இன்று தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழா நடந்தது . அப்போது பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி.டேவிதார், இ.ஆ.ப, யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணையை அறிவித்தார். இந்த ஆணை சென்ற வாரம் சனிக்கிழமை அன்று தமிழக முதல்வருடைய கையொப்பத்தைப் பெற்றுள்ளது. அதன் சுருக்கம்:
1. இனி தமிழக அரசு நிறுவனங்கள், அதன் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவை TAM, TAB மற்றும் பிற பிரத்யேக 8-பிட் குறியீடுகளிலிருந்து 16-பிட் தமிழ் யூனிகோடுக்கு மாற வேண்டும்.
2. 16 பிட் தமிழ் யூனிகோட் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக் குறியீடாக இருக்கும்.
3. எங்கெல்லாம் தமிழ் யூனிகோட் வேலை செய்யவில்லையோ அல்லது பிரச்னைக்குரியதாக உள்ளதோ, அந்த இடங்களில் மட்டும் TACE-16 குறியீடு மட்டுமே ஒரு மாற்றுக் குறியீடாகப் பயன்படுத்தப்படலாம்.
ஆக, இனி தமிழ் யூனிகோட், TACE-16 ஆகிய இரண்டு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகள். அதிலும், TACE-16 என்பதை, தமிழ் யூனிகோட் உடையும் அல்லது பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே பயன்படுத்தலாம்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
6 hours ago
இதன் சாதக பாதகங்கள்???
ReplyDeleteராமதுரை எழுதியது
ReplyDeleteதமிழக அரசின் இந்த ஆணை பொதுவில் தமிழுக்கு மிக நல்லது என்று கருதுகிறேன். இது பற்றி விளக்கவும். அதே நேரத்தில் தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்கள், தமிழ் மாத வார வெளியீடுகள் முதலியவற்றின் நிலை என்ன. அரசின் ஆணை அவர்களைக் கட்டுப்படுத்துமா? அவையெல்லாம் மாறிக்கொள்ளாவிட்டால் நிலைமை என்ன ஆகும்? இதை சற்று தெளிவாக விளக்கவும்.
ஆம்,
ReplyDeleteஇது எந்தளவு பயனுடையது .. சற்றே விளக்கவும்
நன்றி
முதலில் இந்த ஆணை தமிழக அரசு நிறுவனங்களையும் அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்களையும் மட்டுமே கட்டுப்படுத்தும். கணினி ஹார்ட்வேர் விற்பனை செய்பவர்கள் இனி யூனிகோட் இயங்கக்கூடிய கணினிகளைத்தான் விற்க முடியும். அடுத்து மென்பொருள் உருவாக்குபவர்கள், தமிழ் யூனிகோடுக்கான சப்போர்ட் இருந்தால் மட்டுமே அந்த மென்பொருள்களை அரசும் அரசு நிதி உதவி செய்யும் நிறுவனங்களும் வாங்கும்.
ReplyDeleteஅரசுதான் தமிழகத்தின் முதன்மைச் சந்தை. கல்வி நிறுவனங்கள் அடுத்த பெரிய சந்தை. எனவே இந்தச் சந்தைகளைப் பிடிக்க விரும்பும் அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் தமிழ் யூனிகோட் இயங்குமாறு செய்யவேண்டும்.
நல்லதா? கெட்டதா?
நல்லதுதான்.
//ராமதுரை எழுதியது
ReplyDeleteதமிழக அரசின் இந்த ஆணை பொதுவில் தமிழுக்கு மிக நல்லது என்று கருதுகிறேன். இது பற்றி விளக்கவும். அதே நேரத்தில் தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்கள், தமிழ் மாத வார வெளியீடுகள் முதலியவற்றின் நிலை என்ன.//
இணையத்தில் பெரும்பாலான தளங்கள் ஒருங்குறியில் தானே உள்ளன
//இதன் சாதக பாதகங்கள்??? //
ReplyDeleteசாதகங்கள்
ஒரு வழியாக ஒருங்குறி என்று முடிவிற்கு வந்தாகிவிட்டது
பாதங்கள்
எந்த ஒருங்குறி என்ற முடிவிற்கு வர வில்லை !!
I asked you as to whether NHM is TACE-16 compatible and you replied in the affirmative.
ReplyDeleteBut then in the settings for NHM by right-clicking the nhm icon, I do not see any provision for the same.
Where am I making a mistake?
Regards,
Dondu N. Raghavan
Dear Raghavan,
ReplyDeleteWe have already developed TACE-16 support in NHM Writer & NHM Converter and were giving it for private circulation to those it is needed.
We will put it in public domain in 2 or 3 days and will inform you accordingly.
K.S.Nagarajan,
New Horizon Media.
பேஜ்மேக்கரில்லாமல் புத்தகங்கள் தயாரிப்பது கஷ்டம். துரதிர்ஷ்டம் அதில் யூனிகோட் தமிழ் வராது. ஏன், CDAC'ன் LEAP-பிலும் யூனிகோட் தமிழ் வராது. என்ன செய்வது?
ReplyDeleteபி.எஸ்.ஆர்,
//இதன் சாதக பாதகங்கள்??? //
ReplyDeleteMay be companies that want to do business with Tamilnadu govt. will create software compatible of Tamil-Unicode.
So more applications to support Tamil.
Dear Badri,
ReplyDeleteApologise interuption. Though out of subject, pl clarify if possible. Unicode doesnot work on Adobe products, is there any way out to use them in adobe pm/ps and like products, other than converting font to TSCII or TAB or PS, and the same for other indian languages also.
for email followup. thanks
ReplyDeleteமுதலில், இந்த ஆணை அரசு நிறுவனங்களையும் அரசு உதவி பெறும் நிறுவனங்களையும் மட்டுமே கட்டுப்படுத்துகிறது.
ReplyDeleteஅடுத்து, அடோபி, கோரல், குவார்க் பொருள்களில் யூனிகோட் வேலை செய்வதில்லை என்பது சரியல்ல; புதிய (லேடஸ்ட் வெர்ஷன்) மென்பொருள்களில் யூனிகோட் Complex Rendering (Level 2 Support) இருப்பதில்லை. அங்கெல்லாம் TACE-16 பிரச்னை ஏதும் இன்றி வேலை செய்யும். நாளை இந்த மென்பொருள்களில் யூனிகோட் காம்ப்லெக்ஸ் ரெண்டரிங் வேலை செய்துவிட்டால், TACE-16 என்கோடிங்கை முற்றிலுமாக கழற்றிவிட்டுவிடலாம்.
பத்ரி,
ReplyDeleteநீங்கள் மைக்கேல் கப்லான் யூனிகோடு தமிழ் பற்றிப் பேசியதைக் கேட்கவில்லை போலிருக்கிறது. முதலில் அவர் பேச்சை வலையில் பார்த்து விட்டு வாருங்கள்.
//Unicode doesnot work on Adobe products, is there any way out to use them in adobe pm/ps and like products, other than converting font to TSCII or TAB or PS, and the same for other indian languages also.//
ReplyDeleteVidhoosh: Current Adobe products (as well as Corel Draw, Quark Express) etc. cannot deal with Unicode Level 2 fonts. That is why most of us convert Unicode to 8 bit fonts and use them (TAM, TAB, Shreelipi...). However, TACE-16 should work in Adobe Pagemaker or Photoshop. I have not yet tested this. I will write about this after testing.
So, Tamil Nadu GO has taken this into account.
thanks badri :)
ReplyDelete