Wednesday, February 01, 2006

கேபிள் கையகப்படுத்தல் சட்டம்

தி ஹிந்து

தமிழ்நாட்டில் உள்ள சில Multi-System Operator-களது நிறுவனங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு அவசர அவசரமாக ஒரு மசோதாவைத் தயார் செய்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியும் உள்ளது.

சன் டிவி குழுமத்தில் எஸ்.சி.வி நிறுவனத்தின்மீது புகார்கள் இருந்தால், MSOக்கள் முறையாக நடந்துகொள்ளவில்லை என்றால் அதற்குத் தேவை Cable Service Providers Regulation Act. அதற்கு பதில் தான்தோன்றித்தனமாக, எந்தவித விவாதமும் இல்லாமல் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது தவறான செய்கை.

திமுக, பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்யாமல் இதன் தவறை சட்டமன்றத்திலேயே சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தான் 'தேசியமயமாக்கலை' எப்பொழுதுமே வரவேற்பதாகச் சொல்கிறார்.

தேசியமயமாக்கலை வைத்து எத்தனையோ வருடங்களாக நம் நாடு நாசமாகியுள்ளது. கேபிள் டிவியை நடத்துவது டாஸ்மாக் சாராய விற்பனை போல் அல்ல. தனி மனித விருப்பு வெறுப்புகளை, அரசை நடத்துவதிலும் சட்டமன்றங்களை நடத்துவதிலும் காண்பித்து, தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவிலேயே தம்மை விடத் தரம் தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்று தினம் தினம் நிரூபித்துவருகிறார்கள்.

தயாநிதி மாறன் ராஜ் டிவி விவகாரத்திலும் சரி, ஜெயா பிளஸ் விவகாரத்திலும் சரி, நியாயமாக நடந்துகொள்ளவில்லை. ராஜ் டிவியை harass செய்வதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்றே அவர் நடந்துகொண்டிருக்கிறார். அதே போல தினமலர் நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைக்கு அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என்றும் கேள்விப்படுகிறேன்.

இதுபோன்ற திமுக மந்திரியின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால் மட்டுமே இன்று ஜெயலலிதா செய்திருப்பதை நியாயம் என்று சொல்ல முடியாது. "சபாஷ், சரியான போட்டி!" என்று எட்டி நின்று பார்த்து ரசிக்கக் கூடாது.

MSO கையகப்படுத்துதல் கவர்னரின் கையெழுத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது. கவர்னர் தன்னால் முடிந்தவரை தாமதப்படுத்தலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நீதிமன்றத்துக்கு இதனைக் கொண்டுசெல்லவேண்டும். சட்டமன்றம் சரியான அடிப்படைக் காரணம் இல்லாமல் இந்த சட்டத்தை இயற்றியுள்ளதாக எனக்குப் படுகிறது. இதையே நீதிமன்றங்களும் ஊர்ஜிதம் செய்யும் என்றே நினைக்கிறேன். ஆனால் அதற்குள்ளாக தன் எதிரியைக் காயப்படுத்திவிட்ட அற்ப சந்தோஷம் மட்டுமே ஜெயலலிதாவுக்கு மிஞ்சும். மக்கள் வரிப்பணம் வழக்கை நடத்த வீணாகும்.

6 comments:

 1. Why not? Is it the right for DMK and Maran only to harass others?

  Maybe, as you say, it is a cheap politics on part of Jaya. But cos of this cheap politics only, MK's personal feelings came to the fore (by going and meeting the Governor, just within 30 minutes).

  Whatever it is, in the end you will see public benefited through this. Don't you see it?

  A Friend!

  ReplyDelete
 2. One person misusing the system does not automatically guarantee rights to others to abuse the system as well.

  If you see someone speeding in the road despite red light on, you are not supposed to do the same as well. You have to depend on law and order to catch up with the criminal. Otherwise the entire society will crumble.

  Maran seems to have abused executive privileges to further his family's business interests. In case of Jayalalitha, she has subverted the legislative process. Both are bad.

  In particular the process of random nationalisation must be stopped. It also upsets the level playing field. For example, the current legislation by the state government only affects some MSOs in some cities. It does not affect a DTH operator, nor does it impact other MSOs and cable operators.

  These bills are bad in faith and must not be supported by liberal thinking persons.

  Public can also benefit by a better legislation regulating the provision of services. Public, in my opinion, has rarely benefited from ill- thought-out nationalisation.

  ReplyDelete
 3. Dear Badri

  Thanks for the reply. I do agree that both are cheap politics.

  But if Maran has done is duty correctly, Jaya would not have done this - surely! Why to give an opportunity in the first place for someone to bring a rule like this? That's my question.

  Whatever we cry over here, isn't going to help anyway. Right?

  Thanks again

  ReplyDelete
 4. கிட்டத்தட்ட நானும் இதைத்தான் எழுதியிருந்தேன். இரண்டும்
  சரியில்லை. முன்னர் ஜெயாடிவியின் சூப்பர் டூப்பர் குட்டி
  ஆபரேட்டர்களை ஜெயாடிவியுடன் சேரச் சொல்லி அடியாட்களை
  விட்டு மிரட்டுமென்றும் கேள்விப்பட்டதுண்டு.

  ReplyDelete
 5. The most sensible post on this topic. You have called the spade by its name.

  But Only one question. When you say that the government does not have enough money and is privatising various services, what is the justification in nationalising this industry.

  ReplyDelete
 6. டாக்டர் ப்ரூனோ: சில துறைகளை அரசு ஏற்று 'நாட்டுடமையாக்குவது' வருமானத்தைப் பெருக்கவும் உதவும். எந்தவித முதலீடும் இல்லாமல் டாஸ்மாக் சாரயம் விற்கும் துறையால் அரசு தமிழக அரசு பெரும் வருமானம் ஈட்டிவருகிறது.

  அதைப்போல கேபிள் விநியோகத்தை ஏற்று (அதற்கான பணத்தைப் பின்னால் கொடுப்பது, உடனடியாக அல்ல) அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை உடனடியாகப் பெற்றுக்கொள்வதும் அரசின் அசிங்கமான கொள்கைகளில் ஒன்று. ஆனால் இதில் அடிப்படை உள்நோக்கம் பணம் அல்ல, எதிரியை அடிப்பது மட்டுமே.

  ReplyDelete