Friday, December 30, 2011

2011: சுப்ரமணியன் சுவாமி

தெஹெல்காவில் இவரைப் பற்றி நீண்ட ஒரு கட்டுரை வந்துள்ளது. வாசியுங்கள்.

2ஜி ஊழல் வழக்கில் தனியாளாக நின்று நீதிமன்றத்தில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சர்ச்சையான மனிதர். ஏன், எதற்கு இவர் ஒரு வழக்கைக் கையில் எடுத்துக்கொள்கிறார் என்பதில் எனக்கு நிறையச் சந்தேகங்கள் உள்ளன. ஆனால் விடாக்கண்டர். அரசியல் உலகில் உள்ள அசிங்கங்கள் பெரும்பாலாம் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் அவற்றைப் பிடித்துக்கொண்டு நீதிமன்றம் வரை சென்று தொடர்ந்து வழக்காடுபவர்கள் இவரைப்போல யாருமே இல்லை. திமுகவை - ராசாவை, கனிமொழியை - மட்டுமின்றி, காங்கிரஸின் சிதம்பரத்தையும் அடுத்து ராபர்ட் வாத்ரா, சோனியா காந்தி இருவரையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன் என்று சூளுரைத்திருக்கும் இவரும் 2011-ல் இந்தியர்களின் மனம் கவர்ந்தவராகிறார்.

அண்ணா ஹசாரேவுக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கிறதோ அதைவிட அதிகமான எதிர்ப்பு இவர்மீது இருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் அதிகம். விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர், பார்ப்பனர் என்பதுவேறு சேர்த்தி.

2ஜி விவகாரத்தில் ஏதோ சரியில்லை என்று முதலில் கண்டுபிடித்தது சில பத்திரிகையாளர்கள்தாம். அதனை முக்கிய எதிர்க்கட்சியான பாஜக எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று ரூம் போட்டு யோசிப்பதற்கு முன்னதாகவே களத்தில் குதித்து தனக்கான போராக மாற்றிக்கொண்டவர் சுவாமி. மாபெரும் சந்தர்ப்பவாதி. மாபெரும் போராளி.

இந்தியாவை ஊழலிலிருந்து காக்கவந்த மாமனிதர் என்பதாகத்தான் ட்விட்டரில் இவருடைய ஆர்வலர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதில் எனக்குச் சம்மதம் இல்லை. சுவாமியின் முதல் குறி அரசியல் ஆதாயம்தான். அதனால்தான் கருணாநிதி, ஜெயலலிதா இருவர்மீதும் ஊழல் வழக்குகள் போட்டுக்கொண்டே ஜெயலலிதாவுடன் சமரசம் பேசுகிறார். சோனியாவுடன் சேர்ந்துகொண்டு பாஜகவைக் குழிபறித்துத் தள்ளிவிட்டு, இப்போது சோனியாவை ஒழித்துக்கட்டிவிடுவதாகப் போராடுகிறார். ராஜிவ் காந்தி தன் உற்ற நண்பர் என்று சொல்லியவர், அப்போது கையில் எடுக்காத போஃபோர்ஸ் பணப் பட்டுவாடா + ஸ்விஸ் வங்கிக் கணக்குப் பிரச்னையை இப்போது பேசுகிறார்.

ஆனாலும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இவரும் முக்கியக் கண்ணியே. பிறரால் செய்யமுடியாத பலவற்றை இவரால் செய்யமுடியும். பயமே இன்றி ஆட்சியில் இருப்போரை இவரால் தனியொரு மனிதனாக எதிர்கொள்ள முடியும். மாறி மாறி ஆளுனர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் கடிதங்கள் எழுதி, முதல்வர்கள், மந்திரிகள்மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்த முடியும். நீதிமன்றங்களில் தாமாகவே வழக்காடி நீதிபதிகளை ஏற்கவைக்க முடியும்.

அதுவரையில் இவர், இவருடைய எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமே.

6 comments:

  1. பார்ப்பனர் என்பதுவேறு சேர்த்தி--->First of all- Who is a brahmin?

    We are all born shoodras. Listen to him explaining the same. Varana has got nothing to do with birth.Raavan was a brahmin.He got killed by Lord.Rama (kshatriya). But people only worsip Rama !



    http://www.youtube.com/watch?v=Nn1Ptp4sMmc

    ReplyDelete
  2. Swami is undoubtedly 'The Indian of the Year'!

    ReplyDelete
  3. vengaimarbhan@gmail.comFri Dec 30, 06:59:00 PM GMT+5:30

    அட போடங்கப்பா இவரை மாதிரி அமெரிக்கா பின்னாடி இருந்தா எங்க வீட்டு நாய்க்குட்டி இவருக்கு மேல தவ்விக்குதிக்கும், அணுஉலைல அமெரிக்க கருத்துக்கு எதிரா சொன்னாரு, ஹார்வேர்டு பல்கலைகழகத்துல இருந்து கழுத்த பிடிச்சி வெளிய தள்ளிட்டான், இவரு பார்பனரா இருக்குறதுல உள்ள நன்மை அவருக்கு என்னன்னா மீடியா பப்ளிசிட்டி, அப்புறம் உங்கள மாதிரி ஆளுங்க கூட சரி விடு நம்மாளு போறான்னு விட்டுறதுதான்.

    ReplyDelete
  4. Where is he getting money for all his activities and his day to day life?is he running some business or something?

    ReplyDelete
  5. சுப்ரமணிய சுவாமியின் தமிழ் விரோத போக்கு!

    http://www.youtube.com/watch?v=E1CC82n0iI0&feature=share

    ReplyDelete
  6. u missed about his link in Rajiv's assasination

    ReplyDelete