மேயர், நகரமன்றத் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் கிடையாது என்று தமிழக அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியுள்ளது.
இதற்காக தமிழக அரசு சொல்லும் சாக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. உள்ளாட்சி அமைப்பு சட்டமன்ற அமைப்பைப் பின்பற்றித்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
உள்ளாட்சி அமைப்பிலாவது கட்சிகளுக்கு வெளியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தோன்றியது. அல்லது இரண்டு வலுவான கூட்டணிக்கு வெளியிலிருந்து பிற கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பாவது இருந்தது. உதாரணத்துக்கு புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் ஒரு நகரமன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றினார்.
உள்ளாட்சி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதால் திமுக ஆட்சியை ஒரேயடியாகக் குற்றம் சொல்லமுடியாது. ஆனால் இதுபோன்ற பெரும் மாற்றங்களைச் செய்யும்போது முடிந்தவரை பிற கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு அதன்படி செய்வது நல்லது. அடுத்தமுறை ஜெயலலிதா ஜெயித்து வந்தால் மீண்டும் மேயர், தலைவர் தேர்தல்களில் மாற்றத்தைக் கொண்டுவருவார் என்றால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும்.
கவளம்
9 hours ago
///இதற்காக தமிழக அரசு சொல்லும் சாக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை./////
ReplyDeleteஇப்போதைய தமிழக அரசு எது சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உங்களுக்கு இருக்கப் போவதில்லை :-)
சட்ட சபை விரைவில் கூடப்போகும் தருணத்தில் பல அவசரச் சட்டங்களை இயற்றியுள்ளார்கள். சட்டசபையில் விவாதிக்காமல் நிறைவேற்றக் கூடிய அளவு அவசரம் என்ன என்று தெரியவில்லை. சட்டசபையில் விவாதித்தால் பிரச்சனை வரும் என்று கருதும் விசயங்கள் அவசர சட்டத்தால் நிறைவேற்றப்படுகின்றன.
ReplyDeleteஇது ஆரோக்கியமான சங்கதி அல்ல.