Thursday, December 29, 2011

உடையும் இந்தியா?

இரு அறிவிப்புகள்.

முதலாவது, ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ‘உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்’ என்ற புத்தகத்துக்கான அறிமுக விழா, ஜனவரி 3, 2012 அன்று தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. இதனை நடத்துபவர்கள் தமிழ் ஹிந்து அமைப்பினர். புத்தகத்தை நான் அறிமுகம் செய்கிறேன். பின்னர் பேரா. சாமி தியாகராஜன், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், கிருஷ்ண பறையனார், இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றிய தியாக. சத்தியமூர்த்தி, கல்வெட்டாளர் எஸ். இராமச்சந்திரன், பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் பேசுகிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்.


இரண்டாவது, திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருப்பது. ஃபேஸ்புக்கில் நான் பார்த்தது இது:
அண்மையில், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்வா மதவெறி சக்திகளின் ஆரிய- திராவிடப் புரட்டுகளும் - அந்நியத் தலையீடுகளும் என்ற தலைப்பில் உடையும் இந்தியா என்ற இரண்டு இந்து மத பார்ப்பனப் பிரச்சாரர்களால் எழுதப்பட்டு, வெளிவந்துள்ள நூலுக்கு மறுப்புரை அளிக்கும் புரட்டு என்ற புரட்டினை புட்டு வைக்க உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில், ஓர் ஆய்வரங்கம் 2012 சனவரி 8.9 ஆகிய நாள்களில் நடைபெறவிருக்கிறது! பெரியார் திடலில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். - திராவிடர் கழகம்
புத்தகத்தை வாங்க

12 comments:

 1. இன்விடேஷன் பேக்கிரவுண்டு கலர் ரொம்ப நன்னா வந்திருக்கே? :-)

  ReplyDelete
 2. அரவிந்தன் அவர்களின் ஆற்றலும் ,கடும் உழைப்பும் ஒரு பக்க சார்பால் வீணாவது வருத்தம் அளிக்கிறது
  உங்கள் சக எழுத்தாளர் மல்ஹோத்ராவின் உறவினர்கள்,மல்ஹோத்ராக்கள் எத்தனை பேர் சீக்கிய தீவிரவாதத்தால் உயிரை இழந்தார்கள் தெரியுமா.
  இன்று வரை மற்ற மத தீவிரவாதிகளால்/மத கலவரங்களால் இறந்ததை விட சீக்கிய தீவிரவாதத்தால் இறந்தவர்கள் பல மடங்கு.
  அது என்ன வெளிநாட்டு மதமா .அந்த தீவிரவாத ஒடுக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது நீங்கள் வெறுக்கும் தலித் அரசியல் தான்.பஞ்சாபில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமான தலித் சீக்கியர்கள் மதம் என்று போகாமல் தலித் என்று (கன்ஷிராம் ஒரு தலித் சீக்கியர்)தலித் பஹுஜன் அரசியல் செய்ததால்,அரசு வேலைகள்,ராணுவத்தில் நாட்டம் காட்டியதால் ,தனி நாடு என்பதை விட முன்னேற்றத்தில் விருப்பம் காட்டியதால் தீவிரவாதத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட ஆதிக்க சாதியினரை அவர்கள் சாதியை சார்ந்த முதல்வர்,காவல் துறை தலைமை அதிகாரிகளால் அழிக்க முடிந்தது.
  அந்த தலித் அரசியலை இந்தியாவின் பிரிக்கும் சக்தி என்று எழுதுவது எனபது மிகவும் ஆச்சரியத்துகுரியது
  கத்தியின்றி ,ரத்தமின்றி பிற்பட்ட வகுப்பினர் முன்னேற வழி செய்தது திராவிட இயக்கம்.சாதி ஒழிப்பிற்கு ,விதவை திருமணத்திற்கு ,பெண் கல்விக்கு பாடுபட்ட இயக்கம்.அதையும் ஏதோ வெளிநாட்டினர் தூண்டி விட்டு நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் என்று எழுதுவது இட ஒதுக்கீட்டின் மேல் உள்ள வெறுப்பை தான் காட்டுகிறது.இட ஒதுக்கீட்டின் பலனால் படித்தவர்,நல்ல நிலைக்கு வந்தவர் அதிகம் இருக்கும் இடங்கள் திராவிட இயக்கம் வளர்ந்த இடங்கள் தான்.

  காஷ்மீரிலோ வட கிழக்கிலோ வசிக்கும் மக்களில் ஒரு பெரியாரோ /அம்பேத்கரோ உருவாகி இருந்திருந்தால் அவர்கள் முன்னேறியிருப்பார்கள்.இன்றிருக்கும் போராட்டங்கள் இருந்திருக்காது எனபது தான் உண்மை.சாதி.மதத்தின்,இனத்தின் மேன்மையை ,மாயையை உடைத்தவர்கள் அவர்கள் .
  வெளியில் இருந்து வந்த மதங்கள் தான் பிரிக்கும் என்ற அடிப்படையே அடிபடுவதால் முழு பூசணிக்காய் ஆன சீக்கிய தீவிரவாதத்தை மறைத்து விட்டு (பஞ்சாபில் பல இடங்களில் இந்துக்களின் சதவீதம் பாதிக்கும் மேல் குறைந்தது.பேருந்துகளில் இருந்து சீக்கியர் இறக்கி விடப்பட்டு ஹிந்துக்கள் அனைவரும் சுட்டு கொல்லபட்ட சம்பவங்கள் பல)நாட்டு மக்களின் பெரும்பான்மையானோர் தீவிரவாதத்தின் பக்கம் போகாமல் அவர்களுக்கு முன்னேற வழி காட்டிய இயக்கங்களை வெறுத்து புத்தகம் போடுவது ஹிந்டுத்வாவாதிகளுக்கு வேண்டுமானால் சொரிந்து கொள்ள உதவியாக இருக்கும்

  ReplyDelete
 3. ஜெ.மோ. வந்திருந்தால் ஸ்டார் அட்ராக்ஷன் இருந்திருக்கும்!

  ReplyDelete
 4. poovannan ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புத்தகத்தின் நோக்கம் எந்த ஒரு குழுவினரின் அக்கிரமங்களை மூடிமறைப்பதோ, எந்த ஒரு குழுவினரின் முன்னேற்றத்தை தடுத்துநிறுத்துவதோ அல்ல.

  மாறாக, இந்தியாவில் உள்ள சமூக பிளவுகளை, அதன் ஏற்றத்தாழ்வுகளை தமக்கு சாதகமாக மேற்குலகம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பது குறித்து தான் இந்தப் புத்தகம் பேசுகிறது.

  நீங்கள் குறிப்பிடும் சீக்கிய தீவிரவாதத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ நிறுவனத்தின் செயல்பாடு எப்படிப்பட்டது என்று நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி பி.ராமன் எழுதிய 'நிழல் வீரர்கள்' என்ற புத்தகத்தை படித்துவிடுங்கள். உங்களுக்கு பிரச்சனையின் பின்னணி புரியும். அதே சமயம் சீக்கிய தீவிரவாதம் இன்னும் ஓயவில்லை. இன்றும் அதை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது பாகிஸ்தான்(சில தினங்களுக்கு முன் கூட சில சீக்கிய தீவிரவாதிகளை இந்திய அரசு கைது செய்துள்ளது). அதுபோல இங்கு நடக்கும் பல பிரிவினைவாத அக்கிரமங்களின் பின்னணி குறித்து, உலகளவிய பின்புலத்தில், இந்தப் புத்தகம் பேசுகிறது.

  ReplyDelete
 5. vengaimarbhan@gmail.comFri Dec 30, 04:54:00 AM GMT+5:30

  சபாஷ் சரியான போட்டி

  ReplyDelete
 6. எப்படியோ புத்தகம் விற்று காசு பண்ண முடிந்தால் சரி.தி.கவினர் வேறு இலவச விளம்பரம் தருகிறார்கள்.அடுத்து பெரியார் தி.க,சிபிஎம், என்று ஒரு கும்பலே இப்படி திட்டி எழுதி,பேசி விற்பனையை கூட்ட உதவுவார்கள்.இப்படியெல்லாம் எழுதினால் புத்தகம் விற்கும்,இந்தியா உடையாது என்பது புத்தகத்தை எழுதியவர்களுக்கும்,வெளியிட்டவருக்கும் நன்றாகத் தெரியும்.காசேதான் கடவுளடா.

  ReplyDelete
 7. This book exposes how foreign nations work for soft power in the name of religion!! Strictly speaking Communists should have written this book to expose this double standard by religions!

  ReplyDelete
 8. இந்த முன்சூழ்ச்சித்துவ நாவல்(அரவிந்தன் அவர்களுக்கு முன்சூழ்ச்சித்துவ நாவலின் முன்னோடி என்ற பட்டம் தரலாம் என்று இருக்கிறேன்)பெரும்பானமையான மக்கள் மற்றும் அவர்கள் தலைவர்கள் முட்டாள்கள்,வெளிநாட்டவரால்,வெளியில் இருந்து வரும் மதம் மற்றும் மத பிரசாரகர்கள் இடம் ஏமாந்து நாட்டை காட்டி கொடுப்பார்கள்,ஒரு சில உயர்ந்த சாதியை சார்ந்த புத்திசாலிகளுக்கு மட்டும் தான் இந்த சூழ்ச்சிகள் புரியும்.அதை ஒழிக்க பாடுபடுவார்கள்,புத்தகங்கள் எழுதி திருத்த முயற்சிப்பார்கள் என்ற இன,சாதி வெறியை அடிப்படையாக கொண்டது.
  இருவரும் கிருத்துவ மதத்தை தழுவியதால் நாகாக்களும் குகிகளும் ஒன்றாகவில்லை.அவர்களின் முதல் எதிரி இருவரில் ஒருவர் தான்.திருமாவோ,கன்ஷிராமோ ,கலைஞரோ ,ராமதாசோ மற்றவர்களால் உபயோக படுத்த படுகிறார்கள்,முட்டாள்கள் எனபது வெற்று வாதம்.அவர்கள் வருகின்ற உதவிகளை உபயோக படுத்தி தங்களை ,தங்கள் இனங்களை முன்னேற்ற முயற்சிக்கிறார்கள் எனபது தான் உண்மை.இது ரஜினியின் ரசிகனுக்கும்,இந்த தலைவர்களின் தொண்டனுக்கும் பொருந்தும்.
  அனைவரும் முட்டாள்கள் என்ற சிந்தனையே சாதி வெறியால் வருவது.சர்ச்சுக்கு போனால் பிரியாணி கிடைக்கும்,கிருதுவனானால் குடிசை கிடைக்கும் என்று நன்மைகளை எடை போட்டு தான் எவனும் முடிவு எடுக்கிறான்.கிரீன் கார்டு ,வெளிநாட்டு குடியுரிமை பெறுகிறவன் எல்லாம் அறிவாளிகள் ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் உயர் சாதியை சார்ந்தவர்கள்.ஆனால் இங்கு வாழும் மக்கள் முட்டாள்கள்.இது என்ன நியாயம்

  ReplyDelete
 9. இருவது ஆண்டுகளுக்கு முன் திரு அருண் சௌரி(அரவிந்தன் அவர்களுக்கு தென்னிந்தியாவின் அருண் சௌரி என்ற அடைமொழியையும் பத்ரி அவர்கள் வழங்கி கௌரவ படுத்தினால் நன்றாக இருக்கும்.அவர் போலவே இவரும் கிருத்துவ மிச்சிஒனரிகள் ,வரலாற்று ஆசிரியிர்கள்,அம்பேத்கரை கிழி கிழி என்று கிழிப்பவர் .என்னடா அம்பேத்கரை போதி சதவர் அப்படி ,இப்படி என்று புகழ்கிறவரை போய் இப்படி சொல்கிறேனே என்று எண்ணுபவர்களுக்கு அவர் இந்து மதத்தை மதித்தார் என்பதை விட அவமரியாதை எதுவும் கிடையாது எனபது தெரிந்தால் புரியும்.அவரை இந்துத்வாவாதிகள் உபயோக படுத்துவதை விட அவரை அசிங்க படுத்த கூடிய செயல் வேறு எதுவும் இல்லை.இப்போது பரபப்பாக இருந்த கீதை பற்றி அவர் காரி உமிழ்வதை யாரவது படித்தல் அவர் எப்படி இவரால் அவமதிக்க படுகிறார் எனபது புரியும்)எழுதிய worshipping false gods புத்தகத்தை பக்கம் பக்கமாக வீரமணி அவர்கள் விளக்கி,எப்படி அவரை தவறாக சித்தரிக்கிறார் என்பதை கேட்ட பின் தான் அந்த புத்தகத்தை நான் வாங்கினேன்.அதை படித்தால் அம்பேத்கரின் மேல் மதிப்பு கூடுமே தவிர குறையாது.அவர் எவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு பிரிட்டிஷ் அரசு வேலைகளில் சேர சொல்கிறார்,காங்கிறேச்சையும் அதன் போராட்டங்களையும் எதிர்க்கிறார் எனபது புரியும் .அதை போல இந்த புத்தகமும் திராவிட,தலித் இயக்கங்களை பற்றி உண்மைகளை எழுதியிருக்குமானால் அதே நிலை தான் ஏற்படும்.

  ReplyDelete
 10. ஃபார்முக்கு வந்திருக்கும் பத்ரி அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. //
  இன்விடேஷன் பேக்கிரவுண்டு கலர் ரொம்ப நன்னா வந்திருக்கே? :-)
  //

  பன்னாடைத் தனம். நல்லதை விட்டு பேக்கிரவுண்டை மட்டும் பிடித்துக்கொள்வது.

  கொல்வது சட்டப்படி குற்றம் என்பதனால் தான் சிலர் உயிருடன் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 12. Just want to share this old link - a study conducted with the assistance from harvard & MIT proving Aryan Dravidian a myth

  http://articles.timesofindia.indiatimes.com/2009-09-25/india/28107253_1_incidence-of-genetic-diseases-indians-tribes

  Please share it to all so that everyone knows history written was planned & drifted to divide the people and take advantages of it.. but After looking into this, if still our people follow Dravidian theory , I don't know what to say of them

  ReplyDelete