நேற்று முதல் புதுவையில் ரேஷன் கார்டுகள் அனைத்துக்கும் இலவசமாக பத்து கிலோ அரிசி வழங்கத் தொடங்கியுள்ளனர். காமராஜர் பாவம். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 36 கோடி அதிகச் செலவாகும்.
இந்தப் பணம் முழுமையாக "ஏழைகளுக்கு மட்டும்" என்று பயன்பட்டால் தேவலாம்.
புதுவையும் தமிழகம் வழியில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளதாம். காசுக்கு வந்த கேடு.
Sunday, July 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
/அனைத்துக்கும் இலவசமாக பத்து கிலோ அரிசி வழங்கத் தொடங்கியுள்ளனர்...புதுவையும் தமிழகம் வழியில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளதாம்/
ReplyDeleteபொறுப்பற்ற செயல். தமது சுயநலத்திற்காக நாட்டைக் குட்டிச் சுவராக்கும் செயல்.
பத்ரி, இச் செலவுகளுக்கான நிதியை எங்கிருந்து இவ் அரசுகள் பெறுகின்றன? வரிகள் அறவிடுவதன் மூலமா அல்லது நடுவண் அரசிடமிருந்தா?
அரிசி குறைந்த விலை விற்பது மிகவும் பாரட்ட பட வேண்டிய ஒன்று. வியாபாரிகள் வாங்குவதை தடுக்க வேண்டும். போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க வேண்டும். கலர் டீவி ஒரு வித லஞ்சம். இதே ட்ரெண்ட் எல்லா இடத்திலும் பரவி விடுமோ என்று தோன்றுகிறது.
ReplyDeleteபேசாம தமிழ்நாட்டுக்கோ, இல்லை புதுவைக்கோப் போயிரலாமுன்னு இங்கே கோபால் சொல்லிக்கிட்டு இருக்கார்.
ReplyDeleteயக்கா , வாங்க... ஆனா, துளசின்னு பேர் வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் அரிசி கிடையாதுன்னு ஜிஓ போட்டிருக்காங்க, பரவால்லியா?
ReplyDeleteஅதான் ஒருதடவை மட்டும் பேரை மாத்திக்கலாம் கெஸ்ஸட்லேன்னு ஒரு சட்டம் வந்துருக்காமே:-))))
ReplyDeleteஏழைகளுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுவது பாராட்டுக்குரிய செயல்....
ReplyDeleteஇப்போது முட்டி மோதிக்கொண்டு இங்கே ஒப்பாரி வைப்பவர்கள் தேர்தல் நேர ஸ்டண்டாக ஜெ. வெள்ள நிவாரணத்துக்கு நேரடி லஞ்சம் கொடுத்தபோது "ஆஹா... அபாரம்... பேஷ்... பேஷ்.... கொன்னுட்டீங்க" என்றெல்லாம் கும்மி அடித்தவர்கள் தான்....
இதைத்தான் அன்றே சொன்னார்கள் "மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்" என்று.....
லக்கிலூக்: ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்குவது பாராட்டுக்குரிய செயல். ஆனால் அத்தனை மக்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி வழங்குவது? முட்டாள்தனமான செயல் அல்லவா?
ReplyDeleteபிறர் கும்மி அடிக்கிறார்கள், கோலாட்டம் போடுகிறார்கள், மண்குடம், பொன்குடம் என்று பழமொழி எல்லாம் சொல்லவேண்டாம். இந்தச் செயல் சரியா, தவறா என்பது மட்டும்தான் கேள்வி.
வெற்றி: இந்தப் பணமெல்லாம் கொஞ்சம் வரி, மிச்சம் மத்திய அரசின் மான்யம் என்றுதான் நடக்கிறது.
மொத்தத்தில் இந்த இலவச அரிசித் திட்டத்துக்குப் பதிலாக வேறு எத்தனையோ வழிகளில் பணத்தைச் செலவழித்து மக்கள் ஒட்டுமொத்தமாக முன்னேற வழி செய்யலாம். இன்னமும் பல பள்ளிகளை நிறுவலாம். நிறைய மருத்துவமனைகளைக் கட்டலாம். சாலைகள் போடலாம். புதுச்சேரி கிராமங்களில் எங்கெல்லாம் மின்சார வசதி இன்னமும் வரவில்லையோ அவற்றைச் செய்யலாம்....
ஆனால் இலவச அரிசியும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும்தானே வாக்குகளை அள்ளிக் கொடுக்கின்றன?
////ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்குவது பாராட்டுக்குரிய செயல். ஆனால் அத்தனை மக்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி வழங்குவது? முட்டாள்தனமான செயல் அல்லவா?/////
ReplyDeleteரேஷன் அரிசி வாங்குபவர்கள் எல்லோருமே ஏழைகள் தான்... நீங்களோ, நானோ அல்ல.....
ஒரு அரசின் திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முன் ஏகப்பட்ட படித்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் கொஞ்சமாவது அறிவுள்ள சில அதிகாரிகள் அந்தத் திட்டத்தை ஆராய்ந்து தான் செயல்படுத்துகிறார்கள்...
தயவுசெய்து நீங்கள் முட்டாள்தனம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம்... "முட்டாள் தான் அடுத்தவனை முட்டாள் என்பான்" என்பது ஒரு சீனப் பழமொழி....
லக்கிலூக்: சீனப் பழமொழிக்கு ஏற்றவாறு நானும் முட்டாளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஆனால் முட்டாள்தனம் என்று எனக்குத் தோன்றினால் நான் அப்படித்தான் எழுதுவேன்.
ReplyDeleteஒரு செய்கையை முட்டாள்தனம் என்று சொல்வதற்கும் ஒரு மனிதரை முட்டாள் என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.
இதுபோன்ற வாக்குவாதங்கள் நேரத்தை வீணாக்குகின்றன.
எனது விமரிசனத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் பதிலுக்கு விமரிசிக்கலாம்.
ஏழைகள்தான் அரிசி வாங்குகின்றனர் என்பதற்காக ஏழைகளுக்கு மட்டும் அரிசி கொடுக்கும் திட்டத்துக்குபதில் அனைவருக்கும் அரிசி கொடுக்கும் திட்டமாக மாற்றுவது அபத்தமான செயல். இங்கு ஏகப்பட்ட ஊழல்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
இப்பொழுதே தமிழகம்->கேரளாவுக்குக் கடத்தப்படும் அரிசியின் அளவு அதிகமாக ஆகியுள்ளது. இனி புதுவை->தமிழகம் கடத்தலும் அதிகமாகும்.
மேலும் இதுபோன்ற திட்டங்கள் ஆழ்ந்து சிந்திக்காமல் அரசியல்வாதிகளின் நெருக்கடியால் செயல்படுத்தப்படுவன. இன்றைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இதையெல்லாம் கவனமாக யோசித்துப் பார்ப்பதில்லை.
பொது விநியோகத்திட்டத்தில் அரிசி வாங்காதவர்களுக்கும் கொடுத்ததாக கணக்கு எழுதி அர்சியை ஆந்திராவிற்கும்,கேரளாவிற்கும் கடத்த உடன்பிறப்புகளுக்கு உதவும் திட்டம்தான்
ReplyDeleteஇது.பாண்டியில் கொஞ்சம் பங்கு காங்கிரஸுக்கும் போகும்.ஏழைகள் பெயரைச் சொல்லி
கட்சிகாரர்களும்,பிறரும் சாப்பிட,சம்பாதிக்க இன்னொரு திட்டம்.அரிசி கடத்தல் செய்திகள் தினசரி செய்தித்தாள்களில் வெளியாகின்றன.பிடிபடுவது 10%
பிடிபடாதது 90%. கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஏழைக்கு 10 ரூபாய் பயனென்றால் இவர்களுக்கு
100 ரூபாய் லாபம்
Giving free rice for poor is a correct thing but why for everyone?
ReplyDeleteI hope somebody file a public interest litigation against such acts. Isn't the government accountable for its citizens and shouldn't get its priorities right?
- Sankar
இலவச அரிசி??? ஏழைகளுக்கு? இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு முதலில் தோண்றும் கேள்வி "யார் ஏழை?". ரேஷனுக்கு சென்று அரிசி வாங்குபவர் அனைவரும் ஏழையல்ல! நான் எனது ஊரில் சந்தித்த சில அனுபவங்கள்
ReplyDelete1. ரேஷனில் பொருட்களை வாங்கி வெளியே விற்பவர்கள் 75% மக்கள்.
2. வாங்கிய பொருட்களை தவறாக பயன்படுத்துவோர் 15% மக்கள். ரேஷன் அரிசியை கோழித்தீவனமாக உபயோகிப்போர் சிறந்த எடுத்துக்காட்டு
ஆக பத்து சதவிகித மக்கள் மட்டுமே இதனால் உன்மையான பயன் அடைகின்றனர். நீங்கள் கூறலாம் நெல்லுக்கு இரைக்கும் நீர் புல்லுக்கும் செல்லும் என்று! ஆனால் இங்கு கதையே வேறு..!