னு நாம கேட்கிறதாலதான், இவங்க, இலவசமா, கலர் டி.வி. தர்றன், அரிசி தர்றன், சீமைப் பசு தர்றன்னு சொல்றாங்க... //

    அப்புறம் முக்கியமாக எட்டா உயரத்துல இருந்த செல் போன் இன்று இருக்கும் நிலையே வேறு. அது போல் விலையை குறைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. தொழில்நுட்பம் தெரியும் என்பதால் கூறுகிறேன், அந்த அந்த மாநிலத்துக்குள் பேசினால் ஐம்பது பைசா(1 நிமிடம்) என்ற திட்டம் சாத்தியமே, மிகவும் லாபகரமானது கூட.
    அன்புடன்
    நாகை சிவா

    ReplyDelete
  17. சிவா (என் தம்பி பெயரும் அதே!),

    //அந்த டாடா போன்ஸ்னுடைய போட்டிய சமாளிக்கத்தான் இவரு ஒரு ரூபா, ஒரு இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்தார்/ /

    நான் ஒன் இந்தியா திட்டத்தின் சாதக பாதகங்களைப் பற்றியே பேசவில்லையே. STD கட்டணம் குறைந்ததால் வந்த பயனைச் சொன்னேன். இதையே இன்னும் குறைக்கணும், மாநிலத்துக்குள்ள பேசுவதற்கு எட்டணான்னு பண்ணனும்னு சொல்றீங்க. பண்ணா இன்னும் சந்தோஷம்தான்.

    காலத்தின் கட்டாயமாக, டெக்னாலஜியின் வளர்ச்சியினால, இவை தவிர்க்கமுடியாத மாற்றங்கள். இவற்றுக்கு மாறன் பெருமைப் பட்டுக்கொள்ளக் கூடாது என்றால், அத்தகைய ஒரு உயர்ந்த அரசியல்வாதி அவரில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், என்ன செய்வது, அத்தகைய சீரிய அரசியல்வாதிகளை நாம் மதிக்கத் தவறிவிட்டோமே.

    அனானி,

    Maran, might have thought Tit for Tat is the only way VaiKO will understand the issues and so these kind of responses. Until now, Maran was praised for his no-nonsense approach in many other issues.

    ReplyDelete
  18. http://www.newindpress.com/column/News.asp?Topic=-97&Title=S%2EGurumurthy&ID=IE620060502001537&nDate=&Sub=&Cat=&

    இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் குருமூர்த்தி விளக்கியிருக்கிறாரே! இது வைகோ போல இல்லாமல் குறிப்பிட்டவை தானே.

    டிவிக்கு நான் மந்திரி இல்லை என தயாநிதி மாறன் சொல்லிக்கொண்டிருந்தாரே! குருவின் விளக்கம் சரியா?

    இந்த கட்டுரையையும் அலசி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

    ஆவலுடன்.

    ReplyDelete