Saturday, May 13, 2006

ஜெயலலிதாவின் கண்ணியமற்ற பேச்சு

தமிழகத்தைத்தவிர வேறெங்கும் இது நடக்காது. கருணாநிதி முதல்வராகப் பதவியேற்கும் விழாவுக்கு நேராகப் போகாவிட்டாலும் பரவாயில்லை. தான் சட்டமன்றத்துக்குப் போகாவிட்டாலும்கூடப் பரவாயில்லை. ஆனால் கீழ்க்கண்ட பேச்சு அநாகரிகமானது.
சட்டப் பேரவைக்கு நான் வரவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள். ஆனால் 1989-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நான் தாக்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது யார் அவமானப்படுத்தினார்களோ தாக்கினார்களோ அவர்களெல்லாம் தற்போது [அமைச்சர்களாக] வந்திருக்கிறார்கள். அடிப்படை நாகரிகம், பண்பாடு தெரியாத காட்டுமிராண்டிக் கும்பல்.
இப்படி நாட்டின் அரசியலை தனிப்பட்ட அரசியலாக்கி, 17 வருடங்களாக அதையே மனத்தில் வைத்துக்கொண்டு காழ்ப்பை உமிழ்கிறார். "காட்டுமிராண்டிக் கும்பல்" என்று அநாகரிகமாகப் பேசுகிறார்.

ஜெயா டிவியில் மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஜெயலலிதா. தான் முதல்வராக இருக்கும்போதே திமுக உறுப்பினர்கள் தன்னைப் பார்த்து தகாத வார்த்தைகளைப் பேசினர் என்றும் இப்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பதால் என்ன நடக்குமோ என்று தன் கட்சிக்காரர்கள் அஞ்சுவதாகவும் சொன்னார். இப்படி அவதூறு பேசுவது சரியல்ல. இது தமிழகத்துக்கு நல்லதல்ல. திமுகவும் இதையே மனத்தில் வைத்து அரசியல் செய்யும்.

எதிர்க்கட்சிகளை வழிநடத்தவேண்டிய ஜெயலலிதா சட்டமன்றத்துக்குப் போகப் போவதில்லை. வைகோ, திருமாவளவன் ஆகியோர் சட்டமன்றத்துக்குப் போகும் வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. இதனால் அஇஅதிமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள், 69 இடங்களை வைத்திருந்தாலும் அதனால் எந்தப் பலனையும் பெறப்போவதில்லை. பன்னீர்செல்வம் மீண்டும் மீண்டும் "புரட்சித் தலைவி, தங்கத்தாரகை" என்று புகழ்பாட, திமுக உறுப்பினர்கள் பதிலுக்கு கேலி செய்ய, அஇஅதிமுக வெளிநடப்பு செய்ய (அல்லது தூக்கி எறியப்பட), சட்டமன்றம் கேலிக்கூத்தாக முடியும்.

இந்தமுறை சட்டமன்ற விவாதங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்ததாக நினைத்தேன். சிறுபான்மை அரசு. வெளியிலிருந்து ஆதரவு தரும் சில கட்சிகள். எதிர்க்க நல்ல வலுவான கட்சி. அதனால் அரசின் எந்தவொரு முடிவையும் வாக்கெடுப்பை நோக்கிக் கொண்டுசெல்லலாம். அதன்மீது விவாதம் தேவை என்று அரசை நெருக்கலாம். கம்யூனிஸ்டுகள் தங்களுக்கு ஏற்பில்லாத எந்த முடிவையும் எதிர்க்கத் தயங்காதவர்கள். காங்கிரசும் பாமகவும் வெளியிலிருந்து ஆதரவு தருவதால் தங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்லமுடியாது.

ஜெயலலிதா நியாயமாகப் பார்க்கப்போனால் புது அமைச்சரவையை வரவேற்று, அவர்களது செயல்களைக் கண்கொத்திப் பாம்பு போலக் கண்காணிப்போம் என்று சொல்லியிருக்கவேண்டும். அதற்கு பதிலாக அவர்களைத் திட்டியிருப்பது கண்டிக்கத்தகுந்த செயல்.

அதைவிட அவர் வைத்திருக்கும் ஆசை - இந்த அரசு ஒரு வருடத்துக்குள் கவிழ்ந்துவிடும் என்று எதிர்பார்ப்பது - அபத்தம்.

33 comments:

  1. Greedy Lady - Jayalalitha. Her Dream will never come true.
    DMK will rule 5 years by the grace of god.

    ReplyDelete
  2. ஜே யின் பேச்சு, எங்கே கருணாநிதி தான் சொன்னதைப் போல எதிர்கட்சிகளை கண்ணியமாக நடத்திவிடுவாரோ என்று பயந்து போய், திமுகவினரை உசுப்பேற்றி விடவே இப்படி சொல்லியிருக்கிறாரோ என நினைக்க வைக்கிறது.

    திமுகவினர், இவரை அவமானப்படுத்தியும், வார்த்தைகளை இறைத்தும், இவரை அடக்க செயல் புரிந்து கொண்டிருந்தும் இருந்தாலே போதும், இவர் எதுவுமே செய்யாமல் அடுத்த முறை வந்துவிடலாமல்லவா.

    காழ்ப்புணர்வு அரசியலை அணையாமல் பார்த்துக் கொண்டிருந்தால்தான் அம்மாவுக்கு வாழ்வு..இதைப் புரிந்து கொண்டு அரசு நடத்துவார்களா திமுகவினர் எனப் பார்ப்போம்.

    2001 ல் ஸ்டாலினும் பேராசிரியரும் ஜெ பதவியேற்பு விழாவிற்கு சென்று, ஒரு நல்ல முன்மாதிரியை ஏற்படுத்தியிருந்தனர். ம்..

    ReplyDelete
  3. அடடா.... என்ன இப்படிச் சொல்லிட்டாங்க? எதிர்கட்சியா இருந்து நல்லா செயல்படலாமே!
    வெற்றி தோல்விங்கறது சகஜம் இல்லையா? யாராவது ஒருத்தர்தானே வெற்றி பெறமுடியும்?

    வெற்றி பெற்றவர்கள் எப்பவும் பணிவோடும் அன்போடும் நடக்கணும். அதுதான் எப்பவும் நிலைச்சு நிற்கும்.
    யாரா இருந்தாலும், முடிவு தெரிஞ்சபிறகு எள்ளி நகையாடாம ஆக்கப்பூர்வமா செயல்பட வேண்டாமா?

    அதுசரி, எதிர்க்கட்சியும் ஒவ்வொரு இலாக்காவுக்கும் ஒருத்தரை நியமனம் செஞ்சு, ஆளும்கட்சி சரியான
    பாதையில் போகுதான்னு கவனிக்க வேண்டாமா? இங்கே இப்படித்தான் நடக்குது. அங்கே எப்படி?

    ReplyDelete
  4. வாழ்க ஜனநாயகம்:-((

    இவ்வளவு வெளிப்படையாக ஒரு உருப்பினர் தேர்தலை கேலிக்கூத்தாக ஆக்கியும் நமது அரசியல் சாசனம் மெளனமாக இருப்பது ஒரு வெட்கக்கேடு.

    தற்போது மு.க வை இழுப்பவர்களுக்கு - அவர் செய்தது சரி என்று நாம் எப்போதும் வாதிட்டதில்லை. அந்த தவறை தவறு என்று தெரிந்தே செய்வதுதான் மிகவும் ......

    ReplyDelete
  5. Jaya has designated vaayillaa jeevan panneer selvam as leader of opposition, and has given the most facetious reason for not wanting to come to the House. While she was the CM, how many times has she not ridiculed karunanidhi for not coming to the proceedings? this was a line repeated by not only her partymen during election campaigns and meetings, but other parties also. if iam not mistaken, she even gave open assurances that he (karunanidhi) will not be manhandled should he come. Now it is his turn to reassure her. Is it not an insult to the mandate of the Andipatti electorate that she so openly defies her responsibility citing personal animosities?

    Saumya

    ReplyDelete
  6. எம்ஜியார் ஆரம்பித்து வைத்த hate politics அவர்வழியில் தொடர்கிறார். இவர்களெல்லாம் திருந்துவார்களா என்ன ?

    ReplyDelete
  7. பரவாயில்லை. நடுநிலையோடு பதிவு எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சட்டசபைக்கு போகாததற்கு ஒரு சப்பைகட்டு கட்டுகிறார்.ஒரு வருடத்தில் ஆட்சி கவிழும் என்பதெல்லாம் பொறுப்பற்ற, ஆணவமான பேச்சு. இதற்கு வாய்ப்பு தராமால் கலைஞர் ஆட்சி நடத்துவாரா என்பதையும் என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை.

    ReplyDelete
  9. ஜெயலலிதாவின் பேச்சு அரசியல் நாகரீகமற்றது. இத்தனை கீழ்த்தரமாகப் பேசியிருப்பது அவரது பக்குவமின்மையைக் காட்டுகிறது. பக்குவம் கூடுகிறது என்று சொன்னது பொய் போல. ஜெயலலிதா திருந்தவே மாட்டார்.

    ReplyDelete
  10. ஜெயலலிதாவைப் பற்றித்தான் எல்லோருக்கும் தெரியுமே. அவர் அப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

    பெண்களுக்கு சட்டசபையிலேயே பாதுக்காப்பு இல்லை என்று ஒரு முன்னாள் முதலமைச்சரே கூறுகிறார் என்றால் அவரை என்னவென்று சொல்வது..

    நான் என்னுடைய பதிவு ஒன்றில் கூறியிருந்தது போல கலைஞர் மட்டுமல்ல நாமும் ஜெயலலிதாவையும் சிறிது நாட்கள் மறந்துவிடுவதுதான் நல்லது.

    ReplyDelete
  11. நானும் அவரதுப் பேச்சை ஜெயா தொலைக்காட்சியில் பார்த்தேன் இன்னமும் அவர் தோல்வியை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை...அவர் முகம் முழுவதும் அத்தனை கடுகடுப்பு.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. //எம்ஜியார் ஆரம்பித்து வைத்த hate politics அவர்வழியில் தொடர்கிறார். இவர்களெல்லாம் திருந்துவார்களா என்ன ?//

    ஆரம்பித்து வைத்ததே கருணாநிதி தானே. எம்ஜிஆர் என்று சொல்வது சரியாஜ ஜோக்.

    ReplyDelete
  14. ... தமிழக வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் எதிர்க்கட்சி இருந்ததே இல்லை. ஆளுங்கட்சியாக இருந்த போதே அவர்கள் எப்படி அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எதிரே விஷப்பாம்புகள் மத்தியில் இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் நீங்கள் இருக்க வேண்டும். ...........

    70 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் மூத்த அரசியல்வாதி கருணாநிதி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசியது இது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அரசியலில் வன்முறையையும், அநாகரித்தையும், ஆபாசத்தையும் ஆரம்பித்து வைத்ததே திராவிடக் கட்சிகள்தான். உழக்கில் கிழக்கென்ன, மேற்கென்ன?

    ReplyDelete
  15. சில பின்னூட்டங்கள் தரக்குறைவாக உள்ளன (tiruppooraan, இரா.சுகுமாரன்). ஆனாலும் கண்ணியத்தைப் பற்றிப் பேசுவதால் இவற்றையும் அனுமதித்துள்ளேன்.

    சுரேஷ் கண்ணன்: கருணாநிதியின் பேச்சு என் கவனத்துக்கு வரவில்லை. இதுவும் மோசமானதுதான்! ஆனால் அவர் அதற்கு முதல் நாள் சொன்னதாக வெளியான செய்தி இப்படி இருந்தது:

    In his post-victory press conference, Mr. Karunanidhi said the ruling and Opposition parties could cooperate on the marriage scheme for poor women and make their mutual antagonism, which was "not witnessed in other States," a thing of the past.

    ReplyDelete
  16. ஜெயா ரத்தத்தில் உள்ள அகம், ஆணவம்,செறுக்கு என்றென்றும் மாறாது.
    துபாய் ராஜா.

    ReplyDelete
  17. //தமிழக வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் எதிர்க்கட்சி இருந்ததே இல்லை. ஆளுங்கட்சியாக இருந்த போதே அவர்கள் எப்படி அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எதிரே விஷப்பாம்புகள் மத்தியில் இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் நீங்கள் இருக்க வேண்டும். ...........//

    இதை ஆரம்பித்து வைத்ததே கருனாநிதிதான். தன் ஆயுளின் முக்கால்வாசி அரசியல் அனுபவம் கொண்டவரின் பேச்சு இப்படி இருக்கும் போது அதே குட்டையில் ஊரிய மட்டைகளின் பேச்சு எப்படி இருக்கும்?!.

    ReplyDelete
  18. செயா பார்வையில் 5 வருடங்களுக்கு எல்லோரும் காட்டுமிராண்டிகள் தான்.

    வயது ஆக ஆக நான் பக்குவமடைந்து வருகிறேன் என்று சொன்னது பொய்.

    ReplyDelete
  19. குறைந்தபட்சம் இரண்டு நபர்களை, பதவி யேற்கும் விழாவிற்கு ஜெ. அனுப்பி வைத்திருக்கலாம். (ஆனால் உண்மையிலே, அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டதா? அல்லது அழைக்கப்பட்டார்களா என்று தெரியாது?)

    ஜெ. சட்டசபைக்கு வந்தால், ஆளுங்கட்சியின் தவறா ன அணுகுமுறை, செய்யத்தவறுபவை போன்றவை சுட்டிக்காட்டப்படலாம். (ஆனால், அதற்கு முன்னுதாரணமாக திகழ திமுக தலைவர் தவறிவிட்டார். உடல்நிலையைக் காரணமாகச் சொ ல்லக்கூடாது, ஏனெனில் தற்போது மட்டும் துள்ளி குதித்து ஓடியா வருகிறார்!)

    ReplyDelete
  20. நாட்டின் பொருளாதாரச் சுழலில் ஒரு கட்சி கட்டா யம் ஐந்தாண்டுகாலம் ஆட்சிசெய்யவேண்டும். ம ଡ଼'அ3ண்டும் மீண்டும் தேர்தல் என்பது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குழைத்துவிடும்.

    ஜெ. வின் கூற்று எனக்கும் சரியென்றே படுகிறது. கருணாநிதிக்கு அறுதிபெருபான்மை இல்லை. இவர் கூட்டணியின் ஆதரவில் வாழ்கிறார். அதா வது இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டிலி ருந்து மின்சாரம் அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏதாவது பிரச்சினையில், பக்கத்து வீட்டுக்காரர் மி ன்சாரைணைப்பினை துண்டித்தால்? இவர் கதி?

    ஏனென்றால், தமிழக காங்கிரஸ்காரர்களின் செயல்பாடுகள் ஊரரி ந்ததே! பாமகவினை கேட்கவே வேண்டாம்.

    ReplyDelete
  21. சில மறுமொழிகள் சில காரணங்களால் நீக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete
  22. இந்த விஷயத்தில் ஜெயலலிதா மிக மோசமான தன் நடவடிக்கைகளால் தமிழகத்தை மிகவும் வெட்கப்படவே வைத்துள்ளார். CNN-IBN தேர்தல் நிகழ்ச்சியில் தோன்றிய ராஜ்டீப் பேச்சில் இருந்த கேலியும் கிண்டலும் அதை உறுதிப்படுத்தியது. ஆனாலும் இது புது விஷயமில்லை என்பதை நான் முன்பு எழுதிய என் பதிவு வலியுறுத்தும்.
    இதை கருணாநிதிஆரம்பித்தார் என்பது தேவையற்ற பொய் என்பது மட்டுமல்ல வெத்து சப்பைக்கட்டு.

    ReplyDelete
  23. நடுநிலையோடு பதிவு எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.


    (though this is not related to this post) I feel that the above comment (where the Neutral post has been cheered shows a very worrying trend.... that most blogs have become partisan and bend on supporting one side or another (especially in literary circles)

    ReplyDelete
  24. ஜெயலலிதாவாவது எதிர்க்கட்சியைக் கீழ்த்தரமாகத் திட்டினார். வாக்குப்போட்ட மக்களைத் திட்டவில்லை. மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லுமளவுக்கு அவருக்கு முதிர்ச்சி இருக்கிறது. ஆனால் மக்களையே சோற்றாலடித்த பிண்டங்கள் என்று அறிக்கைவிட்டவரைவிட ஜெ. பன்மடங்கு அரசியல் நாகரீகம் உள்ளவர் தானே?
    பன்னீர்ச்செல்வத்தையாவது பதவியேற்பு விழாவுக்கு அனுப்பியிருக்க வேண்டும். முன்பு ஸ்டாலின் ஜெ.வின் பதவியேற்புக்குப் போய் ஏற்படுத்திய முன்மாதிரியைச் சமப்படுத்தியிருக்கலாம்.

    ReplyDelete
  25. காமராஜர் சொல்லிவிட்டுப்போன "ஒரே குட்டையில் ஊறிய மட்டை" க்ளிஷே மீண்டும் "காமராஜர் ஆட்சி" ஏற்படும் வரை போகாது.

    அதுபோக, சாம் சொன்னமாதிரி இப்போதைய அரசியல் (அ)நாகரிகத்தை கருணாநிதி ஆரம்பித்து வைத்தார் என்பது பொய். வெற்றி பெற்றவர் தோற்றவரை மதிப்பது என்பதும், தோற்றவர் தோல்வியை ஏற்றுக்கொள்வது என்பதும் கருணாநிதிக்கும் காமராஜருக்கும் இருந்த கண்ணியமான உறவோடு முடிந்துவிட்டது. தன்னிடம் தோற்றவரை அநாகரிகமாக நடத்தும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது "பொன்மனச் செம்மல்" எம்.ஜி.ஆர். அதை பிறகு கருணாநிதியும் கற்றுக்கொண்டது தான் வருத்தத்திற்குரியது.

    அதேமாதிரி "சட்டசபை செத்துவிட்டது" என்று சொல்லி சட்டசபைக்குப் போகாமலே மாதாமாதம் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போடும் பழக்கத்தை ஆரம்பித்துவைத்தவரும் அதே பொமசெ தான்.

    ReplyDelete
  26. There is a marked difference between what JJ and MK spoke. MK made that reference in his address to his MLAs, that too in the context to warn them against any provocation by the ADMK MLAs. On the other hand JJ addresses public through the media. The concern of MK is understandable as he is running a minority government and he cannot afford to have any serious trouble in the Assembly. In my opinion the Assembly 1996-2001 was run by PTR in a more matured and decent way than the Assemblies of Mr.Muthiah and Mr.Kalimuthu.

    It is also my opinion that Dravidian Parties are not as violent as other parties and it is not an exaggeration that their leaders are ridiculed as cowards by the extremist groups. The credit for veering our youth from the extreme tamil nationalist movements should go ironically to CNA, MK, MGR etc., It was Congress which planned and executed mass murders, runs into thousands after Indira Gandhi’s death. BJP from the days of Jansangh or Hindu Maha Sabha believes in blood and death to gain strength. TN went through the polls in a highly surcharged atmosphere but totally peaceful except a murder a suicide and few stone throwing incidents since, Dravidian parties don’t have a Raju Bhaiyya or Taslimuddin among them.

    ReplyDelete
  27. " அதற்கு பதிலாக அவர்களைத் திட்டியிருப்பது கண்டிக்கத்தகுந்த செயல். "
    I too condemn what JJ has said. I believe she will change her decisison as time goes by.(There is a big difference betwenn the attitude of Karunanidhi and Jayalalitha).
    I was never a big fan of MGR , but telling "எம்ஜியார் ஆரம்பித்து வைத்த hate politics அவர்வழியில் தொடர்கிறார். " is too much.

    As you said in your OP , Communist are very good in arguing but looking at what is happening in the centre , there is not much they can do.(They couldn't do anything when Uncle SAM wanted Manisankar IYER to be replaced by their white house buddies , they did nothing when maran was draining the Ministry Revenue, for that matter Even P.chidambaram couldn't talk.)

    I am more interested in seeing the governance of this government.

    ReplyDelete
  28. விஷப்பாம்புகள் என ஆரச்ம்பித்து எச்சரிக்கை மணி கொடுத்தவர் பெரியவர்.
    பதிலுக்கு 'ஜெ'யின் ஆணவப்பேச்சு உனக்கு நான் எவ்வகையிலும் சளைத்தவள் இல்லை என்பதையே காட்டுகிறது!

    இ.ஒ.கு.ஊ.ம.கட்சி என்று இரண்டு பேரும் சேர்ந்து புதுக்கட்சி ஆரம்பித்து வரலாறு படைக்கலாம்!!

    ReplyDelete
  29. அரசியல் சம்பந்தம் இல்லாமல் ஒரு பின்னூட்டம்: நடனமாடுபவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்பது அந்த தொழிலில் உள்ள அனைவரையும் இழிவு படுத்துவதாக இருக்கிறது. Please do not generalize.

    ReplyDelete
  30. ஐயா, யார்தான் தோல்வியை ஏற்றுக்கொண்டார்கள்? மு.க, ஜெயா இருவரும் திருடர்கள். இவர்கள் திருந்தப் போவதில்லை. இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி ஆட்சி அமைப்பது தமிழகத்தின் சாபக்கேடு!

    ReplyDelete
  31. ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு சட்டசபைத் தொடர் தொடங்கும் பொழுதும் முதல்வர் எதிர்க் கட்சித் தலைவரை எதிர் கொண்டு அழைப்பதென்ன, அவர்கள் இருவரும் ஒன்றாகச் சிரித்தபடி தேநீர் அருந்துவதென்ன, பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி! ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கினாலும் தரக்குறைவான, தனிநபர் தாக்குதல் நடத்துவதில்லை! ஏன், பரம வைரிகளான சோனியாவும் அத்வானியும் கூட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது ஒருவரை ஒருவர் நலம் விசாரிப்பது என்று நாகரீகமாகவே நடந்து கொள்கின்றனர்.

    இந்நிலை தமிழகத்தில் என்றுமே வராது என்றுதான் ஜெ.வின் ஜெயா டிவி பேட்டியை வைத்துப் புரிந்து கொண்டேன். நான் திமுகவினர் ஒன்றும் சொக்கத் தங்கம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் ஜெ. அளவுக்குக் கேவலமாகக் கீழிறங்கி ஒரு தலைவர் பேச முடியாது என்பதைக் கண்கூடாகவே அனைவரும் கண்டோம்.

    என்ன பிரச்சினை என்றால் ஜெ. இருந்த வரை அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்தான் பதில் சொல்வார், கேவலமாகத் திட்டுவார். பரம்பரை எதிரிகள் நீங்கள் இனி உள்ளே நுழைய முடியாது என்பார். கைப்பிள்ளையாகச் சபாநாயகரும் வெட்கமின்றிச் சார்பு நிலை எடுப்பார். அதெல்லாம் இல்லாத, ஜனநாயக முறைப்படி ஒரு சட்டமன்றம் நடப்பதை ஜெ. தன் வாழ்நாளில் காணப் போவதில்லை என்பதைத்தான் அவரது ஆணவ எதேச்சிகாரப் பேச்சு நினைவுறுத்தியது.

    மார்ச் 25, 1989ம் தேதி இவருக்கு நடந்ததைச் சொன்னார் - அது உண்மை, கேவலமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கு சற்றே முன்னால் என்ன நடந்தது என்பதை மட்டும் சாதகமாக மறந்து விடுகிறார் என்பதுதான் கேலிக் கூத்து.

    மற்றபடி இப்படி hatred politics ஐ ஆரம்பித்து வைத்தது திமுக என்று சொன்னால் அதுதான் ஜோக்.

    ReplyDelete
  32. பிரபு ராஜதுரை, மிக அருமையாக எழுதியுள்ளீகள். எனது கருத்தும் அதுவே!

    ReplyDelete
  33. அதீதமான கண்டனமாக எனக்குத் தெரிகிறது. பின்னூட்டமிட்ட பலர் திமுகவும் அப்படித்தான் என்பதையும் கூறிவிட்டு ஜெயலலிதாவை பலமாகக் கண்டித்திருக்கிறார்கள். துரை முருகன் இந்த அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். எதிர்கட்சி வரிசையில் அமர்வதற்கு தயாராகும்போது பழையன நினைவுக்கு வருவதையும் அதை சுட்டிக் காட்டுவதையும் காழ்ப்பை உமிழ்ந்திருப்பதாகச் சொல்வது மிக அதிகம். பெண்ணென்றும் பாராமல்... இல்லை - பெண் என்பதனாலேயே இழிவுகளைப் பெற்ற ஒரு பெண்ணின் சற்றே மீறிய சொற்கள். அவ்வளவுதான். திமுக நல்ல பெயர் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் நச்சுப் பாம்புகள் எதிர்கட்சியினர் என்று போதிக்கப்பட்டவர்கள் எவ்விதமாக யோசிப்பார்கள்? பத்ரி எதிர்பார்க்கும் பயனுள்ள விவாதம் எப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கியிருக்கிறது?

    முன்பு திரைப்படங்களில் நடித்தபோது ஜெயலலிதா நடனமாடியிருக்கிறார். அவரை நடனமாது என்று அழைக்கும் நண்பரே! தமிழ்நாட்டில் அதற்குப் பின் எவ்வளவோ நடந்துவிட்டது. சிலநாட்கள் முன்புவரை அவர்தான் முதலமைச்சர். அறிந்து கொள்ளுங்கள். காழ்ப்பென்னும் சொல்லுக்கு விளக்கம் உங்கள் விவரிப்பு.

    எப்படிப்பட்டவர்களை நச்சுப் பாம்புகள் என்று அழைக்கவேண்டும்? தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவருக்கு இது தெரியாமலா இருக்கும்? தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அப்படி அழைக்க வேண்டுமென்று எந்த காப்பியம் சொல்லியிருக்கிறதோ தெரியவில்லை. அதிக எண்ணிக்கையில் எதிர் கட்சியினர் இருப்பது மன உளைச்சலைத் தருகிறது என்று கூறியிருக்கிறார். 2006 தேர்தல் முடிவுகளின் ஒரு ஆதரவான செய்தி எப்படி ஒருவருக்கு மன உளைச்சலைத் தரமுடியும்? தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை எதற்காக இந்த வார்த்தைகளைக் கூறி தயார் செய்கிறார்? சட்ட மன்றத்தில் நடக்கப் போவது விவாதங்கள் மட்டும்தானே? அல்லது வேறு ஏதாவதா?

    கற்றோர் மத்தியில் தொடர்ந்து மென்பார்வையே பெற்று வருகிறார் கலைஞர். எப்படி? எனக்கு இது புரியாத புதிர்.

    நடராஜன்.

    ReplyDelete