இரண்டு நாள் பெங்களூரில். வெள்ளி காலை ரெயில்வே ஸ்டேஷனில் தினமலர் பேப்பர் வாங்கினால் முதல் செய்தி: "கோயில்களில் கிடா வெட்ட ஜெயலலிதா தடை". எங்கும் எதிலும் தனது முத்திரையைப் பதித்தே தீருவது என்ற முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் போலும். வேறு எந்த அமைச்சர் பெயரும் வெளியில் வருவதே இல்லை. இந்தக் கிடா வெட்டல் தடை வரும் முன்னர், ஜெயலலிதாவின் மற்ற சட்டங்கள் மற்றும் அணுகுமுறைகளைப் பார்ப்போம்:
- குருவாயூர் கோயிலுக்கு யானைகள் வழங்கல்
- இந்துக் கோயில்களில் இலவச உணவுத் திட்டம்
- இந்துக் கோயில்களில் ஏகப்பட்ட பணத்தை வாரியிறைத்து இலவசத் திருமணங்கள்
- மத மாற்றத் தடை சட்டம்
- குழியில் குழந்தைகளை வைத்து மூடி வழிபடும் ஒருசில வழக்கங்களைத் தடை செய்தல்
- அயோத்தியில் கோயில் கட்ட ஆதரவு
- கோயில் யானைகளுக்கு விடுமுறை + சத்து உணவு
- இப்பொழுது கிடா வெட்டத் தடை
இதில் பல பொதுமக்களிடமிருந்து ஆதரவு பெற்றவை. ஆனால் உள்ளூரப் பார்க்கும் போது பிராமணத்துவம் மிகுந்த இந்துத்துவா தொக்கி நிற்பதைக் காணலாம். இது பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தால் கூட நடைமுறைப்படுத்தப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே.
No comments:
Post a Comment