Wednesday, November 10, 2004

ரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்

இன்று, சென்னையில் நடந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு - ஹைதராபாத் ரஞ்சிக் கோப்பை ஆட்டம் நான்காவது/இறுதி நாள். இப்பொழுது சென்னையில் மழை காரணமாக இன்று ஆட்டம் நடப்பது மிகவும் கடினம். தமிழகத்துக்குக் கிடைக்க இருந்த ஒரு வெற்றி பறிபோகப் போகிறது. சென்னை மழையால் அன்று இந்திய வெற்றி காலி, இன்று தமிழக வெற்றியும்.

மும்பை அணி விளையாடும் ஆட்டமும் டிராவில்தான் முடியும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு சுற்று ஆட்டம் முடிந்ததும், ரஞ்சிக் கோப்பை பற்றி என் பதிவில் விவரமாக எழுதுகிறேன்.

5 comments:

  1. பத்ரி

    ரஞ்சிக்கோப்பையில் ஆட்டம் முடிவுறாத நிலையில் (டிரா) முதல் இன்னிங்க்ஸில் யார் அதிக ஓட்டம் பெற்றார்களோ அவர்களுக்கே வெற்றி அல்லவா?

    முழு வெற்றிக்கும் (outright win) இந்த மாதிரி உப்புக்குச்சப்பாணி வெற்றிக்கும் (1st innings lead) பாயிண்டுகள் வித்தியாசம் உண்டா?

    பிகு:- யுனிக்கோடு பின்னூட்டம் பெட்டியில் அடித்த பிற்பாடு டாப்பை அமுக்கினால் 'அடித்ததை எல்லாம் அழித்துவிட்டு' அடுத்த பின்னூட்டப்பெட்டிக்கு தவ்வி விடுகிறது.

    ReplyDelete
  2. பிகு பற்றி முகு: டாப் அடித்துப் போனால் இந்தப் பிரச்னை உண்டு. ஏன் என்றால் அப்படிச் செய்யும்போது இரண்டாவது பெட்டியில் ஒரு "null" வருகிறது. அது ஜாவாஸ்கிரிப்ட் வழியாக மேல்பெட்டிக்கு "null" ஆக மாறுகிறது. அதனால் நேராக மவுஸ் மூலம் பெயர் பெட்டிக்குப் போவதுதான் சரி...

    இதை எங்காவது எழுத வேண்டும், அல்லது, பெட்டி அமைப்பை மாற்றி வைக்க வேண்டும்...

    ===

    இப்பொழுது ரஞ்சிக் கோப்பை விஷயத்துக்கு வருவோம். முழு வெற்றி என்றால் கிடைப்பது 8 புள்ளிகள். முதல் இன்னிங்ஸ் லீட் என்றால் கிடைப்பது 5 புள்ளிகள்தான். எதிரணிக்கு 3 புள்ளிகள் கிடைக்கும்.

    சென்ற முறை மும்பை, தமிழ்நாடு அணிகள் ரஞ்சி இறுதியாட்டத்தில் மோதின.

    ReplyDelete
  3. தமிழகம் ஜெயிக்க வேண்டும் என்ற காரணத்தால், காலையில் பெய்த கடுமையான மழை நின்று, மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கி, ஹைதராபாத் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழந்து தமிழகத்துக்கு இன்னிங்ஸ் வெற்றியைக் கொடுத்துள்ளது.

    ReplyDelete
  4. பத்ரி

    முழு வெற்றிக்கு 4 புள்ளிகள். முதல் இன்னிங்க்ஸ் லீட் வெற்றிக்கு 2 புள்ளிகள் (தகவல்: தி ஹிந்து).

    இந்த முதல் இன்னிங்க்ஸ் லீடுக்கு 2 புள்ளிகள் கொடுத்து எதிர் அணிக்கு பூஜியம் கொடுப்பது கொடுமை!

    தற்போதைய டில்லி - குஜராத் ஆட்டத்தை பாருங்கள். முதல் இன்னிங்க்ஸ் லீடினால் டில்லிக்கு 2 புள்ளிகள்.. ஆனால் முழு ஆட்டத்தையும் பார்த்தால்..டில்லி தட்டு தடுமாறி தோல்வியிலிந்து தப்பியிருக்கிறது!
    (Gujarat 214 & 372 (M.H. Parmar 51, K.A. Damini 86, B.D. Thaker 95, Sanghvi five for 79) drew with Delhi 430 for eight decl. & 102 for nine. Delhi 2; Gujarat 0. )

    By: மாவுருண்டை

    ReplyDelete
  5. மாவுருண்டை: மாறிய பாயிண்டுகள் பற்றி நான் சரியாகக் கவனிக்கவில்லை! கவனித்து விட்டு எழுதுகிறேன்.

    முதல் இன்னிங்ஸ் லீட் சமாச்சாரமே கொஞ்சம் குழப்பமானதுதான். வேறு வழியில்லையே? ஆஸ்திரேலிய உள்ளூர் ஆட்டங்களில் என்னமாதிரியான பாயிண்டுகள் கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். அதில் சில நல்லவற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete