தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். ஐம்பெருங்காப்பியங்கள் தவிர்த்த பிற அனைத்தும் தனிப்பாடல்களின் தொகுப்புகள் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பைச் சார்ந்து எழுதப்பட்ட பல பாடல்கள். இவை அகம், புறம், பக்தி, அறிவுரைகள் என்ற நான்கில் ஏதோ ஒன்றைச் சார்ந்ததாக இருக்கும். காதல் மற்றும் அதனைச் சார்ந்த ஊடல், கோபதாபங்கள் அனைத்தும் அகம். அது அல்லாத பிற அனைத்தும் - நட்பு, வீரம், போர், பரிசில் பெறப் பாடப்படும் பாடல்கள் - புறம். பரிபாடல் ஒன்று மட்டும்தான் தீவிர பக்தி இலக்கியம். திருக்குறள் முதலாகப் பல, ‘இதைச் செய், அதைச் செய்யாதே’ எனப்படும் அறிவுரைகள்.
ஐம்பெருங்காப்பியங்களில் நம்மிடம் முழுமையாகக் கிடைப்பவை மூன்றே. அவற்றில் பிற்காலத்தில் எழுதப்பட்ட பல இடைச்செருகல்கள் இருக்கலாம். இந்த மூன்றிலும், அகம், புறம், பக்தி, அறிவுரை ஆகிய நான்கும் கலந்துவருவதைக் காணலாம்.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய இந்த மூன்றையும் எளிய தமிழில், உரைநடை நாவல் வடிவில் கொண்டுவர எண்ணினோம். அத்துடன் பிற செம்மொழி இலக்கியங்களையும் அனைவரும் எளிதில் படிக்கும்வண்ணம் கொண்டுவரப்போகிறோம். வரும் மாதங்களில் அவை வெளியாகும்.
இப்போது வெளியாகியுள்ள மூன்று புத்தகங்களில் இரண்டு, கன்னி முயற்சி. ராம்சுரேஷ், ஜவர்லால் ஆகியோர் பதிவுலகத்துக்குத் தெரிந்தவர்கள் என்றாலும் அவர்கள் எழுதி அச்சாகும் முதல் புத்தகங்கள் இவை. மூன்றாவதை எழுதியுள்ளவர் என்.சொக்கன், ஒரு வெடரன். சொக்கனின் முத்தொள்ளாயிரம் விரைவில் வெளியாக உள்ளது.
எங்களது இந்த முயற்சியில் பல குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டினால் வரும் பதிப்புகளில் எப்படி அவற்றை மேம்படுத்தலாம் என்று பார்ப்போம். நிஜமான சவாலே இனிதான் வரப்போகிறது. திருக்குறள், தொல்காப்பியம், பரிபாடல், நெடுநல்வாடை, பதிற்றுப்பத்து எனப் பலவற்றையும் எப்படி சுவை குன்றாமல், போரடிக்காமல் உரைநடை வடிவம் கொடுக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.
பா.ராகவனின் பதிவு
ஜவர்லால்: சிலப்பதிகாரம்
என்.சொக்கன்: மணிமேகலை
ராம்சுரேஷ்: சீவக சிந்தாமணி
அருமை. நல்ல முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteAfter reading this I'm having a positive feeling about Tamil Nadu
ReplyDelete-Senthil
Sir,
ReplyDeleteWhy are only the mentioned books/collections qualify under / meet classical language requirements?
does "thirukkural" meet classical language requirement?
i know about one requirement - The language used must not differ very largely from modern day version of the language, and the other requirement is the age must be > 1000 years.
Request you to kindly correct me and elaborate.
Thanks,
venkat
திருக்குறள் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இவை மொத்தம் 18 நூல்கள்: திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது.
ReplyDeleteஇவற்றில் நாம் பெரும்பாலும் திருக்குறள், நாலடியார் ஆகியவற்றை மட்டுமே பள்ளிக்கூடங்களில் படித்திருப்போம்.
Sir, thanks for the information.
ReplyDeleteCan you please throw light on the clssical language part also -
Why do only the books/collections mentioned in your post, qualify under / meet classical language requirements?
does "thirukkural" meet classical language requirement?
i know about one requirement - The language used must not differ very largely from modern day version of the language, and the other requirement is the age must be > 1000 years
- are these two the reason why only the books mentioned in your post qualify under classical category?
thanks,
venkat
உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDelete