Tuesday, July 20, 2010

தி.நகரில் போக்குவரத்துப் பிரச்னை - தீர்வு என்ன?

சென்னை தியாகராய நகரில் குண்டூசியிலிருந்து பட்டுப் புடைவை வரை எல்லாமே விற்கிறார்கள். வாங்குவதற்கு என்று கூட்டம் கூட்டமாக மக்கள் அங்கு போகிறார்கள். ஆனால் அந்த இடத்துக்குப் போக நேரிடுபவர்கள், அல்லது அந்த வழியாக மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளுக்குச் செல்பவர்களின் நிலையை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

பிதுங்கி வழியும் பேருந்துகள், திடீரென வழியைக் கடக்கும் ஒரு மக்கள் கூட்டம், புழுதி, இரைச்சல், கோபத்தில் கொதிக்கும் வாகன ஓட்டுநர்கள்.

இது போக்குவரத்து நெரிசல் என்பதையும் தாண்டி, போக்குவரத்து நரகம் என்ற வகைக்கு வந்துவிடுகிறது.

நம்மில் பலர் தினம் தினம் இந்த நரகத்தை அனுபவிக்கிறோம்.

இந்தப் பிரச்னையை விளக்கி, இதற்கான தீர்வுகள் என்ன என்பதைப் பற்றிப் பேச வருகிறார் ராஜ் செருபல் (Raj Cherubal), சென்னை சிடி கனெக்ட் என்ற அமைப்பின் திட்ட இயக்குனர்.

நாள்: வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2010
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை

4 comments:

  1. மக்கள் சாலையை கடக்க உயர் நடை மேடை / சுரங்க பாதைகளை கீழ் கண்ட இடங்களில் அமைத்தாலே தி நகரின் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்க முடியும்.

    தி நகர் பஸ் ஸ்டாண்ட்.

    உஸ்மான் ரோடு / துரைசாமி ரோடு சந்திப்பு

    பனகல் பார்க் பாண்டி பஜார் சந்திப்பு

    உஸ்மான் ரோடு பனகல் பார்க் சந்திப்பு

    ReplyDelete
  2. சென்னை நெரிசலில் சிக்கித் தவிப்பவர்கள், மதராசப்பட்டிணம் படத்தை பார்க்கவும்.

    நெரிசல் இல்லாத சென்னையில் மூன்று மணி நேரம் பயணிக்காலம். நோ ட்ராஃபிக்.

    ReplyDelete
  3. கடந்த ௧௨ வருஷமாக உஸ்மான் ரோட்டில் வியாபாரம் (ரோட்டில் அல்ல- பில்டிங்க்லதான்)செய்து வருபவன் நான்! இந்த பாலத்தை(இது பாலமே இல்ல - பெரிய ஸ்பீட் ப்ரெய்க்கர் தான்) டிசைன் பண்ணின புத்திசாலி யாரோ!! இந்த பாலம்(!) கட்டும் முன் ட்ராஃபிக் எவ்வளவோ நன்றாக இருந்தது!! இதனை எப்படியாவது பஸ் ஸ்டாண்ட் தாண்டி சி ஐ டி நகர வரைக்கும் இழுத்து விட்டால் ஓரளவு சமாளிக்க முடியும் என்று தோன்றுகிறது!! நிஜமாகவே மீட்டிங் இருக்கா என்ன??
    ரோமிங் ராமன்

    ReplyDelete
  4. intha pirachinaikku entha theervaaka irunthaalum athu tharkaalikamaakathaan irukkum. Enendraal aatchiyaaLarkaL naaLukkunaal vidhikaLaith thaLarthi T Nagaril nerisalai athikappaduthikkondu irukkiraarkal. Ithu viyaabaarathai perukkiravarkaL pEasaiyaal Erpaduvathu. Itharku vidivu laalam T nagarukku maatraaha vEru idangalai develop seiya viyabaarikalai ookuvippathu thaan.

    ReplyDelete