Saturday, February 04, 2006

விமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து

எதிர்பார்த்ததுபோலவே நான்கு நாள்கள் வேலைநிறுத்தத்துக்குப் பிறகு இடதுசாரிகள் தலைமை பின்வாங்கியுள்ளது. குருதாஸ் தாஸ்குப்தா "நாம் வெற்றி பெற்றுவிட்டோம்" என்று ஆவேசமாகப் பேசினார். ஆனால் மத்திய அரசு திட்டவட்டமாக மும்பை, தில்லி விமான நிலையங்களைத் தனியார்வசம் ஒப்படைப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பிற விமான நிலையங்கள் தனியார்மயமாக்கல் பற்றிய விவாதங்கள் நடைபெறும்போது ஊழியர்களின் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது. அவ்வளவுதான்.

முக்கியமாக இந்தத் தனியார்மயமாக்கலில் ஊழியர்களின் நலன்கள் எந்தவிதத்திலும் பாதிக்க்கப்படும் என்று ஊழியர்கள்கூட நினைக்கவில்லை. இடதுசாரித் தலைவர்கள் தங்களது தனியார்மயமாக்கல் எதிர்ப்பை வெளிக்காட்ட இந்த நான்கு நாள்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவ்வளவே. இதனால் பலருக்கும் ஏகப்பட்ட பிரச்னைகள். மும்பை விமான நிலையத்தில் ஊழியர் ஒருவர் இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளுக்காக தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இடதுசாரித் தலைவர்கள் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை.

முந்தைய பதிவு

1 comment:

  1. //முக்கியமாக இந்தத் தனியார்மயமாக்கலில் ஊழியர்களின் நலன்கள் எந்தவிதத்திலும் பாதிக்க்கப்படும் என்று ஊழியர்கள்கூட நினைக்கவில்லை.//

    எப்படி நீங்கள் நினைக்கிறீர் என்று எனக்குத் தெரியவில்லை.

    ReplyDelete