Wednesday, July 05, 2006

காந்தி எனக்குத் தாத்தா

தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வம்சத்தில் வந்த பேரன் என்று சி.பி.ஐ சோதனை செய்து அறிவிக்க வேண்டும் என்று ஒரு கோயிஞ்சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாராம். வேலையத்த வேலையாக அதனை நீதிமன்றத்தில் விசாரணைக்குக் கொண்டுவந்த நீதிமன்றப் பதிவாளர்மீதும் உச்ச நீதிமன்றம் கடுப்படித்துள்ளது.

சிரிப்பு வருமாறு தினமணியில் எழுதப்பட்டிருந்த வரி: "பித்துக்குளித்தனமான இந்த மனுவை விசாரிக்க முடியாதென்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், டி.கே.ஜெயின் அடங்கிய பெஞ்ச் நிராகரித்து விட்டது."

1 comment:

  1. பித்துக்குளித்தனமான இந்தப் பதிவுக்கும் பின்னூட்டம் எதுவும் இடாமல் எல்லாரும் நிராகரித்து விட்டார்கள் என்று நீங்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக... இதோ ஒரு பின்னூட்டம்.

    ReplyDelete