இதுநாள்வரை veoh.com போன்ற பாடாவதி தளங்களில் வீடியோவை இணைத்துக்கொண்டிருந்தேன். இப்போது இரண்டு பெரும் மாற்றங்களைச் செய்துள்ளேன். ஒன்று, H.264 codec பயன்படுத்தி நசுக்கிய ஒளித்துண்டு. எனவே சுமார் 1 மணி நேரம் வரும் வீடியோக்கள் எல்லாம் வெறும் 60-80 மெகாபைட்டுக்குள் வந்துவிடுகின்றன. அடுத்து அவற்றை archive.org தளத்தில் ஏற்றி, அங்கிருந்து ஒளி ஓடை வடிவில் வருமாறு செய்துள்ளேன். உருப்படியான அகலப்பாட்டை இருந்தால், எளிதாகப் பின்பற்ற முடியும்.
பேராசிரியர் சுவாமிநாதன் இதுவரை கொடுத்துள்ள மூன்று பேச்சுகளும் கீழே:
MP4 கோப்பைத் தரவிறக்கிக்கொள்ள விரும்பினால், இங்கே இருந்து பெற்றுக்கொள்ளவும்: ஒன்று | இரண்டு | மூன்று
.
வாசகனாதல்
11 hours ago
//archive.org தளத்தில் ஏற்றி, அங்கிருந்து ஒளி ஓடை வடிவில் வருமாறு செய்துள்ளேன்.//
ReplyDeleteஅது என்ன ஒளி ஓடை? எப்படிச் செய்வது?
கொஞ்சம் ‘Step by Step' விளக்க முடியுமா?
நன்றி.
ஒளி ஓடை என்றால் video streaming. இதில் நீங்கள் செய்ய ஒன்றுமே இல்லை. archive.org தளத்தில் MP4 வீடியோவைச் சேர்த்தாலே போதும்; அதுவே பிற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்கிறது; 512kbps ஒளி ஓடையாகவும் செய்துகொள்கிறது. கொஞ்ச நேரம் கழித்து அந்தக் குறிப்பிட்ட பக்கத்துக்கு மீண்டும் சென்று பார்த்தால் ஒளி ஓடைக்கான சுட்டி (embed object வடிவில்) இருக்கும். அதை எடுத்து உங்கள் பக்கத்தில் இணைத்தால் போதும்.
ReplyDeleteஇதற்குமேல் தகவல் வேண்டும் என்றால் தனி மடல் அனுப்புங்கள். படிஹ்ல் அனுப்புகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட archive.org ஒரு அற்புதமான ஏற்பாடு. நான் எனது வீடியோவை .dat கோப்பாகவே அனுப்ப அதையும் அது ஏற்றுக் கொண்டது. எம்.பி. 4 ஆக அதுவே மாற்றிக் கொண்டது.
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
வீடியோக்களுக்கு நன்றி, பத்ரி. முதல் பகுதியைக் கேட்டிருக்கிறேன். மீதியையும் கேட்டு விடுகிறேன். பேராசிரியர் சுவாமிநாதன் அவர்களுக்கு எங்கள் சார்பாக நன்றியை சொல்லி விடுங்கள்.
ReplyDelete//
ReplyDeleteஒளி ஓடை என்றால் video streaming. இதில் நீங்கள் செய்ய ஒன்றுமே இல்லை
//
:-)
நன்றி