Friday, July 07, 2006

NLC Disinvestment நாடகம்

அரசு தன்னிடம் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவெடுத்தால் உடனடியாக கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழில்சங்கங்கள், ஊழியர்கள், இன்ன பிறர் என்று போர்க்கொடி தூக்குவது வாடிக்கை. எதை எதிர்க்கிறோம், ஏன் எதிர்க்கிறோம் என்று தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று புரியவில்லை.

நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷன் பங்குகளில் 10% பொதுமக்களுக்கு விற்பது தவறு என்று இப்பொழுது போராட்டம் நடந்து, கருணாநிதி blackmail செய்தது போலவும் அதனை அடுத்து மத்திய அரசு பங்கு விற்பனையை (தாற்காலிகமாக) நிறுத்துவைத்தது போலவும் ஒரு நாடகம் நடந்தேறியுள்ளது.

இப்பொழுதைய பங்குவிற்பனை திட்டம் நடந்தேறியிருந்தாலும் இதனால் நாட்டுக்கு பெரிய அளவில் எந்த உபயோகமும் இல்லை. என்.எல்.சி விஷயத்தில் தேவையானது வேறு ஒன்று என்று நான் கருதுகிறேன்.

என்.எல்.சி இந்தியாவிலேயே மிகச்சிறந்த integrated கரி தோண்டியெடுக்கும்/மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம். மற்ற அனல் மின்நிலையங்களைக் காட்டிலும் மிக அதிகமான நிகர லாப சதவிகிதம் பெறும் நிறுவனம். கிட்டத்தட்ட 28-30% வரை நிகரலாபம். அப்படியென்றால் அதன் செயல்திறன் - efficiency - மிகவும் அதிகம் என்றுதான் அர்த்தம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நெய்வேலி நிலக்கரியின் தரம். நெய்வேலி நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் திறன். இந்தக் காரணங்களால் என்.எல்.சி வருடாவருடம் நல்ல லாபம் சம்பாதிக்கிறது. அரசாங்கத்துக்குப் பணம் கொடுக்கிறது (வரி + டிவிடெண்ட்).

ஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பிரச்னையே அதன் பெயரில் உள்ளது. நெய்வேலி மட்டும். நிலக்கரி மட்டும். இப்படியே இருந்தால் வரும் காலத்தில் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்க அல்லது அழிய வாய்ப்புள்ளது. என்.எல்.சியின் கஸ்டமர்களான தமிழக, கேரள, ஆந்திர, கர்நாடக அரசுகள் திடீரென வாங்கிய மின்சாரத்துக்குக் காசு செலுத்தவில்லையென்றால் என்.எல்.சி திண்டாடும். கருணாநிதி கலர் டிவிக்கு காசு செலவுசெய்துவிட்டு மன்மோகன் சிங்கை மீண்டும் blackmail செய்து மின்சாரத்துக்கு என்.எல்.சிக்கு காசு கொடுக்கமாட்டேன் என்றுகூட சொல்ல வாய்ப்புள்ளது!

மேலும் என்.எல்.சி பெறும் லாபத்தை என்ன செய்யலாம்? சும்மா மீண்டும் மீண்டும் அரசாங்கத்துக்கு டிவிடெண்டாகக் கொடுத்தால் அது ஏதாவது ஒரு 'யோஜனா'வுக்கு தாரை வார்க்கத்தான் போகிறது.

அதற்கு பதில் என்.எல்.சி வேறு சில காரியங்கள் செய்யவேண்டும்.

1. தமிழகத்தில் மேலும் பல இடங்களில் அனல் மின்நிலையங்களை உருவாக்க வேண்டும். இப்பொழுது ஜெயங்கொண்டம் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதான் சாக்கு என்று தமிழக அரசு, தான் கழன்றுகொண்டு தனக்கு பதில் என்.எல்.சியையே 'நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டனர்.

2. மேலும் பல மாநிலங்களில் அனல் மின்நிலையங்கள் அமைக்கவேண்டும். அதற்குத்தான் NTPC உள்ளதே என்று சும்மா இருக்கவேண்டியதில்லை. இன்னமும் பல ஆயிரம் மெகாவாட்கள் மின்சாரம் நாம் தயாரிக்கவேண்டியுள்ளது.

வளர்ச்சி என்பது அத்தியாவசியமானது.

இந்த வளர்ச்சியை எப்படிக் கொண்டுவருவது? அதற்கு என்.எல்.சிக்கு மேற்கொண்டு பணம் வேண்டும். ஒரு மெகாவாட் மின்சாரத்துக்கு ரூ. 3-4 கோடி அளவுக்கு முதலீடு வேண்டுமாம். தமிழகத்தில் மேலும் 4,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கத் தேவையான அனல் மின்நிலையங்களை அமைக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான முதலீடு ரூ. 12,000-16,000 கோடி. என்.எல்.சி வருடத்துக்குப் பெறும் லாபம் வெறும் ரூ. 1,000 கோடிதான். அதிலும் பெரும்பங்கு அரசுக்கு டிவிடெண்டாகப் போய்ச்சேருகிறது.

ஆனால் இந்த ரூ. 16,000 கோடியைப் பல்வேறு வகையில் பெறமுடியும். Disinvestment-க்கு பதில் என்.எல்.சிக்குத் தேவை Investment. அரசால் இது முடியாது. என்.எல்.சி பங்குச்சந்தைக்குப் போய் மேலும் 20-30% புதுப் பங்குகளை வெளியிடவேண்டும். இதன்மூலம் சுமார் ரூ. 4,000 கோடி ரூபாய்களைத் திரட்டமுடியும். மீதம் தேவையான ரூ. 12,000 கோடியை ஒரு பகுதி வங்கிக் கடன்களாகவும், மீதியை மக்களிடமிருந்தே 5-வருட, 10-வருட, 15-வருட கடன்பத்திரங்களாகவும் திரட்டலாம்.

என்.எல்.சி, தான் நெய்வேலியில் சாதிப்பது போல பிற மின்நிலையங்களிலும் சாதித்தால் (efficiency-ஐ அதே அளவில் இருந்தால்) என்.எல்.சியின் பங்கு விலைகள் தொடர்ச்சியாக ஏற ஆரம்பிக்கும்.

Disinvestment செய்து பங்குகளை என்.எல்.சி தொழிலாளர்களுக்கு விற்கிறேன் என்று சொல்வது அபத்தம். வைகோ போன்ற பலரும் கேட்டது போல ஆளுக்கு ஐந்து லட்சம் கொடுத்து பங்குகள் வாங்கும் நிலையில் இல்லை என்.எல்.சி ஊழியர்கள். ஆனால் அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஸ்டாக் ஆப்ஷன்ஸ்.

இவ்வளவு நன்றாக வேலை செய்யும் என்.எல்.சி ஊழியர்களுக்கு என்று என்.எல்.சி நிர்வாகம் கொடுக்கவேண்டியது ஐ.டி நிறுவனங்களில் கொடுப்பதுபோன்ற ஸ்டாக் ஆப்ஷன்ஸ். குறைந்தது 7-10% பங்குகளை என்.எல்.சி ஊழியர்களுக்கான ஸ்டாக் ஆப்ஷன்களாக நிறுவி, கடைமட்ட ஊழியர் வரை அனைவரும் ஆப்ஷன்ஸ் பெறுமாறு செய்யவேண்டும். இந்த ஆப்ஷன்ஸை வாங்க என்.எல்.சி ஊழியர்கள் பணம் செலவு செய்யவேண்டியதில்லை. ஆனால் அந்த ஆப்ஷன்ஸை வேண்டியபோது பங்குகளாக மாற்றி லாபத்தை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.

இதையெல்லாம் முன்னிறுத்தித்தான் தொழில்சங்கங்கள் போராடவேண்டும். அதைவிடுத்து நெய்வேலி ஊழியர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருந்தால் இப்பொழுது கிடைக்கும் குறைந்த சம்பளம், ஓய்வூதியம் மட்டுமே கிடைத்துக்கொண்டிருக்கும். நாளைக்கே டாடா பவர், ரிலையன்ஸ் எனெர்ஜி போன்ற கம்பெனிகள் என்.எல்.சியின் திறமை மிக்க சில அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் அதிக சம்பளம், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் என்று கொடுத்து தள்ளிக்கொண்டு போக நேரிடலாம்.

10 comments:

  1. மிக நல்ல சிந்தனை. நன்று.

    ReplyDelete
  2. ////கருணாநிதி கலர் டிவிக்கு காசு செலவுசெய்துவிட்டு மன்மோகன் சிங்கை மீண்டும் blackmail செய்து மின்சாரத்துக்கு என்.எல்.சிக்கு காசு கொடுக்கமாட்டேன் என்றுகூட சொல்ல வாய்ப்புள்ளது!////

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்... மேற்கண்ட அந்த கருத்து ஒன்றே இந்தப் பதிவின் நடுநிலைமையை கேலிக்குரியதாக ஆக்குகிறது....

    உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை விடுத்து பதிவு செய்தால் மட்டுமே அது அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்....

    அதை விடுத்து திமுகவை எதிர்க்க வேண்டுமே என்பதற்காக இது போன்ற யூகங்களை உள்ளே தேவையில்லாமல் சொருகினீர்கள் என்றால் கட்டுரையின் நோக்கமே சிதைக்கப்படுகிறது.....

    ReplyDelete
  3. DMK never opposed disinvestment in public sector units outside tamil nadu (e.g.IPCL,VSNL). Their opposition is an eye wash.MK did not want JJ to get upper hand over him in wooing NLC workers.About the left and trade unions they are
    struck in the thinking of 50s and
    60s.They want protected marketshare for NLC and protected jobs for workers instead of NLC becoming more efficient
    and diversifying into allied
    actvities.DMK is party to the
    disinvestment decision as
    it was made by a committee of
    the cabinet.Cabinet functions
    as a collective and collective
    responsibility underpins its
    working.MK knows this well.
    That is why he is blowing
    hot and cold.

    ReplyDelete
  4. அருமையான பதிவு.

    சிந்திக்க தெரிந்தவர்கள், பாதிப்படைய போகிறவர்கள் சிந்தித்தால் நல்லது.

    லக்கிலுக் சார், கலந்து கொண்ட திமுக அமைச்சர்களே கூட, அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள பட்ட கூட்டத்தில் எதிர்பு தெரிவித்ததாக தெரியவில்லை அப்படி இருக்க இந்த பதிவு மட்டும் நடுநிலைமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்பது எப்படி. அரசியல் விருப்பு வெருப்புக்கு அப்பால் இதை பாருங்கள், சந்தர்ப்பம் இருந்தும் இதற்க்கே எதிர்ப்பு தெரிவிக்காத இவர்கள் இந்த பதிவில் சொல்லி இருப்பதை செய்ய மாட்டார்கள் என்று எப்படி நம்ப சொல்கிறீர்கள்.

    http://thatstamil.oneindia.in/news/2006/07/06/dhaya.html

    ReplyDelete
  5. கருணாநிதி கலர் டிவிக்கு காசு செலவுசெய்துவிட்டு மன்மோகன் சிங்கை மீண்டும் blackmail செய்து மின்சாரத்துக்கு என்.எல்.சிக்கு காசு கொடுக்கமாட்டேன் என்றுகூட சொல்ல வாய்ப்புள்ளது//

    இது ஒரு தேவையில்லாத அப்சர்வேஷனாகவே தோன்றுகிறது.. தவிர்த்திருக்கலாம். தங்களுடைய பதிவுகளை தவறாமல் படித்துவரும் என்னைப்போன்றவர்கள் இத்தகைய கருத்துகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க மாட்டார்கள்..

    சரி விஷயத்துக்கு வருவோம்..

    disinvestment செய்து ஊழியர்களுக்கு விற்போம் என்பது முட்டாள்தனமானதுதான். அதில் கருத்து வேறுபாடு இல்லை.

    ஆனால் disinvestment உண்மையில் பார்க்கப் போனால் லாபத்தில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை disinvestment முறையில் தனியாருக்கு விற்பதும் ஒருவகையில் investmentதான். பங்குகளை விற்று பெறும் பணத்தை அந்நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான அரசாங்கம் அதை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்.

    ஆனால் இந்த வழியில் தனியார் அந்நிறுவனத்திற்குள் நுழைந்துவிடுவதை தடுக்கவே அரசியல் கட்சிகளும் தொழிலாளர்களும் எதிர் குரல் எழுப்புகின்றனர். திறமையுடன் செயல்படும் ஒரு தனியார் நிறுவனம் இத்தகைய முதலீடுகள் மூலம் அந்நிறுவனத்தின் உற்பத்தி திறனையும் அதன் வழியாக லாபத்தையும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

    ஆனால் முதலீடு செய்யும் தனியார் அதே சமயம திறமையற்ற, உழைப்பில் விருப்பமில்லாத, அதிகப்படியான ஊழியர்களையும் நிறுவனத்தை விட்டு வெளியேற்றவும் வாய்ப்பிருக்கிறது.

    எல்லாவற்றிலும் அரசியலை பார்க்கும் நம் நாட்டு சூழ்நிலையில் இந்த disinvestment என்றாலே எல்லோருக்கும் அலர்ஜிதான்..

    ReplyDelete
  6. ////லக்கிலுக் சார், கலந்து கொண்ட திமுக அமைச்சர்களே கூட, அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள பட்ட கூட்டத்தில் எதிர்பு தெரிவித்ததாக தெரியவில்லை////

    திமுக அமைச்சர்கள் பொதுவாக அமைச்சரவைக் கூட்டத்தில் தவிர்க்க இயலாத பிரச்சினைகளைத் தவிர மற்ற பிரச்சினைகளில் எதிர்ப்புக் குரல் எழுப்ப மாட்டார்கள்.... மற்றபடி திமுக தலைமை எடுக்கும் எந்த முடிவையும் தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் பேசி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளவே முற்படுவார்கள்.... தேவையில்லாத ஜெ. ஸ்டைல் சலசலப்புகளை திமுக விரும்பாது.....

    1989ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பங்குபெற்றுவரும் திமுகவின் செயல்பாடுகளை கொஞ்சம் விருப்பு வெறுப்பில்லாமல் உங்களால் உற்று நோக்க முடிந்தால் இது புரியும்.....

    ReplyDelete
  7. Their opposition is an eye wash.MK did not want JJ to get upper hand over him in wooing NLC workers.About the left and trade unions they are
    struck in the thinking of 50s and
    60s.They want protected marketshare for NLC and protected jobs for workers instead of NLC becoming more efficient
    and diversifying into allied
    actvities//

    நண்பர் தன்னுடைய பெயரை வெளியிடவில்லையென்றாலும்.. பிரச்சினையின் மையக்கருத்தை அருமையாக எழுதிவிட்டார்..

    இதுதான் இந்த நாடகத்தின் பின்புலம்..

    ReplyDelete
  8. இத்தகைய விவாதங்களில் கட்சி அரசியலைப் புறம் தள்ளுவது நன்று. இன்று ஆட்சியில் அதிமுக இருந்தாலும் இதே நிலையைத் தான் எடுத்திருப்பார்கள். அதேபோல NLCக்கு பணம் கெடு வைப்பதிலும் எந்த அரசானாலும் ஒரேபோல நடந்திருப்பார்கள்.
    மக்களிடையே disinvest ஆன தொழிற்சாலைகளில் தொழிலாளர் இன்றைய நிலை குறித்து விழிப்புணர்ச்சி ஏற்பட்டு அவர்களது எதிர்ப்பு குறைந்தால் மட்டுமே அரசியல் கட்சிகள் (கம்யூனிஸ்ட்கள் நீங்கலாக) தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். இதில் பொதுஜன ஊடகங்களின் பணி ஒத்தக் கருத்து உருவாவதற்கு மிக முக்கியமானது. நமது வலைப்பூக்களிலேயே பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டுமா இல்லையா என்ற புரிதல் இல்லையே!

    ReplyDelete
  9. //திமுக அமைச்சர்கள் பொதுவாக அமைச்சரவைக் கூட்டத்தில் தவிர்க்க இயலாத பிரச்சினைகளைத் தவிர மற்ற பிரச்சினைகளில் எதிர்ப்புக் குரல் எழுப்ப மாட்டார்கள்.... மற்றபடி திமுக தலைமை எடுக்கும் எந்த முடிவையும் தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் பேசி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளவே முற்படுவார்கள்.... //

    இந்த அமைச்சரவையில் இருந்து விலகுவோம் அப்படீங்கற செய்திய அமைச்சரவை கூட்டத்தின் முடிவின் போதே சொல்லி இருக்கலாமே!!! அப்ப அது தவிர்க்க இயலாத பிரச்சனை இல்ல இல்ல, போராட்டம் வந்த அப்புறம் தான் தவிர்க்க இயலாத பிரச்சனை ஆச்சா?

    இதை தானங்க தலைப்பே சொல்லுது இது ஒரு நாடகம்னு... லக்கிலுக் நீங்க சொல்லறத பாத்தா தி.மு.க மாதிரி ஒரு சுயநலம் அற்ற கட்சி வேற எதுவுமே இல்லனு சொல்லறது போல இருக்கு. சரி சரி ஒங்கலுக்கு ஒங்க பொழப்பு இருக்கு, எனக்கு என் பொழப்பு இருக்கு. இதுல நீங்க சொல்லி நானும் நான் சொல்லி நீங்களும் மாற போறது இல்ல. மத்தவங்க அவங்க நெனக்கறத சொல்லட்டும்.:-)

    ReplyDelete
  10. yes you are correct, see DMK's last ten year's participation in central government,
    they are the good example of FEVICOL gum
    come what may, come who ever he may be,
    it might be fanatic BJP or useless CONGRESS but DMK will have participation to get good portfolio for MK's off springs
    not for DMK

    ReplyDelete