Wednesday, July 12, 2006

முதல் புத்தகம்

"Giving children from low-income families the opportunity to read and own their first new books." - First Book

பல கோடிச் சிறுவர்களுக்கு அவர்களுக்கென்றே சொந்தமாக புத்தகங்கள் எதுவும் வாங்கிக்கொடுக்கப்படுவதில்லை. குறைந்த வருமானம் உடைய குடும்பங்களில் குழந்தைகள் புத்தகங்கள் படிக்காமல்தான் வளர்கின்றனர். பாடப்புத்தகங்கள் போதா. அவை பெரும்பாலும் அலுப்பை மட்டுமே ஏற்படுத்துகின்றன. சந்தோஷத்தை அல்ல.

இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும்தான். அதனால்தான் குறைந்த வருமானக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல தரமான, அழகான புத்தகங்களை - குழந்தைகள் ஆவலோடு வாங்கி, கூடவே வைத்திருக்கும் புத்தகங்களை - தருகிறது First Book என்னும் தொண்டமைப்பு. அவர்களது வலைப்பதிவு இங்கே உள்ளது.

நாட்டில் படிப்பறிவு வளரவேண்டுமானால் குழந்தைகள் அனைவரும் படித்து மகிழக்கூடிய வகையில் புத்தகங்கள் தேவை. புத்தகங்கள் மூலமாகத்தான் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பெருகும்.

தமிழகத்திலும் இதைப்போன்ற ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கப்படவேண்டும்.

1 comment:

  1. உங்களை போன்றவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினால் தோள் கொடுப்பதற்கு தயாராக உள்ளேன்.
    நாகையில் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஒரு அமைப்பு ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. அது வரை உங்களை போன்றவர்களுடன் சேர்ந்து செய்வதற்கு ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete