ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தமிழ் பாரம்பரியக் குழுமம், கலாசாரம் சார்ந்த ஒரு உரை நிகழ்ச்சியை நடத்திவருகிறது. நடக்கும் இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வெங்கட்நாராயணா ரோடு, தி.நகர்.
ஜூன் 5 அன்று, எஜ்ஜி உமாமஹேஷுடன் யுகமாயினி ஆசிரியர் சித்தன் கலந்துரையாடுவார். மிக வித்தியாசமான வாழ்க்கை முறை கொண்டவர் எஜ்ஜி. அவரது தளத்தில் அவரைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த உரையாடலில் முக்கியமாக (1) வடகிழக்கு இந்தியாவில் எஜ்ஜி பயணம் செய்தபோது பெற்ற அனுபவம் (2) பணம் பணம் என்று அலைவது பற்றி (3) குழந்தைகளை சீரழிப்பவர்கள் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே ஆகிய விஷயங்களை இவர் தொட்டுச் செல்வார்.
தெற்கின் காதல்
2 hours ago
No comments:
Post a Comment