நாளை, இந்த நிதியாண்டின் மீதமுள்ள ஒன்பது மாதங்களுக்கான வரவு எதிர்பார்ப்பு, செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.
தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் உபயோகமற்றதாகத்தான் இருக்கும் நிதியமைச்சரின் பேச்சு. பேச்சு முடிந்ததும் தமிழக அரசின் இணையத்தளத்தில் கிடைக்கும் ஆவணத்தின் வாயிலாகத்தான் என்ன திட்டம் என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அதுபற்றி சில முன்னாள் அரசு அதிகாரிகள், விஷயம் தெரிந்தவர்களிடம் பேசி podcast ஆகச் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.
எழுத்தும் தத்துவமும்
2 hours ago
////தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் உபயோகமற்றதாகத்தான் இருக்கும் நிதியமைச்சரின் பேச்சு./////
ReplyDeleteகடந்த 5 ஆண்டுகளாக பொன்னையன் பேசிய பேச்சு ரொம்ப உபயோகமாக இருந்தது என்று ஒரு லைன் சேர்த்திருந்திருக்கலாமே.... இன்னமும் நகைச்சுவையாக இருந்திருக்கும்....
லக்கிலூக்: நீங்கள் என்னை அஇஅதிமுக அபிமானி என்று நினைத்துவிட்டீர்கள். பரவாயில்லை. பேச்சு உபயோகமற்றதாக இருக்கும் என்றால் சட்டசபை பேச்சில் உபயோகமாக ஒன்றும் இருக்காது என்று பொருள். அது அன்பழகனோ, பொன்னையனோ... ப.சிதம்பரமோ யாராக இருந்தாலும் சரி. ஆவணத்தில்தான் சரியான பொருள் விளங்கும். அதாவது ஆவணத்தில் எழுத்தில் சொல்வதில்தான் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவரும் என்று பொருள்.
ReplyDeleteஅதனால் உங்கள் அபிமான திமுகவினர் யாரையும் நான் திட்டவில்லை என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை விளக்குகிறேன். நன்றி.