Saturday, June 05, 2010

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்

நாளைக் காலை (ஞாயிறு, 6 ஜூன் 2010) டி.டி.கே ரோடு டாக் மையத்தில் (Tag Centre) நடக்க உள்ள இந்திரா பார்த்தசாரதி சிறுகதைத் தொகுதி வெளியீட்டின்போது ‘சூப்பர் ஸ்பெஷல் ஆஃபர்’ ஒன்று.

ரூ. 600 மதிப்பிலான இரு தொகுதிகளும் சேர்ந்து வெறும் ரூ. 150-க்கே கிடைக்கும். முதல் சில பிரதிகளுக்கு மட்டுமே இப்படி. இந்த ஆஃபர் கிழக்கு பதிப்பகம் தருவதல்ல. ராமு எண்டோமெண்ட்ஸ் தரும் ‘சப்சிடி’. இது வெளியீடு நடக்கும் அந்த ஓரிரு மணி நேரங்களுக்கு மட்டுமே.

நான் முன்னர் எழுதியிருந்த பதிவு மிலிட்டரி தோரணையில் இருப்பதாகச் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ஆனால் அவ்வப்போது வந்து, அவ்வப்போது வெளியேறுவதைத் தவிர்ப்பது நலம்.கையில் அழைப்பிதழ் எதுவும் வேண்டியதில்லை.

3 comments:

  1. அருமை! அருமை! காலை எட்டு மணிக்கே வந்து காத்திருந்து புத்தகத்தை வாங்கிவிடுவேன். மிக்க நன்றி

    ReplyDelete
  2. Hi Badri,

    Will this offer be available if I order this online on June 6th ? Love to attend and buy it there but Boston to Chennai is too far. :)

    Thanks
    Rajesh

    ReplyDelete
  3. என்னை மாதிரி வெளியூர்
    ஆட்களுக்கு கிடையாதா?

    ReplyDelete