Tuesday, August 03, 2010

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை: ஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

வரும் ஆகஸ்ட் 7, சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, ’ஏ.கே.செட்டியார் - உலகம் சுற்றிய தமிழர்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.

இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வெங்கட்நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

புதுக்கோட்டையில் ஞானாலயா ஆய்வு நூலகத்தை வைத்து நடத்திவருபவர் கிருஷ்ணமூர்த்தி. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்.

ஏ.கே.செட்டியார் (1911-1983), மகாத்மா காந்தி பற்றி தமிழிலும் தெலுங்கிலும் உருவாக்கி வெளியிட்ட ஆவணப்படத்தின் மூலம் அறியப்பட்டவர். குமரிமலர் இதழின் ஆசிரியர். தமிழ் இதழியல் உலகில் ஒரு முன்னோடி.

2 comments:

  1. ஜப்பான், அமெரிக்கா, மலாயா எல்லாம் அன்றே வந்தவர். ஹாலிவுட்டில் இருந்து ஆளைக் கூட்டிவந்து காந்தியைப் படம் எடுக்க வைத்தவர்.
    அ. கருப்பன் செட்டியார். சொந்த விமானம் வைத்திருந்து சென்னையைப் பல கோணங்களில் படம் எடுத்தவர்.

    ReplyDelete
  2. 1968-இல் ஏ.கே.செட்டியார் தமிழ்ப் பயணப் பதிவு​ளைத் ​தொகுத்துள்ளார். ​தொகுப்பிலுள்ள அத்தனை கட்டுரைகளும் அருமை.

    ஆர். ​கோபி

    ReplyDelete