Thursday, July 27, 2006

இஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா

நிலமெல்லாம் ரத்தம் இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையை எளிமையான முறையில் அனைவரும் புரிந்துகொள்ளுமாறு எழுதப்பட்ட, குமுதம் ரிப்போர்டரில் வந்த தொடர். அது கிழக்கு பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளிவந்துள்ளது. புத்தகத்தை எழுதிய பா.ராகவனுடன் இப்பொழுது இஸ்ரேல் லெபனான் மீது நடத்தும் தாக்குதல் பற்றி சிறிதுநேரம் பேசினேன். அந்த podcast இங்கே, உங்களுக்காக.படிக்க வேண்டிய பிற பதிவுகள்:

இஸ்ரேலின் பயங்கரவாதம், சசியின் டைரி
Is Israel the lone culprit?, Snap Judge

6 comments:

 1. வஜ்ரா ஷங்கர்,

  ஒரு தேசத்துக்கான, சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கை, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் என் முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதற்காக மட்டும் விடுக்கப்பட முடியாதது.

  அது ஒரு தேசிய இனத்தின் , தேசத்தின் உணர்வுத்தளத்தை, அரசியல் சமூக பொருளாதார தளத்தின் அடிப்படையில் எழ வேண்டியது.

  அரபிக்கள் யூதர்களை அவர்கள் நிலத்திலிருந்து அடித்து விரட்டினரா?

  யூதர்கள் தாமாக இடம்பெயர்ந்து போனதய்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  ஆனால், அண்மைக்காலத்தில் அரபிக்கள் பிறந்துவளர்ந்த மண்ணில் யூதர்கள் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர்.

  நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமானால், கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழ்வைதை வைத்துக்கொண்டு மணலாற்றின் சிங்களக்குடியேற்றத்தை சிறீலங்கா நியாயப்படுத்த முடியாது.

  ர்தமது தேசத்தை கோரும் உரிமை பாலச்தீனர்களுக்கு எப்போதும் உண்டு என்றே நான் கருதுகிறேன்.

  இது ஒரு பகுதி.
  மற்ற பகுதி,

  இஸ்ரேல் என்பது மனித குலத்துக்கு எதிரான தேசம். உலக ஏகாதிபத்தியத்தின் அபாயக்கூட்டுகளில் ஒன்று.

  மனிதகுலம் தனது அடுத்த கட்டத்தை சென்றடைவைதை தடுத்து, தனது சுரண்டலாதிக்கத்தை நிலைநாட்ட நிற்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முற்போக்கான போராட்டத்தில் இச்ரேல் எதிர்க்கப்பட வேண்டியது மிக முக்கியம்.

  இது இஸ்ரேலிய மக்களை எதிர்ப்பதல்ல.

  மர்க்சியவாதிகள், தமது உலக அரசிய நிகழ்ச்சிநிரலில் செய்யப்பட வேண்டிய முற்போக்கான மாற்றங்களை பாலஸ்தீன போராட்டம் செய்வதை இனங்காண்கிறார்கள்.

  அதனால் பாலஸ்தீன போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்.

  என்றைக்கும் உலக ஒழுங்கு நியாயதர்மங்களின் படி அமைந்ததில்லை.
  அரசியல் வெற்றிகளும் அப்படி இருந்ததில்லை.

  உலகப்பொலிஸ்காரர்கள் என்று யாரும் இருக்க முடியாது.

  இஸ்ரேலின் உணர்வுகளைப்பற்றி பேசினால், பாலஸ்தீனியனின் உணர்வுகள் பற்றியும் பேசியாகவேண்டும்.
  அமெரிக்காவுக்கு அரபிகளை அடிமைப்படுத்தவேண்டிய பொருளாதார தேவை இருக்கிறது. சியோனிச மனநோயாளர்களுக்கும் அந்த தேவை இருக்கிறது.
  அரபிகளுக்கு இச்ரேலை அழிக்கத்துடிக்கும் உணர்வெழுகை இருக்கிறது.

  இந்த உலக அரசியல் ஓட்டத்தில் நிலைக்க முடியாதன தகர்ந்துபோகும்.

  இயங்கியலின் ஓட்டத்தில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.

  ஜேர்மனியைப்போல

  ReplyDelete
 2. //
  அது ஒரு தேசிய இனத்தின் , தேசத்தின் உணர்வுத்தளத்தை, அரசியல் சமூக பொருளாதார தளத்தின் அடிப்படையில் எழ வேண்டியது.
  //

  தேசிய இனம்...!! (ஹிட்லரின் ஆரிய இனம் போல் படுகிறது..!!, பரவாஇல்லை...தேசிய இனம் யூதர் இனம் வைத்துக் கொள்வோமா...

  தேசத்தின் உணர்வு...தேசீய உணர்வா?

  ..
  யூதர்கள் தாமாக இடம்பெயர்ந்து போனதய்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
  ..

  ஆமாம், இலங்கைத் தமிழர்களும் தாமாகத்தானே இடம் பெயர்ந்தனர்...!!? கோபம் வருகிறதா...? (தர்கத்திற்குத் தான் சொல்கிறேன்..)

  ஐயா, மயூரன், உங்களுக்கு அமேரிக்காவை எதிர்க்கவேண்டும்..அதற்கு எல்லாவற்றையும் ஞாயப்படுத்துவதும்...பாலஸ்தீன மக்கள் பிரச்சனையை, இலங்கைத் தமிழருடன் ஒப்பிட்டு பேசுவதுமாக இருக்கிறீர்கள்... நீங்கள் போகும் அரசியல் சிந்தனை போக்கு சரியானது அன்று.

  பாலஸ்தீன் பிரச்சனைக்கும் இலங்கை தமிழர்களுக்கும் ஒப்பீடு செய்யும் அளவிற்கு ஒற்றுமைகள் இல்லை என்பதே என் கருத்து.

  ..
  மர்க்சியவாதிகள், தமது உலக அரசிய நிகழ்ச்சிநிரலில் செய்யப்பட வேண்டிய முற்போக்கான மாற்றங்களை பாலஸ்தீன போராட்டம் செய்வதை இனங்காண்கிறார்கள்.
  ..

  நீங்கள் மார்க்ஸ்வாதியா? ஆம் என்றால் உங்களிடம் பேச என்னிடம் எதுவும் இல்லை.

  ReplyDelete
 3. பா. ரா அவர்கள் கூறும் மற்ற கருத்துக்கள்...

  "ஹெஸ்பல்லாக்கள், ஹமாஸ் போன்ற அமைப்புகள்...காஸ்ட்ரோவுக்கு அமைந்தது தோல் புரட்சி மூலமாக ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால் ஜனனாயக முறைப்படி ஆட்சியைப் பிடிக்க முற்படுவது நல்லதே"

  என்று சொல்கிறார்...

  ஒரு ஆயுதம் ஏந்தும் படைத் தளபதி நாட்டின் பிதமர் ஆவது என்பது ஜனனாயகத்தைப் பயன் படுத்தி காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் "குள்ள நரி" த்தனம் என்று தானே சொல்லவேண்டும்?

  Will it not be a subevrsion of democracy?

  ஹெஸ்பல்லா, ஹமாஸ் முதலில் செய்யவேண்டியது ஆயுதம் ஏந்துவதை நிறுத்தவேண்டும்..அவர்கள் ஏன் நிறுத்துவது இல்லை..?

  லெபனான், ஜோர்ட, பாலஸ்தீனர்கள், போராளிக் குளுக்களுக்கு உதவி செய்வதை விடுத்து, பரஸ்பர உறவு மேம்படுத்தினாலே, மக்கள் சிறப்பாக வாழ முடியும் என்றுகூறும் திரு. பா. ரா, இஸ்ரேலின் இருப்பு தான் இவர்கள் போராளிக்குளுக்களுக்கு உதவிடத் தூண்டுகிறது என்ற முடிவுக்கு எப்படி வந்தார்?

  பா. ரா அவர்கள், அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியாதா என்று கேட்கிறார்...!!

  எப்படி முடியும்...பெரும்பானமை அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவே இல்லையே...முதலில்...

  எகிப்து, ஜோர்டன் கூட பரவா இல்லை, இஸ்ரேலை அங்கீகரித்து விட்டது..விளைவு, சினாய் பகுதியில் போர் வீரர்களைவிட Tourist அதிகம் தென் படுகிறார்கள், சினாய் செல்வதற்கு தனியாக எகிப்து தூதரகத்திலிருந்து விசா வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. அதே போல் ஜோர்டன், அதுவும் இஸ்ரேலை அங்கீகரித்துவிட்டது..கூட்டாக அறிவியல் ஆராய்ச்சி யெல்லாம் செய்யத் துணிந்து விட்டனர்.

  ReplyDelete
 4. Raghavan is biased against Israel.
  Israel is no angel.It has to survive amidst nations that are
  hostile to it.Neither Hamas nor Hezbollah are secular groups.They
  derive their ideology from islamic
  fundamentalism and are part of Islamic terror network.Unfortunately Lebanon pays
  the price.Syria wants Lebanon under
  its control.Using Lebanon as base
  islamic groups want to wage an
  indirect war against Israel.Iran
  supports them.So Israel hits back
  with vengence.Let all muslim nations recognize and accept Israel
  as a nation first. That will solve
  many problems.But when Iran vows
  to finish off Israel, Israel has
  all rights to safe gurad itself.
  It takes measures that are harsh
  and are inhuman.

  ReplyDelete
 5. HBO is showing its own film known as "Strip Search", which I find a
  beautiful political movie.

  Requesting your review on that film.

  ReplyDelete
 6. Muse: HBO India? If so, at what time and date? Thanks.

  ReplyDelete