Tuesday, July 20, 2010

விழித்திரு - ஒளிமயமான எதிர்காலம்

22 ஜூலை 2010, வியாழக்கிழமை அன்று மேலையூர் (பூம்புகார்) சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில் நானும் கிழக்கு பதிப்பகத்தைச் சேர்ந்த சிலரும் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடுகிறோம்.
படித்தே தீரவேண்டிய தமிழ் நூல்கள் - முகில்

அறிவியல் அறிஞர்களை அறிந்துகொள்வோம் - முத்துக்குமார்

+2க்குப் பிறகு என்ன செய்யலாம்? மேற்படிப்பு + வேலை வாய்ப்பு - பத்ரி சேஷாத்ரி

கம்ப்யூட்டரைத் தெரிந்துகொள்ளுங்கள் - நாகராஜன்
அக்கம்பக்கத்தில் இருக்கும் பிற பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் வரலாம் என்று சொல்கிறார்கள்.

6 comments:

  1. முகில் பரிந்துரைக்கும் புத்தகங்களை உங்கள் வலைத்தளத்தில் வெளியிடவும். நன்றி.

    இரா. கோபி, பெங்களூரு

    ReplyDelete
  2. உருப்படியான செய்தி. இது போலவே அப்பகுதியிலிருக்கும் மேனிலைபள்ளிகளில் நிகழ்ச்சி நடத்த உங்கள் குழுவிற்கு நேரமும், ஆர்வமும் இருந்தால், 1/2 நிகழ்ச்சிகளுக்கான பொருட்
    செலவை தந்து எனால் முடிந்த அளவுக்கு உதவ விரும்புகிறேன் - நன்றி.

    ReplyDelete
  3. எங்கள் பகுதியில் இது போன்று ஏற்பாடு செய்தால் நீங்கள் வருவீர்களா? பத்ரி.. இன்றைக்கும் கிராமபுற மாணவர்களுக்கு அதிகமான புதிய தகவல்கள் தர வேண்டும். இதில் என்ன பெரிய குறை என்றால் பெரும்பாலான ஆசிரியர்கள், புதியவர்கள் தங்கள் பள்ளிக்கு வந்து புதியதை தங்கள் மாணவர்களுக்கு சொன்னால் அதை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள். இது பற்றி மற்ற நண்பர்களின் கருத்தை பகிர்ந்தால் நன்று.

    ReplyDelete
  4. "முகில் பரிந்துரைக்கும் புத்தகங்களை உங்கள் வலைத்தளத்தில் வெளியிடவும்" நானும் அதேதான் சொல்ல வந்தேன்.

    ReplyDelete
  5. வாசன்: நிச்சயமாக. இந்த ஆண்டு எத்தனை பள்ளிகளில் முடியுமோ அத்தனைக்கும் சென்று உரையாடத் தயாராக உள்ளோம். ஆனால் முதலில் பள்ளியிலிருந்து இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். சரியான நாள், நேரம் ஒதுக்கி, மாணவர்களை வரச் செய்யவேண்டும்.

    இது தொடர்பாக எங்கள் அலுவலகத்தில் சங்கர் என்று ஒருவர் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அவரது மின்னஞ்சல், தொலைபேசி தகவல்களை வெள்ளிக்கிழமை அன்று தருகிறேன்.

    ===

    ஷரண்: நிச்சயமாக. தமிழகத்தில் எங்கு இருந்தாலும் வந்து பேச தயாராக உள்ளோம்.

    ReplyDelete
  6. பத்ரி

    வாழ்த்துக்கள்! இந்த அனுபவத்தை அவசியம் பதிவிடவும்.

    தாளாளர் இராஜசேகர் நிறைய புத்தகம் படிப்பவர்.

    நன்றி

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete