ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று மாலை 5.30 மணி அளவில், ‘உரையாடல்’ அமைப்பினர் (சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர்) உலக சினிமா ஒன்றைக் காண்பித்து வந்தனர். அதற்கான முழு முயற்சியும் அவர்களுடையது. சிறு உதவிகளை நாங்கள் செய்தோம். முதல் மாதத்துக்குப் பிறகு கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் இந்தத் திரையிடல் நடைபெற ஆரம்பித்தது.
இப்போது சில காரணங்களால் ‘உரையாடல்’ நண்பர்களுக்கிடையே மனஸ்தாபம் என்பதால், வரும் 6 ஜூன் மாலையில் படம் திரையிடப்படுமா என்பதில் சந்தேகம் இருந்தது. சிவராமனிடம் பேசியபிறகு, இதனை நாங்களே தொடர்ந்து எடுத்து நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
ஜூன் 6 மாலை 5.30 மணிக்கு Paradise Now என்ற பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படும். (முழு விவரங்கள் இங்கே.)
ஞாயிறு என்பதற்குப் பதிலாக சனிக்கிழமை என்று மாற்றினால் உபயோகமாக இருக்கும் என்று ஒரு கருத்து வந்தது. பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் பல சனிக்கிழமைகளில் நடப்பதால், மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்று மாற்றிவிடலாம் என்றும் எண்ணியுள்ளோம். அதைப்பற்றி அடுத்து தகவல் தெரிவிக்கிறோம்.
ஆலயம்
1 day ago
No comments:
Post a Comment