கொல்காதாவில் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள்களில் கூட்டம் அலைமோதி, பக்கத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் வரை வரிசைகள் நின்றதாகச் செய்தி: The Statesmanஅரங்குகள் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன என்று முன்னமே சொல்லியிருந்தேன். ஆனால் ஏன் இப்படி அலங்கரிக்கிறார்கள் என்று எனக்கு முதலில் புரியவில்லை. சிறப்பான அலங்காரத்தைக் கொண்ட அரங்குக்கு என்று தனியாகப் பரிசுகள் கொடுக்கின்றார்களாம். அதனால்தான்!
தில்லி புத்தகக் கண்காட்சிக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வந்தனராம். விற்பனை எவ்வளவு என்று சரியான கணிப்பு இல்லை. UNI Newsவிற்பனை கொல்காதா அளவுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் சென்னையைவிட நிச்சயம் அதிகமாக இருக்கவேண்டும்.

No comments:
Post a Comment