Friday, December 30, 2011

2011: மன்மோகன் சிங்

என்ன ஒரு வீழ்ச்சி! மெத்தப் படித்தவர். 1990-களில் இந்தியா அழிவின் விளிம்பில் இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களால் காத்தவர். இடதுசாரிகளுக்கு மட்டும் இவர், சர்வதேச நிதியத்தின் கையாள், அமெரிக்க உளவாளி, இந்தியாவை விற்கும் கயவன்.

ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.

நியாயமானவர் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முதுகெலும்பே இல்லாமல், நாளுக்கு நாள் அவமானப்பட்டுக்கொண்டு, ஏன் இன்னமும் சோனியாவைக் காக்க முற்படுகிறார்? ஊழலில் தோய்ந்த அமைச்சரவை, யாரும் இவரது அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை, பெயரளவுக்கு ஒரு பிரதமர். உலகம் மதிக்கிறது, சொந்த நாட்டில் மட்டும் மதிப்பில்லை.

2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் விவகாரங்களுக்குப் பிறகு, இவர் பேசாமல் பஞ்சாபில் கோதுமை நடப் போயிருக்கலாம். தினம் தினம் அசிங்கப்படுகிறார். லோக்பால் சட்ட விவாதங்களின்போது பாஜகவினர் அசிங்க அசிங்கமாக இவரைப் பற்றிப் பேசுகிறார்கள். கோபமே கொள்ளாது உட்கார்ந்திருக்கிறார். கோபித்துத்தான் என்ன பயன்? ராகுல் காந்தியே பார்த்துக்கொள்ளட்டும் என்று போய்விடலாம்.

வேண்டாம் சார்! பேசாமல் வீட்டுக்குப் போய், நாலைந்து எகனாமிக்ஸ் பாடப் புத்தகம் எழுதுங்கள். இந்த பாலிடிக்ஸில் புகுந்து புறப்பட உங்களுக்குத் தெரியவில்லை. அதையெல்லாம் பிரணவ்டாவிடம் விட்டுவிடுங்கள்.

17 comments:

 1. பத்ரி சார் வணக்கம். எப்போதுமே நிழல்கள் தான் எவ்வளவு எடையையும் தாங்கும் வல்லமை கொண்டவை. காங்கிரஸின் ஊழல் வலிமையைத் தாங்கும் ஒரு பெருநிழல் நமது பிரதமர். இது நிழலின் பிழையல்ல. நிழலால் தனித்து நகர இயலாது. காங்கிரஸ் விலகும்போது நிழலும் விலகும். சற்று ஓய்வுகொள்ளும். எகனாமிக்ஸ் புத்தகம் எழுதும்.
  - முனைவர் ப. சரவணன்

  ReplyDelete
 2. நான் அப்படி நினைக்கவில்லை.

  நியாயமானவர் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் முதுகெலும்பே இல்லாமல், நாளுக்கு நாள் அவமானப்பட்டுக்கொண்டு, ஏன் இன்னமும் சோனியாவைக் காக்க முற்படுகிறார்? //

  ஏன் இந்த முரண்பாடு, அனைவரும் சிங்கை விமர்சிக்க காரணமே இது தானே, இல்லையென்றால் இப்போ பேச்சே இல்லையே!

  ReplyDelete
 3. காங்கிரஸ் விலகும்போது நிழலும் விலகும்//


  எவ்ளோ கேவலமா இருக்கு படிக்கும் போதே, இது சிங்குக்கு ஜால்ராவா? இல்ல காங்கிரஸுக்கு ஜால்ராவா?

  ReplyDelete
 4. vengaimarbhan@gmail.comSat Dec 31, 08:41:00 AM GMT+5:30

  "இடதுசாரிகளுக்கு மட்டும் இவர், சர்வதேச நிதியத்தின் கையாள், அமெரிக்க உளவாளி, இந்தியாவை விற்கும் கயவன்.ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை".

  நீங்கள் அப்படி நினைக்காமலிருக்க காரணம், அணு ஆயுத ஒப்பந்தத்தை வலிந்து விரைந்து நிறைவேற்றியது, இப்ப சில்லறை விற்பனையில் அமெரிக்க முதலாளிகளை உள்ளே நுழைய விட துடிப்பது, தனது ஆட்சி காலத்திற்குள் இந்தியாவை அமெரிக்காவிற்கு பட்டா போட்டு விற்றுவிட்டு, தனக்கு ஐ.நாவில் ஒரு பதவி வாங்கிக் கொண்டு ஓடி விட நினைப்பது எல்லாம் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகத் திறமைசாலி. அதில் சந்தேகமே இல்லை.ஆனால் அவர் முன்னாள் அதிகாரி. அரசியல்வாதியாக ஆக்கப்பட்டவர்.
  க்டந்த காலத்தில் பிரதமராக இருந்தவர் காங்கிரஸின் கட்சித் தலைவராகவும் இருந்தார். அல்லது காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதமராக இருந்தார் என்றும் சொல்லலாம்.அது தான் முறை.
  டாக்டர் மன்மோகன் சிங் இப்போது கட்சியின் தலைவராகவும் இருந்தால் தனக்கென அரசியல் அஸ்திவாரத்தை உண்டாக்கிக் கொண்டு பல சாதனைகளைப் புரிந்திருக்கலாம்.யாரோ ஒருவர் வந்து உட்காரும் வரையில் பிரதமரின் நாற்காலியில் அமர்ந்திருக்க வேண்டியவர் என்ற நிலையை காங்கிரஸ் தலைமை ஏறபடுத்தி விட்ட காரணத்தால் பிரதமரின் பதவியே மதிப்பிழந்து விட்டது. இது காங்கிரஸ் ஆட்சிக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ, கட்சித் தலைமைக்கோ, எப்போதோ வரப் போகிறவர் என்று சொல்லப்படுகிறவருக்கோ அழகல்ல.வம்ச பரம்பரை ஆட்சிமுறை தவறல்ல என்ற வாதம் முன்னே வைக்கப்படும்போது எல்லாமே கெட்டுக் குட்டிசுவராகிவிடும் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவரவர் தம் பதவி பற்றித் தான் கவலைப்படுவர். நாட்டைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.

  ReplyDelete
 6. இப்போது பிரணாப் தானே அரசியல் நடத்துகிறார்,இவர் எகனாமிக்ஸ் முடிவுகள் எடுக்கிறார் (ஆனால் பதவிகள் ஆப்போசிட் )
  So why should he go home?

  ReplyDelete
 7. Badri Sir,

  Gnani கனிமொழியே வருக, வருக ! link is not working properly

  ReplyDelete
 8. MMS has been an administrative official - working well within a well defined framework of rules and regulations.

  But, being a leader of a political party (esp. such as Congress) or the PM of this vast country is definitely a different cup of tea which an honest and efficient former RBI Governor can't perform that easily.

  Thanks
  Muthu

  ReplyDelete
 9. உங்கள் கருத்துக்களிலயே முரண்பாடு உள்ளதே.

  „நியாயமானவர் என்றுதான் நினைக்கிறேன்.“

  அப்படி நியாயமானவர் என்றால் தன் கண் முன் நடக்கும் தவறை தட்டிக்கேட்க வேண்டும்.

  நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்பது போல தவறு யார் செய்திருந்தாலும் இவர் அதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சோனியா கும்பலின் தவறை கண்டும் காணாமல் இருப்பது தான் நீங்கள் சொன்ன நியாயமானவரிற்க்கு அழகா?

  இவரால் தவறை தட்டிக்கேட்க முடியவில்லையா? அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்தால் இவர் நியாயமானவர் என்று நான் ஒத்துக்கொள்கிறேன்.

  நான் வசிக்கின்ற சுவிஸ் நாட்டில் கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் இந்தியாவை பற்றி ஒரு கட்டுரை இங்கு வெளியாகும் பத்திரிகையில் படித்தேன். அந்த கட்டுரையின் தலையங்கம் „வாங்கப்பட்ட ஐனநாயகம்“.

  இந்தியாவின் ஊளலின் பாதிப்பே இது! இதற்க்கு நீங்கள் சொன்ன நியாயமானவரும் ஒரு காரணமே!

  ReplyDelete
 10. காந்தி சொன்னது.. Education without character is a menace.. மன்மோகனுக்காகவே சொன்னது போல் இருக்கிறது. ஒரு வித்யாசம்.. வெறும் படிப்பு மட்டும் தான் இருக்கிறது. அதற்கேற்ற திறமையோ பண்போ இல்லை.. தூக்கி எறியவேண்டும் இது போன்ற வெற்று ஆசாமிகளை..

  ReplyDelete
 11. இது என்ன புது கதை?

  மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களே மக்கள் நலனுக்கு எதிராக நடக்கும் இன்றைய சூழ்நிலையில்,சோனியாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மக்கள் நலனுக்காக செயல்படவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு மதியீனம்??
  மன்மோகன் ஒரு glorified O.Panneerselvam!!
  அம்புட்டுதேன்!!
  இன்று இந்தியர்களால் மிகவும் வெறுக்கப்படும் அரசியல்வாதிகளின் Top ten பட்டியலில் முதல் மூன்று இடத்திலும் இருப்பவர் மன்மோகன்.

  ReplyDelete
 12. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டால் உள்ளூர் வர்த்த்கர்களுக்கு பாதிப்பு கிடையாது.
  கூடங்குளத்தால் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு கிடையாது.
  இதையெல்லாம் நம்பினால் மன்மோஹன் சிங் அமெரிக்க உளவாளி இல்லை என்பதையும் நம்ப வேண்டியதுதான். அது சரி, மன்மோஹன் சோனியாவைக் காப்பாற்றுவது இருக்கட்டும், நீங்கள் ஏன் எல்லா விஷயங்களிலும் தனியார் முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சுரண்டல் பேர்வழிகளுக்கும் வக்காலத்து வாங்குகிறீர்கள்? எல்லாரும் ஒன்றை எதிர்க்கும் விஷயத்தை ஆதரிப்பது தான் அறிவிஜீவித்தனமா?

  ReplyDelete
 13. மன்மோஹன் சிங் ஒய்வு பெற்ற பின் என்ன புத்தகம் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? கீழ்க்கண்ட தலைப்புகளில் எது பொருத்தமாக இருக்கும்?:
  அ)பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியாமல் ஒரு லக்ஷம் கோடி ரூபாய் ஊழல் செய்வது எப்படி? (அல்லது)
  ஆ)ஒரு லக்ஷம் கோடி ரூபாய் ஊழல் வெளிவந்த பிறகும் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நடிப்பது எப்படி?

  உங்கள் அகராதியில் நியாயம் என்றால் என்ன அர்த்தம்? கூட்டணியில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் அக்கிரமம் செய்யலாம் என்று கண்மூடிக் கொண்டிருப்பதா? ஒரு வேளை இதுதான் சமூக நீதி, மனித உரிமை என்று கூட சொல்லுவீர்களோ?
  இதை விட அதிகமான ஊழலை, துரோகத்தை ஒரு இத்தாலியர் கூட செய்ய முடியாது.

  ReplyDelete
 14. நண்பர் திரு பத்ரி,

  சில தமிழ் படங்களிலும் பல இந்தி படங்களிலும், அது ஒரு குடும்ப கதை படமானால் அந்த குடும்பத்தில் ஒரு மூதாட்டி (அம்மா அல்லது அத்தை) இருப்பார். வெள்ளை புடவை ஒன்றை உடுத்திக்கொண்டு தன்னின் சுயமே இல்லாமல் குடும்ப உறுப்பினர்களை பற்றியே நினைக்கும் ஒரு கேரெக்டர். அந்த பெண்மணியின்
  வாழ்க்கை லட்சியமே மகனின்/ மகளின் / பேரன் பேத்திகளின் தினசரி செயல்களை கவனித்து கொண்டிருப்பது மட்டுமே. தனெக்கென்று ஒன்றுமே இல்லாத ஒரு பாத்திரப்படைப்பு!!

  நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது மன்மோகன் சிங்க் அந்த பாத்திர படைப்பு கிடையாது! கிடையாது! கிடையாது!!!

  குடும்ப மானத்தை கூர்ந்து கவனித்து கொண்டிருக்கும் வெள்ளை புடவை மூதாட்டி அல்ல அவர்!!! தன் வாழ்க்கையை அதன்மூலம் தன் பிரஸ்டிஜெய் இந்த பதவியின்மூலம் அனுபவிக்க தெரிந்தவர் அவர்!

  பதிவி ஆசை இருப்பதில் பாவம் ஒன்றும் இல்லை ! எல்லோருக்கும் அது இருக்கிறது! அரசியலில் அது இருந்தால்தான் ஒருவர் தலைவர் ஆவார்!
  மன்மோகன் சிங்கிற்கு தலைவர் ஆகாமலேயே அந்த பதவி கிடைத்திருக்கிறது!

  உடுவாரா அந்த ஜாக்குபாட்டை ??????????

  கருணாநிதிக்கும் மன்மோகனுக்கும் வித்தியாசம் ரொம்ப இல்லை! கலைஞரின் தன் முயற்ச்சியால் பதவிக்கு வந்ததனால் குடும்பம் கொள்ளை அடிப்பது
  தன்னின் தார்மீக உரிமையாக நினைத்து செயல்பட்டார்!

  மன்மோகன் தன் முயற்ச்சியால் பதிவிக்கு வராததனால் தான் கொள்ளை அடித்தால்தான் அது தவறு, தன் சகாக்கள் கொள்ளை அடித்தால் அது தவறாகாது என்ற எண்ணத்தில் செயல் படுகிறார்!

  சாதாரண பதவி மோகத்திற்கு பெரும் அர்த்தங்களை கண்டுபிடிக்க முயன்றால் குழப்பம்தான் மிஞ்சும்!!!

  (இதை இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சோனியாயிசம் என்ற பின் சீட்டு ஓட்டுனர் பட்டப்படிப்பில் டாக்டரேட்டு பெற்ற சிலரில் மன்மோகனும் ஒருவர். அவருக்கு முன் சீட்டில் ஜாலியாக, அதாவது ஓட்டுனர் சீட்டில் உட்கார்ந்து அதேசமயம் ஓட்டும் வேலை எதுவும் இல்லாதது ரொம்ப பிடிச்சி போச்சு!

  அந்த கார் எங்கேயாவது முட்டி மோதி நின்றால்தான் இறங்குவார். இல்லாவிடில் இளைய தளபதி ராகுல் வரும்வரை அவரை வெளியே தள்ளுவது
  கஷ்டம்!)

  ReplyDelete
 15. பரிதாபம் என்னவென்றால் பஞ்சாப் பொற் கோவில் போய் வந்தால் கூட கோவில் வாசலில் கறுப்புக் கொடி காட்டுகிறார்கள் (இவ்வளவு நல்லவராக இருந்து தான் ஆக வேண்டுமா?)

  ReplyDelete
 16. தன் முக்கியமான பதவியை பயன்படுத்தி லஞ்சம வாங்குவது ஊழல என்றால்,ஒரு முக்கியமான பதவியில் இருந்துகொண்டு ஒரு வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்குவது அதை விட பெரிய ஊழல.அவ்வகையில் மன்மோகன் ஒரு மிகப்பெரிய ஊழல் பேர்வழி!ஆளுமையோ ஆற்றலோ அற்ற ஒரு பிள்ளையார் எறும்பு அவர்.பிள்ளையார் என்ற அதிருஷ்டவசமான அடைமொழிக்காக மக்கள் அவரை அதிகம் சீந்துவதில்லை!

  ReplyDelete
 17. நலமா நண்பர் No அவர்களே?

  நாஜியிசத்தையும்,திராவிட பகுத்தறிவு கொள்கையும் ஒப்பிட்டு நீங்கள் செய்திருந்த ஒரு பதிவு மிக சிறந்ததொன்று.வெறுப்பு எனும் விஷப்பயிரை வளர்த்தே தாங்களும் வளர்ந்துவிட்டனர் இந்த பகுத்தறிவுவாதிகள்.
  அழிந்தது என்னவோ தமிழகம்தான்!

  வாழ்த்துக்கள்

  ReplyDelete