24 டிசம்பர் 2011, பேராசிரியர் சா. பாலுசாமி, ‘அருச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம் பற்றிய புதிய பார்வை’ என்ற தலைப்பில் பேசியதன் ஒலிப்பதிவு, இரண்டு பகுதிகளாக. முதல் பகுதியில் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் புடைப்புச் சிற்பங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசுகிறார். அடுத்த பகுதியில் பேராசிரியர் பாலுசாமி அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பத்தை முன்வைத்துத் தன் பேச்சைத் தருகிறார்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
3 hours ago
எப்பொழுதுமே நேரடி ஒலிபரப்பு பலிப்பதேயில்லை. ஏதோ தொழில்நுட்பக் காரணங்களால் அந்தக்கால தூர்தர்ஷன் மாதிரி தடங்கலுக்கு வருந்துவதோடு சரி.
ReplyDeleteIf the live webcast player does not work properly between 10am and 12 noon, please e-mail raghavan@talksintamil.com
ReplyDeleteபின்னிரவில் தமிழ் பாரம்பரியம் ஏற்பாடு செய்த பேராசிரியர் ச.பாலுசாமியின் "அர்ச்சுனன் தபசு" உரையை கேட்டுவிட்டு உறங்கப்போனேன். ஒரே ஒரு சிற்பத்தைப்பற்றி இரண்டு மணி நேரம் தொடர்ந்து ஆழ்ந்து சிந்திக்க வைத்து, பல வாசல்களை திறந்து விட்டிருக்கிறார். அந்த நண்பகல் வெயிலில் பார்த்த பாறையும், அதன் விலங்குகளும், அர்ச்சுனனும், அருந்தவப் பூனையும், யானைகளும் என்னுடனேயே ஒட்டிக்கொண்டு விட்டன. இத்தனை நாள் சிற்பங்களை எவ்வளவு எளிதாக கடந்து விட்டிருக்கிறேன் ?! வெட்கமாகயிருக்கிறது. இப்படிப்பட்ட கலையை அழிக்கும் உரிமை, உருவாக்கிய பல்லவர்களுக்கு இல்லை என்கிறார். ஹ்ம்ம். சிற்பத்துக்கு இருபதடி கூட விடாமல்,நெருக்கமாக டாட்டா சுமோ/ டூரிஸ்ட் பஸ் செலுத்தி, ஜன்னலில் இருந்தே பார்க்கும் நம்மால் இச்சிற்பங்களுக்கு ஏதேனும் களங்கம் ஏற்பட்டால் உலக நாடுகளும் யுனெஸ்கோவும் நிச்சயம் மன்னிக்காது. இதை ஏற்பாடு செய்த தமிழ் பாரம்பரிய குழும நண்பர்களுக்கு கைம்மாறிலேன்.
ReplyDeleteபத்ரி சார்:
ReplyDeleteஜனவரி மாதம் எந்தெந்த தேதிகளில் புதுக்கோட்டை பயனம் என்று சொல்ல முடியுமா? மேலும் இந்தப் பயனத்திற்க்கு முன்பதிவு ஏதும் செய்ய வேண்டுமா? யாரை அனுக வேண்டும்?
இந்த பேச்சின் ஒளிப்பதிவு கிடைக்குமா? பேச்சைக் கேட்கும் பொழுது சிற்பங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல்.
ReplyDeleteSir ,
ReplyDeleteAmazing Speech , we were speechless,
Post the Video with the subtitles , this can
be shared with any body .
Thanks and Great Regards,
Sivakumar
இந்த உரையை mp3 வடிவில் தரவிறக்கிக் கொள்ள முடியாது போலிருக்கிறதே.. கணினிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தான் கேட்க முடியுமா?
ReplyDeletehttp://soundcloud.com/badriseshadri/ தளத்தில் ஜெயமோகன் உரையைப் போட்டது போன்று மற்ற உரைகளையும் போட முடியுமா? அதை தரவிறக்கிக் கொண்டு செல்போனில் கூட கேட்க முடிந்தது.
கொஞ்சம் கருணை செய்யுங்கள் பத்ரி. :))
இவற்றையெல்லாம் தரவிறக்கிக்கொள்ளலாம். பிரச்னை இல்லை. இந்தச் சுட்டியைத் தட்டுங்கள். http://www.archive.org/search.php?query=tamil%20heritage%20AND%20mediatype%3Aaudio
ReplyDeleteகுறிப்பிட்ட பக்கம் சென்று வேண்டிய ஆடியோவைத் தரவிறக்கிக்கொள்ளலாம். சவுண்ட் கிளவ்ட் காசு கேட்கிறது:-) எனவேதான் ஆர்கைவ்.ஆர்க்.
மிக்க நன்றி, பத்ரி.
ReplyDeleteதரவிறக்க ஆரம்பித்து விட்டேன் !