இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக நேற்று The Economic Times பத்திரிகையில் ஒரு செய்தி கண்ணில் பட்டது. ஊர்மி கோஸ்வாமி தில்லியிலிருந்து எழுதுவதாக வந்த செய்தி இவ்வாறு தொடங்குகிறது: (URL கிடைக்கவில்லை)
PRIVATE schools and parents worried about their children studying along side children belonging to weaker sections can breathe easy. The government proposes to let them off the reservation hook. The model Right to Education Bill proposes that private schools that receive no funds from the government will not be required to take children from weaker sections. The Model Bill will form the basis of states' legislation to enable the fundamental right of education.இந்தச் செய்தி என்ன சொல்ல வருகின்றது என்று விட்டுவிடுவோம். ஆனால் செய்தி சொல்லப்பட்ட விதம்... தனியார் பள்ளிகளும் அதில் படிக்கும் உயர்சாதியினரும் apartheid - வன்மத்துடன் பிரித்து வைப்பது - என்பதைக் கையாளுவதை வரவேற்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. "They can breathe easy" - அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாமாம்... இனி ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குழந்தைகளைத் தங்கள் பள்ளிகளில் அனுமதித்தே தீரவேண்டும் என்று அரசு வற்புறுத்தாது என்று நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விடலாமாம். அதனை ஓடோடிவந்து தன் வாசகர்களுக்கு சந்தோஷத்துடன் தருகிறார் எகனாமிக் டைம்ஸ் நிருபர்.
ஆங்கில செய்தித்தாள்கள் அனைத்துமே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களை மட்டும் பெரிதாகச் சித்திரிக்கின்றன. தி ஹிந்துவின் கவரேஜ் பிற செய்தித்தாள்களுடன் ஒப்பிடும்போது தேவலாம். நேற்றும் இன்றுமாக இரண்டு பாகங்களில் சதீஷ் தேஷ்பாண்டே, யோகேந்திர யாதவ் எழுதிய பெரிய கட்டுரை இங்கே: ஒன்று | இரண்டு.
தனிப்பட்ட இட ஒதுக்கீடு என்று இல்லாமல் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனியாக normalization மூலமாக நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் கொடுக்க வழி சொல்கிறார்கள். இதை முற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இருவருமே ஏற்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் குறிப்பிடும் வழியை ஏற்காவிட்டாலும்கூட இவர்கள் கொடுக்கும் புள்ளிவிவரங்களை ஏற்கலாம். அதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர் எந்த அளவுக்கு பின்னடைவில் உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்!
முதல் பகுதியைப் படித்துவிட்டு இரண்டாம் பகுதி வெளியாகும் முன்னதாகவே Letters to the Editor-க்கு அவசர அவசரமாகக் கடிதம் எழுதியுள்ளனர் பலர். அதில் இத்தனை வருடங்களாக SC/STக்கு இட ஒதுக்கீடு கொடுத்தும்கூட அந்தக் குழுவில் உள்ள மிகச்சிலரே கல்லூரிப்படிப்பை முடித்துள்ளனர். எனவே இட ஒதுக்கீடு என்பதே பயனற்றது என்பதுதான் இவர்களுடைய வாதம். "அய்யா, இட ஒதுக்கீடு இல்லையென்றால் அவர்கள் இந்த நிலையைக்கூட எட்டியிருக்க மாட்டார்கள்" என்று அவர்களிடம் சொன்னாலும்கூட அவர்கள் புரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள்.
Knowledge Commission உறுப்பினர்கள் இருவர் - ஆந்த்ரே பெத்தெல், பானு பிரதாப் மேஹ்தா ஆகியோர் கமிஷனிலிருந்து விலகியுள்ளதாக ரவி ஸ்ரீனிவாஸ் தகவல் கொடுக்கிறார். இருவரும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து விலகியுள்ளதாகச் சொல்கின்றனர். முதலில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட இவர்கள் அறிவுக் குழுவிலிருந்து விலக வேண்டியதில்லை. அறிவுக் குழுவின் வேலை என்ன, அதில் இந்த உறுப்பினர்களின் வேலை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை எந்த விதத்தில் இந்த அறிவுஜீவிகளின் வேலையை பாதிக்கப்போகிறது என்று நினைத்து இவர்கள் பதவி விலகியுள்ளனர்?
எண்ணிக்கையிலான இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக அர்த்தமுள்ள affirmative action முறையைப் பின்பற்றவேண்டும் என்கிறார்களாம் இவர்கள். ஆனால் அப்படிப்பட்ட affirmative action முறை என்ன என்று இவர்கள் சரியாக விளக்கவில்லை. இவர்கள் என்ன வழி சொல்லப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கட்டுரையின் மனநிலையில் பெற்றவர்கள் இருப்பது உண்மை. தன் குழந்தையின் பழக்க வழக்கங்கள் நடவடிக்கைகள் மேல் ஒரு Influence ஏற்படுத்துவதால் (இரு தரப்பிலும்)அதை தவிர்க்கவே நினைக்கிறார்கள.
ReplyDeleteகிராமங்களில் இது ஜாதி அடிப்படையில் இருந்தால் நகரங்களில் பொருளாதார ரீதியாக இருக்கிறது.
பத்ரி,
ReplyDeleteஇந்த அறிவு கமிசனின் தலைவர் பானு மேத்தா வழவழா கொழகொழவென ஒரு கடிதம் பிரதமருக்கு எழுதி உள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் உள்ளது.
என் ஆங்கில அறிவுக்கு எட்டியவரை அவர் மாற்று திட்டம் எதையும் எழுதவில்லை. அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை முடிவு செய்யக்கூடாது என்று கூறிகிறார்.
இந்த கருத்து சரியா என்பதும் எனக்கு புரியவில்லை.பின் யார் இதை முடிவு செய்வது?
பிறகு பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் ஒன்றல்ல என்கிறார்.(குறிப்பாக வடஇந்தியாவில்)
இதிலும் குன்சாவாக கூறிகிறாரே தவிர தெளிவு இல்லை.
இதற்கு மேல் விரிவாக தனிப்பதிவு தான் போடவேண்டும்.( ஏற்கனவே காஞ்சி இலையா என்.டி.டி.வியில் பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீட்டை ஆதரித்தார் என்று நான் சொல்லபோக இல்லை அவர் எதிர்த்தார் என்று ஒருவர் வரிந்துகட்டினார். பின்னர் நான் கஷ்டப்பட்டு காஞ்சி இலையாவின் டெக்கான் குரோனிக்கல் கட்டுரை சுட்டியை காட்ட வேண்டியதாயிற்று:)
Hi Badri
ReplyDeletePratap Bhanu Mehta is a intellucal par excllence.He has written a thought provoking letter to the Prime Minister in which he has clearly stated the reasons for his opposition to the decision.I am not sure whether you have read this
One of the relevant points that he has raised is that atleast in North India its absolutely wrong to club OBC'S and SC'S/ST'S and view them as historically disadvantaged group
The OBC'S in North are typically heterogenous group comprising the powerful and landholding/agrarian caste and even Banias and Traders(In Bihar they are OBC'S).They were never discriminated against.Infact they have in the forefront of commiting caste based atrocities in UP/Bihar/MP .Also many of them have consciously decided not to look at education as a option for ecnomic adavancement
Constitutionally reservation was meant to be measure agaisnt the inequality in the society aganst oppressed groups not as a tool of economic emanicipation.Many groups classified as OBC'S do not belong to this category
Mehta is of the view is that Arjun SIngh' move is a cynically inspired political manevouring without examining alternative viewpoints
Though i am not against reservation as a measure,i tend to subscribe to what Mehta says.For example Arjun Singh has not even done is homework properly .Karan Thapar ripped him part during the interview in CNN-IBN .
Also i tend to disagree with your viewpoint on the role of the media.They have been more balanced this time compared to 1990 Anti- Mandal agitation where they ganged up with Congress party and fiercely supported the anti-Mandal agitation
Hi Badri,
ReplyDeleteThe sunday magazine of "The Hindu" has a column by Sevanthi Ninan. It was a nice article criticisng the television media coverage(that article primarily targets CNN-IBN)of this issue.
"அவர்களிடம் சொன்னாலும்கூட அவர்கள் புரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள்"
Nuthila oru varthai..
Best regards,
Magesh
Sevanti Ninan's article in The Hindu:
ReplyDeleteTaking sides
முத்து: அவர் பெயர் "காஞ்சா அய்லய்யா" என்று படித்துள்ளேன். நான் பல நாள்களாக ஆங்கில ஸ்பெல்லிங்கைப் பார்த்து "காஞ்சா இலைய்யா" என்று படித்துவந்தேன். பின்னர்தான் "நான் ஏன் இந்து அல்ல" என்ற அவரது புத்தகத்தின் தமிழாக்கத்தில் அவரது பெயர் அய்லய்யா என்று எழுதியிருப்பதைப் பார்த்தேன்.
ReplyDeletePratap Bhanu Mehta's resignation letter in Indian Express:
ReplyDeleteI resign from Knowledge Commission as your govt abets a politics of illusion
I am yet to read this fully. Will comment once I have finished reading this.
பத்ரி,
ReplyDeleteஅவர் பெயர் உங்களையும் படுத்தியதா? :)
ஆனா மனுசன் பேச்சுல எமன்
பத்ரி,
ReplyDeleteஇந்த விவகாரத்தில 'நாங்க' எழுதுவதை விட நீங்கள் எழுதுவதுதான் மிக முக்கியமானது; உங்க கருத்துக்குத்தான் 'வெயிட்' குடுப்பார்கள் (கிறார்கள்) சிலர் - அவர்களுக்குப் புரியும் விதமாக இந்தக் கொடுமையான மனோபாவத்தை இங்கே பதிவு செய்ததற்கு நன்றிகள் :)
ஒத்த வார்த்தையில சொல்லுங்க...
ReplyDeleteவேனுமா ? வேனாமா ?
ரவி
பத்ரி,
ReplyDeleteசுந்தரவடிவேல் எழுதியுள்ள பதிவில் (
http://bhaarathi.net/sundara/?p=269#comments ) - IIT-யில்(பொதுவாக உயர்கல்வி நிறுவனங்களில்) நிலவும் பல வகுப்புவாரியான சமச்சீர்மையற்ற்தன்மையை பற்றி பல தகவல்கள் சொல்கிறார்.
இதற்கு முன்பு கூட குழலி அவருடைய 'ஐஐடி'யின் உள்வட்ட விளையாட்டுக்கள் - என்கிற பதிவில் பல தகவல்கள் சொல்லியிருந்தார். ரவி போன்றவர்கள் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை என்றே இப்போது வரை சாதித்துக் கொண்டுள்ளனர்.
நீங்கள் குறிப்பிடும் அந்த ஹிந்துக் கட்டுரையில் :
" A rational and dispassionate analysis of this issue must begin with the one crucial fact that is undisputed by either side — the overwhelming dominance of upper castes in higher and especially professional education.
Although undisputed, this fact is not easy to establish, especially in the case of our elite institutions, which have always been adamant about refusing to reveal information on the caste composition of their students and faculty. "
என்கிறார்கள்!
என் கேள்விகள்/ ஐயங்கள் :
1. உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் / ஆசிரியர்கள் / நிர்வாகிகள் - போன்றோரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றிய கணக்கெடுப்பு செய்வது அத்தனை கடினமானதா? - ஆம் என்றால் அதற்குக் காரணங்கள் என்ன?
2. அமைச்சர்கள் ஊழல், ரகசிய ஆவணங்களில் இருந்து தகவல்கள் பெறுதல், எம்பிக்களின் ஊழல், தொலைபேசி ஒட்டுக் கேட்டல் - போன்ற எத்தனையோ - "கடினமான" விஷயங்கள் தொழில்நுட்பத்தினால் சாத்தியமாக இருக்கும் போது - இம்மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களின் இருப்போர் பற்றிய Social data-வை ஒரு "Mission Ekalavya (Ekalaivan!)" செய்து - எல்லாத் தகவல்களையும் ஒரு மாதத்துக்குள் பெற்று விட முடியாதா? (Legally or illegally - thru 'sting' operations!) - இதற்கெல்லாம் Ethan Hunt மாதிரி Undercover agent வேண்டுமா என்ன?
3. ஒரு 'வெளிப்படையான கொள்கையின்' அடிப்படையில் "இட ஒதுக்கீடு" கொண்டு வர வேண்டும் என்று அலம்பல் செய்யும் அறிவுஜீவிகள் - Why are they not Demanding that such Socially vital data about Higher educational Institutions be made public after collecting it thoroughly?
இதிலே என்ன ராணுவ ரகசியம் வேண்டிக்கிடக்கு?
4. "Right to Information act" படி யாருடைய வருமானவரியையும் யாரும் - தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலை வரப் போகிறது என்கிறர்கள்; அப்படியானால் - இந்த விஷயத்தில் ஒரு PIL போட்டு உடனே எல்ல உயர்கல்வி நிறுவனங்களும் இந்த வகுப்புவாரியான ஆசிரியர் மாணவர் பிரதிநிதித்துவம் என்ன - அவர்கள் நிறுவனத்தில் என்பத வெளியிட வேண்டும் - என்று உச்ச/உயர் நீதி மன்றங்களில் வழக்கு தொடுக்க முடியாதா?
முடிந்தால் - இது குறித்து ஒரு பதிவு எழுதுங்கள் :)
What Mehta says about OBCs and Dalits is clear.Perhaps Mr.Muthu
ReplyDeleteprefers not to understand that.
இந்த அறிவு கமிசனின் தலைவர் பானு மேத்தா வழவழா கொழகொழவென ஒரு கடிதம் பிரதமருக்கு எழுதி உள்ளார்
ReplyDeleteMr.Muthu pls check facts.His letter is clear and apt.If Mr.
Muthu cannot understand that
what can Mehta do.
anony,
ReplyDeleteஎனக்கு ஆங்கிலம் கொஞ்சம் தகராறு என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
அந்த விளக்கத்தையும் கடிதத்தின் திரண்ட கருத்தையும் அனானியாகவே எழுதுங்கள்.புரிந்துக்கொள்ள முயற்சி செய்கிறென்
//PRIVATE schools and parents worried about their children studying along side children belonging to weaker sections can breathe easy.//
ReplyDeleteWhat a horrible way of thinking!
thanks for pointing it out...
//
ReplyDeleteHi Badri,
The sunday magazine of "The Hindu" has a column by Sevanthi Ninan. It was a nice article criticisng the television media coverage(that article primarily targets CNN-IBN)of this issue.
//
I read both the Sevanthi Ninan article about The TV show and the excerpts of the TV show.
Sevanthi nainan article says,
//
When a channel has a class constitutency, the labels tell the constituency that the channel is with it on this issue.
//
This kind of statements at the beginning of the column makes it very clear that the author is not interested in even looking at the substance of their position, instead, the author goes to questioning their motives on the report.
//
It's not difficult to judge where a channel or its reporter's sympathies lie.
//
Here we go again on the same report.
And the author aptly names it as Taking Sides. As if he is from the centre.
//
பத்ரி,
இந்த விவகாரத்தில 'நாங்க' எழுதுவதை விட நீங்கள் எழுதுவதுதான் மிக முக்கியமானது; உங்க கருத்துக்குத்தான் 'வெயிட்' குடுப்பார்கள் (கிறார்கள்) சிலர் - அவர்களுக்குப் புரியும் விதமாக இந்தக் கொடுமையான மனோபாவத்தை இங்கே பதிவு செய்ததற்கு நன்றிகள் :)
//
இது என்னது..? பத்ரி சொன்னால் கேட்டுக்குவாங்களா? Neo சொன்னால் கேட்கமாட்டார்களா? என்ன அனியாயம்யா இது? நல்ல கருத்து யார் சொன்னாலும் ஏற்பார்கள்.
இதில் "ஜாதி" க்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்று நான் கேட்கவா?
As if it will be a case of ethnic admission and can justify the cause.
பத்ரி,
//
தி ஹிந்துவின் கவரேஜ் பிற செய்தித்தாள்களுடன் ஒப்பிடும்போது தேவலாம்.
//
இதற்கு நான் பிரசன்னா வின் கரூத்தை வழிமொழிகிறேன்.
//
"அய்யா, இட ஒதுக்கீடு இல்லையென்றால் அவர்கள் இந்த நிலையைக்கூட எட்டியிருக்க மாட்டார்கள்" என்று அவர்களிடம் சொன்னாலும்கூட அவர்கள் புரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள்.
//
அய்யா, இட ஒதுக்கீட்டில் செலவிட்ட நேரத்தையும் பணத்தையும் வேறு வழிகள் யோசித்து செயல் படுத்தச் செலவிட்டிருந்தால், SC/ST க்களில் 10% மட்டுமே முன்னேராமல், ஒரு இடஒதுக்கீட்டினால் உருவான புது "ஜாதி" தோன்றமல், ஜாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மொத்த SC/ST க்கள் முன்னேறும் மக்களாக உருவாக வாய்ப்புகள் வந்திருக்கும் என்று உங்களுக்கு ஏன் புரியமாட்டேன் என்கிறது.?
Arjun singh ஆப்படிக்கப்பட்ட IBN interview துடுப்பு
வஜ்ரா ஷங்கர்.
>> இதில் "ஜாதி" க்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்று நான் கேட்கவா? >>
ReplyDeleteயார், எந்த மேட்டுகுடியினர் - சாதிக்கு அல்லது அந்த ethnic தன்மைக்கு "முன்னுரிமை" கொடுத்து - எல்லா விஷயங்களிலும் பார்க்கிறார்கள் - என்பதற்கு பத்ரி அளித்த அந்த Economic Times கட்டுரையே சாட்சி!
நீங்கள் நான் எழுதியத மீண்டும் ஒருமுறை நன்றாகப் படித்து விட்டுப் பிறகு கருத்துச் சொல்லுங்கள்.
இதுவரை தமிழ்மணத்தில் - கடந்த ஒரு மாத காலமாக - இடஒதுக்கீட்டுப் பிரச்சனை பற்றிய பதிவுகளில் - யார் யார் என்னென்ன நிலைப்பாடுகள் தெரிவித்துள்ளனர் என்பதைக் கூர்ந்து கவனித்தால் - நான் சொல்ல வருவது புரியும்.
1. உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் / ஆசிரியர்கள் / நிர்வாகிகள் - போன்றோரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றிய கணக்கெடுப்பு செய்வது அத்தனை கடினமானதா? - ஆம் என்றால் அதற்குக் காரணங்கள் என்ன?
ReplyDeleteபதில்: ஆசிரியர்கள்/நிர்வாகிகள் கணக்கெடுப்பு வெகு எளிது. ஒரு வாரத்துக்குள் தகவல் பெற்றுவிடலாம். மனிதவள அமைச்சகத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தால் ஒவ்வொரு ஐஐடி/ஐஐஎம் தலைமை நிர்வாகியும் இதனைச் செய்யலாம். முதலில் எதிர்ப்பு இருந்தாலும் கடைசியில் தகவல் வேண்டும் என்றால் கொடுத்துதான் ஆகவேண்டும்.
மாணவர்கள் இந்தத் தகவலைத் தர பயப்படலாம். இதன்மூலம் தங்களுக்குக் கெடுதல் நேரலாம் என்று சிலர் நினைக்கலாம். எனவே ஒருவிதமான double-blind முறைப்படி தகவல் சேகரிகக் முற்பட்டால் சேகரிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
2. அமைச்சர்கள் ஊழல், ரகசிய ஆவணங்களில் இருந்து தகவல்கள் பெறுதல், எம்பிக்களின் ஊழல், தொலைபேசி ஒட்டுக் கேட்டல் - போன்ற எத்தனையோ - "கடினமான" விஷயங்கள் தொழில்நுட்பத்தினால் சாத்தியமாக இருக்கும் போது - இம்மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களின் இருப்போர் பற்றிய Social data-வை ஒரு "Mission Ekalavya (Ekalaivan!)" செய்து - எல்லாத் தகவல்களையும் ஒரு மாதத்துக்குள் பெற்று விட முடியாதா? (Legally or illegally - thru 'sting' operations!) - இதற்கெல்லாம் Ethan Hunt மாதிரி Undercover agent வேண்டுமா என்ன?
பதில்: மாணவர்கள் சம்பந்தமான தகவலை ஒரு சர்வே மூலம் கூடச் செய்யலாம். முழுமையான தகவலாக இருக்கவேண்டும் என்பது கூட இல்லை. ஏனெனில் 4000-5000 மாணவர்கள் இருக்கும் ஒரு கேம்பஸில் 300 மாணவர்களிடமிருந்து - ராண்டமாக - தகவல் சேகரித்தால் அதுவே போதுமானதாக இருக்கலாம். இதற்காக undercover வேலைகள் எல்லாம் தேவையில்லை. மனிதவள அமைச்சகம் முடிவுசெய்தால் அதுவே போதும்.
4. "Right to Information act" படி யாருடைய வருமானவரியையும் யாரும் - தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலை வரப் போகிறது என்கிறர்கள்; அப்படியானால் - இந்த விஷயத்தில் ஒரு PIL போட்டு உடனே எல்ல உயர்கல்வி நிறுவனங்களும் இந்த வகுப்புவாரியான ஆசிரியர் மாணவர் பிரதிநிதித்துவம் என்ன - அவர்கள் நிறுவனத்தில் என்பத வெளியிட வேண்டும் - என்று உச்ச/உயர் நீதி மன்றங்களில் வழக்கு தொடுக்க முடியாதா?
பதில்: தொடுக்கலாம். ஆனால் நீதிமன்றம் வரை செல்லவேண்டும் என்றில்லை. நீதிமன்றம் சென்றாலும் நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுக்கும் என்று தெரியாது. இதெல்லாம் நிச்சயம் executive அளவிலேயே முடிவெடுத்து, செயல்படுத்தலாம். எல்லாமே அர்ஜுன் சிங் கையில் உள்ளது - இப்பொழுதைக்கு.
Other Religions(Jain,parsi etc.)
ReplyDeleteare doing better than Hindu FCs.
I din't know that.
இவர்களை ஆட்டோவில் ஏற்றினால் கூட நிரம்பாது :)
Why should the caste based data should be collected in the first
ReplyDeleteplace.Why should the caste of each
faculty be known to the whole world.In which way it is relevant
to their job or functioning of IIT.
If somebody gives false information how will you verify.
X caste may be backward in Y state
while in it may not be backward
in Z state.So which one we should
consider.IIT can refuse to
collect such information.Remember
the fact that the army refused
to give religion based statistics
and govt. accepted it.In a state like Tamil Nadu such information
may be used to target the so called
forward caste faculty.As there had been processions and campaigns against brahmin faculty in IIT-M
such information can be used to incite violence against them or
threaten them. The govt. does not collect caste information in census.So why should it collect
from IITs etc.
The IITs do not collect such information from faculty and students.Nor can they be forced
to collect such information.One
can very well say that I belong
to no caste.One can refuse to answer such a question as the question has nothing to with ones
occupation or studies.It is unfortunate that even Badri thinks
like Neos.
"Right to Information act" படி யாருடைய வருமானவரியையும் யாரும் - தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலை வரப் போகிறது என்கிறர்கள்;
ReplyDeleteIf such a step is taken it will be stopped by courts.The govt. cannot reveal all the infornation it collects to everyone.Please read the Right To Information Act to know its limitations.
Ravi,
ReplyDelete//can be//, //may be// ...
Our fear and illusions should not prevent us from understanding the present.
If we fear that it might be 'misused' we should work on the 'mis use' and not on the denial of fact.
What is being asked is a 'FACT', it might even become a cause against the need of reservation
So why put our prejudice on it? Lets first see the numbers.
Army refused to reveal the figures.
ReplyDeleteThe govt. could not force it.When anti-brahmin sentiment is rampant
and is encouraged in Tamil Nadu
making such figures will not create a conducive climate.The
brahmin haters, yes, i call them
brahmin haters will use any figure
against brahmins in IITs etc.The life and liberty of faculty members of IITs will be in danger.
Now some figures (caste wise faculty break up) are put out by them and these are used to whip up anti brahmin feelings and create an
impression that brahmins as a
community are against dalits,
OBCs.You can read these in the
blogs. When I see so much hatred against brahmins in blogs I know how it will be in the real world.
We are not asking for individual (personal)
ReplyDeleteinformation.We are asking for group data.
For example, Data for school performance in US
is available in various categories indexed on
race,ethnicity and gender on public websites.
This info. is used to gauge how well the race
or gender is represented and their performance.
(Everyone knows how much personal privacy is respected
in US. )With a few clicks I can find out how many
african americans, asians and whites are in my daughter's
school and how they perform.
//
ReplyDeleteIn which way it is relevant
to their job or functioning of IIT.//
It is relevant to the tax payer
who wants to know where his hard
earned money goes.
Badri,
ReplyDeleteIt is very important that we should propagate the points you had put forth in your previous post (Q&A) to as many people as possible.
Esp when the majority of media is against it.
I mailed a link to that post to many of my Tamil friends...however to reach a larger group we should translate it in English. If you have already done that, please let me know.
I am already working on it to create a ppt (with due acknowledgement to you) and will send it to my colleagues. Believe me office mails are one of the biggest information propagators ;)
If you are inclined against this, please let me know.
You may choose not to approve this comment.
Badri,
ReplyDeleteThanx for your thoughtful points :)
------------------------------------
>> In a state like Tamil Nadu such information may be used to target the so called forward caste faculty.As there had been processions and campaigns against brahmin faculty in IIT-M such information can be used to incite violence against them or
threaten them. >>
Does Ravi imply that the OBCs would resort to thuggery and Violence against the upper caste IIT-ians?
This 'per se' means that he slanders the OBC community as gundas and rogues, which is highly condemnable.
All these days Ravi refused to take into cognisance the cruelty meted out to non-Brahmin ('Shudra') faculty members in the IITs, especially in the Chennai IIT. When pointed to those facts he simply brushed them that they were exceptions.
Now if these upper caste people can be so 'violently high-handed' in a 'Social Justice' conscious 'Periyar bhoomi' Tamilnadu, what would be the extent and magnitude of their caste bigotry in Northern states, was a persistent query to which ravi never really bothered to deal with , and he simply pooh-poohed them.
Now, he says if the caste of the faculties are known 'esp. in TN' they may be 'targetted'!!
Who is ravi trying to Hoodwink?
If suppose the caste data come about, and some "stray" incidences of 'harassment' of Upper caste faculties do occur - we may be 'tempted' to brush aside them as rare and exceptional cases, wouldn't we?!
This is not to justify that 'backlashing' is good, but the point is why does ravi jump the gun always?
Let us turn around the Question, and think like this :
If reservations do come thru next year (as announced now by the govt.) - in the North Indians states - "Especially states in the Cow-belt, known for cherishing its Brahmanical values" - Would there be "Backlash" against OBC students - by the 'stronger' Upper caste students?
If so should the Govt. "Encrypt" the data about - which Students are OBCs - who got into these 'elite' institutes thru reservations - so as to protect them and their property???
"OBC students Protection Programme" could be a separate wing formed with the Special Security Forces - No?!
Where does this Tamasha end?!
>> It is unfortunate that even Badri thinks like Neos. >>
He merely answered my curious queries!
And it's heartening that it's not an "en masse" Show..... in thamizhmanam!! Let it be so! ;)
//Why should the caste of each
ReplyDeletefaculty be known to the whole world.In which way it is relevant
to their job or functioning of IIT.//
Badri,
Thanks for your insights on this issue. Unfortunately, I couldn't write as much as I would wish on this issue as feedbacks or in my blog.
A quick response to Ravi on his question.
When you apply for a faculty position in a US university where Affirmative Action is in place, the first thing you get in the mail is a card from the University's Office of Diversity requiring to fill Race, Gender and Age. This is federally mandated and no institution can escape, private included. Similarly, in the federally funded training grants (i.e. fellowships), the universities are required to send the information on the number of minority students and females each year.
When you implement a program you got to collect relevant data. On one hand you oppose collecting data on the other hand you will question the authenticity of the numbers if someone puts unofficial figures. You cannot have both ways.
Some of us are already talking about exit strategy. How in the world are we going to find out who should exit and when without taking collecting such data.
This hypocracy is also seen in challenging the % of OBC population. On the one hand, there is no mandate to take caste based head count in the decennial census since 1951. On the other hand, the projected OBC population based on the last caste-based census of 1931 is claimed to be inflated.
Hi Shankar,
ReplyDeleteI dont think i would want to defend Sevanti Ninans article..just seeing the coverage at CNN-IBN..could agree with the spirit of the article..that was it..
There is a response to Mehta letter by Yogendra Yadav in todays express
http://www.indianexpress.com/story/4984.html
Regards,
Magesh
Magesh,
ReplyDeleteYou also read the comments posted by others to Yoginder Yadav's letter in the same Indian Express.
Most of them tell,
1. Stop this vote bank reservation.
2. Sack Arjun singh.
3. Prime minister Show some back bone.
4. Develop a comprehensive strategy for development of lower castes.
நீங்கள் சாம் பித்ரோதா எழுதிய பக்கத்தைப் படிக்கவில்லையா. அதே இந்தியன் எக்ஸ்பிரஸில் தான் வந்தது.
தலைபில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தன் குஸும்பைக் காட்டி யிருக்கிறது.
வஜ்ரா ஷங்கர்.
In India we dont have affirmative action programs.We have only caste based reservations.There is a world of difference between them.
ReplyDeleteIn USA it is enough i identify myself as asian or whatever that category is .There is nothing wrong in collecting some
information but whether an institution can be forced to collect and reveal all data in public is the question.In India
army refused to collect and submit
such information.What sort of information on caste is needed,
just aggregate(FC,BC,OBC,dalit) or further break up in terms of individual castes.I will have objections to giving data on sub caste/caste wise break up.
I objected to the tone and tenor of neo's comment.But in USA there are restrictions on sharing data collected through forms.They do
not tell every detail to every
tom,dick and harry just for asking.
There is so much hate speech in
blogs and elsewhere, against the so called forward castes.Some body has even cast aspersions on forward caste faculty members
of IITs etc.In USA such a writing
would be considered as uncivil
speech or hate speech.In such a circumstance one has every right to question the purpose of data collection.
>> I objected to the tone and tenor of neo's comment >>
ReplyDeleteWould ravi clarify what was wrong with the "tone and tenor" of my comment(s) in this particular Post?
If you carry a baggage of prejudices against me from other blogs - thats your problem.
But please dont indulge in propaganda speech - that my 'tone and tenor' here was wrong; My comments here are open and public for everyone to Judge by themselves.
I merely raised certain valid questions and Badri answered them.
If you think otherwise - please rationalise why you do not accept them.
Casting aspersions on OBCs that OBCs are vandals and goons in one breath, and performing a "Volte Face" when you meet with a firm and logical reply - cuts down your stature as a responsible blogger Ravi.
Neo அவகளே, குறுக்கீடுக்கு மன்னிக்கவும்,
ReplyDeleteரவி ஸ்ரீனிவாஸ் அவர்கள் OBCக்களை மொத்தமாக எங்கே திட்டித்தீர்திருக்கிறார் என்று சொன்னால் நலம்.
அவர் கவலை ஞாயமானது, ஜாதிவாரியாக கணக்கெடுப்பில் நிச்ச்யம் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியும், மறுப்பதற்கில்லை. தற்பொழுது பலர் எழுதிவரும் வலைப்பூக்களிலும், என்னமோ இந்தியாவில் நிகழும் சமூகச்சூழ்னிலைக்கு பிராமணர்கள் தான் காரணம் போல் பேசி, துவேஷத்தை வளர்க்கும் அறிவு ஜீவிக்கள் இருக்கும் போது அத்தகய ஜாதி வாரியான கணக்கெடுப்பில் எத்தகய நம்பர் வந்தாலுமே, அடி பாழாய்ப்போன பார்பானனுக்குத்தான் என்பது நிதர்சன உண்மை. (தமிழ்நாட்டில் வட நாட்டவர்களுக்கும் சேர்த்து விழும்!). இதில் ஆரிய-திராவிட இனவாதம் கலந்து வோட்டுப் வங்கி அரசியல் செய்ய நாம் தனியாக Tuition எடுக்கத் தேவையில்லை.
இது தமிழகத்தில் மட்டுமல்ல, பத்ரி அவர்கள் கூறிய "cow-belt" (marxist mumbo jumbo!) உ.பி, பீஹாரில் மாயாவதி, லல்லு என்ன செய்வார்கள் என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை.
ஜாதி அடிப்படையிலான (நம்பூதரிக்கள், ஐயர், ஐயங்கார், நாயுடு, பட்டாச்சார்யார், சத்தொபாத்யா, திரிவேதி, சதுர்வேதி, தேவர், பள்ளர், அகமுடயர், வேளாளர், பிள்ளை, ரெட்டி, செளத்திரி, நாடார்..) எண்களைச் சேகரிக்காமல், FC, BC, SC/ST என்ற வகையை மட்டுமே பயன் படுத்தினால் நலம். அது தான் ரவி ஸ்ரீனிவாஸ் கூட சொல்லியிருக்கிறார்.
நன்றி,
வஜ்ரா ஷங்கர்.
Sundaramurthi: This is just a clarification for your commnet. In US, according to MBEWBE rule, 7% of government fundings should be spent on minority business and 3% on women. So if there is a NIH felowwship that specifies it is fo rminorities and women only, one has to justify that. But as a citizen one can refuse to fill out any race questions, but may not get an opportunity on those reserved positions. Furthermore, on ecan choose as many races as one likes. For example if my great grand father in an asian, and grang mother is an Irish, and my dad is a Japanes and mom is polis, I can choose Asian, Caucassian and also Pacific Islander. It does lead to multiple count, but I have a right to claim myself as Asian or pacific Isalander. We allow such multichoices in survey.
ReplyDeleteIf I get funding from EPA, if I dont contract with monorities business 7% and 3 % women run business, I will have to forego that funding. If someone hires an caucassian in the position meant for minorities, he can face jail terms. Minorities can also apply for open jobs.When we do these contracts we also have to get a certificate that the interested party has not donated soft money or otherwise to political parties and back it up with tax returns.
Similarly during lay offs, the % of employees who are let go must remain the same for all race groups depending on the workers population. This can be done only if the employees participate in the survey.
Why shoudl the right to know act be so complicated? People will not have time an denergy to go to teh judiciary system and fight. Why cant it be as simple as we have i there in teh United States? If some one needs any information of an employee or regarding a firm or industry all they have to do is to send a form to the County where the firm is and get all information. why should t even go to Court? Then we are looking in to masked data, delays, political threats etc.But this act has its own limitations. If I fill out a survey and did not agree to distribute my personal info, they can not do that. Sometimes if an industry collects data on ethnic diversity, they can not distribute it but can say on the ratio of people emplyed from each ethnic group. Otherwise, in US, you need to get court order to get the personal information.
ReplyDeletePadma, you have pointed out how it works there.In some instances
ReplyDeletei was even told that i need not reveal my name or other details
except those pertaining to diversity.Even that is voluntary
in some cases.Irrespective of that form one's applications would be
considered.In india the situation
is different. You know how much hate speech is there in blogs and
elsewhere, directed against brahmins.People who indulge in
hate speech will make perverted
use of such data.In USA privacy
is taken into account and not all
can seek all sorts of information.
Here they march to IIT-M and shout
slogans abusing brahmins and IIT
faculty.They are interested only in inciting caste based hard feelings and ill will.
We allow such multichoices in survey.
ReplyDeleteIn India they want only one information : what is your caste.
Gender is irrelevant in a caste based reservation system.Affirmative Action or
Diversity is not discussed here.
Caste,Caste,Caste,-they cannot
think beyond that.
>> ரவி ஸ்ரீனிவாஸ் அவர்கள் OBCக்களை மொத்தமாக எங்கே திட்டித்தீர்திருக்கிறார் என்று சொன்னால் நலம். >>
ReplyDeleteஇதா பதிவிலும், வேறு பதிவுகளிலும் - சாதி வாரியான கணக்கெடுப்பு நடந்தால் பார்ப்பனர்கள் மீது வன்முறை நிக்கழ்த்துவார்கள் என்ற பல்லவியையே அவர் பாடி வருவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
இடஒதுக்கீட்டுக்காக ஒரு "வெளிப்படையான செயல்திட்டம்" தயாரிக்க இப்போதுள்ள்ள வகுப்புவாரி நிலைமை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் - உடனே 'அய்யோ! அடிக்கப் பார்க்கிறார்கள்! திட்டம் போடுகிறார்கள்' என்று கூப்பாடு போட்டால் - இது என்ன கேலிக்கூத்து?
யார் அடிப்பார்களாம்? ரஷ்யா ஜெர்மனி, அல் காய்தா-காரனையா அவர் குறிப்பிடுகிறார்? - இட ஒதுக்கீடு வேண்டும் எனச் சொல்லும் OBC-களைத்தானே அவர் குறிப்பிடுகிறார்.
ஆக, கணக்கெடுப்பு வேண்டும் எனச் சொலும் முன்பே - அய்யோ வன்முறை என்று கத்தினால் என்னவென்று சொல்வது?
மேலும், இப்போது பார்ப்பனர்கள் (பொதுவாக மேல்சாதியார்) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்து மாணவர்களையும், மற்ற ஆசிரியர்களையும் உயர்கல்வி நிறுவனங்களில் நடத்தும் விதம், அநீதி இழைக்கும் தன்மை எல்லாவற்றையும் - சந்திப்பு, குழலி, சொ.சங்கரபாண்டி, தங்கமணி, சுந்தரவடிவேல் இன்னும் ஏகப்பட்டபேர் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் எழுதித்தீர்த்தாயிற்று.
'இதற்கெல்லாம் ஆதாரமில்லை' என்கிற அராஜக ஜல்லியைத் தவிர ரவியோ மற்றவரோ வேறு வார்த்தை எங்கும் பேசவில்லை.
>> அத்தகய ஜாதி வாரியான கணக்கெடுப்பில் எத்தகய நம்பர் வந்தாலுமே, அடி பாழாய்ப்போன பார்பானனுக்குத்தான் என்பது நிதர்சன உண்மை. (தமிழ்நாட்டில் வட நாட்டவர்களுக்கும் சேர்த்து விழும்!). >>
இத்தனை தூரம் பேராசிரியை வசந்தா கந்தசாமி, மனோகரன் போன்ற ஐஐடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட விஷ்யங்களை - பல சமயங்களில் கேள்விப்பட்டிருந்தும், சுப்பிரமணியச்சமியின் கேவல அவதூறுகள் (பேரா. வசந்தா - she is a LTTE operative!!) போன்ற அயோக்கியத்தனத்தின் உச்சங்களையும் தெரிந்து கொண்டபின்னும் - தி.க போன்ற தமிழர் சமூக நீதி விச்ஷயங்களில் அக்கறை உள்ளவர்கள் இந்த விஷயத்தை வெளியில் பல சமயங்களில் எடுத்துச் சொன்ன பிறகும் - சென்னையில் (தமிழ்நாட்டில்) எந்த ஒரு முற்பட்ட வகுப்பு பேராசிரியரோ, ஐஐடிக்காரரோ தாக்கப்பட்டதாகவோ அது போல் முயற்சி நடந்ததாகவோ எதுவும் இல்லையே - அது ஏன்? என்று யோசியுங்கள்.
சும்ம பழி போடுவது சுலபம். கோயபல்ஸ் பரப்புரை எல்லா நேரங்களிலும் எடுபடாது.
>> ஜாதி அடிப்படையிலான (நம்பூதரிக்கள், ஐயர், ஐயங்கார், நாயுடு, பட்டாச்சார்யார், சத்தொபாத்யா, திரிவேதி, சதுர்வேதி, தேவர், பள்ளர், அகமுடயர், வேளாளர், பிள்ளை, ரெட்டி, செளத்திரி, நாடார்..) எண்களைச் சேகரிக்காமல், FC, BC, SC/ST என்ற வகையை மட்டுமே பயன் படுத்தினால் நலம். அது தான் ரவி ஸ்ரீனிவாஸ் கூட சொல்லியிருக்கிறார். >>
ரவி முதலில் அதிகாரப்பூரவமற்ற முறையில் சொல்லப்பட்ட கணக்குகளை மறுத்து ஆதாரமில்லை என்றார். பிறகு - சரி அதிகாரப்பூர்வமாகவே கணக்கெடுப்போம் என்றதும் - உடனே அய்யோ வன்முறை கலவரம் என்று Rhetoric Specches ஆரம்பித்தார்.
பிறகு - இதற்கு மேலே உள்ல கடைசிப் பின்னூட்டத்தில் "இறங்கி வந்து" Sub-caste காட்டாமல் ஒரு பொத்தாம் பொதுவான FC,BC,SC,ST கணக்கெடுப்பு செய்தால் Ok என்கிறார்!
இதைத்தான் நான் Volte face என்றேன்!
நீங்கள் குறிப்பிடும் சாதிப் பெயர்களில் பாதிக்கு மேல் பார்ப்பனர்கள்-தாம்; இந்த விஷயத்தில் நெருப்புக் கோழி மனப்பான்மையினால் ஒரு பயனும் இல்லை.
பார்ப்பனர், பிற முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், SC/ST - என்று வேண்டுமானால் கணக்கெடுப்பு வைக்கலாம்.
பார்ப்பனர் என்பதில் - ஐயர், அய்யங்கார், திரிவேதி, சதிர்வேதி, ஷர்மா, மிஸ்ரா, et al வேண்டுமானால் சொல்ல வேண்டாம்.
ஆனால் - பார்ப்பனர், பிற முற்பட்டோர் - என்று கணக்கெடுப்பு இருப்பதுதான் சரி.
முழுக்க நனையும்போது முக்காடு தேவையில்லை :)
Neo and other Tamil bloggers,
ReplyDeleteKindly refrain from using the words 'Parpanar', 'Parpan' etc. These are derogatory words even if they had good meanings in the past. Please use the word 'Bramanar' that will show that you consider brahmins as at least human beings.