சன் டிவி லிமிடெட் நிறுவனம் பங்குச் சந்தை மூலம் 10% பங்குகளை வெளியிட்டு முதலைப் பெருக்கிக் கொள்ள முடிவு செய்திருக்கிறது. இதற்கான draft prospectus-ஐ செபியின் இணையத்தளத்தில் காணலாம். (http://www.sebi.gov.in/ -> Reports/Documents -> Public Issues: Draft Offer Documents -> 14th February 2006, அங்கிருந்து Sun TV Limited என்பதைத் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் pdf கோப்பு.)
நவம்பர் 2005 சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன என்பதைப் பற்றி ஒரு பதிவை எழுதியிருந்தேன். என் ஆங்கில வலைப்பதிவில் சன் டிவி குழுமத்தின் draft prospectus-ல் கண்டதை வைத்து மேலும் சில கருத்துகளை எழுதியுள்ளேன்.
Thursday, February 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
prospectus படிச்சேன். என்னங்க இது, சம்பளம் எல்லாம் இவ்ளோ கேவலமா இருக்கு? நிகழ்ச்சிப் பொறுப்புக்கு தலைமை வகிக்கிற, மாறனின் வலது கை என்று 'உள்ளே இருக்கிறவர்கள்' சொல்கிற ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவின் gross pay. 8.3 லட்சம் தானா? அப்ப take home pay எவ்வளவு இருக்கும்? ஒரு கால்சென்டர் நிர்வாகியின் சம்பளமே இதுக்கு மேலே இருக்குமே? ஆனால், காவேரி மாறனின் சம்பளம், ஆறுகோடி ரூபாய். அடிக்கடி நான் இதைச் சொல்வேன் ' கலாநிதி மாறன் கார்ப்பரேட் கல்ச்சருக்கு லாயக்கில்லாதவர்' என்று. அது சரிதான்.
ReplyDeleteபத்ரி, பதிவுக்கு சம்பந்தமில்லா ஒரு செய்தி
ReplyDeleteஉங்கள் archives சுட்டிகளில் a விடுபட்டு வெறும் rchives என்றிருப்பதால் பழைய பதிவுகளுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் சரி செய்யுங்களேன்.
நன்றி
சோழநாடன்: என் டெம்ப்ளேட்டில்தான் ஏதோ தவறு என்று நினைத்தேன். ஆனால் Settings -> Archives ல் சரிசெய்ய வேண்டி இருந்தது. இப்பொழுது சரியாகி இருக்கும்.
ReplyDelete