கடந்த சில நாள்களில் ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பேர்ட் இரண்டையும் அதனதன் லேடஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்தேன். ஆனால் செய்தது முதல் தமிழில் உள்ளிடுவதில் பெரும் பிரச்னை. இந்தப் பிரச்னை நான் கடைசியாகப் பாவித்துவந்த 1.0.x வெர்ஷனில் இருந்ததில்லை.
நான் நேரடியாக முரசு அல்லது எ-கலப்பை கொண்டு தமிழில் தட்டும்போது இந்தப் பிரச்னை வருகிறது.
என்ன ஆகிறதென்றால் முதல் எழுத்து சரியாக வருகிறது. அடுத்த எழுத்து முதல் எழுத்தை அழித்துவிட்டு அதனிடத்தில் அமர்கிறது. அதற்கடுத்த எழுத்து முந்தைய எழுத்தை அழித்துவிடுகிறது. இப்படியே போனால் நான் "தமிழ்" என்று தட்டினால் எனக்குக் கிடைப்பது "மிழ்". "குரங்கு" என்று தட்டினால் "கு" மட்டும்தான் இருக்கும். (அதாவது கடைசி கு)
Complex unicode rendering is bust, I think.
இதைவிட மோசம் Microsoft Hindi IME, Microsoft Tamil IME ஆகியவற்றைப் பயன்படுத்துவது. இதைச் செய்தால் மென்பொருளே கிராஷ் ஆகிவிடுகிறது!
ஆனால் பிற எடிட்டர்களில் எழுதி (நோட்பேட்), வெட்டி ஒட்டினால் ஒரு தோலையும் இல்லை.
நான் Windows XP பயன்படுத்துகிறேன்.
பிறருக்கும் இதே தொல்லைகள் உள்ளனவா? இல்லை எனக்கு மட்டும் இந்தப் பிரச்னையா என்று யாராவது விளக்கினீர்கள் என்றால் மகிழ்வேன்.
நன்றி.
பேனா மருத்துவமனை
6 hours ago
எனக்கும் இதே பிரச்சினை இருக்கிறது.
ReplyDeleteநான் உங்களுக்கு FF1.5.0.1இலிருந்துதான் பின்னூட்டம் இடுகிறேன். எனக்கொரு பிரச்சனையும் இல்லையே. (கொ கொ என்று காண்பிப்பதை தவிர.)
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteநானும் ஃபயர்ஃபாக்ஸ் 1.5 மற்றும் தண்டர்பேர்ட் 1.5 தான் பயன்படுத்துகிறேன். எ-கலப்பை வழியாக இவற்றில் தமிழில் தட்டச்சுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என்னுடைய இயங்குதளம் விண்டோஸ் XP தான், வீட்டிலும் அலுவலகத்திலும்.
நான் தீநரி 1.5.0.1 மற்றும் இடிப் பறவை 1.5 இரண்டையும் அவை வெளிவந்தபோதிலிருந்தே பயன்படுத்துகிறேன். தமிழில் தட்டச்சுவதில் எந்தவித தடங்கலும் இல்லை. இந்த பதில்கூட 1.5.0.1-ல் தான் இடுகிறேன்.
ReplyDeleteவீட்டில் XP-யும், அலுவலகத்தில் 2K-யும் ஆள்கின்றன. இரண்டிலும் சிக்கல் ஏதும் இல்லை.
உதவி மன்றங்களில் விசாரிக்கலாம்.
எஸ்.கே
இந்த மறுமொழி பயர்பாக்ஸ் 1.5.0.1-ம், இ-கலப்பையும் கொண்டுதான் உள்ளிடுகிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுடைய எக்ஸ்டென்ஷன்களை எனிமா கொடுத்து வெளியேற்றி விட்டு முயலுங்கள். இதைப் போல் அல்லாமல் எனக்கு வேறுவிதமான பிரச்சனைகள் 1.5.0.1 இல் இருந்தன, எனிமா கொடுத்தவுடன் சரியாகிவிட்டது ;) நிறைய Tab-களில் படிப்பவராய் இருந்தால், இந்த Extn. உபயோகப்படுத்துங்கள், http://www.geocities.com/replysn/firefox.htm
ReplyDeleteநானும் win xp'ல் firefox 1.5 தான் உபயோகப்படுத்துகிறேன். என் வீட்டுக் கணினியிலும் என் கல்லூரிக் கணினியிலும். இப்போது இந்த மறுமொழி நேரடியாக உலாவியில்தான் keyman உதவியுடன் உள்ளிடுகிறேன். எனக்கு சரியாக வேலை செய்கிறது. firefox மற்றும் thunderbird இரண்டிலும் பிரச்சினை இருப்பதால், இரண்டிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் Uniscribe dll corrupt ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறது. முடிந்தால் கடைசிமுறையாக முகுந்தராஜின் tamilkey நீட்சியையும் முயலவும்.
ReplyDeleteபத்ரி
ReplyDeleteநான் Mozilla/5.0 (Windows; U; Windows NT 5.1; en-US; rv:1.8.0.1) Gecko/20060111 Firefox/1.5.0.1 லிருந்து் இதை நேரடியாக இ-கலப்பை மூலம் உள்ளிட்டேன்.
எழுத்துக்கள் நன்றாக வந்துள்ளன!
பத்ரி,
ReplyDeleteமுந்தைய வெர்ஷனை uninstall செய்துவிட்டு புதிய வெர்ஷனை install செய்தீர்களா அல்லது அப்படியே புதிய வெர்ஷனை install செய்தீர்களா? ஒவ்வொரு முறையும் uninstall செய்துவிட்டுத்தான் புதிய வெர்ஷனுக்கு மாறுகிறேன் (install செய்த Themes மற்றும் Extensions அப்படியே இருக்கும்; அவை நீக்கப் படுவதில்லை). அப்படிச் செய்ததில் தமிழில் உள்ளிடுவதில் பிரச்சினை ஏற்பட்டதில்லை.
I am also using "Firefox 1.5.0.1 and Thunderbird 1.5". So far I didn't face any problem in inputting Tamil & Hindi Unicode using Microsoft IME. For regular typing, however I use kuralsoft (www.kuralsoft.com) Kural-3.3 software to input tamil (Unicode/UTF-8) using old tamil typewriter layout. With that also, I didn't face any problem with the abovementioned version of Firefox/Thunderbird.
ReplyDelete-- mks --