Monday, May 01, 2006

மாறன் conflict of interest - தொடர்ச்சி

சென்ற பதிவின் தொடர்ச்சி.

இட்லிவடை மூலமாக இந்தியா டுடே செய்தி படிக்கக் கிடைத்தது. அதில் வைகோ மாறன்(கள்) மீது வைக்கும் குற்றச்சாட்டு (இதைக் 'குற்றச்சாட்டு' என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ சொல்லவருகிறார்.) ஒன்று காணக்கிடைத்தது.
"ஏர்செல் நிறுவனம் ரூ. 4,800 கோடிக்கு மலேசியாவை சேர்ந்த மேக்சிம் (sic) என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த மேக்சிம் (sic) நிறுவனத்துடன் சன் டிவி 'ஆஸ்ட்ரோ' என்கிற பெயரில் ஒப்பந்தம் செய்துள்ளது" என்று குற்றம் சாட்டுகிறார் வைகோ.
இந்தியா டுடே கவனக்குறைவாக மேக்சிஸ் (Maxis) என்ற பெயரை அப்படி எழுதினார்களா இல்லை வைகோவே அப்படித்தான் சொன்னாரா என்று தெரியவில்லை.

சில தகவல்கள்:

1. மலேசியாவின் முன்னணி மொபைல்போன் நிறுவனம் மேக்சிஸ் - Maxis Communications. இந்த நிறுவனம் மலேசியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய பங்குகள் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரும் தமிழருமான ஆனந்த கிருஷ்ணன் என்பவரது வசம் உள்ளது. (பெட்ரோனாஸ் டவரைக் கட்டியவர்)

2. அதேபோல மலேசியாவின் (தற்போதைக்கு) ஒரே செயற்கைக்கோள் வழி DTH சேவையை அளிக்கும் நிறுவனம் "ஆஸ்ட்ரோ" எனும் பிராண்டில் செயல்படும் MEASAT Broadcast Network Systems. இந்த நிறுவனமும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இந்த நிறுவனத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவர் ஆனந்த கிருஷ்ணன்தான்.

3. மலேசியாவில் ஆஸ்ட்ரோ மூலம் சன் டிவி ஒளிபரப்பாகிறது. சன் டிவி ஏற்கெனவே ஆஸ்ட்ரோவுடன் ஒரு joint venture வைத்துள்ளது. அதன்மூலம் தமிழில் நிகழ்ச்சிகள் தயாரித்து உலகெங்கும் வழங்குவதாகச் சொல்லியுள்ளனர். மேலும் சன் டிவி குழுமம் சமீபத்தில் South Asia FM என்ற பெயரில் பல ஊர்களுக்கான பண்பலை வானொலி உரிமங்களைப் பெற்றுள்ளது. இப்பொழுதுவரை South Asia FM என்பது சன் டிவி குழுமத்தில் 100% சப்ஸிடரி நிறுவனம். ஆனால் பிற நிறுவனங்களுக்கு 26% வரை பங்குகளை விற்பதாகச் சொல்கிறார்கள், அதில் மலேசியாவின் ஆஸ்ட்ரோ முன்னணியில் இருக்கிறதாம்.

4. சமீபத்தில் மேக்சிஸ் தமிழ்நாட்டின் செல்போன் நிறுவனமான சிவசங்கரனின் ஏர்செல்லை (அப்போலோ ஹாஸ்பிடல் குழுமத்தின் ரெட்டி குடும்பத்தாருடன்) இணைந்து வாங்கியது. அதுவரை ஏர்செல்லை வாங்க அல்லது அதில் முதலீடு செய்ய மூன்று முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சிகளில் கடைசியாக ஹட்ச் நிறுவனம் ஏர்செல்லை வாங்குவதை தொலைத்தொடர்பு அமைச்சகம் சில காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளவில்லை.

5. பின்னர் டாடா, பிர்லா இருவருக்கும் இடையே ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பங்குகள் தொடர்பாக மோதல் எழுந்தது. அப்பொழுது டாடாவின் பங்குகளை வாங்க மேக்சிஸ் முயற்சி செய்தது. ஆனால் கடைசியில் டாடா தன் பங்குகளை பிர்லாவிடமே விற்கவேண்டி வந்தது. (Because of existing shareholder agreements - matching rights)

6. அதன்பின் டாடா - மர்டாக் TSky திட்டத்தில் மாறன்(கள்) குறுக்குவழியாக உள்ளே நுழைய விரும்புவதாகவும், அதற்காக ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் வதந்தி/செய்தி.

இப்பொழுது வைகோவின் இந்தக் 'குற்றச்சாட்டு'. தயாநிதி மாறன் இதுதான் தவறாகச் செய்தார் என்று எதையும் வைகோ சொல்லவில்லை. ஆனால் by implication - இதைப் பார், அதைப் பார், ஏதோ நடந்துள்ளது... என்று சொல்ல வருகிறார். நியாயமற்றது என்றே தோன்றுகிறது.

வைகோ இப்படியான அவதூறுகளைப் பரப்பக்கூடாது. சரியாக நிரூபிக்கக்கூடிய சாட்சியங்கள் இருந்தாலொழிய தன்னிஷ்டத்துக்குப் பேசக்கூடாது.

ஆனால் அதே சமயம் பிரதமர் மன்மோகன் சிங், தயாநிதி மாறன் அமைச்சகம் கடந்த இரண்டு வருடங்களில் என்ன செய்துள்ளது என்பதைக் கண்காணிக்கவேண்டும். சந்தேகப்படும்படி ஏதேனும் இருந்தால் தயாநிதி மாறனின் அமைச்சரவையை மாற்றுவதில் தவறேதும் இல்லை.

9 comments:

  1. இதைத்தான் சொல்ல வருகிறேன். இது, அது என்கிறாரே தவிர, ஆதாரத்துடனான குற்றச்சாட்டே இல்லை.

    நிச்சயம் மன்மோகன் சிங் ஆய்வு செய்வார், தேர்தலுக்குப் பிறகு.

    சந்தேகப்படும்படி ஏதாவது நடந்திருந்தால், இலாகா மாற்றமல்ல, தூக்கி அடிக்கப்படுதலே சரி.

    ReplyDelete
  2. தன்னிச்சையாக, செயலி ஆதாரங்களைக்கொண்டு பேசுவதுதான் நம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாயிற்றே!. இதில் வைகோவை மட்டும் சொன்னால் எப்படி? என்னால் முடிந்தவரை வீசுவேன், முடிந்தால் நீ தடுத்துக்கொள், என்ற ரீதியில் தான் அரசியல் பேச்சுக்கள் ந டைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  3. நீங்கள் என்னதான் ஆதாரத்துடம் சொன்னாலும் ..திரு.கோபால்சுவாமி யை ஆதரிக்கும் கூட்டதின் காதில் விழுப்போவது இல்லை.

    அன்றே சொன்னார் பெரியார் இப்படி:

    பெரியார் சொன்னது:

    நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்..

    பெரியாருக்கு அன்றே தெரிந்துது இருக்கிறது.

    ReplyDelete
  4. தயாநிதி மாறனின் இந்தியா டுடே பேட்டியின்படி,

    1. சன் டிவியின் பிரோமடராக அவர் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பது அவருக்கே தெரியாதாம்.
    2. சன் டிவி தொலைபேசி, பிராட்பேண்டு தொழில்களில் நுழையத் திட்டமிட்டிருப்பதையும் அவர் ஒதுக்கித் தள்ளுகிறார்.
    2. அவர் 91% மேல் பங்கு தாரர் ஆக உள்ள டி கே என்டர்பிரைஸஸ் பற்றிய கேள்வியில், அவருக்கு அதைப் பற்றி எதையும் தெரியாதது போல பேசுகிறார். கொஞ்சம் தெளிவில்லாமல் இருப்பத்து போலப் படுகிறது.

    ReplyDelete
  5. Badri,

    Maxis and Astro are both owned by Mr. Ananda Krishnan, and SUN TV started joint venture with Astro and some selected programmes which were aired in only Tamil channel Vanavil in Astro until last year. When SUN became 24 hours channel in Astro, Jaya TV programmes are shown in Vanavil nowadays.

    Raj

    ReplyDelete
  6. "அதேபோல மலேசியாவின் (தற்போதைக்கு) ஒரே செயற்கைக்கோள் வழி DTH சேவையை அளிக்கும் நிறுவனம் "ஆஸ்ட்ரோ" எனும் பிராண்டில் செயல்படும் MEASAT Broadcast Network Systems."

    தற்போது mitv எனப்படும் புதிய நிறுவனமும் இந்த சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது.



    சிறு குறிப்பு: ஆனந்த கிருஷ்ணன் தமிழ் ஈழ வம்சாவழி தமிழர் .

    மதன்.

    ReplyDelete
  7. From what we are reading in news paper and from the way how the things are coming along( Facts), there is a strong suggestion that Mr.Dhayanidhi maran is misusing his power.Also you can't expect some one (Vaiko) to come and give you the proof.This is an allegation , which has to be cleared by the government and the justice department.
    When you investigate the murder case , you don't disqualify a suspect in the first step. We look for the motive , the suspect and then it goes to the trial.
    I think Maran and P.Chidambaram joint venture is taking Indian Ministry for SIX.

    Tell you what try not to buy His Company Stocks and read twice what you have written.It looks to me you are conflicting yourself by hiding some informations , which may not influence your views(Read what siva kumar has to say, Looks like Indian cabinet Minster and your IDOL is a JOKER !!!)

    ReplyDelete
  8. "நியாயமற்றது என்றே தோன்றுகிறது."

    I don't think so.

    Do read the article below, by Gurumurthy

    http://www.newindpress.com/column/News.asp?Topic=-97&Title=S%2EGurumurthy&ID=IE620060502001537&nDate=&Sub=&Cat=&

    It is fun.


    Anonymous Coward

    ReplyDelete
  9. சன் குழுமத்தின் மீது ஏன் இந்த வெறுப்பு?

    அங்கே வேலை கிடைகவில்லையோ?

    இந்த வலைப்பதிவில் "சன் குழுமத்தின்" எதிர்ப்பு செய்திகளே அதிகமாக உள்ளன. இவர் தனுடைய வலைப்பதிவிற்க்கு thoughts என்ற தலைப்பிற்க்கு பதிலாக "சன் குழுமத்தின் எதிர்ப்பாளன்" என்று வைத்துகொள்ளாம். ஆதாரம் இல்லத செய்திகளே பெரும்பாலும் உள்ளன.

    தமிழ்னுக்கு எப்போதும் அடுத்தவர் உயர்ந்தவனாக இருப்பதைப் சகித்துக் கொள்ளமுடியாது, குறிப்பாக நம்ம பத்ரி சேஷாத்திரி மாதிரி தமிழ்ன் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.

    தமிழ்னின் வெற்றியை சகித்துக் கொள்ளமுடியாத தமிழ்ன் பத்ரி சேஷாத்திரி வாழ்க.

    வாழ்க தமிழ்ன்! வளர்க அவன் குறைகூறும் உயர்ந்த பன்பு!

    "வந்தவரை வாழவைக்கும் தமிழகம்"
    என்ற கூற்றை மாற்றி
    "வென்றவரை குறைகூறும் தமிழகம்"
    என்று வைதுகொள்வோம்

    ReplyDelete