Friday, December 09, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 2)

கிறிஸ்தவ மதமாற்றம் குறித்து, உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து அரவிந்தன் நீலகண்டனுடன் நான் உரையாடுகிறேன்.



31 comments:

  1. நான் என்னவோ நீலகண்டன் ஆர்.எஸ்.எஸ் ஆசாமி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்! இப்பதான் தெரிகிறது அவர் அதையும் தாண்டி அக்மார்க் பஜ்ரங் தள் காரர் என்று! யாரும் கேள்வியே பட்டிராத யாரோ தெய்வநாயகம் என்னவோ உளறிக்கொட்டி ஒரு புத்தகம் எழுதியிருக்காராம்...அதுக்கு இவர் பதில் சொல்றாராம்! இதைத்தான் "Hindu/Christian/Islamic fundamentalisms feed on each other" என்று சொல்கிறார்கள். இந்த நெருப்பு எரிய கிழக்கு காகிதம் சப்ளை செய்யனுமா?

    சரவணன்

    ReplyDelete
  2. Badri, of the podcasts uploaded so far, this series on Tamil version of Breaking India is the best. The discussion and the issues raised are excellent. This will make the book compelling read for all. Good luck to Aravindan. Way to go!!

    ReplyDelete
  3. //யாரும் கேள்வியே பட்டிராத யாரோ தெய்வநாயகம் என்னவோ உளறிக்கொட்டி ஒரு புத்தகம் எழுதியிருக்காராம்...அதுக்கு இவர் பதில் சொல்றாராம்!

    How can you generalize that no one has heard about Deivanayagam? DMK chief Karuna has endorsed his book. It's about what kind of psychological imprint will be created by Deivanayagam's work (supported by all churches) in the minds of Christians. Don't belittle the hard-work of authors without even reading a single of the book.

    ReplyDelete
  4. @neovasanth:

    சரி, தெய்வநாயகம் புத்தகத்தை யார் வெளியிட்டது? எங்கு கிடைக்கிறது?

    கிழக்கு வெளியிடும் நீலகண்டன் புத்தகம் மூலமாகத்தான் நிறையப் பேர் அவர் எழுதியவற்றைப் படிக்கப்போகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

    தெய்வநாயகம் மாதிரி ஃப்ரின்ஜ் ஆசாமிகளை புறக்கணிக்க வேண்டுமா அல்லது 'அந்திய சக்தி சதி', 'போச்சு, போச்சு நாடு உடைகிறது', 'இதோ பார் பூச்சாண்டி வரான்' என்று கிழக்கு மாதிரி நல்ல ரீச் கொண்ட மெய்ன் ஸ்ட்ரீம் பதிப்பகம் பெரிய அளவில் மார்க்கட் செய்து மக்களிடம் சேர்க்க வேண்டுமா?

    கவனிக்க-
    1) இதை ஆர்.எஸ்.எஸ். பதிப்பகம் செய்தால் நான் மல்லுக்கு நிற்கப்போவதில்லை.

    2) ஆரியம்-திராவிடம் பற்றி ஒரு ராம் குஹா மாதிரி கிரெடிபிள் ஆளுமை ஒருவர் புத்தகம் எழுதி, அதை கிழக்கு வெளியிட்டால் அப்பவும் ஓகே.

    யார் இந்த ராஜிவ் மல்ஹோத்ரா என்று பார்த்தால் ஏதோ கம்ப்யூட்டர், டெலிகாம் கம்பெனிகள் நடத்திவிட்டு, போரடித்துப் போய் வரலாறு எழுதுகிறாராம்! மற்றபடி அவருக்கும் வரலாற்று ஆராய்ச்சிக்கும் ஸ்நானப்பிராப்தி கூடக் கிடையாது!

    தெய்வநாயகங்களும், மல்ஹோத்ராக்களும் அடித்துக்கொண்டு சாகட்டும். ஒரு திரிபுக்கு இன்னொரு திரிபு. நமக்கு வேறு உருப்படியான வேலை இருக்கிறது.

    இந்தப் புத்தகத்துக்கு செலவான பேப்பர், எடிட்டிங்- ப்ரூஃப் ரீடிங்- டி.டி.பி. போன்ற உழைப்பு, பாட்காஸ்ட் பதிவு செய்ய ஆன நேரம், இன்னும் இதை அடுக்கிவைக்க- அனுப்ப தேவைப்படும் கோடவுன் இடம், போக்குவரத்து, கடைசியாக இதைப் படித்து, இந்தியா உடையப்போகுதாமே (முல்லைப் பெரியார் டேம் 'உடையப்போவது' மாதிரி!) என்று கவலைப்படப் போபவர்களின் நேரம் என்று கூட்டிக் கணக்குப்போட்டுப் பாருங்கள். இந்த வெட்டி வேலையின் விரயம் புரியும்.

    சரி, அப்படியே இந்தப்புத்தகம் 'வெற்றி' என்று வையுங்கள். அதன் பொருள் என்ன? பஜ்ரங் தள் மாதிரி அமைப்புகளுக்கு இன்னும் ஆள் சேர்ப்பு...கிரஹாம் ஸ்டெய்ன் மற்றும் குழந்தைகள் மாதிரி கொடூர உயிர்ப்பலிகள்.. இவைதானே?

    கிழக்கு பக்கா கமர்ஷியல் பதிப்பகமாக இருக்கலாம் (வி.ஏ.ஓ. கைடெல்லாம் போடுறாங்க!) அதுக்காக இந்த அபாயகரமான திசை மட்டும் வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள நடுநிலை வாசகர்களுக்கு உரிமை உண்டு என்றே நினைக்கிறேன். மற்றபடி sane voice யாராக இருந்தாலும், என்ன கொள்கையாக இருந்தாலும், லைட் ரீடிங், சீரியஸ், சுய முன்னேற்றம், ரயில்வே டைம் டேபிள் என எதை வேண்டுமானாலும் பதிப்பிக்கட்டுமே, யார் வேண்டாம் என்பது?

    சரவணன்

    ReplyDelete
  5. யார் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று சான்றிதழ் வழங்கி கவுரவிப்பதற்காகவே சில தாசில்தார் தருதலைகள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமை சரவணன் இது ?

    ReplyDelete
  6. //
    அவருக்கும் வரலாற்று ஆராய்ச்சிக்கும் ஸ்நானப்பிராப்தி கூடக் கிடையாது!
    //

    வரலாறு வகுப்பறை பக்கம் ஒண்ணுக்கு அடிக்கக் கூட ஒதுங்காத மாக்ஸ் முல்லர் உளரிக்கொட்டியதை நம்புவார்கள், ஒருவர் சீரியசாக ஆராய்ச்சு செய்து புத்தகம் போட்டால் அதைப் படிக்கக் கூட மாட்டார்கள். உடனே பஜ்ரங் தள்,ஆர்.எஸ்.எஸ் என்று முத்திரையுடன் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள்.
    இந்த கெட்டக் கேட்டுக்கு sane voice என்று தனக்குத் தானே சர்டிஃபிக்கேட் வேறு. துத் தேரி...!

    ஆண்டவா! இவன எல்லாம் ஏண்டா சுனாமி தூக்கல்ல ?

    ReplyDelete
  7. Saravanan,
    The fundamental flaw in your argument starts with your assumption that your are a neutral reader and you continue to assume lot many things about the authors and their years of effort.

    In my view a neutral reader will not trash the authors by brushing them with saffron without even taking a look at the book/reading a single line in it. In this particular book they have named individuals with huge references in the appendices.

    Regarding Deivanayagam,
    He may be fringe to general public but not to the churches which support his works and disseminate them to the Christians.

    ReplyDelete
  8. @வஜ்ரா

    Sane voice -களுக்கு 'தாசில்தால் தறுதலைகள்' என்று பெயர் என்றால் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் வஜ்ரா! அவர்களால்தான் இந்த நாடு உடையாமல் இருக்கிறது!

    (பை தி வே, தறுதலை- க்கு உங்க ஸ்பெல்லிங் தப்பு. பாவம், நீங்கதான் தறுதலை இல்லையே, அதான் தெரியலை!)

    சரவணன்

    ReplyDelete
  9. @ neovasanth @ வஜ்ரா,

    உங்களுக்கெல்லாம் வினவு- மாதிரியானவர்களின் முரட்டடிதான் சரி! நிதானமாக, நடுநிலையாகப் பேசலாம் என்றால், எப்படி சாபம் வருகிறது பாருங்கள். அதுசரி, உங்களுக்கென்ன, பதிப்பகம் பத்ரியோடதுதானே. (sane voice-களில் ஒருவர்!) கிழக்கு என்ன பெயரெடுத்தால் உங்களுக்கென்ன, நடுநிலையாளர்கள் ஏலியனேட் ஆனால் உங்களுக்கென்ன? இனிமேல் இது பற்றி கமெண்ட் போடப்போவதில்லை. பத்ரி பாடு, உங்கள் பாடு.

    சரவணன்

    ReplyDelete
  10. சரவணன்: கிழக்கு பலவிதமான புத்தகங்களை வெளியிடுகிறது; தொடர்ந்து வெளியிடவும் செய்யும். இது என் மற்றும் பிற கிழக்கு எடிட்டர்களின் சொந்த ஐடியாலஜி தாண்டிய ஒன்று. நாகூர் ரூமி எழுதிய ‘இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ வெளியானபோது இந்துத்துவர்கள் கிழக்கு பதிப்பகத்தைக் கடுமையாகத் தாக்கினர். அரவிந்தன் நீலகண்டனுமே கூடத்தான். இன்று அவர் எழுதியுள்ள சில புத்தகங்களை நாங்கள் வெளியிடுகிறோம். கம்யூனிசத் தலைவர்களை எவ்விதத்திலும் கேள்விக்குள்ளாத, அவர்களுடைய புகழ்பாடும் சில புத்தகங்களை கிழக்கு கொண்டுவந்துள்ளது. அடுத்து வரவிருக்கும் ஒரு புத்தகம் கம்யூனிசத்தைக் கடுமையாகக் கேள்விக்கு உள்ளாக்க இருக்கிறது. ராஜிவ்/அரவிந்தன் எழுதிய இந்தப் புத்தகம் சுமார் ஓராண்டுக் காலமாக ஆங்கிலத்தில் Amaryllis என்ற மெயின்ஸ்ட்ரீம் பதிப்பகம் வாயிலாக வெளியிடப்பட்டுவரும் ஒரு புத்தகமே. இதன் தமிழாக்க, வரும் அதே நேரத்தில்தான் பத்ரி நாராயண திவாரி என்பவர் எழுதி சேஜ் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றின் தமிழாக்கமான ‘வலைவிரிக்கும் இந்துத்துவம்’ வெளிவரப்போகிறது. அந்தப் புத்தகத்தின் ஆசிரியர், இந்துத்துவ அமைப்புகள் எவ்வாறு தலித்துகளைத் தம் பக்கம் ஈர்க்க சில உத்திகளைக் கையாளுகின்றன என்பது பற்றி எழுதியிருக்கிறார்.

    திராவிட இயக்கம் பற்றி இரு வால்யூம் புத்தகத்தை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். அண்ணா, பெரியார், கருணாநிதி பற்றியெல்லாம் ஆதரவான புத்தகங்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

    இவ்வாறு எதைப் பற்றியெல்லாம் புத்தகம் வந்தாலும் யாரோ ஒருவர் கடுமையாக எதிர்க்கிறார். இதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

    பொதுவாகவே நாங்கள் ஒரு குறிப்பிட்ட ஐடியாலஜி அற்ற, பல்வேறு கருத்துகளை முன்வைக்கக்கூடிய ஒரு பிளாட்ஃபார்மை உருவாக்குவதிலேயே ஈடுபட்டிருக்கிறோம். இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் குறைந்தபட்ச ஸ்காலர்ஷிப்பாவது இருக்கவேண்டும். தொடக்க காலத்திலிருந்து பார்க்கும்போது இதிலும் தொடர் முன்னேற்றத்தையே கண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

    என் கருத்தில், ‘உடையும் இந்தியா’ புத்தகம் விரிவாக ஆய்ந்து எழுதப்பட்ட ஒன்று. அதில் உள்ள கருத்துகள் எனக்கு ஏற்புடையவையாக இருக்கலாம். இல்லாது இருக்கலாம். அதில் உள்ளவை தவறு, குப்பை என்றால், அதனை விவாதம்மூலம் நிறுவுவதே சிறந்தது.

    இந்துத்துவத்தினால் நாட்டுக்கு என்ன கெடுதல் என்று விரிவான தரவுகளோடு, நல்ல நடையில் யாரேனும் எழுதிக்கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் பிரசுரிப்பேன்.

    ReplyDelete
  11. Badri-Thanks for this podcast. i learnt a lot-look at this link http://www.joshuaproject.net/south-asia-states.php?rog4=IN25

    ReplyDelete
  12. //
    இந்துத்துவத்தினால் நாட்டுக்கு என்ன கெடுதல் என்று விரிவான தரவுகளோடு, நல்ல நடையில் யாரேனும் எழுதிக்கொடுத்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் பிரசுரிப்பேன்.
    //

    சேன் வாய்ஸ்...நடுநிலைவாதம் என்றால் இது தான்.

    --
    தாசில்தார் த"று"தலை சரவணன் ஐயா, வினவு மாதிரியானவர்களின் தராதரம் ஊலகறிந்த ஒன்று. அந்த அளவுக்கு கீழே இறங்கி சோடா பாட்டில் வீச இந்துக்கள் தயங்குவது மிகப்பெரிய தவறு என்று எண்ணுபவனுள் நானும் ஒருவன். நாம் என்ன ஆயுதம் எடுக்கிறோம் என்று நமது எதிரி தானே தீர்மானிக்கிறான்.

    எங்காவது ஒரு இடத்தில் அவிங்களுக்கு ஆப்பு விழும். அவிங்களையெல்லாம் சேன் வாய்ஸ் என்று நினைக்கும் உம்மைப்போன்றவர்களுக்கும் அது சேர்த்தே விழும். அதுவரை இணையத்தில் எவனெல்லாம் ஆர்.எஸ்.எஸ், எவனெல்லாம் பஜ்ரங் தள் என்று தேடிக் கண்டுபிடித்து சர்டிஃபிக்கேட் கொடுத்துக்கொண்டிருக்கவும். அந்த சர்டிஃபிக்கேட்டை வைத்துக்கொண்டு அதைக் கூட துடைத்துப் போட முடியாது என்பது வேறு விசயம்.

    //
    அவர்களால்தான் இந்த நாடு உடையாமல் இருக்கிறது!
    //

    ஓ...ஓ...ஓஓஓஓ

    யாருக்கெல்லாம் வினவு மற்றும் இந்துத்வா மீது தீண்டாமை கடைபிடிக்கும் இணைய தாசில்தார் தருதலைகளின் சொற்கள் எல்லாம் "தேச பக்த" இலக்கியங்களாகத் தெரிகிறதோ அவர்களெல்லாம் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகி ஆலோசிப்பது சாலச்சிறந்தது.

    ReplyDelete
  13. Saravanan,
    I too do not have interest in continuing, but I will end with following
    1. I have read the english version of this book.
    2. I have seen the impact of christian missionaries in my native village.

    ReplyDelete
  14. யார் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று சான்றிதழ் வழங்கி கவுரவிப்பதற்காகவே சில தாசில்தார் தருதலைகள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமை சரவணன் இது ? 100% true

    ReplyDelete
  15. \\உங்களுக்கெல்லாம் வினவு- மாதிரியானவர்களின் முரட்டடிதான் சரி! நிதானமாக,
    > நடுநிலையாகப் பேசலாம் என்றால், எப்படி சாபம் வருகிறது பாருங்கள்\\

    இத படிச்ச உடனே எனக்கு ஒரு வரி நியாபகம் வருகிறது. " நல்லவ வந்துட்டா சொம்ப எடுத்து உள்ளவைங்கன்னு"..... ஹையோ ஹையோ

    \\யாரும் கேள்வியே பட்டிராத யாரோ தெய்வநாயகம் என்னவோ உளறிக்கொட்டி ஒரு புத்தகம் எழுதியிருக்காராம்\\

    தெய்வனயகதுக்கு பதில் சொல்ல நான் ஒருத்தனே போதும். அதுக்கு இவ்வளவு பெரியவங்க எல்லாம் தேவை இல்லை... அவனுக்கு பதில் தர தான் இவ்வளு பெரிய புத்தகம் எழுதியிருகங்கன்ன்னு நினைக்குறது வடிவேலு சொல்ற மாதிரி சின்ன புள்ள தனமா இருக்கு...

    \\பஜ்ரங் தள் மாதிரி அமைப்புகளுக்கு இன்னும் ஆள் சேர்ப்பு...கிரஹாம் ஸ்டெய்ன் மற்றும் குழந்தைகள் மாதிரி கொடூர உயிர்ப்பலிகள். & ஆரியம்-திராவிடம் பற்றி ஒரு *****ராம் குஹா**** மாதிரி கிரெடிபிள் ஆளுமை ஒருவர் புத்தகம் எழுதி, அதை கிழக்கு வெளியிட்டால் அப்பவும் ஓகே \\

    சரவணன்...... என்னாலே முடியல.... ஏமாந்தவன் இருப்பன் அவன் கிட்ட போய் ஊறுகாய் போடுங்க... ஆனாலும் கேட்குறான் எல்லாருமே கேனயன தான் இருப்பான்னு நீங்க விடாம எழுதுறிங்க பாருங்க... உண்மையாவே உங்கள நான் பாராட்டுறன்...:)

    ReplyDelete
  16. @குணா @கோமதி- நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ராம் குஹா, ரொமீலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், நம்ம ஊர் ஆ.இரா.வெங்கடாசலபதி போன்றவர்களைத்தான் யாரும் வரலாற்று ஆசிரியர்களாக- ஆராய்ச்சியாளர்களாக ஒத்துக்கொள்வார்கள். ராஜீவையும், அ. நீலகண்டனையும் காவிப்படைக்கு வெளியில் யாரும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களாக ஒப்புக்கொள்கிறார்களா என்ன? தெய்வநாயகமும், ராஜீவும், நீலகண்டனும் உலகத்துக்குக் குழாயடிச்சண்டைக்காரர்கள் மட்டுமே. இதை நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும், 75 ஆண்டுகளாக என்ன முயற்சிசெய்தாலும் பெரும்பான்மையான இந்துக்கள் காவிப்படையைப் புறக்கணிப்பதன் (உதாரணம்- ஜெயலலிதா மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்தபோது மக்கள் அவருக்கு மரண அடி கொடுத்து, அதை வாபஸ் வாங்க வைத்தார்கள்) சோர்வு வஜ்ரா போன்றவர்களின் வார்த்தைகளில் வன்முறையாக, வன்மமாக, சாபமாக எப்படிக் கொப்பளிக்கிறது பாருங்கள்!

    சரவணன்

    ReplyDelete
  17. @anonymous according to your own Arundathi roy Ramachandra Guha is only a Cricket Historian!!!

    Regards
    S Baskar

    I have read this book in English. Very well researched book. Not emotional or adukku Mozhi.

    ReplyDelete
  18. //
    நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ராம் குஹா, ரொமீலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், நம்ம ஊர் ஆ.இரா.வெங்கடாசலபதி போன்றவர்களைத்தான் யாரும் வரலாற்று ஆசிரியர்களாக- ஆராய்ச்சியாளர்களாக ஒத்துக்கொள்வார்கள்.
    //

    200 ஆண்டுகளாக என் முதுகை நீ சொறி, உன் முதுகை நான் சொறிகிறேன் என்று இடது சாரிக் கூட்டம் ஒன்று இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆக்கிரமித்துக் கொண்டு உண்டு கொழுத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தினர் இந்தியா/இந்துக்களைப் பற்றி எப்படியெல்லாம் கேவலமாக யோசித்து எழுத முடியுமோ அப்படியெல்லாம் கற்பனை செய்து எழுதுவது தான் சரித்திரம் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சரித்திரத்தை சரித்திரமாகப் பார்க்காமல் அரசியல் கொள்கைப்பரப்புரையாக மாற்றியது தான் அந்தக் கூட்டத்தின் ஆகச்சிறந்த சரித்திரப் பங்களிப்பு.

    அருண் ஷூரி எழுதிய Eminent Historians: Their Technology, Their Line, Their Fraud (1998, ISBN 81-900199-8-8) என்கிற புத்தகத்தைப் படித்தால் நான் இவர்களை/இவர்களை போற்றுபவரக்ளைத் திட்டுவதெல்லாம் ஒன்றுமே இல்லை, விவேகானந்தர் ஒரு இடத்தில் வெள்ளையனைப் பார்த்துச் சொல்லியது போல் இந்துமா சமுத்திரத்தின் அடிஆழத்திலிருந்து கழிவுகளைக் கொண்டு வந்து இவர்கள் மேல் கொட்டினாலும் போதாது என்று தோன்றும்.

    //
    வஜ்ரா போன்றவர்களின் வார்த்தைகளில் வன்முறையாக, வன்மமாக, சாபமாக எப்படிக் கொப்பளிக்கிறது பாருங்கள்!
    //

    கொள்கைத் தீண்டாமை கடைபிடிப்பவர்கள் தானே நீங்கள் .. உங்களுக்கெல்லாம் மரியாதை ஒரு எதற்கு ?


    //
    ஜெயலலிதா மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்தபோது மக்கள் அவருக்கு மரண அடி கொடுத்து, அதை வாபஸ் வாங்க வைத்தார்கள்
    //

    Red herring.

    ReplyDelete
  19. /// தாசில்தார் த"று"தலை சரவணன் ஐயா, வினவு மாதிரியானவர்களின் தராதரம் ஊலகறிந்த ஒன்று. அந்த அளவுக்கு கீழே இறங்கி சோடா பாட்டில் வீச இந்துக்கள் தயங்குவது மிகப்பெரிய தவறு என்று எண்ணுபவனுள் நானும் ஒருவன். ///

    அப்ப நீங்க தமிழ்ஹிந்து என்கிற தளத்தைப் பார்த்தது இல்லைபோல! அம்மாதிரித் தளங்களுக்கு வினவு எவ்வளவோ தேவலை.

    சரவணன்

    ReplyDelete
  20. \\@குணா @கோமதி- நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ராம் குஹா, ரொமீலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், நம்ம ஊர் ஆ.இரா.வெங்கடாசலபதி போன்றவர்களைத்தான் யாரும் வரலாற்று ஆசிரியர்களாக- ஆராய்ச்சியாளர்களாக ஒத்துக்கொள்வார்கள்\\

    இது எனக்கு கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி மாதிரியே இருக்கு....ஆனாலும் இவனுங்களோட விடா முயற்சிய நான் பாராட்டுரேன்.... என்னமா எழுதுராங்க...

    ReplyDelete
  21. \\தெய்வநாயகமும், ராஜீவும், நீலகண்டனும் உலகத்துக்குக் குழாயடிச்சண்டைக்காரர்கள் மட்டுமே. \\

    சரவணன் சான்சே இல்ல.. என்னமா யோசிக்கிறீங்க...அப்படியே இந்த லிஷ்டுல கால்டுவேல், மேக்ஸ் முல்லர்ன்னு இவங்களையும் சேத்துடீங்கனா... நாங்க திண்ணைய காலி பண்ணிடுவோம் :)

    ReplyDelete
  22. //என் கருத்தில், ‘உடையும் இந்தியா’ புத்தகம் விரிவாக ஆய்ந்து எழுதப்பட்ட ஒன்று. அதில் உள்ள கருத்துகள் எனக்கு ஏற்புடையவையாக இருக்கலாம். இல்லாது இருக்கலாம். அதில் உள்ளவை தவறு, குப்பை என்றால், அதனை விவாதம்மூலம் நிறுவுவதே சிறந்தது.//

    Can the author Arvindan Neelakantan or the publisher Badri or at least Vajra can tell us which international peer-reviewed research journal the authors Rajib and Arvindan published their research before using their money power to propagate them to the masses?

    Just one example for their "பேனைப் பெருமாளாக்கும்" idiotic research here:

    "Rani David, the founder of Kalairani Natya Saalai in Maryland, USA, (strategically located right next to a prominent Hindu temple) is even more blatant about Christianizing the Bharata Natyam. (http://breakingindia.wordpress.com)"

    I live in the Washington DC area and anyone who lived/s in the DC area would know Rani David. Our common blogger friend Srikanth Meenakshi can testify this. She has a dance school which teaches all kinds of Indian dances, more of film music kind and less of classical dances like Bharathanatyam. I don't think she has any kind of ideology that drives her dance programs and the elites among the locals sometimes even whisper as if her dance programs are somewhat inferior or cheap. She also does not really care what her critics say about them. In fact, she was the only dance teacher who often staged dances for Hindi film songs in Tamil Sangam and ran into rough weather with few of the organizers. She called them as anti-Indian and anti-national and refused to stage any dances in Tamil Sangam for a while. But, here our Hinduthwa bigots call her as anti-Indian/Hindu trying to breaking India. There are similar uncharitable comments in this book about FeTNA, University of California, Berkeley Tamil Chair, Professor George Hart.

    I glanced several pages in a book store when I visited India in August. I am trying to get a free book to read the whole (yes, it is not worth spending even a penny) before pointing out other nonsense. They probably packaged 5% truth and remaining 95% hate garbage and want to sell this in India. Thanks to Kizhakku, this hate is getting propagated in Tamil too.

    Badri or I have no problem with Kizhakku acting as a democratic (or commercial!) platform for all types of views. But promoting this as a book with rigorous research in podcasts does not bode well for Badri's perceived neutrality.

    Thanks
    S. Sankarapandi

    ReplyDelete
  23. sankarapandi, whether this book is a hate propaganda or a book well researched is for the readers to decide. If hindutvavadis are bigots so are you. A dravidian bigot or a commie stooge. How's that for a change.

    If AN and RM are using their own money to publish a book why is your a$$ on fire ?

    Again, its not you or your kind that decides what is truth and what is propaganda. At least not anymore.

    Let the reader decide. You say this doesn't bode well, I tell you What actually doesn't bode well. It is the instant oral diarrhea that the "liberal" kind get when hindu right wing viewpoints are given mainstream treatment.

    Hate it, Despise it, do what you want. This is going to stay.

    ReplyDelete
  24. \\ international peer-reviewed research journal the authors Rajib and Arvindan published\\

    தலைவா நீங்க சொல்றது எப்படி இருக்கு தெரியுமா.... ஜெயலலிதாவோட கேஸுக்கு கருணாநிதிய நீதிபதியா போடுன்னு சொல்ற மாதிரி இருக்கு...

    ReplyDelete
  25. @sankarapandi Amazing words.. The book has described very clearly in Ranis word how she looks at Bharathanatiyam : She says 'At one of the elaborate Salangai Poojai , in spite of her conviction, she was embarrassed because of her Christian values would not permit her to bow down before a statue whether one of Nataraja , Mary or even Jesus Christ'

    She goes on and the book has documented her words. Please go through the book and then talk. If you want I can send you the book.

    Regards
    S Baskar
    vidhya2000@yahoo.com

    ReplyDelete
  26. http://www.tehelka.com/story_main.asp?filename=ts013004shashi.asp

    இந்த ஆர்டிகிள் எழுதிய ரிப்போர்ட்டர் என்ன ஆனார் என்று யாருக்காவது தெரியுமா ? முக்கியமாக சங்கரபாண்டி, சரவணன்.

    ReplyDelete
  27. ஈ.வே.ராமசாமி (எ) கன்னட நாயக்கர் எழுதியது, மார்க்குசு, எங்ககல்சு, இசுலாலின் எழுதியது எல்லாம் எந்தப் பியர் ரிவியூடு பத்திரிக்கையில் பிரசுத்தார்கள் ?

    முக்கியமாக ஈனா.வேனா எழுதியதை பட்டித்தொட்டிகளிலெல்லாம் ஒட்டிப் பகுத்தறிவுப்பகலவன் என்கிறார்களே ? அதெல்லாம் எந்தப் பல்கலைக்கழகத்தில் சரித்திர ஆராய்ச்சி செஞ்சு "பியர் ரிவியூடு ஜர்னலில்" பிரசுரித்துப் பட்டம் வாங்கி எழுதியது ?

    சுடலைமாடன் எ சங்கரபாண்டி,
    எப்பேற்பட்ட முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பு முடித்துவிட்டு வந்து சரித்திர ஆராய்ச்சி செஞ்சு எழுதினால் நீங்கள் படிப்பீயள் ?

    ~Professor emeritus Sir சங்கரன் கோவில் சங்கரலிங்கம் BA BSc MA MBBS MD DCH DGO PhD FRS London, FRS from Andromeda galaxy. FRS from unnamed earth like planet recently discovered by Kepler 221b.

    ReplyDelete
  28. இந்தப்புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயமும்-ஃபெட்னா, பெர்க்லி தமிழ் சேர், கிறித்துவ சார்பு பரதநாட்டிய பள்ளித்தலைவியின் இந்து வெறுப்புச்செயல்கள் என்று ஒவ்வொரு விஷயமும் அதற்கான உள்-சான்றுடனேயே- அதுவும் சம்பந்தப்பட்டவர்களின்/ சம்பந்தப்பட்ட அமைப்புகளின் செயல்கள்,எழுத்துக்கள் என்று கிடைக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் செய்திருப்பதெல்லாம் இந்த தரவுகளையெல்லாம் ஓரிடத்தில் தொகுத்து அவற்றின் பின்னுள்ள பொதுத்திரியை, இத்தகைய போக்குகளை ஒன்றிணைக்கும் கருத்தியல் தரப்பை நமக்கு அடையாளம் காட்டியிருப்பதுதான்.

    இவற்றை மறுக்க விரும்பும் சங்கரபாண்டி, சரவணன் போன்றோர் செய்ய வேண்டியதெல்லாம் ஒரேயோர் எளிய செயல்தான்: ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆசிரியர்கள் அள்ளித்தந்திருக்கும் ஆதாரங்களை ’அப்படி ஒன்று நிகழவேயில்லை’ என்று மறுத்து அந்த மறுப்புக்கான எதிர்-ஆதாரத்தையும் தந்து விட வேண்டியதுதான். அப்படிச்செய்து விட்டால், ஆசிரியர்கள் தரப்பு வலுவிழக்கும். அப்படி செய்ய முடியவில்லையென்றால், சங்கரபாண்டி-சரவணன் (அண்ட் கோ) தரப்பில் பழுதுள்ளது என்றும் ஆசிரியர்கள் சொல்வது உண்மையே என்றும் ஆகும்.

    வாக்கிலும் வாதத்திலும் நேர்மையுள்ளவர்கள் செய்ய வேண்டிய எதிர்விவாதம் என்பது இந்த அடிப்படையில்தான் இருக்க முடியும்.

    அருணகிரி.

    ReplyDelete
  29. //
    வாக்கிலும் வாதத்திலும் நேர்மையுள்ளவர்கள் செய்ய வேண்டிய எதிர்விவாதம் என்பது இந்த அடிப்படையில்தான் இருக்க முடியும்.
    //

    புத்தகத்தைப் படிக்காமலேயே ஆசிரியர்களை முத்திரை குத்துவதும், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பதிலும் தான் அவர்களுக்கு விருப்பம் உள்ளது.

    வாக்கிலும் வாதத்திலும் நேர்மை உள்ளவர்கள் என்றால் நீங்கள் சொவதை எப்பவோ செய்திருப்பார்களே. தாங்கள் நம்பும் கடவுளுக்கு/கொள்கைக்கு விரோதமானவர்களை ஆர்.எஸ்.எஸ்/பஜ்ரங் தள் என்று முத்திரை குத்திவிட்டால் தங்கள் தரப்பு தான் உச்சபட்ச உயர்நிலை ஒழுக்க ஞாயம் கொண்ட தரப்பாக மாறிவிடும் என்று எண்ணுகிறாரக்ள்.

    ReplyDelete
  30. கிராமங்களில் என்ன நடக்கிறதென்று அறிய சுடலை மாடன் வருடத்திற்கு ஒரு முறையாவது தெருவில் நடந்துவருவதுண்டு. ஆனால் இன்று அதெல்லாம் அவசியமில்லை. இருந்த இடத்திலிருந்து அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். ராணி டேவிட் என்ன செய்கிறார், பரதநாட்டியம் குறித்து அவரது நோக்கம் என்ன ஆகியவற்றை அவரது இணையதளம் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம்.

    http://www.knsdance.com/chr.html

    ReplyDelete
  31. jeyamohan also detailed this issue in his book siluvian peiyaral pls go and study i think no one easily touch this type of matter so i agree with this book

    ReplyDelete