Saturday, July 24, 2010

சென்னை தியாகராய நகரை மாற்றமுடியுமா?

கிழக்கு மொட்டைமாடியில் நேற்று இரவு ராஜ் செருபல் பேசியதன் ஒளிப்பதிவு.

சென்னை தியாகராய நகரின் நெரிசல் இப்படியேதான் இருக்குமா? அல்லது இன்னும் மோசமாகுமா? உலகில் வளர்ந்த நாடுகளில் எப்படி நகரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றன? ஏன் இந்தியாவில் இத்தனை பிரச்னைகள்? நகரின் ஒரு பகுதியை மாற்றுவது என்றால், அங்கு இருக்கும் தெரு வியாபாரிகளை தூக்கி எறிவது என்றாகுமா? மக்களுக்குத் தேவை நல்ல நடைபாதைகளா அல்லது கார் ஓடும் வீதிகளா? நகரைத் திட்டமிடுதல் என்றால் என்ன? நம் மாநகராட்சியால் இதனைச் சாதிக்கமுடியுமா? மக்கள் இதுபோன்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்வார்களா? அடையாறு எல்.பி (லேட்டிஸ் பிரிட்ஜ்) சாலையில் என்ன நடக்கிறது?

இப்படி பல கேள்விகள். நிச்சயமாக என் மனத்தை மாற்றிய ஒரு முக்கியமான நிகழ்வு இது.

9 comments:

  1. எல் பி ரோடு என்றால் லேட்டிஸ் பிரிட்ஜ் ரோடு என்றல்லவா நினைத்தேன்? லால் பகதூர் ரோடா? புது செய்தியா இருக்கே.

    ஒன்றரை மணி நேர நகர்படமா? பார்த்துட்டு வரேன்.

    ReplyDelete
  2. சே, அது லேட்டிஸ் பிரிட்ஜா? லால் பகதூர் என்றால் நன்றாக இருந்திருக்குமே:-) சாஸ்திரி நகர், காந்தி நகர், இந்திரா நகர், நேரு நகர் பக்கத்தில் போய் இப்படி லேட்டிஸ் பிரிட்ஜா?

    சரி, மாற்றி விடுகிறேன்!

    ReplyDelete
  3. பாண்டி பஸாரில் கார்கள் வண்டிகள் நுழைய விடாமல் வெறும் நடைத்தெருக்களாக மாற்றிவிடலாம்.

    தெருவின் ரெண்டு பக்கமும் வண்டிகள் வரமுடியாதபடி இரும்புத்தூண்கள் சில நட்டால் போதும்.

    தெருவுக்கு அடியில் கார்பார்க் வச்சுட்டால் ஆச்சு. அங்கிருந்து மேலே வர மாடிப்படிகள் வைக்கணும்.

    கார்ப்பார்க்கிலோ மாடிப்படிகளிலோ 'யாரையும்' வசிக்க விடக்கூடாது,

    ReplyDelete
  4. மிக அருமையான நிகழ்ச்சி. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. மிக அருமையான நிகழ்ச்சி

    ReplyDelete
  6. நேற்று வர வேண்டும் என நினைத்து, வரயிலவில்லை. இணையத்தில் நகழ்படத்தை வெளியிட்டதற்கு நன்றி.

    திரு.ராஜ் செருபல் அருமையாக இந்த சிக்கல்களை கையாள்கிறார் என்று தோன்றுகிறது. அவரின் அணுகுமுறை ஒரு நல்ல முன்னேற்ற சிந்தனையாகயுள்ளது - அடுத்தவரை, சமுகத்தை திட்டி திட்டியே பழகிவிட்ட நமக்கு இது மாற்று பாதையை காட்டுகிறது. பல வருடங்களாக எனக்கு இருக்கும் நடைப்பாதை கடைகள் பற்றிய (அவர்களை எடுக்க வேண்டும்) கருத்தை தூள் தூளாக உடைத்துவிட்டார். ஆனால் பெரிய கடைகள் செய்யும் வெளிப்படையான (பணம் கொடுத்து விலைக்கு வாங்கி) அத்துமீறல்களை தினம் தினம் பார்க்கும் போது நமக்கு பயனற்ற கோபம் தான் வருகிறது, அவர்களைக் கூட இந்த முயற்சிகளில் சேர்க்கலாம் என ராஜ் கூறியுள்ளது ஒரு புதுமை. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் பாராட்டுக்கள். அவருக்கு எந்த வகையில் இந்த முயற்சிகளில் என்னால் ஆன அளவு உதவ முடியும் என்று தெரிந்தால் செய்ய ஆவலாக இருக்கிறேன்.

    அவர் காட்டிய படவில்லைகளையும், படங்களையும் இணையத்தில் இணைத்தால் மேலும் தெரிந்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

    அடுத்தமுறை நிகழ்படம் எடுக்கும் போது ஒலி, ஒளியில் கொஞ்சம் கவனம் சேர்த்தல் (Connect Audio from Mic to Camera directly, A little bit more light on the speaker/room) இணையத்தில் பார்க்கும் போது இன்னும் கூட தெளிவாக இருக்கும். இலவசமாக கிழக்கின் இந்தகைய நல்ல முயற்சியை, தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்ப்பது போல குறைக்கூறும் நோக்கத்தில் சொல்லவில்லை!

    நன்றி,
    -தி.ந.ச.வெங்கடரங்கன்
    வலைப்பூ: www.venkatarangan.com

    ReplyDelete
  7. ஆர்.முத்துக்குமார்Sat Jul 24, 12:03:00 PM GMT+5:30

    லாட்டிஸ் ப்ரிட்ஜ் என்பதைப் பலகைப் பாலம் என்றும் சொல்கிறார்கள்.. கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை மற்றும் டாக்டர் முத்துலட்சுமி சாலை இரண்டுக்கும் சேர்த்து எல்.பி சாலை என்று வைத்திருக்கிறார்கள்.

    ஆர். முத்துக்குமார்

    ReplyDelete
  8. முத்துக்குமார்! கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, டாக்டர் முத்துலட்சுமி சாலை இரண்டுக்கும் சேர்த்து எல்.பி.சாலை என்று பெயர் வைக்கவில்லை. எல்.பி.சாலைக்குத்தான் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, டாக்டர் முத்துலட்சுமி சாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. லாட்டிஸ் பிரிட்ஜை சென்னை பாஷையில் "பலகை வாராவதி" என்று சொல்வார்கள். வாராவதி என்றால் "பாலம்" என்று பொருள்!

    ReplyDelete
  9. நிகழ்ச்சிக்கு வராத மற்றும் வர முடியாத மற்றவர்களுக்காக பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!! நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இரண்டு நாட்களாக உடல் நலமின்மை- உடனே கமெண்ட் அனுப்ப முடியவில்லை(கவனிக்க-- கலந்து கொண்டதால் அல்ல!!).இந்த ஒரு அருமையான சந்தர்ப்பம் உருவாக்கி கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!

    ReplyDelete