Tuesday, May 30, 2006

இட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்

1. இரண்டு பொதுநல வழக்குகள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நிதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஒன்று தன்னம்பிக்கை நூலான 'You Can Win' என்னும் புத்தகத்தை (மேக்மில்லன் பதிப்பகம்) எழுதிய ஷிவ் கேரா தொடங்கிய வழக்கு. இவர் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான 93வது சட்டத்திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது என்று வழக்கு தொடர்ந்துள்ளார். அஷோக் குமார் தாகுர் என்பவர் பிற்படுத்தப்பட்டோர் சதவிகிதம் என்று பல்வேறு அரசு ஏஜென்சிகள் கொடுக்கும் தகவல் ஒன்றோடொன்று முரண்படுகிறது என்கிறார்.

விசாரித்த உச்சநீதிமன்ற பெஞ்ச், 93வது சட்டத் திருத்தத்தை முடக்க முடியாது என்று சொல்லி, மத்திய மாநில அரசுகளை ஆறு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் தில்லியில் வேலை நிறுத்தம் செய்துவரும் டாக்டர்களை மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தி ஹிந்து செய்தி

2. மத்திய அரசு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் வழிமுறையை உருவாக்க மூன்று குழுக்களை உருவாக்கியுள்ளது. இவர்கள் ஜூலை 31க்குள் தங்களது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன் அரசு 13 பேர் அடங்கிய மேற்பார்வைக் குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்தக் குழு ஆகஸ்ட் 31க்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். இந்தக் குழு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதைக் கண்காணிக்கும்.

தி ஹிந்து செய்தி

2 comments:

  1. இன்று உச்ச நீதி மன்றம் கேட்ட கேள்வியை ராஜீவ் காந்தி அன்று விஷ்வனாத் பிரதாப் சிங்கிடம் கேட்டார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்துள்ளது.

    வஜ்ரா ஷங்கர்.

    ReplyDelete
  2. செய்திகளை தொடர்ந்து தருவதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete