'வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை' என்ற பெயரில் ஒரு போஸ்டர் தெருவில் ஒட்டப்பட்டுள்ளது. பெரியார், வி.பி.சிங் படங்கள், வெள்ளைத் தாளில் கறுப்பு எழுத்தில்.
அதில் VOICE எனப்படும் [தொண்டு] நிறுவனத்தை நடத்தி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பல பொதுநல வழக்குகளை நடத்தும் K.M.விஜயன் நீதிபதியாக நியமிக்கப்படக்கூடாது என்று எழுதியிருந்தது.
K.M.விஜயன் என் மதிப்புக்குரியவர். ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில் (1991-1996) விஜயன்மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது. அதுவும்கூட இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு ஒன்றில் ஈடுபட்டதால்தான் என்று நினைக்கிறேன்.
இப்பொழுது விஜயன் [சென்னை உயர்நீதிமன்ற?] நீதிபதியாக நியமிக்கப்படலாம் என்று விஷயம் கசிந்துள்ளதால்தான் இந்த தெரு போஸ்டர் கேம்பெய்ன் நடக்கிறது.
விஜயனது பெயர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்துள்ளது. அப்படிப்பட்டவர் நீதிபதியாக இருந்தால், அவர் ஒருபக்கச் சார்புடையவராக இருப்பார், அதனால் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று பலர் கருதுவது நியாயம்தான். ஆனால் இந்த ஒரு விஷயத்துக்காக அவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று கேட்கலாமா? இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வந்தால் அது விஜயனுக்கு அனுப்பப்படாமல் இருக்க தலைமை நீதிபதி முடிவு செய்யலாம். அல்லது வாதி/பிரதிவாதிகூட தங்களுக்கு நீதிபதி விஜயன்மீது நம்பிக்கை இல்லை, வேறு நீதிபதிக்கு மாற்றல் வேண்டும் என்று விண்ணப்பிக்கலாம்.
ஆனாலும் என் கருத்து: பொது வாழ்க்கையில் ஒருசில கொள்கைகளைக் கடுமையாக முன்வைத்து அதற்காகப் போராடுகிறவர்கள் நீதிபதி பதவி கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏனெனில் Justice must not only be done, but must be seen to be done.
வாசகனாதல்
11 hours ago
His name and others including K.Chandru has been cleared after
ReplyDeletevigilance enquiry.So it is a question of time and formalities.
Vijayan argued against making tamil language teaching
compulsorily in schools.An advocate can argue or file a
case in his professional capacity.
That cannot be a bar in his appointment. Jethmalani defended
one of the killers of Mrs.Gandhi.
But he became Minsiter for Law
and Justice.So these protests are
irrelevant.
//K.M.விஜயன் என் மதிப்புக்குரியவர். //
ReplyDeleteஇடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகள், தமிழ்க் கல்விக்கு எதிரான வழக்கு போன்றவைத் தவிர 'பொது நல' வழக்குச் செய்திகளில் இவரைப் பற்றி நான் படித்ததில்லை. அவர் மீது உங்களுக்கு மதிப்பு வர வேறு காரணங்கள் உண்டா?
திரு.விஜயன் தொடர்ந்த வழக்கினால்தான் 50% இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கானோர் உயர்கல்வி பெற முடிந்தது. நுழைவுத் தேர்வு ரத்தினை எதிர்த்து
ReplyDeleteதொடர்பட்ட வழக்கிலும் இவர்தான் வாதாடினார்.ஜெ. ஆட்சிக்காலத்தில் இவர் மீது
கொலை வெறித்தாக்குதல் நடந்தது. 69% இட ஒதுக்கீடு குறித்து இவர் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.இட ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ரத்து இரண்டும் பொது நலப் பிரச்சினைகள்தான். சமூக நீதிக்கு எதிரானவர் இவர் என்று கூறுபவர்கள் அரசியல் சட்டம்
கூறும் சமவாய்ப்பு, பாரபட்சமின்மை போன்றவற்றிற்கு எதிரானவர்கள். சமூக நீதி என்ற பெயரில்
ஜாதி வெறி பிடித்து அலையும் ஒரு கூட்டம்தான் இவர் நீதிபதியாவதை எதிர்க்கிறது. இந்த
எதிர்ப்பு பலிக்காது. இவர் நீதிபதியானால் 69% இட ஒதுக்கீடு வழக்கு பாதிக்கப்படாது. ஏனெனில் வாய்ஸ் என்ற அமைப்பின் சார்பில்தான் அது தொடுக்கப்பட்டுள்ளது. விஜயன் அதில் வாதாட முடியாது.
விஜயன், கே.சந்துரு போன்றவர்கள் நீதிபதிகளாவதை வரவேற்கிறேன். வீராச்சாமிகளும், வி.ராமசாமிகளும்தான் நீதிபதிகளாக வேண்டுமா. வி.ராமசாமி மீது கண்டனத்தீர்மானம்
கொண்டு வந்த போது அவர் பிற்பட்ட ஜாதி என்ற காரணத்தினைச் சொல்லி அவரை ஆதரித்தவர்
வீரமணி. வைகோ, கலைஞரும் அவரை ஆதரிக்க அதே காரணம். இவர்களின் சமூக நீதியின்
லட்சணம் இதுதான். கண்டனத்தீர்மானத்தினை கொண்டு வந்தது இடது சாரிகள். வி.ராமசாமி
மீது குற்றம் சாட்டியவர்கள் இந்திரா ஜெய்சிங் போன்ற சமூக முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட
முற்போக்கு, இடது சாரி வழக்கறிஞர்கள்.இதையெல்லாம் சொல்லாமல் இட ஒதுக்கீட்டிற்கு ஜே போடுவது 'பொலிடிகலி கரெக்ட்' என்று சிலர்
நினைக்கலாம்.
http://ravisrinivas.blogspot.com/
கருத்துகள்,குறிப்புகள்,விமர்சனங்கள்,விவாதங்கள் A Blog in Tamil (Unicode Encoding).This is a 'Politically Incorrect' Blog, not a blog that reflects the bland 'left', 'secular' and 'progressive' views and cliches.
சுந்தரமூர்த்தி: விஜயனின் எல்லாக் கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடு கிடையாது. உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்னர் துக்ளக்கில் தான் சீனா சென்று வந்தது பற்றி அவர் எழுதியிருந்தார். சீனாவில் எவ்வாறு மைய அரசால் திட்டமிட்டபடி பொருளாதாரம் செலுத்தப்படுகிறதென்றும் இந்தியாவில் அவ்வாறு நடப்பதில்லையென்றும், சீனாவின் முறையே சரியென்றும் எழுதியிருந்தார். அது எனக்கு ஏற்புடையதல்ல.
ReplyDeleteஇட ஒதுக்கீட்டை நான் வரவேற்கிறேன். ஆனால் இட ஒதுக்கீடு 50% மேல் இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணமும். அந்த விதத்தில் அதற்காகப் போராடும் விஜயன்மீது நான் மதிப்பு வைத்துள்ளேன்.
தனக்கு என்றில்லாமல் ஒரு சமுதாயத்தின் நலன் என்று தான் கருதும் சில நோக்கங்களுக்காகப் போராடுபவர்கள்மீது நான் மதிப்பு வைத்துள்ளேன். உதாரணமாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீதும் மதிப்பு வைத்துள்ளேன்.
விஜயன் என் மதிப்புக்குரியவர் என்று சொல்வதால் என்மீது ஸ்பெஷல் சாயம் பூசப்பட்டால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.
//விஜயன் என் மதிப்புக்குரியவர் என்று சொல்வதால் என்மீது ஸ்பெஷல் சாயம் பூசப்பட்டால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.//
ReplyDeleteஇந்த ஆவேசம் எதற்கு என்று புரியவில்லை. இடஒதுக்கீடு வழக்குகளில் அவருடைய செயல்பாட்டை நீங்களே மென்மையாக விமர்சித்திருக்கும் நிலையில் வேறெந்த காரணத்திற்காக அவர் மீது மதிப்பு வந்தது என்ற தொனியிலேயே நான் கேட்டது. நான் கேட்டது எனக்கு தெரியாதவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதற்காகவே. அதாவது அவர் வேறெந்தெந்த பொதுநல வழக்குகளில் தீவிரமாக பங்கெடுத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் (தொழில்முறையில் அவர் வாதாடிய தனிப்பட்ட வழக்குகளைப் பற்றி எனக்கு ஆர்வமில்லை) தவிர யார்மீதும் சாயம் பூசும் முயற்சியெல்லாமில்லை என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன். அப்படித் தோன்றினால் மன்னிக்கவும்.
If the protest against K.M.Vijayan for this cases, then NO ONE (I repeat no one) who has ever argued in the court can become a judge.....
ReplyDeleteEvery lawyer at one point of his career would have defended a murder case...
Will you then say that he is partisan ????
Such protests show that there are still people who have no use ful work..
(By the way, I support reservations, but with one condition that children who parents are graduates should not be allowed quota, and they should compete under Open Quota only)
Is it 'seen to be done' or 'seem to be done'?
ReplyDeleteKMV was the Petitioner and appeared not as an Advocate but as a party in person in the reservation case. However, judicial appointments have nothing to do with the personal opinions of the candidates. Persons with divergent opinions bring dynamism into judicial pronouncements. In such cases, Mr.Chandru appears only for labours. Can his candidature be opposed on the ground that he would be pro labour?
Mr.Chandru appears only for labours.
ReplyDeleteNo he has appeared in other cases including cases of POTA detainees and journalists.