Thursday, December 08, 2011

அந்நிய நேரடி முதலீடு - 3/n

எவ்விதத்தில் ஒரு தொழிலில் முதலீடு வருகிறது?
  1. சொந்தக் காசு.
  2. குடும்பத்தவரிடம் பங்குப் பணமாகப் பெறுவது. இதற்கு லாபத்தில் ஒரு கட்டத்தில் பங்கு தரவேண்டும்.
  3. வெளியாரிடமிருந்து கடன் வாங்குவது. இது தனி நபர்களாக இருக்கலாம், வங்கிகளாக இருக்கலாம். வாங்கிய பணத்துக்கேற்ப, தொழிலில் லாபம் வருகிறதோ, இல்லையோ, வட்டி கட்டிக்கொண்டே இருக்கவேண்டும்
  4. ரிஸ்க் முதலீடு. நம் தொழிலின் தன்மை அறிந்து, அதில் உள்ள சாதக பாதகங்களைப் புரிந்துகொண்டு, இதில் முதலீடு செய்யப்படும் பணம் திரும்பக் கிடைக்காமலேயே போகும் என்பதை முழுதும் உணர்ந்துகொண்டு தனி நபர்களோ, நிதி நிறுவனங்களோ அந்தத் தொழிலில் முதலீடு செய்யும் பங்குத் தொகை. ஈக்விட்டி என்ற பெயரால் அறியப்படுவது.
இந்தியாவில் ரிஸ்க் முதலீடுகள், அதுவும் நம் உறவினர் அல்லது சாதி இல்லாதோரின் தொழிலில் போடப்படும் ரிஸ்க் முதலீடுகள் ஜீரோ என்றே சொல்லிவிடலாம். நம்மிடம் வென்ச்சர் கேபிடல் பின்னணியே கிடையாது. ஒரு கட்டத்தில் பெரும் ஜோக்காக ஒவ்வொரு மாநில அரசும் ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை ஆரம்பித்தது. அதைக்கொண்டு அவை உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. எப்போது அவற்றை இழுத்து மூடினார்கள் என்றும் ஞாபகம் இல்லை. மத்திய அரசின் சில அமைப்புகள் இன்றும்கூட இதுபோல் வென்ச்சர் கேபிடல் வேலைகளைச் செய்கின்றன. உதாரணமாக NRDC என்ற அமைப்பு. NRDC முதலீடு செய்திருக்கும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில், NRDC சார்பில் நான் இயக்குனராக உள்ளேன். ஆனால் தான் முதலீடு செய்திருக்கும் அந்த கம்பெனி பற்றி NRDC பெரிதாகக் கவலைப்படுவதே இல்லை. இந்த ஆட்டிட்யூடை வைத்துக்கொண்டு வென்ச்சர் கேபிடலில் என்ன சாதிக்க முடியும்?

அந்நிய வென்ச்சர் கேபிடல் கம்பெனிகள் இந்தியாவில் காலூன்றத் தொடங்கியதும்தான் இந்தத் துறை பற்றிய உண்மையான புரிதல் நம் நாட்டுக்கு வந்தது. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் அந்நாட்டு வென்ச்சர் கேபிடல் கம்பெனிகளில் வேலை செய்தனர். அவர்கள் இந்தியா வந்து அப்படிப்பட்ட கம்பெனிகளைத் தொடங்கினர். கடந்த இருபதாண்டு காலத்தில் செல்வம் சேர்த்த இந்தியர்கள் சிலர் வென்ச்சர் கேபிடல்/பிரைவேட் ஈக்விடி அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் இவை போதா. இப்படி உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அந்நிய முதலை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அவற்றால் சில துறைகளில் முதலீடு செய்யவே முடியாது. சில துறைகளில் ஓரளவுக்குத்தான் முதலீடு செய்யமுடியும்.

வெறும் ஐடியாக்களிலும் ஆட்கள்மீதும் முதலீடு செய்யும்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில்துறைகள், புதிய சேவைகள் தோன்றுகின்றன. இந்த முதலீடு ரிஸ்க் முதலீடாக மட்டுமே இருக்கமுடியும். ஏனெனில் பத்துக்கு ஒன்பது அழிந்துதான் போகும். ஆனால் இத்தனை அழிவைத் தாண்டியும் மிச்சமுள்ள இந்த அமைப்புகள்தான் நவீன மனித சமுதாயத்தைப் பெருமளவு முன்னேற்றிச் செல்பவையாக இருக்கும். அது மின்சாரம், எலெக்ட்ரிக் பல்ப், கார், பைக், கம்ப்யூட்டர், கூகிள் என்று எதுவாக இருந்தாலும் சரி.

இப்போது உங்களுக்குத் தெரியும் ஏன் இவையெல்லாமே எங்கோ வெளி நாடுகளில் மட்டுமே உருவாகின்றன என்பது. ஏனெனில் இவற்றை இந்தியாவில் உருவாக்கத் தேவையான முதலீட்டு முறை கிடையாது. இந்தியர்கள் பின்தங்கிய நிலையில் இல்லை. இந்திய முதலீட்டு அமைப்புகள் மட்டும்தான் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. அந்த முதலீட்டு அமைப்பைத்தான் மாற்றவேண்டும். அதற்கு இந்திய கேபிடல், அந்நிய கேபிடல் இரண்டையும் லாபத்தையும் ரிஸ்க்கையும் நோக்கிச் செலுத்துவதற்கான அனைத்துத் தடைகளையும் உடைக்கவேண்டும்.

உண்மையான கேபிடலிசம் என்பது இதுதான். முதலீடு, கூரிய சிந்தனை, உழைப்பாளிகள் ஆகிய அனைவரையும் ஒன்று சேர்த்து நியாயமான லாபத்தை நோக்கிச் செலுத்தும் ஓர் அமைப்பு. அந்த அமைப்பில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அந்த அமைப்பு ஒன்றுதான் இன்றைய அனைத்து வளர்ச்சிக்குமே காரணம். இந்த கேபிடலிச அமைப்பு மட்டும் இல்லையென்றால் நமக்கு இன்று எந்த வசதி வாய்ப்புமே இருந்திருக்காது. சாலைகள் இருக்காது; கல்வி நிலையங்கள் இருக்காது; உணவுப் பற்றாக்குறை மட்டுமே இருக்கும்; வியாதிகளுக்கு விடிவு கிடையாது; கேளிக்கை கிடையாது; ஓய்வு கிடையாது; சுக வாழ்வு கிடையாது.

முதல், உழைப்பு, பொருள்கள், சேவை ஆகியவற்றை எவ்விதத் தடையுமின்றி பயணிக்க வைத்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்துவிடுவோம். நான் ஒட்டுமொத்தமான தடையற்ற நிலையைக் கோரவில்லை. அதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அடுத்து வரும் பகுதிகளில் இவற்றை அலசுவோம்.

13 comments:

  1. இப்போது கேள்வி எங்கு முதலீடு செய்வது உற்பத்திதுறையிலா? வர்த்தகத் துறையிலா? நிலக்கரி, கல்வி, போக்குவரத்து துறையில் பிரிட்ஷ்சின் முதலீடு நமக்கு நன்மையும் தந்தது, ஆனால் ஆன்னிய ஆடைகளை இறக்கிய வர்த்தக முதலீடு தான் நம்மை சுரண்ட பயன்பட்டது.

    ReplyDelete
  2. எந்த விஷயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன..பொருளாதார--தொழில் ரீதியான யோசிப்புக்கள்--அதில் ஒர்ருவகை--நாடு--மக்கள்--மண்ணின் தன்மை--மறுவகை--
    சில்லரை வர்த்தகத்தில் அன்னியமுதலீடு---நம் மண்ணிந்-மக்களின் --அரசியல் வாதிகளின்..தன்மையை பார்க்கும் போது--”ஒத்து வாராது”--மனம்--வாக்கு--காயம் --இவற்றில் வளர்ச்சி அடைந்த--உடனே மாற முடியும் என்ற வல்லமை படைத்த --பிரிட்டன் அன்னீய முதலீட்டால் அல்லாடிகிறது--அல்லல் படுகிறது---கோகோகோலா--நம் நாட்டில் அறிமுகம் படுத்தப்படுவதற்கு முந்தைய--பிந்தைய--குளிர்பான சந்தையின் _-நிலையை சற்று பார்த்தால் --வரப்போகும் ஆபத்தை உணர--புரிந்து கொள்ள முடியும்--எஸ்.ஆர்.சேகர்..கோவை

    ReplyDelete
  3. /// உண்மையான கேபிடலிசம் என்பது இதுதான். முதலீடு, கூரிய சிந்தனை, உழைப்பாளிகள் ஆகிய அனைவரையும் ஒன்று சேர்த்து நியாயமான லாபத்தை நோக்கிச் செலுத்தும் ஓர் அமைப்பு. அந்த அமைப்பில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் அந்த அமைப்பு ஒன்றுதான் இன்றைய அனைத்து வளர்ச்சிக்குமே காரணம். இந்த கேபிடலிச அமைப்பு மட்டும் இல்லையென்றால் நமக்கு இன்று எந்த வசதி வாய்ப்புமே இருந்திருக்காது. சாலைகள் இருக்காது; கல்வி நிலையங்கள் இருக்காது; உணவுப் பற்றாக்குறை மட்டுமே இருக்கும்; வியாதிகளுக்கு விடிவு கிடையாது; கேளிக்கை கிடையாது; ஓய்வு கிடையாது; சுக வாழ்வு கிடையாது.///

    இது மன்மோகன் சிங்குக்குத் தெரிந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் கிடையாது! அதுதான் பிரச்சினையே.

    சரவணன்

    ReplyDelete
  4. Sir,
    Please explain how 'FDI in retail' can be compared with 'venture capitalism' and 'innovation'.

    Foreign money is coming to india NOT TO innovate something or to take risk in a new area or to create new domains of businesses which may in turn build the nation. The foreign investment will be on 'retail' which is the concern of domestic players who cannot compete with them in a very long term.

    ReplyDelete
  5. //ஒரு கட்டத்தில் பெரும் ஜோக்காக ஒவ்வொரு மாநில அரசும் ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை ஆரம்பித்தது. அதைக்கொண்டு அவை உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. எப்போது அவற்றை இழுத்து மூடினார்கள் என்றும் ஞாபகம் இல்லை.//

    TIDCO invested in Titan Industries along with TATA which has become a successful company.

    Alas, TIDCO never followed that with more marquee investments.

    ReplyDelete
  6. இந்த கேபிடலிச அமைப்பு மட்டும் இல்லையென்றால் நமக்கு இன்று எந்த வசதி வாய்ப்புமே இருந்திருக்காது. சாலைகள் இருக்காது; கல்வி நிலையங்கள் இருக்காது; உணவுப் பற்றாக்குறை மட்டுமே இருக்கும்; வியாதிகளுக்கு விடிவு கிடையாது; கேளிக்கை கிடையாது; ஓய்வு கிடையாது; சுக வாழ்வு கிடையாது.///

    இதுக்கும் கேபிடலிசத்திற்கும் என்ன சம்பந்தம்.
    ராஜாக்கள் ஆண்ட காலம் ஒரு வித கேபிடலிச அமைப்பு தான்.அப்போது பாலாரும்,தேனாறும் ஓடியதா
    நேபால் மன்னர் பல கம்பனிகள்,நிறுவனங்கள் நடத்தி வந்தார்.பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு வைத்தும் பல தொழிலில் ஈடுபட்டார். அங்கு நீங்கள் சொல்வது போல் நடந்ததா
    தொழிலாளர் உரிமை என்று வந்த பிறகு தான் பெரும்பான்மை மக்கள் பொருள் சேர்க்கும் ,சொத்து வாங்கும் நிலைக்கே வந்தனர்.
    ஏழை நாடுகளாக இருந்தாலும் சோவித் கூட்டமைப்பு நாடுகள்,கியூபா விக்ஞானம்,விளையாட்டு,மருத்துவ வசதிகள் போன்றவற்றில் முதலாளித்துவ நாடுகளை விட மேலே இருந்ததே
    சர்வாதிகாரம் தானே அந்த நாடுகளில் குழப்பத்தை உருவாக்கி துண்டாக்கியது.முதலாளித்துவம் சீனாவில் தடையின்றி பல வெளிநாட்டு முதலீடுகளுடன் நடை போட சர்வாதிகாரம் தானே காரணம்.அங்கு சனநாயகம் வந்தால் அவர்கள் நம்மை விட அதிகமாக முதலாளித்துவத்தை எதிர்ப்பார்கள்.
    விஞ்ஞான வளர்ச்சி தான் நீங்கள் கூறியுள்ள வற்றிற்கு முக்கிய காரணம்.அதற்க்கு முக்கிய காரணம் கேள்வி கேட்கும் உரிமை/ கடவுள் மறுப்பு.அது முதலாளித்துவத்தில் உள்ளதா.அதை உலகிற்கு பெருமளவில் அளித்தது கம்முநிசமே
    முதலாளித்துவ நாடுகள் விண்ணிற்கு மனிதனை அனுப்ப,புது இயந்திரங்கள்,ஆயுதங்கள் உருவாக்குவது,விளையாட்டில் புதிய சாதனைகளை படைப்பது என அனைத்திலும் இரு குழுக்களுக்கும் இடையில் வலுவான போட்டி தானே இருந்தது.
    கம்முநிசத்தின் பின்னடைவுக்கு பின் விஞ்ஞான வளர்ச்சிகள் மிக குறைவு.அனைவரும் தரகர்கள் ஆனது தான் நடந்தது.இப்போது வக்கீல்கள்,பொறியியல் வல்லுனர்கள்,மருத்துவர்கள்,பதிப்பகம் நடத்துபவர்கள்,எழுத்தாளர்கள் என்று யாரும் கிடையாது.எல்லாரும் தரகர்கள்.தகடை தங்கமாக காட்டி விளம்பரம் செய்து விற்பவர்கள்

    ReplyDelete
  7. பூவண்ணன்: ராஜாக்கள் காலமும் கேபிடலிசமும் ஒன்றுதான் என்று சொன்னால் நீங்கள் கேபிடலிசத்தைப் புரிந்துகொள்ளவே இல்லை. கேபிடலிசத்தில் யார் வேண்டுமானாலும் என்ன தொழிலை வேண்டுமானாலும், சட்டத்துக்கு உட்பட்டுச் செய்யலாம். ராஜா காலத்திலோ அல்லது சர்வாதிகாரி காலத்திலோ அவர்கள் மட்டும்தான் எதைவேண்டுமானாலும் செய்யலாம். ராஜா இஷ்டப்பட்டால் பணம் அடிக்கலாம். ஒரு டெமாக்ரடிக் நாடு இஷ்டப்பட்டால் எல்லாம் பனம் அச்சடிக்க முடியாது. அப்படிச் செய்தால் கடுமையான பணவீக்கம்தான் ஏற்படும். கேபிடலிசம் சரியாக இயங்க டெமாக்ரசி தேவை. ராஜாவோ, சர்வாதிகாரியோ இருந்தால் கேபிடலிசத்தால் சரியாக இயங்கமுடியாது. ஏனெனில் பணம் மட்டுமல்ல இங்கே தேவை. பணத்துடன் நன்கு இயங்கும் மூளைகள் தேவை. அந்த மூளைகள் இயங்க சுதந்தரமான சூழல் தேவை. அது டெமாக்ரசியில்தான் சாத்தியம்.

    அடுத்து கம்யூனிசம். இந்தப் பதிவு, கம்யூனிசத்தின் குறைபாடுகளைப் பற்றி எழுத அல்ல. அது பிற்பாடு தனியாக வரும். கம்யூனிசத்தின் பின்னடைவுக்குப் பிறகு விஞ்ஞான வளர்ச்சிகள் குறைவு என்று எழுதியுள்ளீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி உங்களிடம் நான் வாதிட முடியும்? தினம் தினம் நடக்கும் கண்டுபிடிப்புகள் எல்லாம் கானல் நீரா? இல்லை கம்யூனிச வேதத்தில் என்றோ கண்டுபிடிக்கப்பட்டவை மீள்கண்டுபிடிப்புகளாக இப்போது வெளிவருகின்றனவா?

    ReplyDelete
  8. எண்பதுகளில் கண்டுபிடிக்கப்பட்ட விசயங்களுக்கு தான் இப்போது விருதுகள் வழங்கபடுகின்றன.இரண்டாம் உலக போருக்கும் 90 க்கும் இடையில் தான் அறிவியலின் பொற்காலம்.அதற்க்கு முக்கிய காரணம் கம்முனிச நாடுகளுக்கும் முதலாளித்துவ நாடுகளுக்குமான போட்டி.நான் கம்முநிசத்தின் ஆதரவாளன் அல்ல.ஆனால் மனித வரலாற்றில் இரண்டே நூற்றாண்டுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்திய (அனைத்து மதங்களையும் விட ),அடித்தட்டு மக்களிடம் நம்பிக்கையை,எதிர்பார்ப்பை உருவாக்கியதில் அதன் பங்கு மிக அதிகம்.
    இப்போது எந்த துறையிலும் வளர்ச்சி ,pathbreaking கண்டுபிடிப்புகள் கிடையாது.பழயதை மெருகு போட்டு விளம்பரம் செய்து மகத்தான மாற்றங்களாக காட்டுகிறது முதலாளித்துவம்.சச்சின் டெண்டுல்கருக்கு முன் கிரிக்கெட் என்பதே இல்லை,விளையாட தெரிந்தவர்களே கிடையாது என்பதை போல.
    சாலைகள்,மருத்துவ வசதி,கல்லூரிகள் போன்றவை முதலாளித்துவத்தின் காரணமாகவா .அனைவருக்கும் மருத்துவ வசதி என்பதே தொழிலாளர்,பாட்டாளி சங்கங்களின் போராட்டத்தினால் தான்.ஒரு NLC ,SAIL வருவதால் அங்குள்ள தீவிரவாதம் குறைந்து அங்குள்ள மக்களின் வாழ்கை தரம் உயருகிறது ஆனால் போஸ்கோ வால் தீவிரவாதம் தலை தூக்கிறதே ஏன்.
    கிழகிந்திய கம்பெனி அந்நிய முதலீடா,முதலாளித்துவமா இல்லை கம்முநிசமா
    சவுதி அரேபியாவில் மாற்றம் வர முதலாளித்துவம் உதவுமா கம்முநிசம் உதவுமா.ஒரு நூற்றாண்டில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனும்,விவசாயியின் மகனும் பெரேஸ்டேரோயக்கா தரும் சாத்தியங்கள்/மாற்றங்கள் கம்முநிசத்தில் உண்டு.முதலாளித்துவம் இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு சௌதியின் ராஜாக்களோடு கொஞ்சி கொண்டு தான் இருக்கும்.ஆப்கானில் நஜிபுல்லாஹ் ஆட்சியில் பெண்கள் ராணுவத்தில் கூட இருந்தார்கள்.அதை கஷ்டப்பட்டு வீழ்த்தி டாலிபனிடம் சேர்த்தது முதலாளித்துவம்.பாகிஸ்தானில் கம்முனிச கட்சிகளும் ,அதன் கொள்கைகள் மேல் ஈர்ப்பு உடையவர்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருந்திருந்தால் அவர்கள் இன்று உள்ள நிலையில் இருந்திருக்க மாட்டார்கள்.அங்கு முதலாளித்துவம் தானே
    உலகெங்கும் சனநாயகத்தின் மேல் நம்பிக்கை வர காரணமே கம்முநிசம் தந்த அனைவரும் சமம்,கடவுள் மறுப்பு கொள்கைகளால் தான்.

    ReplyDelete
  9. We would agree that we need broader understanding of the world in the past and future, in order to propose, prophetize or promise something:

    http://www.walrusmagazine.com/articles/2012.01-essay-apocalypse-soon

    ReplyDelete
  10. ^^ கம்யுனிசம், கேப்பிடலிசம் பத்தி எப்பிடி இவ்ளோ சல்லீசா அடிச்சிவிட முடியுது? அப்பிடியே ஒரு ஃப்ளோல வந்துடுமோ? இல்ல நோட்ஸ் வெச்சிருப்பீங்களோ? :)

    விறுவிறுன்னு ரமணா கணக்கா ஒரு லிஸ்டு போட்டுப் பாத்தேன். 1901ல இருந்து 2011 வரைக்கும் இயற்பியல், வேதியியல், மருத்துவத்துல 550 நோபல் பரிசு கொடுத்துருக்காங்க. அதுல கம்யுனிஸ்ட் நாடுகள்ல (ரஷியா, சைனா, அப்புறம் செத்துப்போன கம்யுனிச நாடுகள் உட்பட) பொறந்தவங்களுக்கு 41 விருதுகள் போயிருக்கு. 1980ல இருந்து 2011 வரைக்கும் மட்டும் கணக்கெடுத்தா மொத்தம் 217 விருது கொடுத்துருக்காங்க. அதுல கம்யுனிஸ்டு நாட்டு மக்களுக்குக் கெடச்ச விருதுகள் எண்ணிக்கை 15.

    என் கணக்கு கொஞ்சம் முந்தி பிந்தி இருந்தாலும் இந்த நம்பர்கள் பாத்து கம்யுனிசம் எந்த அளவுக்கு அறிவியல வளர்த்துருக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

    ReplyDelete
  11. source for the numbers: http://www.nobelprize.org/nobel_prizes/lists/all/create.html

    ReplyDelete
  12. இந்த கேபிடலிச அமைப்பு மட்டும் இல்லையென்றால் நமக்கு இன்று எந்த வசதி வாய்ப்புமே இருந்திருக்காது. சாலைகள் இருக்காது; கல்வி நிலையங்கள் இருக்காது; உணவுப் பற்றாக்குறை மட்டுமே இருக்கும்; வியாதிகளுக்கு விடிவு கிடையாது; கேளிக்கை கிடையாது; ஓய்வு கிடையாது; சுக வாழ்வு கிடையாது.///

    விட்டால் ஒழுங்காக ஒண்ணுக்கு வருவதே முதலாளித்துவத்தால் எனபது போல் எழுதியர்க்கு நான் எழுதிய மறுப்பு தான் கம்முனிச நாடுகளை பற்றியது.41 /550 ஒன்னும் குறைவில்லையே.உலகின் பெருவாரியான நாடுகளில் ஒருவர்,இருவர் வாங்கியதே அதிகம்.அதை வாங்கியவர்கள் பெரும்பாலும் ஒன்றிரன்று நாடுகளை சேர்ந்தவர்கள் தான்.சாதாரண மக்களில் இருந்து,சிறு நாடுகளில் இருந்து(சோவித் ரஷ்யாவும் பல சிறு நாடுகளின் குழுமம் தான்)பல புகழ் பெற்ற விஞ்ஞானிகள் உருவானது கம்முனிச நாடுகளில் இருந்து தான்
    கல்லூரிகள்,சாலைகள் ,ஓய்வு(ஓய்வு ஊதியம் எனபது முதலாளித்துவமா ,வயதானவர்களுக்கு தொகுப்புஊதியம் என்பதும் முதலாளித்துவமா)எல்லாம் அதனால் தான் எனபது சரியா
    கடாப்பி கூட தான் எண்ணெய் கிடைத்ததால் அவர் நாட்டில் எதிர்க்கும் உரிமையை தவிர அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.எண்ணெய் இருப்பதால் venezuela கூட மக்களுக்கு பல சலுகைகள் வழங்க முடியும்
    சாராயம் தனியார் வசம் இருந்த போது அதனால் கிடைத்த வருமானம் எவ்வளவு.இப்போது கிடைக்கும் வருமானம் எவ்வளவு.
    வெளிநாடுகளில் எல்லாம் ரயில் வண்டி கட்டணம் மிக அதிகம்.விமான கட்டணத்தை விட அதிகமாக இருக்கும்.அரசிடம் இருப்பதால் நம் நாட்டில் மிக குறைவு.
    முதலாளித்துவம் இருந்தால் ரயில் வண்டியில் நாம் கழுவ வேண்டிய அவசியம் இல்லாமல் தானாக கழுவி விடும் கழிப்பறைகள் வரும் என்று கூறினால் சரி.ஆனால் முதலாளித்துவம் இல்லை என்றால் ஒன்றுமே இருக்காது,நாம் ஜராவா பழங்குடியினர் போல இருப்போம் அல்லது அந்த நிலைக்கு போய் விடுவோம் எனபது சரியா

    ReplyDelete
  13. http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/entry/aam-bania-is-more-powerful-than-the-aam-aadmi

    Traders and shopkeepers are highly organized in many countries , and so have political clout disproportionate to their numbers. During the US Great Depression, shopkeepers persuaded President Roosevelt to enact anti-competition rules called Resale Price Maintenance (RPM). RPM obliged manufacturers to set a minimum price for products, which could not legally be undercut by large chains with economies of scale. Several decades later, the US courts struck down RPM as anti-competitive. But it is testimony to US shopkeeper clout that RPM continued for so long, and is still sought to be reinstated through the backdoor in many states.

    அமெரிக்கர்கள் பல வளர்ச்சிகள் அடையும் போதும்,கல்வி,விக்ஞானத்தில் அசுர வளர்ச்சி பெற்ற காலத்தில் கூட முதலாளித்துவதிர்க்கு எதிரான பல கொள்கைகள் இருந்தன.இருக்கின்றன.

    கேபிடலிசம் சரியாக இயங்க டெமாக்ரசி தேவை. ராஜாவோ, சர்வாதிகாரியோ இருந்தால் கேபிடலிசத்தால் சரியாக இயங்கமுடியாது. ஏனெனில் பணம் மட்டுமல்ல இங்கே தேவை. பணத்துடன் நன்கு இயங்கும் மூளைகள் தேவை. அந்த மூளைகள் இயங்க சுதந்தரமான சூழல் தேவை.badri


    சீனாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அங்கு இருக்கும் சர்வாதிகாரம் அரசின் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை நசுக்கும் சக்தி கொண்டது.

    ReplyDelete